Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ராச‌ி பல‌ன்! (14.4.2013 முதல் 13.4.2014)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ராச‌ி பல‌ன்!

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்
திங்கள், 8 ஏப்ரல் 2013( 16:50 IST )
(14.4.2013 முதல் 13.4.2014)
 
நந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.2013 சனிக் கிழமை நள்ளிரவு மணி 1.24க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், ரிஷப ராசி மகர லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், ஆயுஷ்மான் நாம யோகத்தில் வனிசை நாம கரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற, ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் வல்லூறு இரவு நான்காம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய தசையில், செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் விஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. 
 
த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: மேஷம்!
 
சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் விட்டுக் கொடுக்காத நீங்கள், மொழிப் பற்று, இனப் பற்று அதிகமுள்ளவர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியின் சாரத்திலே இந்தாண்டு பிறப்பதால் உங்கள் அந்தஸ்து ஒருபடி உயரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தீரும். இந்த விஜய வருடம் உங்களுக்கு 2-வது இராசியில் பிறப்பதால் பக்குவமாகப் பேசி பல விஷயங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் ஓரளவு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். 
 
27.5.2013 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் 2-வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். ஆனால் 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 3-ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்துப் போகும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். 
 
வருடம் பிறக்கும் போது சுக்ரனும், செவ்வாயும் வலுவடைந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக இருக்கும். இந்தாண்டிலே உங்கள் கனவு இல்லம் அமையும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 18.10.2013 முதல் 16.11.2013 வரை பலவீனமடைவதால் இக்காலக்கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்யம் பாதிக்கும். அவர்களின் பழக்க, வழக்கங்களை கண்காணியுங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். 
 
இந்தாண்டு முழுக்க கேது பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தை குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றை கவனமாக கையாளுங்கள். அடிக்கடி தலைச்சுற்றல் வரும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவ்வப்போது வெளிக் காற்று வாங்குவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். காலாவதியான மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். 
 
இந்தாண்டு முழுக்க சனியும், ராகுவும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை விட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். இருவரும் ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது. 
 
ஆனி மாதத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு புது வேலை அமையும். 12.8.2013 முதல் 7.9.2013 வரை சுக்ரன் மறைவதால் அக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் களவு போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 19.8.2013 முதல் 10.10.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசமாகி சனியின் பார்வையை பெறுவதால் இக்காலக்கட்டத்தில் உடல் நிலை பாதிக்கும்.
 
சகோதரங்களுடன் கருத்து மோதல் வரும். பண விஷயத்தில் ஏமாற்றங்கள் ஏற்படும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்காலக்கட்டத்தில் வீடு, மனை வாங்குவது, விற்பதில் கவனமாக செயல்பட வேண்டும். சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. 
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வேலையில் சேருவது நல்லது. அயல்நாடு செல்வீர்கள். 
 
மாணவ-மாணவிகளே! மறதி, தூக்கம் அதிகரிக்கும். அலட்சியம் கூடும். கடினமாக உழைக்காவிட்டால் தோல்விகளை சந்திக்க நேரிடும். எனவே தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்துவிடுங்கள். 
 
வியாபாரிகளே! போட்டிகள் கடுமையாக காணப்படும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்யுங்கள். அதிக வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். புதிய துறைகளிலும் ஈடுபட வேண்டாம். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வெடிக்கும். சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தர வாய்ப்பிருக்கிறது. கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆனி, ஆவணி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். தை, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அனுபவமுள்ள நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சஃப்வேர் துறையில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். 
 
உத்‌தியோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். தை மாதத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். கண்டகச் சனி தொடர்வதால் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் நிர்வாகத்திடமிருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லையேயென ஆதங்கப்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். என்றாலும் கடின உழைப்பாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பாலும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு ஆதாயம் உண்டு. கம்பியூட்டர் உள்ளிட்ட தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். 
 
கலைத்துறையினரே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களை விட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். 
 
இந்த விஜய ஆண்டு எதிர்நீச்சல் போட வைப்பதாகவும், பணத்தின் அருமையை அறிய வைப்பதாகவும், நண்பர்கள், உறவினர்களின் உண்மைத் தன்மையை அளக்க உதவுவதாகவும் றுதியில் விடாமுயற்சியால் ஓரளவு சாதிக்க வைக்கும். 
 
