Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா சிறிலங்காவுக்கான தனது ஆதரவை விலக்க வேண்டும் - அவுஸ்திரேலிய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Theage-logo.gif

பொதுநலவாய அமைப்பின் 54 உறுப்பு நாடுகளும் டிசம்பர் 14,2012 அன்று முதன் முதலாக தமது அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற அடிப்படை விழுமியங்களைக் கொண்ட பட்டயம் ஒன்றை ஏற்றுக்கொண்டன. ஜனநாயகம், மனித உரிமைகள், சமாதானம், பாதுகாப்பு மற்றும் கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்ற முக்கிய கோட்பாடுகள் இப்பட்டயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுவது உறுதிப்படுத்தப்படாவிட்டால், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முழு அளவில் அடைந்து கொள்ளமுடியாது. இதேபோன்று கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் என்பது ஜனநாயக ஆட்சி நடைபெறும் போதே முழுஅளவில் சாத்தியமாகும். ஒரு நாட்டில் நல்லாட்சி என்பது நடைமுறையில் இல்லாவிட்டால் ஏனைய அனைத்தும் தோல்வியிலேயே முடிவடையும்.

இவ்வாண்டின் பிற்பகுதியில் சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டை நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிலங்காவானது தான் ஏற்றுக்கொண்ட பொதுநலவாய அமைப்பின் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அடிப்படை விழுமியங்களையும் மதித்து நடக்கின்றதா என்பது ஆராயப்பட வேண்டும். 

சிறிலங்கா நாடாளுமன்றமானது தனது நாட்டின் பிரதம நீதியரசரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வாக்களித்திருந்தது. இவ்வாறான சில நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகள் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் நிலையில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவது சரியா என்பதை ஆராயவேண்டும்.

இந்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடாத்த வேண்டும் என அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு, பொதுநலவாய அமைப்பின் நீதிபதிகள் சங்கம், மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர் மற்றும் கனடா போன்றன கோரிக்கை விடுத்துள்ளன. பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடத்தினால் தான் இதனைப் புறக்கணிப்பேன் என ஏற்கனவே கனேடியப் பிரதமர் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதே. 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நாட்டை அது தொடர்பில் அழுத்தம் கொடுத்து புறக்கணிப்பதை விட அந்நாட்டுடன் பேச்சுக்களை நடாத்துதல் சிறந்த விளைவைத் தரும் என அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் அவுஸ்திரேலியாவானது சிறிலங்காவில் நடாத்தப்படும் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் உச்சிமாநாட்டில் பங்களிக்கும் என பொப் கார் மேலும் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்துள்ள நிலையில் அவுஸ்திரேலியாவும் சிறிலங்கா தொடர்பான தனது நிலைப்பாட்டை மீளஆராய்ந்து கொள்ள வேண்டும். சிறிலங்கா தொடர்ந்தும் பல்வேறு மீறல்களைப் புரிந்து வரும் நிலையில், சிறிலங்காவுக்கு தனது ஆதரவை அவுஸ்திரேலியா வழங்குவதன் மூலம், அவுஸ்திரேலியாவானது மீண்டும் மீண்டும் மனித உரிமை மீறல்களைப் புரிகிறதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

வழிமூலம் : The Age 
மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130312107929

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.