Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் படையினரின் ஊர்தி பயிற்சியால் மக்கள் அச்சம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் படையினரின் ஊர்தி பயிற்சியால் மக்கள் அச்சம்!
மார் 8, 2013
     
 யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் சிறிலங்காப் படையினர் படை வாகனப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. 
 
படை பயிற்சி முகாம்களில் நடைபெறவேண்டிய வாகனப் பயிற்சிகள் தற்போது குடாநாட்டு வீதிகளில் நடைபெறுகின்றமை குறித்து குடாநாட்டிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். போர்க் களங்களில் பயன்படுத்தப்படும் பவள் கவச வாகனங்களைக் கொண்டுவந்து மக்கள் மத்தியில் வைத்துப் படையினருக்கு பயிற்றுவிப்பதால் மக்களிடையே யுத்த மனோபாவம் மேலோங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
 
ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு நடைபெற்று வருகின்றது. அதிலும் சிறிலங்காப் படையினர் வன்னி யுத்தத்தின் போது போர் மரபுகளை மீறி மக்களைக் கொன்றொழித்தமைக்காக போர்க்குற்ற விசாரணையில் சிக்கியிருக்கின்றனர். இந்த நிலையில் யாழ்.குடாநாடு உள்ளிட்ட வன்னிப் பிராந்தியங்களில் உள்ள மக்கள் அரசுக்கு எதிராக எந்தவொரு போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்ற மகிந்த அரசு மக்களை அச்சுறுத்தி வைத்திருப்பதன் மூலம் இந்தப் போராட்டங்களை தடுக்க முனைகின்றது. 
 
காணாமற்போனோர் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பில் நடத்தவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் அரச படைகளின் அடக்குமுறைகளைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வவுனியா ஒமந்தைச் சோதனைச் சாவடியில் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையிலேயே யாழ். குடாநாட்டின் பல இடங்களிலும் இராணுவத்தினரின் கனரக வாகனப் பயிற்சி நடைபெற்று வருகின்றது. குடாநாட்டில் அதிகமான மக்கள் தினமும் போக்குவரத்து செய்யும் வீதிகளில் இராணுவத்தின் கவச வாகனப் பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கு இவ்வாறு பவள் கவச வாகனப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வலிகாமத்தின் பல இடங்களிலும் இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
 
இராணுவப் பயிற்சிகளானவை இராணுவத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்படவேண்டும். அதனைவிடுத்து பொதுமக்கள் கூடும் இடங்களில் அதனை நடத்த முடியாது. ஆனால், சிறிலங்கா படையினர் 'டு' போர்ட் தொங்கவிடப்பட்ட பவள் கவச வாகனப் பயிற்சியை மக்கள் மத்தியில் மேற்கொள்வதானது தமது போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளதென்று மக்கள் தெரிவிக்கின்றனர். 
 
அதுவும் ஜெனிவா மனித உரிமை மாநாடு நடைபெற்று வருகின்ற இந்த வேளையில் மக்களை அச்சுறுத்தி அரசுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கத்துடனேயே படையினர் இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக யாழ், குடாநாட்டிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் குடாநாட்டில் மீளக் குடியேறியுள்ள மக்கள் மேற்படி பவள் கவச வாகனங்களைக் கண்டு அச்சமடைந்து வீதிகளுக்கு வருவதை விடுத்து ஒதுங்குகின்ற நிலையும் யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்களை புலம்பெயர் தமிழ் மக்கள் தத்தமது நாடுகளின் அரசாங்களுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென்று குடாநாட்டிலுள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.