Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனர்த்தத்தின் அடையாளமும், ஜெனிவா யோசனையும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அனர்த்தத்தின் அடையாளமும், ஜெனிவா யோசனையும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய

23 பெப்ரவரி 2013



 

மனித உரிமை பேரவையின் யோசனைக்கு பதிலளிப்பதற்கு பதில் அரசாங்கம் மண்பாணை கடைக்குள் புகுந்த மாடு போல் நாலாபுறமும் முட்டி மோதியது.


 


Madu1_CI.jpg

 


நல்லிணக்கம் என்பது ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு பாம்புக்கு நாகதாளி போன்றது.


கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியத்திற்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்க, ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டார்.


ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட ஆரியசிங்க, ஏகாதிபத்தியவாதிகளின் கைபாவைகள் என இலங்கை அரசாங்கம், விமர்சித்து வரும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் உடனடியாக உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகளுடன் அவர் பேச்சுவார்;த்தை நடத்தினார்.


இந்த அமைப்புகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, அந்த அமைப்புகள் ஒரு விடயத்தை முன்வைத்தன. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வரும் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் மீது இலங்கை அரசாங்கத் தரப்பினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல், பயமுறுத்தல் மற்றும் எச்சரிக்கை ஆகிய விடயங்களே அவையாகும். இதற்கு பதிலளிக்க இலங்கை தூதுவர் அந்த நிலைமை தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவும் அதனை மறந்து விட்டு முன்னோக்கி செல்வதே தமது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.


கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கத்தை சேர்ந்த சிலர் மனித உரிமை பேரவையில், மனித உரிமை பேரவையின் ஆணையாளரை மாத்திரமல்ல அதன் தலைவருக்கு எதிராகவும் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு, வன்முறையாளர்களை போல் நடந்து கொண்டனர்.  இவர்கள் நடந்து கொண்ட விதத்தை தான் அறிந்திருக்கவில்லை என ஜெனிவாவுக்கான முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக்க அண்மையில் தெரிவித்திருந்தார். 


பயமுறுத்தல், எச்சரிக்கை பிரசாரங்கள் மூலம் இலங்கை தொடர்பாக பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தோற்கடிக்க முடியும் என இலங்கை அரசாங்கம் நினைத்திருக்கலாம் என்ற மாயை தென்பட்டது. நாம் அறிந்த வகையில் அந்த குள்ளத்தனமாக முயற்சி அதளபாதாளமாக மாறியது. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனையில் தலையிட்டு பதிலளிப்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம், மண்பாணை கடைக்குள் புகுந்த மாடு போல் நாலாபுறமும் முட்டி மோதியது.


புதிய தூதுவர் இலங்கை தொடர்பாக ஏற்பட்ட இந்த தோற்றத்திற்கு தீர்வுகாண மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கும் தோற்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத் தொடரில் தென்பட்டது. அவரது நல்லுறவான நடைமுறைகள் இலங்கைக்கு புதிய நண்பர்களை பெற்றுக்கொடுக்கும் என அரசசார்பற்ற நிறுவனங்கள் முணுமுணுத்தை கேட்கக் கூடியதாக இருந்தது. எனினும் மாற்றங்களை ஏற்படுத்த தேவையான செயற்பாட்டு ரீதியான நிலைமையை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு பதிலாக சர்வதேச தளத்தில் தோல்வியடைய விளையாடும் அணியாக இலங்கை அரசாங்கம் மாறியுள்ளது. இம்முறை இரண்டாம் தர குழுவொன்றையே இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.


2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு பின்னர், ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடானது, அந்த யோசனை தொடர்பாக 5 சதம் கூட அக்கறை காட்டவில்லை என்பதையே காட்டுகிறது.  பல நிபுணர்கள் கட்டுரைகள், ஆவணங்கள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது போல்,  அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.  இதற்கு பதிலாக உலகம் அறிந்து கொள்ளும் வகையில் அந்த பரிந்துரைகளை மீற ஆரம்பித்தது.


தமிழ் மக்கள் துக்கத் தினத்தை அனுஷ்டிக்க நாள் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற யோசனையை கூட புறந்தள்ளி விட்டு அரசாங்கம் செயற்பட்டது. 


