Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷோபா சக்தியின் மண்டையை உடைக்க போட்ட சபதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார்இ எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் இ அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து......

கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே?

வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் இ முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை

( நிருபர் : என்னமோ பெரிய இவன் மாதிரிதான் பேசுரான். மூனுச்சிட்டு வெளையாடிட்டு இருந்துச்சு நாயிஇ கூப்பிட்டு உட்காரவச்சா எகத்தாளத்தை பாறேன்)

கே: சமீபத்தில் பில் கேட்ஸின் அறக்கட்டளைக்கு வாரன் பப்பட் 3000 மில்லியன் டாலர்களை கொடுத்து இ இந்த பணம் ஒவ்வொரு டாலரும் ஏழைகளுக்கு பயன்படும்னு வாழ்த்தி இருக்காறே அது பற்றி ?

வர: கழுதைக்கு கழுதை ஆசீர்வாதம்.

நிரு: இதுதான் பதிலா

வர : இதுதான் உண்மை

கே: உங்களின் அரசியல் எதைச்சார்ந்து இயங்குகிறது ?

வர: என்னுடைய அரசியல்இ அதிகாரங்களுக்கு எதிராய் இ அது யாருடைய அதிகாரமாய் இருந்தாலும் அதற்கு எதிராக இயங்குவதே ஆகும். அதே வேளை எம்மின் அதிகார எதிர்ப்பு வேறு சில மையங்களுக்கு ஆதராவாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்

கே: அதிகார எதிர்ப்பு குறித்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் போக்கு திமுக வையும் அதன் தலைமைகளையும் சார்ந்தே இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு " நாகு " போன்ற வைகோ ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறதே?

வர : அதை நான் எந்தச்சூழலிலும் மறுக்கவில்லை அதே வேளை கருணா நிதி குடும்ப அரசியலை தமிழக அரசியற்களத்தில் விமர்சிக்க இங்கு இருக்கும் வேறு யாருக்கும் தகுதியில்லை என்கிற காரணத்தால்தான் வலிந்து சென்று ஆதரித்து எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

உதாரணத்துக்கு வைகோ வின் பழைய பேட்டிகளை பார்த்தீர்களானால் அவர் திமுக வின் கடைமட்ட பேச்சாளர்களை விட " ரொம்ப ஓவராக " ஜால்ரா அடித்திருப்பார். ஜால்ர அடிக்கவென்றே சில இசை கருவிகள் புழக்கத்தில் உள்ளன ஆனால் அவர் அதை வைத்து அடித்தால் ஓசை கிட்டாது என்று தாம்பாளத்தில் அடிப்பார்இ

ஒரு போர்முரசே

ஜால்ரா அடிக்கிறதே

அடடே ! என்று புதுகவிதை எழுதுவதற்கு வாய்ப்பெற்படுத்தி குடுத்தார். ஆனால் அணி மாறுவதற்கு தூரோகத்தின் தந்தை கருணா நிதி எந்த விதமான வாய்ப்பும் வழங்கும் முன் சொந்த செலவில் தனக்கு மட்டுமல்ல தன் கட்சிக்கும் சேர்த்து சூனியம் வைத்து கொண்டார். வைகோ ஒரு மாதம் மேற்கொள்ளும் விமான பயணத்தின் கட்டணங்களை செலுத்துவது யார்? இப்படி கேட்பதால் திமுக வை சார்ந்து பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் . நான் நெருப்புஇ நீர் என்றேல்லாம் சொல்லுபவர்களயினும் தமிழ் நாட்டு அரசியலில் இருந்தால் மாசு பட்டுத்தான் ஆகவேண்டும் இ திமுக வினரும் திருடத்தான் செய்வார்கள்இ நான் மட்டும் பத்தினி என்கிற டயலாக்கை மறந்து விட்டு அரசியல் தொழிலில் ஈடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கும்

( இவன் என்னத்தை தான் சொல்ல வரான்னு தெரியலையே- நிருபர் )

கே : சரி அப்போ ஈழப்பிரச்சினையில திமுக வின் நிலைப்பாடுதான் உங்க நிலைபாடா ?

ஜ இந்த கேள்விக்கும் இ இன்னும் ஷோபா சக்திக்கு தான் விடுத்த கொலைமிரட்டல் குறித்தும் மனம் திறந்த பேட்டி நாளை தொடரும்......

