Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹரிணி விவகாரம்: வெளிவிவகார அமைச்சின் மூலம் கவனிப்பதாக வைகோவிடம் மன்மோகன் சிங் உறுதி!

Featured Replies

ஹரிணி விவகாரம்: வெளிவிவகார அமைச்சின் மூலம் கவனிப்பதாக வைகோவிடம் மன்மோகன் சிங் உறுதி!
                                             ee41f2b9-acfb-4c27-a999-3e68621154bc1.jp
                                        
ஹரிணி விவகாரம்: வெளிவிவகார அமைச்சின் மூலம் கவனிப்பதாக வைகோவிடம் மன்மோகன் சிங் உறுதி!




டுபாயில் இருந்து கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள இளம்பெண் ஹரிணி (தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்) உட்பட 19 ஈழத்தமிழர்கள் விடயம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்தில் கொண்டுள்ளார்.

இவ்விகாரத்தை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக கவனத்தில கொள்வதாக அவர் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார்.

'தமிழீழத் தேசியக் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இளம்பெண் ஹரிணி பணியாற்றியவர். இதேபோன்று செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இளம்பெண் இசைப்பிரியா இறுதிப்போரில் சிறிலங்கா படையினரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இப்போது ஹரிணி கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அதேபோன்ற கொடுமை நிகழும்;. ஹரிணியும் கொல்லப்படுவார்' என்று வைகோ நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விடுத்த கோரிக்கையை அடுத்தே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டது.

துபாயில் இருந்து கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள 19 ஈழத்தமிழர்களும் அங்கு சென்றால் சிறிலங்கா பரடயினரால் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். எனவே, அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுங்கள் என்றும் இந்தியப் பிரதமரிடம் வைகோ அவசர கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ம.தி.மு.கவின் ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

'இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நேற்றுக் காலை 11.30 மணியளவில் தொலைபேசியில் பேசினார்.

தனிப்பட்ட முறையில் நான் உங்கள் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கின்றேன். ஆனால், அண்மைக்காலமாக உங்களை நான் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறேன். ஆயினும், நான் பேச முனைந்த போது உடனே நீங்கள் பேச முன்வந்ததற்கு நன்றி.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அங்கயற்கண்ணி என்ற ஒரு தமிழ்ப்பெண்ணை சிறிலங்கா படையினர் கைது செய்த போது உங்களிடம் கோரிக்கை வைத்தேன். அவர் பாதுகாப்பாகத் திரும்ப ஏற்பாடு செய்தீர்கள்.


இப்போது டுபாயில் உள்ள 19 ஈழத்தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள். ஏற்கனவே, இசைப்பிரியா என்ற தமிழ்ப்பெண் சிறிலங்கா படையினரால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட காட்சிகள் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. தமிழ் மக்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.

அதேபோன்றதொரு கொடூரம் இப்போது டுபாயில் உள்ள ஹரிணி என்ற பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக உங்களை வேண்டுகிறேன். அவர்களை எக்காரணம் கொண்டும் கொழும்புக்கு அனுப்பவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்' என்று இந்தியப் பிரதமரிடம் வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த இந்தியப் பிரதமர் 'நான் வெளிவிவகாரத்துறை மூலம் இதுகுறித்துக் கவனிக்கிறேன்' என்று உறுதியளித்தார்.

அதேவேளை, நேற்றுக் காலையில் தமிழ்நாட்டு வேளாங்கண்ணியில் இருந்து சென்ற 120 ஈழத்தமிழர்கள் பயணித்த படகு மூழ்கும் நிலையில் உள்ளது. அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று வைகோ கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்தியக் கடலோரக் காவல் படையால் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்;' என இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=ee41f2b9-acfb-4c27-a999-3e68621154bc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.