Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றாஜீவ் கந்தியின் கொலை தப்பா?

Featured Replies

றாஜீவ் கந்தியின் கொலை தப்பா?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துரை செய்த அரசியல் கட்டமைப்பு, இந்தியா தன் மாநிலங்களுக்குக் கொடுத்துள்ள கட்டமைப்பை விட குறைவானதாகவே இருந்தது. இதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். யானைப் பசிக்கு கீரைப்பிடியை இந்தியா திணிக்க முற்பட்டது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதற்கு பலர், இந்தியா இலங்கைத் தமிழருக்கு இப்படி சலுகை கொடுத்தால், தனது மாநிலங்களூம் மேலும் சலுகைகள் கேட்க ஆரம்பித்துவிடும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படியோ, தமது பரிந்துரையை ஏற்க மறுத்த விடுதலைப் புலிகளை, இந்தியா ஒழிக்க முற்பட்டது.

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள்.

இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை.

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

இந்திய இராணுவம் சமாதானப் படையாக இருந்த பொழுது, இந்திய பொருட்கள் தமிழீழத்தில் அதிகமாக கிடைத்தன. அதில் ஒன்று நெருப்பெட்டி [தீப்பெட்டி]. நெருப்பெட்டியில், ஒரு பக்கத்தில் படம் இருப்பது வழமை. இந்திய நெருப்பெட்டியில் இருந்த படம், ஒரு புலி பாய்கிறது, எதிரே நெற்பயிர்கள் அறுவடை செய்யும் அரிவாள். இந்தியாவில் கூட அப்படி ஒரு நெருப்பெட்டி விற்பனை செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. தமிழர்களுக்காகவே செய்யப்பட்ட போல் அந்த நெருப்பெட்டி. இந்தியா சும்மா வரவில்லை, கபட நோக்கத்தில் தான் வந்துள்ளது என்று எங்களுக்கு அப்பவே தெரிந்தது.

இந்திய-இலங்கை ஒபந்தம் யாருக்கு நன்மை? இந்தியா சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழரை அழிக்க ஒரு ஒப்பந்தம். புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். லொறி லொறியாக ஆயுதங்கள் ஒப்படைக்கப் பட்டன. அதைப் பார்த்து நாங்களே யோசித்திருக்கிறோம், இனி புலிகளால் தலை எடுக்க இயலாது என்று. என்ன புலிகள் முட்டாள்களாக இவ்வளவு ஆயுதங்களையும் ஒப்படைக்கிறார்களே என்று. ஆனால், MGR ஆயுதங்களை கொடுத்தார், களவாக, இந்திய அரசாங்கம் அல்ல. இந்தியா இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்த பின் மீண்டும் எப்படி ஆயுதம் வந்தது என்பதை தலைவரின் வரலாற்று VCD ஐ வாங்கி பார்க்கவும். அதில் தலைவரே சொல்கிறார் MGR தான் ஆயுதம் தந்தார் என்பதை.

அந்தக் காலத்தில் சிங்களப் படை பெண்களை பலவந்தம் செய்தது கிடையாது (அ) அரிது. இந்திய இராணுவம் வந்த பின்பே பெண்களும் பயப்பட ஆரம்பித்தார்கள். ஒரு சந்தியில் புலி குண்டு வைத்து வெடித்தால், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிலுள்ளவர்களுக்கு சணல் பறந்த அடி. அதில் வயது வித்தியாசம் இல்லை.

நான் ஆறாம் ஆண்டு படிக்கும்பொழுது, எனது சக மாணவனின் குடும்பத்திற்கு சணல் பறந்த அடி. அவர்கள் வீட்டிற்கு அருகாமையில், குண்டு வெடித்தது தான் காரணம். ஆறாம் ஆண்டு படிக்கும் எனது நண்பன் உயரத்தில் சற்று குள்ளமானவன், மற்றய மாணவர்களை விட. அவனையே அடித்தார்கள். நாங்கள் அவர்கள் வீட்டிற்கு சிறிது நேரம் கழித்து சென்றபோது, உடம்பில் இரத்தக் காயங்களுடன் தான் அவர்கள் இருந்தார்கள். அவனின் தந்தையை மரத்தில் சாத்தி தான் அடியாம். அடுத்த நாளே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். அந்தக் காலத்தில் சிறுவர்களோ, பெண்களோ, வயோதிபர்களோ இயக்கத்தில் இருந்தது கிடையாது. இந்திய இராணுவம் தான் பாகுபாடின்றி எல்லோருக்கும் பயத்தை உண்டுபண்ணியது.

