Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கிளாய் பகுதியில் 253 சிங்களவருக்கு காணிகள் வழங்குமாறு அரச அதிகாரிகள் மீது அழுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொக்கிளாய் பகுதியில் 253 சிங்களவருக்கு காணிகள் வழங்குமாறு அரச அதிகாரிகள் மீது அழுத்தம்! 
[saturday, 2013-03-16 08:40:47]
 
முல்லைத்தீவு கொக்கிளாயின் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள 253 சிங்களக் குடும்பங்களுக்கும் காணிகளை வழங்கி அவர்களுக்குரிய சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1983 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு அதன் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தப்பகுதி மக்கள் மீளவும் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் அதாவது 1973 ஆம் ஆண்டு கொக்கிளாயின் முகத்துவாரம் பகுதியில் 23 வரையான சிங்களக் குடும்பங்களே தற்காலிகமாக வசித்துள்ளன. தற்போது 253 வரையான குடும்பங்கள் அத்துமீறித் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ஒரு துண்டுக் காணி கூட இல்லாத நிலையில் அத்துமீறிக் குடியேறியுள்ள 253 குடும்பங்களுக்கும் நிரந்தரக் காணிகளை வழங்கி அவர்களுக்குரிய வீட்டுத்திட்டம், வாழ்வாதார வசதிகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சிங்களத் தலைவர்கள் அரசியல் வாதிகள் அதிகாரிகளை வற்புறுத்தி வருகின்றனர் எனத் தெரியவருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.