Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிஓயா சிங்களப் பிரிவுடன் தமிழ்க் கிராமங்கள் இணைப்பு; அரசின் செயலுக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வெலிஓயா சிங்களப் பிரிவுடன் தமிழ்க் கிராமங்கள் இணைப்பு; அரசின் செயலுக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு
 
இலங்கை அரசால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "வெலிஓயா' சிங்களப் பிரதேச செயலர் பிரிவில் சில தமிழ்க் கிராமங்களை இணைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
 
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ளடங்கியிருந்த 9 சிங்களக் கிராமங்களை ஒன்றிணைத்து வெலிஓயா என்ற புதிய பிரதேச செயலர் பிரிவு 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 
 
இந்தப் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 125 வாக்காளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தப் பிரதேச செயலர் பிரிவுடன் ஐந்து தமிழ்க் கிராமங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவினுள் அடங்கும் கிராமங்களை வெலிஓயாவுடன் இணைப்பதில் பிரதேச செயலர் மும்முரமாகப் பணியாற்றி வருகிறார்.
 
அரசின் இந்த முயற்சி இனவாத நோக்கம் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். "முல்லைத்தீவு மாவட்டம் தனித்தமிழ் மாவட்டமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு வெலிஓயாப் பிரதேச செயலகத்தை அரசு உருவாக்கியுள்ளது'' என்று அவர் கூறினார்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 கிராம சேவகர் பிரிவுகளில் தற்போது சிங்கள மக்கள் சிறிய அளவில் குடியேறியுள்ளனர். கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் கிழக்கு, கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டாங்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே சிங்கள மக்கள் தற்காலிகமாகக் குடியமர்ந்துள்ளனர். 
 
மீன்பிடித் தொழிலின் நிமித்தமாக அவர்கள் இங்கு தங்கியுள்ளனர். இந்தக் கிராமங்களை வெலிஓயாப் பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்று நம்பகமான வட்டாரங்கள் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தன. 
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கிய இலங்கை அரசு இப்போது அவர்களை முல்லைத்தீவு நகர் நோக்கி நகர்த்தி அங்குள்ள இனப்பரம்பல் விகிதாசாரத்தை மாற்ற முயல்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டுகிறார். 
 
04 மார்ச் 2013, திங்கள் 9:40 மு.ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.