இந்திய இராணுவத்தில் “para troops” என்று ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் சற்று குள்ளமாகவே இருப்பார்கள். இவர்களிடம் ஒரு வாள் இருக்கும்; கறுப்பு உடை அணிவார்கள். இந்திய இராணுவத்திலேயே இவர்கள் தான் மோசமானவர்கள். அப்போ இலங்கை இராணுவம் ஒரு வீட்டிற்கு அதன் முன்வழியாலேயே வருவார்கள்.

இந்திய இராணுவம் அப்படி இல்லை. வேலியைப் பிய்த்துக் கொண்டு வருவார்கள். திடீர் திடீர் என்று வருவார்கள். இதனாலேயே, பெண்கள் குளிக்கப் பயப்பட்டார்கள். தனியாக இருந்த பெண்களிடம் தப்பாக நடந்தது. ஏன் என் தாயார் தனியாக இருக்கும் பொழுது கூட ஒரு இந்திய இரணுவம் வீட்டிற்கு உள் நுளைய முற்பட, அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கே வந்த அவன், அம்மாவை எங்கள் வீட்டிற்கு செல்லும்படி சொன்னான். எங்கள் அம்மா ஒரு பைத்தியம் போல் நடிக்க, அந்த வீட்டுக்காரர்கள், எங்கள் அம்மாவிற்கு சற்று மூளை குழப்பம் என்று சொல்லி விட்டதால் அவன் திரும்பி சென்றுவிட்டான்.

இவை போன்று பல கசப்பான சம்பவங்களே இந்திய இராணுவத்துடன் தமிழீழ மக்களுக்கு. இந்திய இராணுவத்தை விட சிங்கள இராணுவமே மேல் என்று நினைத்த காலங்கள் அவை. இந்திய இராணுவத்திடமிருந்து கற்ற்குக்கொண்டதைத் தான் இப்போது சிங்கள இராணுவம் செய்து வருகிறது. எங்கள் நாட்டிற்கு படை அனுப்பி, பலரைக் கொன்று, பல சித்திரவதைகள், வயது வித்தியாசம் இல்லாமல் அடிகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாம் செய்த இந்தியாவின் மீது எவ்வளவு கோபம் இருக்கும்?

இவ்வளவுக்கும் காரண கர்த்தாவான றாஜீவ் காந்தி மீண்டும் பிரதமராக தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால், மீண்டும் ஓர் அச்சுறுத்தல் தமிழீழ மக்களுக்கு வரலாம்.

றாஜீவ் கொலை, ஒரு பழிவாங்கல் என்பதை விட ஒரு அச்சுறுத்தல் ஆகவே செய்யப்பட்டது. இன்னும் ஒருமுறை இராணுவத்தை அனுப்பாமல்; ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய வேண்டுகோள்களுக்கு முட்டுக்கட்டையாக இந்தியா இருக்காமல்; எம்மை அழிக்க இனிமேலும் முற்பட வேண்டாம் என்று ஒரு அச்சுறுத்தல்.

தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள் இன்னும் 13 மைல்கள் தான் இருக்கிறது; இன்னும் 11 மைல்கள் தான் இருக்கிறது என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்க, தலைவர் மாவீரர் நாள் என நவம்பர் 27ம் திகதியை அறிவிக்கிறார். சுவர்களில் சுவரொட்டிகள். இந்தியா சொன்னது, பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். அது தான் நவம்பர் 27. மக்களுமே இதை நம்பினார்கள். சில மைல்கள் தான் இருக்கு என்று இருக்கையில், இப்படி ஒரு மாவீரர் நாள் என அறிவிக்க தலைவர் இறந்து விட்டார் என எண்ணவே தோன்றும்.