பரிகாரம்: 
ஆஞ்சநேயரை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். சாலையோரம் மற்றும் கழிவு நீர் பகுதிகளில் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். தடைகள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
 
த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: ரிஷபம்!
 
உள்ளார்ந்த அன்புடன் எல்லோரையும் நேசிக்கும் நீங்கள், தவறு செய்தால் தாயாக இருந்தாலும் தட்டிக் கேட்பீர்கள். பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். 
 
பிதுர்வழி சொத்தை பெறுவதில் இருந்த போராட்டம் விலகும். வாய்தா வாங்கி தள்ளிப் போய் கொண்டிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தீர்களே! இனி அசலையும் கட்டி முடிக்கும் அளவிற்கு வருமானம் உயரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். வருடம் பிறக்கும் போது ராகுவும் 6-ம் வீட்டில் இருப்பதால் வேற்று மொழிக்காரர்கள் மற்றும் வேற்றுமதத்தை சார்ந்தவர்களால் ஆதாயம் உண்டு. வெள்ளை சட்டையையே உடுத்திக் கொண்டிருந்த உங்களில் பலர் இனி ஜீன்ஸ் பேண்டு, வண்ண அரைக் கை சட்டையையும் உடுத்தி கவர்ச்சியாவீர்கள். 
 
உங்கள் ராசியிலேயே இந்த விஜய வருடம் பிறப்பதால் ஆரோக்‌கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு வரக்கூடும். முடிந்தவரை சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. 
 
27.5.2013 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வீண் பழியும் வந்து நீங்கும். நீங்கள் நல்லதையே பேசினாலும் மற்றவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தம் கொள்வார்கள். 
 
28.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி வருடம் முடியும் வரை 2-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள்-. உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். படித்து, பட்டம் வாங்கியும் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலையில்லாமல் திண்டாடினீர்களே! புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். 
 
அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனமறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். மகனை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் அவர் ஆசைப்பட்ட கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். 
 
இந்தாண்டு முழுக்க கேது பகவான் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கசப்பான சம்பவங்களை அவ்வப்போது நினைத்து தூக்கத்தை இழக்க வேண்டாம். சிலரை திருத்துவதற்கு முயற்சி செய்து தோல்வியடைவீர்கள். 
 
7.9.2013 முதல் 3.10.2013 வரை உங்கள் ராசிநாதன் சுக்ரன் பலவீனமடைவதால் சிறுசிறு வாகன விபத்துகள், மனஉளைச்சல், வீண் பழிச் சொல் வந்து நீங்கும். மனைவிக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வந்து விலகும். வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
 
30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே செவ்வாய் நீடிப்பதால் இக்காலக்கட்டத்தில் மனைவி உரிமையுடன் எதையாவது பேசினால் அதை லென்ஸ் வைத்து பார்த்து தப்புக் கண்டு பிடிக்காதீர்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய் கோளாறு ஏற்படக்கூடும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கூடாப்பழக்கம் தொற்ற வாய்ப்பிருக்கிறது. சகோதரங்கள் ஆதரிப்பார்கள் என்றாலும் சில நேரங்களில் போட்டி, பொறாமைகள் வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சொத்து விற்கும் போதும் ஓரே தவணையாக பணத்தை கேட்டு வாங்கப் பாருங்கள். ஏனெனில் சிலர் முன் பணம் தந்து விட்டு ஆறு அல்லது எட்டு மாதத்திற்குப் பிறகு உங்கள் இடத்தை வாங்கிக் கொள்வதாக இழுத்தடிப்பார்கள். பூர்வீக சொத்து விவகாரத்தில் மற்றும் பாகப்பிரிவினை விஷயத்தில் அதிகக் கோபப்பட வேண்டாம். விட்டு கொடுத்துப் போவது நல்லது. 
 
கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வாழ்க்கைத்துணைவர் அமைவார். 
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்-. போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. 
 
வியாபாரிகளே! தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் இனி முரண்டு பிடிக்க மாட்டார்கள். ஆனி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உங்களின் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். 
 
