Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

`ஹரிதாஸ்’

Featured Replies

ஆட்டிஸம் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத தமிழகச் சூழலில் ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கும் அவன் தந்தைக்குமான உறவையும் நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கும் படம் `ஹரிதாஸ்’.

 

419879_4471419869938_741528232_n.jpg



கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் பிரச்சாரம் செய்யும் ஒரு டாக்குமெண்ட்ரி படமாகியிருக்கக் கூடிய இந்தக் கதைக்களம் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனின் புத்திசாலித்தனத்தால் பிரமாதமாக வந்திருக்கிறது.

என்கவுண்டர் ஆபீஸராக வரும் கிஷோர் மற்றும் அவரது டீம் ஒரு கும்பலை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுவதிலில் ஆரம்பித்து விறுவிறுப்பாகப் போகும் படம் சிறிது நேரத்திலே வேறு ஒரு கோணத்தில் பயணிக்கிறது.

என்கவுண்டர் பணியிலிருந்து விலகி ஆட்டிஸம் பாதித்த மகனை கவனித்துக்கொள்ள விரும்புகிறார் கிஷோர். அவர்களுக்கிடையிலான உறவையும், அதோடு என்கவுண்டரால் தொடர்ந்த ஒரு வில்லங்கத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது கதை.

 ஆட்டிஸம் என்ற ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து படமாக்கியதற்காகவே இயக்குனர் குமரவேலனையும், அதைத் துணிச்சலாகத் தயாரிக்க முன்வந்த டாக்டர்.ராமதாஸை (நம்ம மருத்துவர் ஐயா இல்லை.. இவர் வேற.. ) எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆட்டிஸம் பாதித்த மகனாக வரும் பிருத்விரஜ், ஆட்டிஸம் பாதித்த குழந்தையாக உடல்மொழியில் பிரமாதமாக நடித்திருக்கிறான். படத்தில் அவனுக்கு ஒரே ஒரு வசனம் தான் இருக்கிறது.. அந்த வசனம் `அப்பா’.
முரட்டு போலீஸ்காரராகவும் பாசமான தந்தையாகவும் கிஷோர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதுவும் மழையில் நனைந்து கொண்டு நிற்கும் மகனை கட்டிப்பிடித்து அழும் காட்சியில் நெகிழ வைக்கிறார். அவருடன் வரும் என்கவுண்டர் டீம் நண்பர்களும் ஓகே.

டீச்சராக வரும் சினேகா அழகாக இருக்கிறார். கதாப்பாத்திரத்தை உணர்ந்து அலட்டலில்லாமல் நடித்திருக்கிறார்.
பரோட்டா சூரியிடம் லைட்டாக வடிவேவின் டயலாக் வாசனை அடித்தாலும் கொஞ்சம் கலகலப்பாக்குகிறார். டாக்டராக வரும் யூகிசேதுவின் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளைப்பற்றிச் சமூகச்சாடல் கவுண்டர்களால் திரையரங்கு சிரிப்பால் அதிர்கிறது. விஜய் ஆண்டனியின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் அழகு.

இடையில் கொஞ்சம் காணாமல் போன நண்பனை தேடுவது தொடர்பாக காட்சிகள் இல்லாமல் போனதும், தேவையில்லாமல் போலீஸ் காலனியில் ஒரு குத்துப்பாட்டு வைத்ததும் கொஞ்சம் சொதப்பல். ஹரிக்கு அம்மாவாக விரும்பு சினேகாவின் கோரிக்கைக்கு கிஷோர் கொடுக்கும் பதில் மிக அருமை.


பெரும்பாலும் அம்மா சென்டிமெண்டில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமாவில் பெருவாரியான இயக்குனர்கள் கண்டுக்கொள்ளாத அப்பா மகன் உறவுப் பற்றிய உணர்வுப்பூர்வமான படமாகவும், ஆட்டிஸம் பற்றிப் பிரச்சாரம் இல்லாத விழிப்புணர்வு படமாகவும், `ஹரிதாஸ்’ இருக்கிறது.