கே : சரி அப்போ ஈழப்பிரச்சினையில திமுக வின் நிலைப்பாடுதான் உங்க நிலைபாடா ?

வர : மன்னிக்கவும் திமுக விற்கு இலங்கை பிரச்சினையில் தான் ஈடுபாடு உண்டே தவிர 'ஈழ பிரச்சினையில்' அதற்கு ஏதும் நிலைப்பாடு இருப்பதாக தெரியவில்லை

( நிருபர் : தூத்தெறி நல்ல அனுப்பி விட்டான்டா எடிட்டருஇ அம்மாவாசை கிறுக்கனா பார்த்து பேட்டி எடுத்துருக்காலாம்இ இந்த இம்சைட்ட மாட்டினதுக்கு)

நிரு : கேள்வி என்னவென்றால்......

வர : கேள்வியெல்லாம் புரியுது இ உனக்கு முதல்ல திமுக நிலைப்பாடுன்னா என்னான்னு தெரியுமா?

நிரு : மத்திய அரசின் நிலைபாடுதான்னு கருணா நிதி சொல்லிருக்காரே.

வர : அப்படி வாடா என் கருப்பட்டி வாயாஇ வழிக்குஇ மத்திய அரசின் நிலைப்பாடு சும்மா வேடிக்கை பார்க்குறதுதான். அப்ப இவரும் வேடிக்கை பார்க்கிறதுக்கு எதுக்கு தமிழ் இ தமிழன்இ கண்ணகி. கடல் நீர் ஏனடா உப்புகரிக்கிறது? அது கடல் கடந்து வாழும் தமிழன் விடும் கண்ணீரடா தம்பி ! சொன்னவுரு அறிஞர் அண்ணா இ அவரோட தம்பி வேடிக்கை பார்ப்பேன்னு சொன்னா அது எப்படி ஏத்துகிற முடியும்.

நிரு : அப்போ புலிகளை ஆதரிக்கனும்னு சொல்லுறிங்களா?

வர : புலி சிங்கத்தையெல்லாம் நாங்க ஆதரிச்சுகிறோம்இ மொதல்ல அவரு நம்ம ஊரு மீனவன்களை சிங்கள கடற்படை அடிக்கடி தாக்குவதை கடுமையா கண்டிச்சு ஒரு அறிக்கை விடட்டும் இ அவரோட மத்திய அரசு மூலமா அவங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்யாகுமரி மாவட்டம் முட்டத்திற்கு தெற்கே இன்னும் இந்திய கடல் பகுதியை கையகபடுத்தி வைத்திருக்கும் சிங்கள கடற்படை பற்றிய விழிப்புணர்வு வரட்டும் நம்ம அரசுகளுகும் அரசர்களுக்கும் . புலிகள் ஒன்றும் கையேந்தவில்லை அவர்களின் கோரிக்கை உங்களின் பார்வையை மாற்றுங்கள் என்பதுதான்.

நிரு : சிறு பத்திரிக்கை உலகில் உங்களை அதிகம் கவர்ந்தவர் யார் ?

வர : என்னை கவர்ந்தவர் என்பதை என்னிடம் கவர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு அதனால் அது குறித்து பேச விரும்பவில்லை

( டேய் டேய் இ இதுல்லாம் ரொம்ப ஓவர்டா)

நிரு: நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட்இ பகுத்தறிவுவாதி.... ( இடைமறிக்கிறார்)

வர : பெரியாரிஸ்ட் என்பதை ஏற்று கொள்கிறேன் ஆனால் பகுத்தறிவுவாதி என்பதில் உடன் பாடில்லை. ஒருவன் என்று பெரியாரிஸ்ட் என்கிற நிலை எடுக்கிறனோ அன்றே அவன் பகுத்தறிய துவங்கிவிட்டான் என்பது நம் சமூக விஞ்ஞானம். ஆனால் பெரியாரிசம் என்பது ஒரு சிந்தனை முறை தானே தவிர அதை தத்துவமாக கொள்ளமுடியாதுஇ இன்னமும் இந்த பின் நவீன சூழலில் லெனினின் மேற்கோள்களின் அடிப்படையில் பிரச்சினையை அனுகும் மார்க்சீயர்களின் அவல நிலை பெரியாரிஸ்டுகளுக்கு ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. பெரியாரிஸம் இறுதி தீர்வு குறித்தெல்லாம் மிகவும் சிரத்தை எடுத்து சிந்திக்கவில்லைஇ இப்படியெல்லாம் வாழ்ந்தோமானால் கடைசியில் எல்லோரும் இப்படி ஒரு நிலைக்கும் போவோம் என்றேல்லாம் அது பரிந்துரை செய்வதில்லை இ நவீன வடிவில் சொல்லவேண்டுமானால் " அவரு உக்காந்து யோசிக்கலையோ" என்றே தோன்றுகிறது. அவரின் சிந்தனை போக்கில் பிரச்சினைகளை அனுகுவதே பெரியாரிஸ்டாக இருப்பவனின் ஒற்றை செயல்திட்டமாக இருக்கமுடியும். அது ஒரு சகல ரோக நிவாரணி. அதே வேளை அது என்றைக்கும் ஒற்றை தீர்வை முன்வைக்க வில்லை