இந்தியா அன்று எமது தலைவர் பிரபாகரனை கொன்றது [செய்தியின் படி] சரி என்றால், இந்தியாவின் தலைவர் றாஜீவ் காந்தியைக் கொன்றதுவும் சரியே. இதை எவ்வாறு இந்தியர்கள் தப்பு என்று சொல்ல முடியும்?

அன்று ஜப்பான், அமெரிக்கா அணு குண்டைப் போட்ட பின், தாங்கள் அமெரிக்கா மீது போர் தொடுத்தது பிழை என்று ஜப்பானிய அரசர் முட்டுக்காலாலேயே நடந்து ஜப்பானிய மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அன்றைக்கு அறிவித்தது போல், இன்றுவரை ஜப்பான் போருக்காக எங்கும் இராணுவம் அனுப்பியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் “Ministry of Defence” கூட இல்லாமல் “Agency of Defence” என்னும் குறைந்த செயற்குழுவாகவே இன்னும் ஜப்பான் அரசியலில் உள்ளது.

அன்று றாஜீவ் காந்தியைக் கொன்ற படியால் தான் இன்றுவரைக்கும், இந்தியா இன்னும் ஒருமுறை படை அனுப்பாமல் இருக்கிறது. அன்று தலைவர் எடுத்த முடிவு சரி என இன்று வரலாறு சாட்சி சொல்கிறது. அதே போல், எப்போதும் எமது தலைவர் எடுக்கும் முடிவு ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சரியான முடிவாகவே இருக்கும். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தொலை நோக்குச் சிந்தனை நமது தலைவரிடம் நிறையவே இருக்கிறது. அதனால், தற்சமயம் பிழை என எண்ணத் தோன்றும் முடிவுகளும், நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், அது சரி என வரும்.

இந்திரா காந்தியை கொன்றபின் பஞ்சாப் காரர்களை இந்திய மக்கள் கொன்றார்களா, இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டில் வெட்டிக் கொன்றது போல்? பஞ்சாப் காரர்களுக்கு அரச பாடசாலைகளில் படிக்க இயலாது என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டதா இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் நிகழ்ந்தது போல்? அரச பாடசாலைகள் அல்லாத சில பாடசாலைகளும் இலங்கைத் தமிழரை ஒதுக்கியது [”சோ”]. றாஜீவ் காந்தியை புலி கொன்றது பிழை என்று இந்தியர்கள் வெறுக்கிறார்களா (அ) வேறு எதாவது காரணம் இருக்கிறதா?

பிராந்திய வல்லரசு; அயல் நாடு; தமிழீழத்தைச் சுற்றிக் கடல் [அந்தக் காலத்தில் கடற்புலிகளும் இல்லை]; இவைக்கும் மத்தியில் இந்தியாவை எதிர்த்தால், புலிகளுக்கு பெரும் நட்டம் என்பதில் ஒரு துளி கூட ஐயப்பாடில்லை. இருந்தாலும் அரசியல் இலாபத்திற்காக தமிழர்களின் சுயநிர்ணயத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்ததாலேயே புலிகள் தமிழர்களின் மனதின் உயரத்தில் குடிகொண்டார்கள். தமிழனின் வரலாறு சொல்கிறது, போரில் வெற்றி தோல்வியை விட இறந்தவனுக்கு அம்பு முதிகில் பாய்ந்ததா (அ) மார்பில் பாய்ந்ததா என்பதே முக்கியமாக பார்க்கப்பட்டது என்று. அன்று இந்தியாவை எதிர்த்து புலி பூண்டோடு அழிந்திருந்தால், மார்பில் அம்பு பட்டவனாகவே வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்.

தற்போது இருக்கும் மற்றய குழுக்கள், தமிழருக்காய் தான் போராடுகிறோம் என்று சொல்லி தமிழரின் சுயநிர்ணயத்தை விற்கிறார்கள். இது தான் புலிகளுக்கும், மற்றய இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

றாஜீவ் காந்தி கொலை செய்யப் பட்ட முறை தான் பிழை என்றால், அன்று கண்ணன் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு உதவிய முறைகள் அத்தனையும் பிழைதானே. இந்தியாவையே கைப்பற்றி றாஜீவ் காந்திக்கு தண்டனை வழங்கும் பலம் புலிகளிடம் இல்லை. அமெரிக்கா போல், அணு குண்டு போட புலிகளிடம் அணு குண்டும் இருக்கவில்லை, விமானமும் இருக்கவில்லை. கண்ணன் குறுக்கு வழியில் பாவம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியது போல், புலிகள் தங்களிடம் இருந்த பிரம்மாஸ்திரத்தை பாவித்தார்கள்.