படம் பார்த்துவிட்டு ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்கள் இயக்குனருக்கு மனதார நன்றி சொல்வார்கள். மற்றவர்கள் அந்தக் குழந்தைகளைப் புரிதலுடன் நடத்துவார்கள்.. அதுவே இயக்குனருக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய விருது. வாழ்த்துகள் குமரவேலன்.

 

அனைவரும் கண்டிப்பாகப் பார்க்கவும்..

- Cartoonist Bala

  • தொடங்கியவர்

ஹரிதாஸ் தமிழ் திரைப்பட "ட்ரைலர்"

 

http://www.youtube.com/watch?v=qHtA184t5mo

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

  1_8b461ef5-3a44-46b9-b5d1-2f31af8fd145.p

ஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே!!
 
ஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை. 
 
ஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை 'அப்பா'. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் மட்டுமே. கைகளை வைத்திருக்கும் பாங்கு, நடை, எங்கேயோ பார்வையைக் குவித்திருப்பது, சத்தத்தால் ஈர்க்கப்படாமல் இருப்பது, கடைகளில் உள்ள பொருட்களை நேராக்குவது, குதிரைகளைக் காணும் பொழுது தன்னை மறக்கும் லயம் என அசத்தியிருக்கும் ப்ருத்விராஜின் முதுகில் படம் பயணிக்கிறது. ஹரிதாஸ் தனக்கிருந்த குறைபாடுகளில் இருந்து மீண்டு, கின்னஸ் சாதனை புரிகிறான் என நேர்மறையாக படம் முடிகிறது. இந்தியாவில் பிறக்கும் 88 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது என்ற புள்ளி விவரத்தினை படத்தில் காட்டுகின்றனர். ஆட்டிசத்தை சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.
 
Kishore.pngபடத்தின் இன்னொரு இழை காவல்துறை அதிகாரி சிவதாஸாக வரும் கிஷோரை மையமாக கொண்டது. அவரது அறிமுகம் என்கவுன்ட்டருக்கான திட்டமிடலுடன் தொடங்குகிறது. ஆனால் மெல்ல பாசமிகு தந்தையாக உருமாறுகிறார். தன் பையனின் உலகம் எதுவென தெரியாமல் மறுகி, பின் அவன் மீது நம்பிக்கை வைத்து, அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்குகிறார். 'என் மகன் போட்டியில் (ஜூனியர் மராத்தான் 2003) பங்கேற்பதே என்னைப் பொறுத்தவரை வெற்றித் தான்' என தேர்வுக் குழுவிடம் மகனின் எதிர்காலத்திற்காக இறைஞ்சுகிறார். இப்படிப் பொறுப்புள்ள தந்தையாக இருப்பவர் அதிகாரியாக இருக்கும் பொழுது விறைப்பாக இருக்கிறார். அதாவது தனது வாகன ஓட்டியின் தலையில் அடித்து எழுப்புவது, விடுப்பில் இருக்கும் பொழுதும் அரசு வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது, ஆதி (பிரதீப் ரவாத்) என்னும் ரவுடியை சுடுவதற்கென துப்பாக்கிக் குண்டில் தன் பெயரை எழுதி வைத்துக் கொள்வதென நேர்மையான(!?) அதிகாரியாக வருகிறார். 
 
'என்கவுன்ட்டர்' என்பதை நாயகத்தனம் நிறைந்த சாகசமாக கொண்டாடும் படங்கள் மிக ஆபத்தானாவை. சில லட்சங்களைத் திருடியவர்களாக இருப்பாரோ என சந்தேகம் எழுந்துதற்கே.. வேளச்சேரியில் நான்கு உயிர்கள் பரிதாபமாக என்கவுன்ட்டரில் பறிக்கப்பட்டது. அந்தத் துக்கக்கரமான நிகழ்வுக்கு கிடைத்த மக்களின் ஏகோபித்த ஆதரவு அதை விட கொடுமையானது. இதன் நீட்சியாக நீதிமன்றமே பெருவாரியான மக்களை மகிழ்விக்க மரண தண்டனையை நிறைவேற்றும் அபத்தமெல்லாம் இந்த நாட்டில் தான் நடக்கும். உண்மையிலேயே நாம் மரணத்தைக் கொண்டாடும் தேசத்தில் தான் வாழ்கிறோமோ என்ற ஐயம் பலமாக எழுகிறது. பரீட்சையில், காதலில் தேறாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வது முதல் "மரணம்" இங்கு வெவ்வேறு வடிவங்களில் சகலவிதமான பிரச்சனைகளுக்கும் சர்வலோக நிவாரணியாக மாறி வருகிறது.
 