( டேய் இம்சைஇ நான் என்ன கேக்க வந்தேன் நீ என்னடா சொல்ற. நீங்க ஒரு பெரியாரிஸ்டுஇ பகுத்தறிவுவாதின்னு சொல்லறங்களே உண்மையான்னு கேட்க வந்தா இ மொன்னை பிளேடு போடுறானே )

நிரு: நீங்கள் சமீபத்தில் ரசித்த விடயம் ?

வர : நயந்தாரா

( நிரு: அதை ஏண்டா வாயில ஜொள்ளு ஒழுக சொல்ற )

நிரு : அது இல்லிங்கா நீங்கள் சமீபத்தில் ரசித்த பொதுவான விஷயம்?

வர : ஓ நீ அப்படி கேட்கிறாயா இ அன்பு அம்மா நிச்சயம் இலங்கை அரசை கண்டித்து நடத்தும் போராட்டத்துகு தலைமை தாங்குவார்கள் என்று அன்புத்தோழி கதை நாயகன் இஅன்புத்தம்பி திருமாவளவன் இ சொன்னதும் அதை அன்பு அண்ணன் வைகோ புன்சிரிப்புடன் ஆமோதித்ததையும் நான் ரொம்ப ரசித்தேன்.

( நிரு : இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள இவன் முதுகுல யாராவது டின் கட்ட போவது உறுதி )

கே : ஈழ எழுத்தாளர் திரு. ஷோபாசக்தியை மண்டையை உடைப்பேன் என்று நீங்கள் முன்பு போட்ட சபதம் என்னாவாயிற்று ? நடந்தது என்ன?

வர : சபதம் அப்படியே தான் இருக்கிறது என்ன நடந்தென்றால்

( இன்னும் சில மணிகளில் தொடரும்)

http://kuttapusky.blogspot.com/2006/07/blog-post.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே : ஈழ எழுத்தாளர் திரு. ஷோபாசக்தியை மண்டையை உடைப்பேன் என்று நீங்கள் முன்பு போட்ட சபதம் என்னாவாயிற்று ? நடந்தது என்ன?

வர : சபதம் அப்படியே தான் இருக்கிறது இ நடந்தது என்னவென்றால் ஒரு நாள் "போண்டா" கனேசனும் நானும் மூவேந்தர் புத்தக கடையில நின்று கொண்டிருந்தோம். அப்போது அவன் இடுப்பில் எதோ புத்தகம் சொருகி வைத்திருந்ததுபோல் இருந்ததுஇ அவன் வழக்கமா அவனுடைய கட்சி அலுவலகத்துக்கு போகும் முன் அ.மார்க்ஸ் வகை புத்தகங்களைத்தான் அப்படி மறைத்து கொண்டு செல்வான்( கம்யூனுஸ்டு கட்சி அலுவலகத்துள் கலக எழுத்துகள் கொண்ட புத்தகங்களுக்கு அறிவிக்க படாத தடை உள்ளதுஇ கலகத்தை அனுமதித்தால் புரட்சி பின் தங்கி விடும் என்ற பயம் போலும்) அது போல நினைத்துக்கொண்டு " என்ன புத்தகம்டா அது" என்றேன். அதற்கு "எங்க எம்.எல்.ஏ கேட்டாங்க அதான் கொண்டு போறேன்" என்றான். ஆபிஸ்-க்கு தானே போற அப்புறம் ஏன் அதை சரோஜா தேவி புத்தகம் போல் மறைத்து கொண்டு போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் நீ பார்த்துட கூடதுன்ன்னு தான் அப்படி வச்சுருக்கேன்னு சொன்னான் "அப்படி என்னாட நான் பார்க்க கூடாத புக்கு" சொல்லி பிடிங்கி பார்த்தேன் அது ஷோபாசக்தியோட "கொரில்லா" நாவல். சும்மா ஒரு நாள் விவாதம் பன்னிகிட்டு உக்கார்த்திருந்தப்போ நாய் கவிதை படிச்ச வெறுப்பில "சுகன்" என் கையில் மாட்டுனா பிரிச்சு பேன் பார்க்க போறேன்னு போதைல சொல்லிட்டேன்இ அதுல இருந்து ஈழப்பிரச்சினைல மாற்று குரல்களின் கருத்துகளை எல்லாம் நம்மகிட்ட தெரிவிக்கமாட்டனுங்க நம்ம பயலுக. அதுனாலதான் உங்கிட்ட காட்டல ஏன்ன இது புலிகளுக்கு எதிரான நாவலுன்னு எங்க ஆபிஸுல சொன்னாங்க அப்படியென்றான். சரி குடு நான் படிச்சுட்டு தாரன்டா"ன்னு சொன்னதுக்கு தரமாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

