Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகத்துறைக்குள் இருக்கும் ஒற்றா்கள் விசாரிக்கப்பட வேண்டும்

Featured Replies

வலம்புரியின் அலுவலகச் செய்தியாளர் உதயராசா சாளின் இனந்தெரியாத ஆறு பேர் கொண்ட குழுவால் தாக்கப்பட்டு படுகாயமடை ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்ததே.

 

அடிகாயத்தின் தாக்கம் காரணமாக அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருக்கும் நிலையில், தாக்கப்பட்ட சம்பவத்திற்கு விசமத்தனமான காரணம் கற்பிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட் டுள்ளனர்.

 

இத்தகைய முயற்சிகள் போக்கிலித்தன மானவை. வலம்புரியின் உயிரைக் குடிப்பதற்கு பகீரத முயற்சி செய்து அது முடியாது என்று தோற்றுப் போனவர்கள், தமக்கு விழுகின்ற அடியில் தமிழ்த் தேசிய சாயத்தைப் பூசி, தாங்கள்தான் தமிழ்த் தேசியத் திற்காக குரல் கொடுப்பதாக பிரசாரமும் செய்கின்றனர்.

 

என்ன செய்வது! அப்பாவித் தமிழ் மக்களில் சிலர் அதனை நம்பினர். ஆனால், வலம்புரியை வேடதாரிகள் யாரும் அசைக்கவும் முடியாது. அரக்கவும் முடியாது. சாவினைத் தோள் மீது நாங்கள் சுமப்போம். சாவிற்கும் அஞ்சாமல் சாவினுள் வாழ்வோம் என்று ஒரு கவிஞன் பாடினானே! அந்தத் துணி வோடு போக்கிலிகளை -அவர்களின் அநியா யங்களை கத்தைகத்தையாக எழுதிக் குவிப்போம். நாங்கள் அஞ்சப் போவதில்லை.

 

ஒரு செய்தியாளன் வீதியில் வைத்துத் தாக்கப்படுகின்றான். ஆறு பேர் கொண்ட குழுவின் அடியில் அவன் வீழ்ந்து கிடக்கின்றான். இதே செய்தியாளன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் அடக்க முற்பட்டபோது,  அதன் நிகழ்வுகளை புகைப்படமாக்குகையில் தாக்கப்படுகின்றான். நிலத்தில் வீழ்த்தி அறையப் படுகின்றான்.

 

இவையயல்லாம் அறியப்பட்டிருந்தும் செய்தியாளர் சாளின் தாக்கப்பட்டதற்கு இயற்றல் காரணம் கூறுகின்றவர்கள் இருப்பார்களாயின், அவர்கள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணை அவசியமும் அவசரமும் ஆகும். ஏனெனில் இவர்கள் செய்தியாளர்கள் என்ற பெயரில் ஊடகத்துறைக்குள் ஊடுருவியுள்ள ஒற்றர்கள். செய்தியாளர் தாக்கப்பட்டவுடன் அதற்கான காரணத்தை ஒருவர் கூறுவாராக இருந்தால் அவர் யாராக இருக்க முடியும்?

 

எனவே இத் தகையவர்கள் தகுந்த முறையில் விசாரிக் கப்பட வேண்டும்.  வலம்புரிச் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் யார் யாரை விசாரிக்க வேண்டும் என்பதை யாழ்ப்பாணப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வலம்புரி எடுத்துக் கூறவுள்ளது. அதேநேரம் ஏற்கெனவே யாழ்ப் பாணத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற் றுகின்றவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர் பில் ஒரு விரிவான விசாரணை முன்னெடுக்கப் படுமாக இருந்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

 

சிலவேளைகளில் தமது இலாப நோக்கம் கருதிய தாக்குதல்களாகவும் அவை இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல்களுக்கும் இடம் உண்டு. இது தொடர்பில் வலம்புரி தொடர்ந்தும் குரல் கொடுக்கும். தாக்கப்பட்டவர்கள் மற்றும் உயி ரிழந்தவர்களின் குடும்பங்கள்; அவர்களுக்கு கிடைத்த நிவாரணங்கள் தொடர்பான பேட்டிகளும் தயாராகிக் கொண்டு இருக்கின்றன.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=693:2013-03-11-04-49-29&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

  • தொடங்கியவர்

ஊடக அச்சுறுத்தல் தொடர அனுமதிக்க வேண்டாம்: விந்தன் கனகரத்தினம்

 

வலம்புரி பத்திரிகையின் செய்தியாளரான உதயகுமார் சாளின் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக  கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் இன்று தெரிவித்தார்.

 

 

செய்தியாளரை நடு வீதியில் வைத்து தாக்கிய ஆறு பேர் அடங்கிய கும்பல் அடையாளப்படுத்திக் கொண்டபோதும், இன்று வரை கைது செய்யப்படாததையிட்டு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சில பத்திரிகையாளர்கள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியலாளர்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், இப்பொழுது இறுதியாக வலம்புரிப் பத்திரிகையின் செய்தியாளர் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்படடுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

இத்தகைய மிலேச்சத்தனமான, மனித நேயத்திற்கும், மனித பண்பிற்கும் துளியேனும் ஒவ்வாத செயல்கள் யாழ் மண்ணில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகவும், தொடர்கதையாகவும் அரங்கேற்றப்பட்டு வரும் மற்றுமோர் அங்கமாக இச்செயல் இடம்பெற்றுள்ளது என அவர் கூறினார்.


'இவ்வாறான செயற்பாடுகள் யாழில் அதிகரிக்குமென்றால், ஊடக சுதந்திரம் அழியும் நிலை ஏற்படலாம். ஊடகவியலாளரை தாக்கியவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

 

அதற்கு யாழ். பொலிஸார் விரைந்து விசாரணை மேற்கொண்டு தாக்குதல் சூத்திரதாரிகளை கைதுசெய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். தண்டணை விதிக்கபடாவிட்டால், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்கள் மத்தியில் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் இந்நிலை தொடர அனுமதிக்க கூடாதென்றும்" அவர் தனது கண்டண அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/60484-2013-03-11-14-26-14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.