Sneha.pngஆசிரியை அமுதவள்ளியாக சினேகா. வகுப்பறையில் கிஷோர் அமர்ந்திருப்பதால், இயல்பாய் பாடமெடுக்க முடியாமல் அழகாக சங்கடப்படுகிறார். 'நாம ரெண்டு பேர் இருந்தே ஒருநாள் சமாளிக்க முடியலையே.. எப்படித் தான் தினமும் தனியாளாக ஹரியைப் பார்த்திருக்கிறாரோ தெரியல' என தன் தங்கை சொன்னதும், சினேகா ஹரிதாசின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவனுக்கு தாயாகி விட முடிவு செய்கிறார். ஆனால் சினேகாவின் முடிவை மென்மையாக மறுத்து விடுகிறார் கிஷோர். எனினும் தன் வாழ்க்கையையே "தியாகம்" செய்து ஹரிதாசின் சாதனைக்கு பக்கபலமாக இருக்கிறார். பாரம்பரிய தமிழ்ப்பட நாயகி என்ன செய்யணுமோ அதை தான் செய்துள்ளார். ஆனால் இந்தப் படத்தின் நாயகி ஓர் ஆசிரியை. மாணவர்களுக்கு ஏணியாக இருக்க வேண்டியவர். ஒரு மாணவனுக்கு ஒரு ஏணி என்ற கணக்கில் இல்லை நம் சமுதாயத்தின் ஆசிரியர் சதவிகிதம். அமுதவள்ளி என்னும் அந்தப் பாத்திரத்திற்கு உண்மையாகவே பொறுப்பென்று ஒன்றிருந்தால்..  பல மாணவர்களை நல்லபடி உருவாக்கி இந்தச் சமுதாயத்திற்கு அளித்திருக்க முடியும் எத்தகைய தியாகமும்(!?) செய்யாமலே.
 
எப்படி அரசாங்க வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் குற்றவுணர்வு நாயகனுக்கு இல்லையோ.. அதே போல் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் குற்றவுணர்வு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு இல்லை. மாணவர்களால் ஏதாவது பிரச்சனை எனின் "டி.சி." தந்து விடுவதிலேயே குறியாக உள்ளார். இன்றைய அரசு ஊழியர்களின் உண்மை முகத்தை படத்தில் நச்சென பதிந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், இந்தப் பொறுப்பற்றத்தன்மை ஒரு குற்றம் என்ற புரிதல் கூட இல்லாமல் அவர்கள் இருப்பது தான். தலைமை ஆசிரியையாக நடித்தவர் மிரட்டியுள்ளார். இந்தப் படத்தின் கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் இராஜ் கபூர் நடித்துள்ளார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஹரியை உதாசீனப்படுத்தும் முன்கோபி பயிற்சியாளராக அறிமுகமாகி, ஹரியின் உடல் திண்மையை வியந்து அவனுக்கான களத்தை அறிமுகப்படுத்துகிறார். இரண்டே காட்சிகளில் யூகி சேது வந்தாலும் படத்தின் மையக்கருவிற்கு வலு சேர்ப்பதே அவர் பேசும் வசனங்கள் தான். "அவன் பொம்மையை நிஜ குதிரையாக பார்க்கிறேன். குழந்தையின் உலகத்திற்குள் செல்லுங்கள்" என்று மருத்துவராக வரும் யூகிசேது சொல்வது தான் கிஷோருக்குக் கிடைக்கும் ஒரே பிடிப்பு. ஹரிதாசிற்கு குதிரை என்றால் உயிர். குதிரைகள் ஓடுவதைப் பார்த்ததும் அவனும் ஓடத் தொடங்குகிறான். உடனே கிஷோரின் கண்கள் மலர்கிறது. என் பையனை பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாற்றி விட முடியும் என்று நம்பிக்கைக் கொள்கிறார். அவனது விருப்பம் ஓடுவது அல்ல. குதிரை தான். படத்தின் ஆரம்பம் முதலே ஹரிதாஸின் குதிரை மீதான காதல் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் வைத்து ஓட்டப் பயிற்சி தர முயல்கிறார் கிஷோர். அதற்கு பதில் ஒரு குதிரையுடன் ஓட விட்டிருந்தால் ஹரிதாஸ் குதூகலமாக ஓடிப் பயிற்சிப் பெற்றிருப்பான். எது எப்படியோ அன்பும், அரவணைப்பும், முயற்சியும் எத்தகைய குறைபாடுகளையும் வெல்லும் என அழுத்தமாக பதிந்துள்ளனர். அது போதும்.
 