உத்‌தியோகஸ்தர்களே! 28.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் வேலைச்சுமை குறையும். உங்களை விட கல்வித் தகுதியில், வயதில் குறைவானவர்களிடம் எல்லாம் அசிங்கப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிப்புரிவீர்கள். மேலதிகாரியுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக்கூடும். மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். பட்டிதொட்டியெங்கும் நீங்கள் பரவலாக பேசப்படுவீர்கள். உங்களின் யதார்த்தமான படைப்புகளால் மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். 
 
இந்த விஜய ஆண்டு வெற்றி பாதையில் விஜயம் செய்ய வைப்பதுடன், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும் வாரித் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:
திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் திருக்கோழியூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். 
 
த‌மி‌‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: மிதுனம்!
 
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியான சுக்ரன் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பழைய காலி இடத்தை விற்று புது வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும்.
 
அரசால் அனுகூலம் உண்டு. சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். விலை உயர்ந்த தங்க நகைகள், ரத்தினங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். 
 
இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காமல் அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோவில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றி குறைத்துப் பேச வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். 
 
28.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்பெக்சன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்துச் செல்லும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. 
 
சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையை தவிர்ப்பது நல்லது. மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, ஹார்மோன் கோளாறு வந்துச் செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். எந்த பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம்விட்டு பேசி தீர்க்கப்பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். சில நேரங்களில் சூழ்நிலை கைதியாக சிக்கிக் கொள்வீர்கள். மறைமுக அவமானங்களும், வீண் விமர்சனங்களும் வரும். தர்மசங்கடமான சூழல்களும் அவ்வப்போது வரும். 
 
வருடம் முடியும் வரை சனியும், ராகுவும் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். அவ்வப்போது அடிவயிறு வலிக்கும். கெட்ட கனவுகள் வந்துப் போகும். பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள். குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். 
 
மகனின் உயர்கல்வி, உத்‌தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். கொஞ்சம் செலவு செய்து மராமத்து பணிகள் செய்து பூர்வீகச் சொத்தை விரிவுப்படுத்துவீர்கள். சொத்து வரியை தவறாமல் செலுத்திவிடுங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். தந்தையாருக்கு முதுகு, மூட்டு வலி வந்து நீங்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். 
 
உங்கள் சத்ரு-லாபஸ்தானாதிபதியான செவ்வாய் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் இக்காலக்கட்டத்தில் அலைச்சல், வீண் பழி, தாயாருக்கு மருத்துவச் செலவு வந்துச் செல்லும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு என்று அடுக்கடுக்காக செலவுகள் வரும். வாகனத்தில் டயர் மாற்றுவது, கீர் பாக்ஸ் மாற்றுவது என வண்டி பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். 
 
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள். 
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை பேச்சை குறைத்து பாடத்திலிருக்கும் சந்தேகத்தை தயக்கமின்றி ஆசிரியரிடம் கேளுங்கள். கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்காமல் முதல் வரிசையில் வந்தமருங்கள். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படும். கூடாப்பழக்க வழக்க முள்ள நண்பர்களின் நட்பை தவிர்க்கவும். 
 
வியாபாரிகளே! சித்திரை, ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். இந்தாண்டு முழுக்க கேது லாப வீட்டில் நிற்பதால் அனுபவ அறிவை பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஆனாலும் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்தீர்களே! கடையை வேறு இடத்திற்கு இனி மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களும் வர வாய்ப்பிருக்கிறது. ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். பங்குதாரர்கள் உங்களை ஆழம் பார்ப்பார்கள். 
 
உத்‌தியோகஸ்தர்களே! அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். நீங்கள் விடுப்பில் இருக்கும் நாட்களில் அலுவலகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். சில நாட்களில் சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்களின் குறைகளை அதிகாரியிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் திறமையை மூத்த அதிகாரி குறைத்து மதிப்பிடுவார். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். ஆவணி, கார்த்திகை மாதத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. 
 
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். 
 
இந்த புத்தாண்டு பொருளாதார வகையில் உங்களை பின்தங்க வைத்தாலும் செல்வாக்கு, கௌரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக்கும். 
 