எமது சுயநிர்ணயத்தை விற்று பிச்சை வாங்கும் தமிழர்கள் அல்ல நாம்; நாங்கள் விடுதலைப் புலிகள் என்று வரலாறு எழுதட்டும்.

http://1paarvai.wordpress.com/

  • தொடங்கியவர்

நாதியற்ற தமிழர் நாம் - 4

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள்.

இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை. இந்தியாவை எதிர்த்ததிலிருந்தே தெரியவில்லையா, புலி இந்தியாவை நம்பி உயிர் வாழவில்லை என்பது.

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள் இன்னும் 13 மைல்கள் தான் இருக்கிறது; இன்னும் 11 மைல்கள் தான் இருக்கிறது என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்க, தலைவர் மாவீரர் நாள் என நவம்பர் 27ம் திகதியை அறிவிக்கிறார். சுவர்களில் சுவரொட்டிகள். சற்றே சிந்தித்துப் பாருங்கள், எவ்வளவு இக்கட்டான நிலமை. சில நாட்களோ (அ) சில மணி நேரமோ என்று இருக்கையில், இப்படிச் சிந்திக்க முடியுமா? இந்தியா சொன்னது, பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். அது தான் நவம்பர் 27. மக்களுமே இதை நம்பினார்கள். சில மைல்கள் தான் இருக்கு என்று இருக்கையில், இப்படி ஒரு மாவீரர் நாள் என அறிவிக்க தலைவர் இறந்து விட்டார் என எண்ணவே தோன்றும். தலைவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லும்போது கூறுவார்கள், அவர் ஒரு தொலை நோக்குப் பார்வை உடையவர் என்று.

இந்தியா இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்த பின் மீண்டும் எப்படி ஆயுதம் வந்தது என்பதை தலைவரின் வரலாற்று VCD ஐ வாங்கி பார்க்கவும். அதில் தலைவரே சொல்கிறார் MGற் தான் ஆயுதம் தந்தார் என்பதை.

கிட்டு கூட இந்திய கடற்பரப்பில் பயணம் செய்யும்போது இந்தியா மடக்கவில்லை. சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இந்தியா கிட்டுவை பிடிக்க முற்பட, தமிழீழத்திற்காய் உயிர் துறந்தார். இந்தியா தனது எல்லையையும் மீறியே புலியை எதிர்த்தது.

இந்தியாவின் ஒரு துளி உதவி கூட இல்லாமல் தான் புலி இப்போது மிகப் பெரும் இயக்கமாக, அரசாங்கமாக உருவெடுத்திருக்கிறது [உதவி என்ன எதிரியாவே இருந்தும்]. கடற்படை, விமானம், நீர்மூழ்கிக் கப்பல் [உள்ளூர் தயாரிப்புகள்] எல்லாம் இருக்கு. புலிகளிடம் என்னம் அணு குண்டு தான் இல்லை.

அன்று றாஜீவ் காந்திக்கு குடுத்த அடியால் தான் இன்று இந்திய இராணுவம் இலங்கைக்கு வரப் பயப்படுது.

அன்று தலைவர் எடுத்த முடிவு சரி என இன்று வரலாறு சாட்சி சொல்கிறது. அதே போல், எப்போதும் எமது தலைவர் எடுக்கும் முடிவு ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சரியான முடிவாகவே இருக்கும். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தொலை நோக்குச் சிந்தனை நமது தலைவரிடம் நிறையவே இருக்கு. அதனால், தற்சமயம் பிழை என எண்ணத் தோன்றும் முடிவுகளும், நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், அது சரி என வரும்.

அன்று இந்தியாவை எதிர்த்து புலி பூண்டோடு அழிந்திருந்தால், தமிழீழத்தில் இந்தியா குடிகொண்டிருந்திருக்கும். அன்று தலைவர் தன் உயிருக்காக கொள்கையை கைவிடவில்லை. இன்று இந்தியாவில், தேர்தல் சீட்டுக்காக கட்சி மாறுகிறார்கள். இது தான்யா இந்திய அரசியல் வாதிக்கும் தமீழத் தலைவருக்கும் உள்ள வித்தியாசம்.