autism-link-logo-254x300.jpg
ஹரிதாஸ் கவனிக்கப்பட வேண்டிய படமாக இருப்பதற்கு ஒரே காரணம்.. இப்படம் எடுத்துக் கொண்ட கருவான ஆட்டிசமே. ஆட்டிசம் என்பது நோயல்ல.. குறைபாடு தான் எனப் பார்வையாளர்களின் தலையில் ஓங்கி அடித்துச் சொல்லும் படம் தான். இருப்பினும் ஒரு காட்சியில் நகைச்சுவை என்ற பெயரில் வரும் சத்தம் அசூயை வரவழைக்கிறது. ஓமக்குச்சி என்ற பருமனான மாணவனை அறிமுகம் செய்யும் பொழுது, யானை பிளிறும் ஓசையைப் பின்னணியாக கொடுத்துள்ளார் விஜய் ஆன்டனி. ஒருவரின் உருவ அமைப்பினைக் கொண்டு எள்ளி நகையாடுதல் எத்தனை அருவருப்பான விடயம்? அதே போல் "துப்பாக்கியில் தூங்குது தோட்டா" என்ற வருத்தத்துடன் காவல்துறை அதிகாரிகள் பாடுவது போல் பாடல் வரிகள் வருகின்றன. எவரையாவது எதற்காகவாவது காவல்துறையினர் சுட்டுக் கொண்டே இருந்தால் பரவாயில்லை என நினைத்திருப்பார் போலும் இயக்குநர் குமரவேலன். ரமணா என்னும் ரவுடியை போக விட்டு நெற்றிப்பொட்டில் சுடுகிறார் சிவதாஸ். இறந்து சரியும் அவர் உடலின் அருகில் செல்லும் மூன்று காவல்துறை அதிகாரிகள்.. நன்றாக நெருக்கத்தில் போய் மீண்டும் சுடுகின்றனர். "ஆமான்டா.. நான் லைசென்ஸ்டு கில்லர்" என பெருமிதம் பொங்க கம்பியை ஆதி என்னும் ரவுடியின் கழுத்தில் நாயகன் சொருகுகிறார். 
 
விஜய் ஆன்டனியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. இரவுக் காட்சிகளிலும், நாயகனின் வீட்டிற்குள்ளும் அமைக்கப்பட்டிருக்கும் ஒளி அமைப்புகள் மிக ரம்மியமான உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஒளிர்கிறது. எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலு தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர். படத்தின் கலர் டோன்னும் செம்மையாக உள்ளது. இரவில் நடனம் ஆடும் பொழுது எழும் தெருப் புழுதி கூட படத்தில் அழகாக தெரிகிறது.
 
ஹரிதாஸ் - அன்பும், அரவணைப்பும், முயற்சியும் எத்தகைய குறைபாடுகளையும் வெல்லும்.

http://ithutamil.com/content.aspx?type=1&postid=8b461ef5-3a44-46b9-b5d1-2f31af8fd145#.UTgTV6Lvvc9

  • தொடங்கியவர்

கருவானது ஒரு சமூக விழிப்புணர்வு மட்டுமல்ல ஒழுங்கான உதவியும் ஆதரவும் இருந்தால் யாராலும் எதையும் சாதிக்கமுடியும் என்பதையும் காட்டி உள்ளார்கள்.

 

எனக்கு பிடித்த அண்மைய திரைப்படம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.