உயிரிழந்த உறவினர்கள், நண்பர்களை நினைவு கூர்ந்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் மீது கடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 


சட்டத்தின் நிர்வாகத்தை நிலைநாட்டி சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு பதிலாக, அரசாங்கம், பிரதம நீதியரசரை விரட்டியடித்து விட்டு, அரசியல் ஆதரவாளரை அந்த பதவியில் அமர்த்தியது. 


மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக சுயாதீன விசாரணைக்குழுவை ஒன்றை நியமிப்பதற்கு பதிலாக இராணுவ விசாரணைக் குழுவொன்றை நியமித்து, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மாத்திரம் அரசாங்கம் கூறியது. 


அது மாத்திரமல்ல இராணுவத்திற்கு தொடர்பில்லாத பரிந்துரையான காவற்துறை சேவையை பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்க வேண்டும் என்ற பரிந்துரையை இராணுவ விசாரணைக்குழு நிராகரித்தது. 


மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் இவ்வாறான பல உதாரணங்களினால் நிரம்பியுள்ளன.


கடந்த வருடம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் மாத்திரமே வாக்களித்தன.  அமெரிக்காவுக்கு சார்பான சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற நாடுகள் கூட இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்தன.  


முக்கிய முஸ்லிம் உறுப்பினர்களை ஜெனிவாவுக்கு அழைத்து வந்து அந்த நாடுகளின் தூதுவர்களை சந்திக்க செய்ததும் இதற்கு ஒரு காரணமாகும். இவர்களில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர், தேசிய உலாமக்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அதில் அடங்கியிருந்தனர். 


தற்போது தேசிய உலாமக்கள் சங்கம், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பொதுபல சேனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஏதுவும் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் முழு முஸ்லிம் மக்களும் ஒரு வித அச்சத்திலேயே உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் இதனை தமது கவனத்தில் எடுத்து கொள்ளும் என்பது நிச்சயம். 


ரிஷானா நபிக் கொலை செய்யப்பட்ட பின்னர், இலங்கையும், சவூதியும் தமது தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டன. ராஜபக்ஷ அரசாங்கத்தின் உற்ற நண்பனான ஈரானுக்கு எதிராக கடந்த செவ்வாய் கிழமை கொழும்பில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளுடன் இருந்து வந்த கூட்டிணைவு ரீதியான உறவு தற்போது மரணத் தறுவாயில் இருக்கின்றது.


அது மட்டுமல்ல மேற்குலகின் ஜனநாயக நாடுகளுடன் இலங்கைக்கு இருந்த தொடர்புகள் கடந்த வருடம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தன. அண்மையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த பொருளாதார ஆய்வாளரான முத்துகிருஷ்ணன் சரவானந்தன்,  இலங்கையின் பொருளாதாரம் எந்தளவுக்கு மேற்குலக நாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியிருந்தார். உதாரணமாக எடுத்து கொண்டால், இலங்கையில் இருந்து சீனாவுக்கு ஒரு சதவீதமான உற்பத்திகளே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  மேற்குலக நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்றுமதியானது 50 வீதத்திற்கும் மேலாகும். 50 வீதமான சுற்றுலாப் பயணிகள் மேற்குலக நாடுகளில் இருந்தே வருகின்றனர். சீனாவில் இருந்து ஒரு சத வீதமான சுற்றுலாப் பயணிகளே வருகின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் பொருளாதார தொடர்புகளை கொண்டிருப்பது முக்கியமானது என அவர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிய நாடுகளில் பொருளதார ரீதியில் இலங்கைக்கு முக்கியமான நாடு இந்தியா மாத்திரமே எனவும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.


சீனா கடன் வழங்குவதில் மாத்திரமே முன்னிலையில் உள்ளது. இதற்கு செலுத்த வேண்டிய வட்டியானது ஏனைய நாடுகளுக் செலுத்த வேண்டிய வட்டியை விட மிக அதிகமாகும். சீனாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்தி கொள்ள தேவையான  விடயமாக இருக்கும் அரசியல் தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவே இல்லை. இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்திய அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக அந்த நாட்டின் புலனாய்வு பிரிவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


இவற்றை நோக்கும் போது, இலங்கை போன்ற சிறிய நாடு உலக பொருளாதார, அரசியல் விடயங்களுடன்; எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற எவ்விதமான எதார்த்தமான புரிந்துணர்வின்றி ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுவதை காணமுடிகிறது. 