சும்மா போராளிகளை மட்டும் வளர்க்கவில்லை எமது தலைவர். ஒரு நாட்டுக்கு தேவையான சகலதையும் வளர்த்திருக்கிறார். கலை, பண்பாடு, சுயதொழில் என்று சகலதும். திறமையானவர்கள் போராளியாக சேர விரும்பினாலும், தலைவர் அவர்களின் திறமைக்கேற்ப வேறு துறைகளிலோ [அரசியல், மக்கள் தொடர்பாளர், பேச்சாளர்] (அ) மேற்படிப்போ செய்ய திட்டங்களை அமுல்படித்தியிருக்கிறார். அறிவாளிகளை, புலி தனது செலவில் வெளிநாடு சென்று படிக்க முழுப் பண உதவியும் குடுக்கிறார்கள்.

இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதற்காக, எல்லோரையும் புலி சேர்க்கவில்லை. ஒரே குடும்பத்தில், மூத்த தமையன் புலிக்கு சேர்ந்து, இரண்டாவது தமையனும் சேர்ந்து, பின் இளைய தங்கையும் புலிக்கு சேர, புலி இளைய தங்கையை ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டது. ஒரே குடும்பத்தில், எல்லோரும் புலிக்கு சேர்ந்தால் அந்தக் குடும்பம் மீண்டும் தழைக்காமல் போய்விடக்கூடும் என்றும் சிந்திக்கவும் செய்கிறது. இப்படி பல நிகழ்வுகள்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. இந்தியா மிக முக்கியமாக இருந்தாலும், எம்மை எதிர்த்தால், அது எவராக இருந்தாலும், பாய்வோம். அமெரிக்கா வியற்நாமில் தோற்றது போல், இந்தியா தமிழீழத்தில் தோற்றது.

ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் புலிகளுக்கு உதவி இருப்பான். நீ புலியா (அ) தமிழனா என்று கேட்பதற்கே அங்கு இடமில்லை. புலி என்றால் தமிழன், தமிழன் என்றால் புலி என்று வரலாறாகிவிட்டது. இனி இதை அகராதியில் ஏற்றுவது தான் மிச்சம்.

இந்தியத் தமிழர்களை தமிழர்களாகவே எண்ணவே தோன்றவில்லை ஐயா. இந்திய அரசாங்கம் தமிழர்களை கொன்றொழிக்க அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் தானே. அவர்களும் இந்தியர்களே; தமிழர்கள் அல்ல.

_____

http://1paarvai.wordpress.com/2006/06/27/n...amizhar-naam-4/

நல்ல தொரு கட்டுரை ஆனாலும் பல இடங்களில் உணர்ச்சிகள் கட்டுக்கு மீறிப்போயிருக்கிறது கவலையளிக்கிறது. உந்த அணுகுண்டு உவமானம் உவமையங்கள் மிக ஆபத்தானவை நிராகரிக்கப்பட வேண்டியவை முற்றாக தவிர்க்கப்பட வேண்டியவை. சர்வதேச அரசயலில் இன்று அணுகுண்டு விடையம் ஈரான் வட கொரியா போன்றவர்களால் பல்வேறுபட்ட உணர்வலைகளை எழுப்பியிருக்கிறது.

அணுகுண்டை ஒரு தற்காப்பு ஆயுதமாக ஒருபோதும் தமிழீழம் பார்க்காது எண்ணாது. தயவு செய்து உணர்வாளர்கள் இதை கவனித்தில் கொண்டு எழுதுங்கோ.

அமெரிக்கா அணுகுண்டு போட்டது போல் போட புலிகளிடம் இருக்கவில்லை என்பது ஆனை தன்ரை தலையில் மண்வாரிப் போட்ட வசனம். உங்கடை உணர்ச்சிகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதை தவிருங்கள். எழுதியவற்றை எதிரி எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான் என்ற கண்ணோட்டத்தோடு 1 முறைக்கு 5 முறை வாசித்து விட்டு பிரசுரியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.