பரிகாரம்:
கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு துர்க்கை அம்மனை பௌர்ணமி திதியில் சென்று வணங்குங்கள். துப்புரவு தொழிலாளிக்கு உதவுங்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: கடகம்!

 
சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ள நீங்கள், மந்திரியாக இருந்தாலும் மனசில் பட்டதை பளிச்சென பேசுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். வி.ஐ.பிகள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவீர்கள். பதவிகள் தேடி வரும். சுருங்கிய முகம் மலரும். உடல் நிலை சீராகும். சுக்ரனும், சூரியனும் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் தொடங்குவதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். 
 
வீடு கட்டும் வேலையை தொடங்குவீர்கள். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குருவும், சந்திரனும் லாப வீட்டில் நிற்கும் போது இந்த விஜய வருடம் பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். 
 
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். பழுதாகி கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பரின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். மகனின் கூடாப்பழக்கம் விலகும். 
 
உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் 27.5.2013 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள்-. செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். எங்குச் சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். 
 
28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துச் செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த பத்திரம், ஆவணம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்‌தியோகம் பொருட்டு அவர்களை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது. தந்தையாருக்கு நெஞ்சு வலி, அசதி, சோர்வு வந்துப் போகும். அவருடன் அவ்வப்போது மனத்தாங்கல் வரும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்துச் செல்லும். 
 
இந்த ஆண்டு முழுக்க சனியும், ராகுவும் 4-ம் வீட்டிலேயே நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் நேரம் குறையும். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லங்க சான்றிதழ், தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும் போதும், சாலையை கடக்கும் போதும் அலைப்பேசியில் பேச வேண்டாம். சின்ன சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். 
 
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். புகைப்பழக்கமுள்ளவர்கள் அதை தவிர்ப்பது நல்லது. 
 
இந்தாண்டு முழுக்க கேதுவும் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சிறுசிறு அவமானம், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்துச் செல்லும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். யாருமே தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
 
30.11.2013 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் தொடர்வது உங்களுக்கு பெரிய பலமாகும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படுவீர்கள். சிலர் தனிக்குடித்தனம் செல்வீர்கள். வீடு, மனை சேரும். பணத்தட்டுப்பாடும் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 
 
கன்னிப்பெண்களே! காதல் கைகூடும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். 
 
மாணவர்களே! விளையாட்டுத்தனம் வேண்டாம். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். 
 
வியாபாரிகளே! சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பற்று வரவு உயரும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி கடன் தர வேண்டாம். புது ஒப்பந்தங்களும் வரும். பெரிய வாய்ப்புகளும் வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்புக் கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசி தீர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும் போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். துரித உணவு, கம்பியூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயமடைவீர்கள். 
 
உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். என்றாலும் கேது 10-ம் வீட்டில் தொடர்வதால் உத்யோகத்தில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு பயம் இருக்கும். அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். விரும்பத்தகாத இடமாற்றங்களும் இருக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பளம் கூடும். மார்கழி, பங்குனி மாதங்களில் புது பொறுப்புகள் வரும். 
 
கலைத்துறையினரே! விருதுக்கு உங்கள் பெயர் தேர்ந்தெடுக்கப்படும். உங்களின் கற்பனை விரியும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
 
இந்த விஜய வருடம் வளைந்துக் கொடுத்துப் போவதாலும் கடின உழைப்பு மற்றும் தொலை நோக்குச் சிந்தனையாலும் வெற்றியை தரும்.
 
பரிகாரம்:
திருச்செந்தூர் அருள்மிகு முருகப் பெருமானை வியாழக் கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். பழுதடைந்த பள்ளியைப் புதுப்பிக்க உதவுங்கள்.
 
த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: சிம்மம்!
 
மற்றவர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டு வருவோருக்கு தோள் கொடுப்பீர்கள். புதன் 8-ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து பேசும் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பார்த்தும், பார்க்காமல் போய் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் இனி உங்களைப் புரிந்துக் கொண்டு விரும்பி வந்துப் பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு புது தீர்வு காண்பீர்கள். 
 