அன்னைக்கு சாயுங்காலம் நண்பர்கள் மத்தியில் இதைச்சொன்னேன்இ அவுனுங்களும் சேர்ந்துகிட்டு என்னைய நக்கலடிக்கும் நோக்கில் இந்த நாவல பற்றி ரொம்ப புகழ ஆரம்பித்தாங்க. நானும் ஒரு புது நாவல் படிக்க கிடைக்காத வெறுப்பில ஷோபாசக்தி கையில் கிடைத்தால் அவர் மண்டையை உடைப்பேன்னு சபதம் போட்டேன் . கூட இருந்த நண்பர்கள் "இது வன்முறை" மற்றதின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்னு இலக்கியம் பேச ஆரம்பிச்சானுங்க. நானும் காலைல அத மறந்துட்டேன்.

அப்போ என்னுடன் இருந்த கவிஞன்.சுகுணாதிவாகர் இதை அ.மார்க்ஸிடம் சொல்லியிருக்கான் போல இ இதுல்லாம் முடிஞ்சு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு மதியம் என் மொபைலுக்கு போன் வந்தது.

ஹலோ என்றேன்

வணக்கம் வரவனையானோ ? என்றது குரல்

ஆம் என்றேன்

நான் ஷோபசக்தி பேசுறேன். என்னை நினைவிருக்கா

ம்ம் சொல்லுங்கள் நலமா? என்றேன்

நலம்தான் இ நீங்கள் தானே என் மண்டை உடைப்பது என்று அறிவித்துள்ளீர்கள்இ எப்படி உடைப்பிங்கள்.கையிலா தடியிலாஇ என்றார்

அது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்து என்றேன்

நான் இப்போது இன்டியால தான் இருக்கேன்இ பிரான்ஸுக்கு உங்களை அலைய விடாமல் இங்கையே வந்து விட்டேன் வேண்டுமாயின் உடைத்து விட்டு போங்கள் என்றார்.

பிறகு அவர் பேசிய எண் போதிய பணமில்லாமல் இணைப்பு துண்டிக்கபட்டது

இதுதான் நடந்தது

கே : இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

வர : மிகவும் வருத்தமடைந்தேன்

கே: தேவையில்லாமல் அடுத்தவரை புண்படுத்திவிட்டோமென்றா ?

வர : இல்லை அவர் அழைத்தும் நம்மால் சென்று அடிக்க முடியவில்லையே என்று.

சரி உங்களின் மார்க்சீய தோழர் திரு. கனேசனுக்கு போண்டா என்கிற அடைமொழி எவ்வாறு ஏற்பட்டது?

சமுதாய நலனுக்கு பலம் சேர்க்கிற கேள்வி இதற்கு விரிவான விடையை நாளை அளிக்கிறேன்.

( நாளை தொடரும் )

http://kuttapusky.blogspot.com/

:lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு வசந்தன் அண்ணா!

தே...க்காரரும் அந்தக் கடுப்பில் தானாம் இருக்கினம்! ஜனநாயக செயற்பாட்டில் உச்சமாக அது தானாம் நடக்கும் :wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.