Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தை சோதனை சாவடியில் படையினர் கடுமையான சோதனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஓமந்தை சோதனை சாவடியில் படையினர் கடுமையான சோதனை!
மார் 6, 2013
     
 வவுனியா மாவட்டத்திலுள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் நேற்றிரவு தொடக்கம் சிறிலங்கா படையினரின் கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்குச் செல்கின்ற தமிழ் மக்களின் சகல வாகனங்களும் மேற்படி சோதனைச் சாவடியின் வழிமறிக்கப்பட்டு கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. இளைஞர்,யுவதிகள் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 
யுத்தம் நிறைவுக்கு வந்து சில ஆண்டுகளின் பின்னர் ஓமந்தைச் சோதனைச் சாவடியூடாகப் பயணிக்கும் வாகனங்கள் சோதனையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நேற்றிரவு ஏழு மணியிலிருந்து குறித்த வீதியூடாகப் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. 
 
பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட வாகனங்களிலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு தீவிர உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டன. அத்துடன் அவர்களின் உடமைகளும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
 
இளைஞர், யுவதிகள் பலர் நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டனர். தனிமையில் பயணம் செய்த இளைஞர்கள் பெரும் சங்கடங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தீர்களா?? எங்கே செல்கிறீர்கள்?? ஏன் செல்கிறீர்கள்?? உங்கள் உறவினர்கள் யாராவது காணாமற் போனார்களா?? என்றவாறு சிறிலங்காப் படையினர் இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போதும் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக வவுனியாவிலிருக்கும் சங்கதி24 செய்தியாளர் தெரிவித்துள்ளார். 
 
இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள காணாமற்போனோர் தொடர்பான கவனயீர்ப்பு நிகழ்விற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலிருந்து சென்ற மக்கள் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சிறிலங்கா படையினர் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை நடவடிக்கைகள் காரணமாக நேற்று மாலை தொடக்கம் இன்று காலை வரை ஓமந்தைச் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எமது சங்கதி24 செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
சிறீலங்கா இராணுவம் வன்னியில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்க முற்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக மீண்டுமொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் அவ்வாறானதொரு தீர்மானம் வேண்டாமென்று சிறிலங்கா மன்றாடி வருகின்றது. சிறிலங்காவில் தாங்கள் தமிழ் மக்களை சம அந்தஸ்துடன் நடத்துவதாகவும் இதனால் இந்த தீர்மானம் தேவையற்றது என்றும் சிறிலங்கா வாதாடி வருகின்றது. இந்த நிலையில் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் தமிழ் மக்கள் மீண்டும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.