சில இடங்களில் வளைந்துக் கொடுத்தும், சில நேரங்களில் மௌனமாக இருந்தும் சாதித்துக் காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சனியும், ராகுவும் முகாமிட்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். 
 
உங்கள் யோகாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமாநிலத்தில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும். 
 
உங்களை தரக்குறைவாக பேசியவர்கள் தன் தவறை உணர்ந்து இனி உங்களை புகழ்வார்கள். கடன்காரர்களைக் கண்டு அஞ்சினீர்களே! இனி கவலை வேண்டாம். வட்டியுடன் அசலையும் கொடுக்கும் அளவிற்கு குடும்ப வருமானம் உயரும். இளைய சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாய்தா வாய்தா என்று தள்ளிப் போய் கொண்டிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். 
 
இந்த விஜய ஆண்டு உங்களது 10-வது ராசியில் பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புது உத்யோகம் அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும்.
 
27.5.2013 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்துச் செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த சிலர் முயற்சிப்பார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். 
 
28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கடனாகவும், கைமாற்றாகவும் கொடுத்த பணம் கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். இனி பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். 
 
மகளின் கல்யாணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். மகனுக்கு இருந்த அலட்சியம், கூடாப்பழக்க வழக்கம் நீங்கும். வீண் பழி, வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். குறைக் கூறிக் கொண்டிருப்பவர்கள், புலம்பிக் கொண்டிருப்பவர்களையும் தவிர்ப்பீர்கள். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். வீட்டை மாற்றுவது, விரிவுப்படுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக போக நினைத்த வெளி மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வேலைக் கிடைக்கும். 
 
ஐப்பசி மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து பலவீனமடைவதால் விபத்து, ஏமாற்றம், மனஇறுக்கம், உடல் நலக்குறைவு வந்துப் போகும். பணப்பற்றாக்குறையும் ஏற்படும். இக்காலக்கட்டத்தில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். 
 
வருடம் முழுக்க கேதுபகவான் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். பிதுர்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு வீண் டென்ஷன், கணுக்கால், முழங்கால் வலி வந்துச் செல்லும். தந்தைவழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 
 
கன்னிப்பெண்களே! போலியாக பேசுபவர்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். நிஜம் எது நிழல் எது என்பதையும் உணர்வீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலைக் கிடைக்கும். சிலருக்கு அரசு உத்யோக வாய்ப்புகளும் உண்டு. திருமண முயற்சி கூடி வரும். 
 
மாணவ-மாணவியர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பள்ளி மாற வேண்டி இருக்கும். 
 
வியாபாரிகளே! தொட்டது துலங்காமல் நஷ்டப்பட்டீர்களே! பாக்கியை வசூலிப்பதும் போராட்டமாக இருந்ததே! வேலையாட்கள் சரியாக அமையாமல் அவஸ்தை பட்டீர்களே! இந்த வருடத்தில் அந்த நிலை எல்லாம் மாறும். வணிகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். சந்தை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கார்த்திகை, தை, மாசி மாதங்களில் கடையை நவீனமயமாக்குவீர்கள். லாபமும் கூடும். ஹார்ட்வேர், ஹோட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 
 
உத்யோகஸ்தர்களே! அடிக்கடி இடமாற்றத்தால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் அவமானத்தை சந்தித்தீர்களே! இனி உங்கள் கை ஓங்கும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். 
 
கலைத்துறையினரே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விருது கிடைக்கும். 
 
இந்த விஜய வருடம் விழுந்துக் கிடந்த உங்களை தலை நிமிரச் செய்வதுடன், புதிய பதவியாலும், பணவரவாலும் சமூகத்தில் புது கௌரவத்தை பெற்றுத் தரும். 
 
பரிகாரம்:
திருக்கோயிலூர் - அந்திலி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள். 
 
த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: கன்னி!
 
மனித நேயத்துடன் எதிர்ப்பார்ப்புகள் இன்றி எதிரிக்கும் உதவும் குணம் கொண்ட நீங்கள், மன்னிப்போம், மறப்போம் என்றிருப்பவர்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த விஜய வருடம் பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். 
 
வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதி உள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். 
 
