Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

05.04.2013 அன்று லண்டனில் போராட்டம்.

Featured Replies

483670_234518800026234_676142007_n.jpg

 

 

வரலாறு அழைக்கிறது - வாருங்கள் அனைவரும்.

 

அன்புக்குரிய பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுப்பதற்காக நாம் மாதக் கணக்கில் பாராளுமன்றச் சதுக்கத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் முற்றுகையிட்டு நடாத்திய அறவழிப் போராட்டங்களெல்லாம் இந்த அதிகார வர்க்கங்களை அசைக்கவில்லை. நாம் எது நடந்து விடுமென்று அஞ்சி அதனைத் தடுப்பதற்காக உலக மாநகரங்களிலெல்லாம் கிடந்து கதறினோமோ அது அவர்களது ஆசீர்வாதத்துடனேயே நிகழ்ந்தேறியது. விண்ணிருந்து பார்க்கும் உலக ஒளிப்பதிப்பதிவாளர்களின் கண் முன்னாலேயே எங்கள் மக்கள் பேரழிவு ஆயுதங்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் எங்கள் வரலாற்றுப் பூமியில் கதறிக் கதறிச் சாய்ந்தார்கள்.

 

தர்மமும் சத்தியமும் ஐநாவும் உலக ஒழுங்கும் இப்போது சந்தை வியாபாரத்தில். அது தன்னலன் சார்ந்தே செயற்படும். உலகப் பொதுமன்றங்களும் நிறுவனங்களும் நிதியளிப்பவனின் நலன் சார்ந்தே இயங்கும். இயக்கப்படும். இந்நிலையில் தான் பிரித்தானிய வரலாறு காணாத பாராளுமன்ற சதுக்க தொடர் பேராட்டத்தை ஏறத்தாழ 73 நாட்களாக எம்மக்கள் நடாத்தினார்கள். இருந்தும் எந்தத் துரும்பும் அசையவில்லை.

 

தொடர்ச்சியாக முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய பேரவலம் எங்கள் மனங்களில் என்றும் ஆறாத ரணங்கள். இந்த உலக ஒழுங்கிலும் பொறிமுறைகளிலும் எம்மக்கள் நம்பிக்கை இழந்ததாலும் சிறீலங்கா பேரினவாதிகளால் புலம் பெயர் நிலங்களில் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற குழப்பங்களாலும் முள்ளிவாய்க்காலின் பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற அறவழிப் போராட்டங்களில் எம்மக்களின் பங்கெடுப்பு பெருமளவில் குறைந்து விட்டது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தும் அண்மையில் பாலச்சந்திரனின் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் வெளிவந்து உலகில் மனச்சாட்சி உள்ளவர்களின் மனங்களில் கனதியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் லோயலா கல்லூரியில் பொறி தட்டிய மாணவர்கள் எழுச்சி இன்று தமிழகம் எங்கும் பேரெழுச்சி கண்டுள்ளது. தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கின்ற பொதுவாக்கெடுப்பை நிகழ்த்த வேண்டுமென்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் தமிழக சட்டசபையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைக்காக தமிழகம் ஒருமித்துக் குரல்
எழுப்புகின்ற இந்தக் காலகட்டத்தில் புலம்பெயர் நிலங்களில் வாழுகின்ற நாங்கள் சாத்தியமான அத்தனை வழிகளிலும் போராட வேண்டியதும் பரப்புரை செய்ய வேண்டியதும் எங்களது தார்மீகக் கடமையாகும்.

எனவே ஏப்ரல் மாதம் 5ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ரவல்கர் சதுக்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி 65 ஆண்டுகால இனவழிப்புக்கு நீதி கேட்டும் தமிழீழ மக்களின் அரசியல் விருப்பை வெளிப்படுத்தும் பொதுவாக்கெடுப்பை தமிழீழத்திலும் பெயர் நாடுகளிலுள்ள தமிழீழ மக்களிடத்திலும் ஐநா நடாத்த வேண்டுமென்ற கோரிக்கையோடும் உலகின் மனச்சாட்சியை மீண்டுமொரு முறை உரக்கத் தட்டுவோம். பாடசாலை விடுமுறை காலத்தில் இடம்பெற விருக்கின்ற இப்போராட்டத்தில் குடும்பமாகப் பங்கெடுப்போம். சமூக நிறுவனங்கள், பழைய மாணவர் சங்கங்கள், கோவில்கள், ஊர் சங்கங்கள் போன்ற சகல பொது அமைப்புக்களும் தங்களது போராட்டமாக இதனைக் கருதி நம்பிக்கையிழந்து போயுள்ள எம்மக்களுக்கு நம்பிக்கையூட்டி பேரெழுச்சியாக இதனை நடாத்துவோம். பிரித்தானிய மண்ணில் மீண்டுமொரு முறை பேரலையெனத் திரள்வோம்.

உலகத் தமிழர்களின் பேரெழுச்சியை காண வைப்போம்!
உலதக் தமிழர்களின் பேரிரிரைச்சலைக் கேட்க வைப்போம்!
உலகத் தமிழர்களாய் ஒரே குரலில் ஒருமித்த கோரிக்கையோடு; ஓங்கி ஒலிப்போம்!

''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''

 

156532_589609244390236_1526489944_n.jpg

 

(முகநூல்)

புலம் பெயர் மக்கள் நடத்தும் விடுதலைப் போராட்டத்தின் அடுத்தக் கட்ட நகர்வு. அன்பான தோழர்களே இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு போர்முழக்கமிடுங்கள்.. தமிழீழ விடுதலையை வென்றெடுப்பது காலத்தின் கட்டாயம்... எந்த ஒரு நாடும் இதை தடுத்துவிட முடியாது.... பகிருங்கள்... பரப்புங்கள்... இணைந்து வெல்வோம்....

 

- Thirumurugan Gandhi

  • தொடங்கியவர்

லண்டனில் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள எழுச்சி பேரணிக்கான அழைப்பு..

 

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.