அதிகாரம் மற்றும் இன ரீதியான திமிரில் கண் குருடாகி இருப்பதே இதற்கு காரணமாகும். போர் வெற்றியின் மமதையில் வீழ்ந்திருப்பது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் நிலைமையை புரிந்துகொள்ளும் இயலுமையை தற்போது ராஜபக்ஷ அரசாங்கம் காட்டுவதில்லை. இதனால் நீண்டகாலமான தனிமை காரணமாக ஏற்படப் போகும். பாதிப்புகளை உணரவில்லை. போர்க் காலத்தில் சர்வதேச சமூகம் என்பது ஒரு மாயை என்ற ஹெல உறுமயவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசாங்கம் செயற்பட்டது.


விடுதலைப் புலிகளின் தோல்வியை காண விருப்பிய மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் போருக்கு எதிராக தீர்மானகரமான அழுத்தங்கள் எதனையும் கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.  போர் காலத்தில் போன்றே தற்போதும் சர்வதேச சமூகத்தை புறந்தள்ளி விட்டு, தாம் விரும்பியது போல் கொடியை ஏற்றிக்கொள்ளலாம் என ராஜபக்ஷ அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கின்றது.


எனினும் அது அப்படியல்ல. இதற்கு உதாரணம் தற்போது வெளியாகியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பிளஸ்.   இந்த வரிச்சலுகையை கைவிட்டதன் பாதிப்பானது இலங்கையின் ஆடைத் தொழிற்துறையை மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்க வைத்துள்ளது. 


ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்காததன் காரணமாக 164 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு லட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான அன்டனி மார்க்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.  


மனித உரிமை பாதுகாப்பு சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன், ஜீ.எஸ்.பி.பிளஸ் குறித்து இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி கொள்வதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம் எதையாவது செய்து கொள்ளுங்கள் என்ற வகையில் செயற்பட்டு வருகிறது.  ஐரோப்பிய ஒன்றிய விசாரணைக்குழு இலங்கைக்கு செல்ல அன்று அனுமதி மறுக்கப்பட்டது. அந்த பாதிப்புகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.  ஐக்கிய நாடுகள் மத்தியில் தனிமையாகி வரும் இலங்கை அரசாங்கம், நாட்டிற்குள் உண்மையான ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்த தவறினால் அது ஏனைய சர்வதேச தளத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்சினையாக மாறிபோகும்.


அமெரிக்கா இம்முறை மனித உரிமை பேரவையில் கொண்டு வரவுள்ள யோசனையானது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணையானது. எனினும் இந்த யோசனை கடந்த யோசனையை விட நேரடியான கோரிக்கைகளை முன்வைக்கும் யோசனையாக இருக்கும். 


2012 ஆம் ஆண்டு யோசனைக்கு ஆதரவாக பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளை விட இம்முறை அதிகளவான வாக்குகள் கிடைக்கக் கூடும். எனினும் கடந்த முறை இலங்கையில் ஜனநாயகத்தையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாக உறுதியளித்து அதனை ஏற்றுக்கொண்டு இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த சில நாடுகள், அதன் மூலம் தாம் கடைக்கு அனுப்பபட்டதாக தற்போது எண்ணுகின்றன.


அச்சமான விடயம் என்னவொன்றால், ராஜபக்ஷ நிர்வாகத்தின் உள்ளக நிலைமையானது, சர்வதேசம் கோருவது போல், எவ்வித ஜனநாயக ரீதியான மாற்றங்களையோ, நல்லிணக்க செயற்பாடுகளை ஏற்படுத்த இடமளில்லை என்பதாகும். 


நல்லிணக்கம் என்பது ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு பாம்புக்கு நாகதாளி போன்றது. உண்மையான அனர்த்தம் நாட்டுக்குள்ளேயே உள்ளது. சர்வதேசத்தில் அது எதிரொலித்து வருகிறது. எனினும் தற்போது இந்த எதிரொலி புயல் சின்னமாக மாறும் நிலையில் உள்ளது. உள்நாட்டில் ஏற்படும் தீயே இந்த புயலை சினமூட்டும்.   


இதுவே இம்முறை மனித உரிமை பேரவையில்  கிடைக்கும் என அனுமானிக்கப்படும் முன்கூட்டிய முடிவுகளாகும்.


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88911/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.