27.5.2013 வரை சுக-சப்தமாதிபதியான குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலை வேலை என்றிருந்தீர்களே! இனி குடும்பத்திற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். மழலை பாக்‌கியம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 
 
மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் புகழும்படி நடந்துக் கொள்வீர்கள். சொந்த ஊர் பொதுக் காரியங்களை எடுத்து நடத்துவீர்கள். ஊரில் மதிப்பு மரியாதை கூடும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். 28.5.2013 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருவதால் அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தரவும். மனைவியின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். 
 
மனைவிவழி உறவினர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர் இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். தாயாருக்கு கை, கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துச் செல்லும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் யாரையும் பரிந்துறை செய்யாதீர்கள். மறதியால் விலை உயர்ந்த பொருட்கள், செல் போனை இழக்க நேரிடும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் தன் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். 
 
முக்கிய கிரகங்கள் 8-ம் வீட்டில் மறைந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வீண் அலைச்சல், மனஉளைச்சல் வந்து நீங்கும். எதிர்காலம் குறித்த கவலைகளும், பயமும் வந்துச் செல்லும். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் வரும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு கோர்ட், கேஸ்னு போகாம பேசி சுமுகமாக முடிக்கப்பாருங்கள். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். சகோதரங்கள் கோபப்படுவார்கள். எப்போதோ நடந்த கசப்பான சம்பவங்களை சொல்லி வருந்தப்படுவார்கள். 
 
இந்தாண்டு முழுக்க பாதச்சனி இருப்பதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலை தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கண், காது வலி வந்துச் செல்லும். பல் ஈறு வலிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து வந்து போகும். 
 
இந்தாண்டு முழுக்க ராகு 2-ம் வீட்டிலும், கேது 8-லும் தொடர்வதால் கடு கடுப்பாகப் பேசாதீர்கள். சில சமயங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப் போய் அது விபரீதமாக முடியும். எந்த ஒரு விஷயத்திலும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்துப் போகும். இரவு நேரத்தில் தொலை தூரப் பயணத்தில் வாகனத்தை இயக்க வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்களும், தோல்வி மனப்பான்மையும் தலைத்தூக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வறட்டு கவுரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள்.
 
30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால் இக்காலக்கட்டத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் நலக்குறைவு வந்து நீங்கும். சகோதர வகையிலும் சங்கடங்கள் வரும். வேனல் கட்டி, பைல்ஸ் வந்து நீங்கும். 
 
கன்னிப்பெண்களே! கனவுத் தொல்லை, முகப்பரு, தலை முடி உதிர்தல் வந்துச் செல்லும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் பெற்றோரை கலந்தாலோசிப்பது நல்லது. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 
 
மாணவ-மாணவியர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். விரும்பிய கோர்ஸில் போராடி சேர்வீர்கள்.
 
வியாபாரிகளே! போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெளிநாட்டு நிறுவனம், புகழ் பெற்ற நிறுவனம் என்று விளம்பரங்களை நம்பி தீர விசாரிக்காமல் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களின் குறை, நிறைகளை அன்பாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பங்குதாரர் விலகுவார். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 
 
உத்‌தியோகஸ்தர்களே! 28.5.2013 முதல் குரு 10-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. உங்களின் உரிமையையும், சலுகையையும் தக்க வைத்துக் கொள்ள வழக்குத் தொடுக்க வேண்டி வரும். கார்த்திகை, மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். 
 
கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களின் படைப்புக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். வெளியாகாமால் இருக்கும் படம் ரிலீசாகும். 
 
இந்த விஜய ஆண்டு பிரச்னைகளை தந்து பெரிய மனிதராக்குவதுடன் ஓரளவு பணவரவையும், நிம்மதியையும் தரக்கூடியதாக அமையும். 
 
பரிகாரம்:
சிவகங்கை மாவட்டம்-திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீயோக பைரவரை அஷ்டமி திதி நாளில் தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: துலாம்!

 
பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளராத நீங்கள், ஒற்றுமை உணர்வு அதிகமுள்ளவர்கள். உங்களின் ராசிநாதனான சுக்ரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். 
 
திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். அழகு, இளமைக் கூடும். புது தெம்பு பிறக்கும். சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். மனைவி நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 
 
இந்த விஜய வருடம் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்திற்கு பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்துக் கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். இரண்டாம் முயற்சியில் சில வேலைகள் முடியும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துச் செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். அவ்வப்போது கழுத்து வலி, தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்துப் போகும். நண்பர்கள், நெருங்கிய உறவுக்காரர்களுடைய திருமணத்திற்கு சீர், சனத்தி செய்ய கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வரும்.
 
உங்கள் ராசிக்கு சப்தமஸ்தானமான 7-ம் வீட்டில் முக்கிய கிரகங்கள் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப்பாருங்கள். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மனைவியுடன் பனிப்போர் வந்துச் செல்லும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். அவர்களால் பிரச்னைகளும் வந்துப் போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சொத்து வாங்கும் போது பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ்கள் எல்லாம் சரியாக இருக்கிறதான என பார்த்து வழக்கறிஞரை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது. 
 
27.5.2013 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்துச் செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அனாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச முடியாத நிலை வந்துப் போகும். 
 
28.5.2013 முதல் உங்களின் பாக்யஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 
 
மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 21.5.2013 முதல் 6.7.2013 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும் மற்றும் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை 12--ம் வீட்டில் மறைவதாலும் இக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்பு, ஏமாற்றங்கள் வந்து நீங்கும். சகோதர-சகோதரிகளுடன் மனவருத்தம் ஏற்படும். முன்கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். 
 
இந்தாண்டு முழுக்க உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்துச் செல்லும். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துக் கொள்வார்கள். 
 
இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், 7-ம் வீட்டிலேயே கேதுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்துச் செல்லும். இரும்பு, நார், சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள். 
 
நீங்கள் யாரையும் மதிக்கவில்லை என்றெல்லாம் சிலர் குறை கூறுவார்கள். ஏமாற்றப்படபடுவோமோ என்று கலங்குவீர்கள். காலத்தை வீணடித்துவிட்டதாகவும் நினைப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. 
கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கனியும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவரிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது. 
 
மாணவ-மாணவியர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கவிதை, கட்டுரை போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். 
 
வியாபாரிகளே! குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் அயல்நாட்டு தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது. கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு. 
 
உத்‌தியோகஸ்தர்களே! 10.7.2013 முதல் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
 
கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். 
 
இந்த விஜய வருடத்தின் முற்பகுதி கொஞ்சம் முணுமுணுக்க வைத்தாலும் மையப்பகுதி முதல் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருவதாக அமையும். 
 
பரிகாரம்:
காரைக்கால் அருகிலுள்ள அம்பகரத்தூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு அஷ்டபுஜக் காளியை பஞ்சமி திதி நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள்.
 
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: விருச்சிகம்!
 
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியுமென்பதை அறிந்தவர்கள் நீங்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை வரும். மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 
உங்களின் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் ஆரவாரமில்லாமல் அமைதியாக சாதிப்பீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் நீங்கள் முடித்துக் காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எங்குச் சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விகா கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். சொந்தவீடு வாங்குவது நீண்ட கால லட்சியமாக இருந்ததே! அந்த ஆசை நிறைவேறும்.
 
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். சகோதரர் ஆதரவாக இருப்பார். என்றாலும் வருடம் பிறக்கும் போது சுக்ரனும் உங்கள் ராசிக்கு 6-ல் மறைந்துக் கிடப்பதால் வாகன விபத்துகள், பணப்பற்றாக்குறை, டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனப் பழுது, தொண்டை புகைச்சல், கழுத்து வலி, மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துப் போகும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். மனைவிவழி உறவினருடன் மனக்கசப்பு வரும். ஆனால் உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் இந்தாண்டு பிறப்பதால் குடும்ப ஒற்றுமை பாதிக்காது.
 
27.5.2013 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது வரும் சிறு சிறு வாக்குவாதங்களை பெரிது படுத்த வேண்டாம். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை சொல்லி சொந்தம் பந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப புதுப்பிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 
ஆனால் 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பய உணர்வுகள் வந்துச் செல்லும். உங்களை சிலர் விமர்சிப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் கனிவாக நடத்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வரக்கூடும். பயந்துவிடாதீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிட்டு நியாயம் சொல்லப் போய் நீங்களே சிக்கிக் கொள்ளாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
 
இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரையச் சனியாகத் தொடர்வதாலும், ராகுவும் 12-ம் வீட்டில் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருக்கு முதுகு தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்துச் செல்லும். தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். இளைய சகோதரங்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து சில முடிவுகள் எடுக்கப்பாருங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
 
கேது இந்தாண்டு முழுக்க 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக வழிபாட்டில் மனம் லயிக்கும். மற்றமாநில புண்ணிய ஸ்தங்களுக்கும் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர்கள், வேற்று மொழிப் பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சித்தர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்க முயலுங்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். போராடி நல்ல வேலையில் அமர்வீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும்.
 
வியாபாரிகளே! புது ஏஜென்சி எடுப்பீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஆவணி மாதத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். புரோக்கரேஜ், சினிமா, சிமெண்ட், பெட்ரோ-கெமிக்கல், மருந்து, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
 
உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிகளிடம் பக்குவமாக பேசி சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக் கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் புது அதிகாரியின் ஒத்துழைப்பால் நெருக்கடிகளை முறியடிப்பீர்கள். என்றாலும் சித்திரை, வைகாசி, ஆவணி, தை மாதங்களில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.
 
கலைத்துறையினரே! தெலுங்கு, ஹிந்தி மொழிக்காரர்கள் உதவுவார்கள். ஒருபுறம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.
 
இந்த விஜய ஆண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதன் மூலம் முன்னேற வைப்பதுடன் வருங்காலத் திட்டங்களில் ஒன்றிரண்டு நிறைவேற வைப்பதாகவும் அமையும்.
 
பரிகாரம்:
 
கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமையில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள்.
 
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: தனுசு!
 
நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்வர்களான நீங்கள், தராதரம் அறிந்து பழகுவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால் உங்களை தலைநிமிர வைக்கும். செயலில் வேகம் கூடும். கொஞ்சம் வளைந்துக் கொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள்.
 
தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமைக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிப்புகுவீர்கள். அனுபவ பூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்-. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கடன் பிரச்சனைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, கன்னடம் பேசுபவர்கள் உதவுவார்கள்.
 
சுய தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். சொந்த-பந்தங்கள் மெச்சும்படி நடந்து கொள்வீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலைக் கிடைக்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். உங்களை அவமானப் படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
 
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். படிப்பின் பொருட்டு அவர்களை கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
 
உங்கள் ராசிநாதனான குருபகவான் 27.5.2013 வரை 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். மனைவியை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி தீர்க்கப்பாருங்கள். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். வெளியூருக்குச் செல்லும் போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயு கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகைகளை இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.
 
28.5.2013 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன்-மனைவிக்குள் காரண காரியம் இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டீர்களே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். சதா சர்வ காலமும் மருந்து மாத்திரை என்றிருந்த உங்கள் மனைவியின் ஆரோக்‌கியம் இனி சீராகும். நோய்கள் குணமடையும். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும்.
 
அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக் கட்டும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியில் ஒரு கிரவ்ண்டு வீட்டு மனையாவது வாங்குவீர்கள். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரம்மையெல்லாம் விலகும். தாயாரின் உடல் நலம் சீராகும். அவருடன் இருந்த மோதல்களும் விலகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
 
பழைய உறவினர், நண்பர்கள் தங்கள் தவறை உணர்ந்து வலிய வந்து உறவாடுவார்கள். 19.8.2013 முதல் 10.10.2013 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் பலவீனமடைவதால் இக்காலக்கட்டத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், பண விஷயத்தில் ஏமாற்றங்களும் வந்து நீங்கும். சகோதரங்களுடன் மனத்தாங்கல் வரும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. என்றாலும் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் 10-ம் வீட்டிலேயே நிற்பதால் பூமி, மனையால் லாபம் உண்டு.
 
இந்தாண்டு முழுக்க கேது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். கனவுத் தொல்லையும் அதிகரிக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அன்புத் தொல்லையும் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்திற்காக சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். படிகளில் ஏறும் போது கவனம் தேவை. வதந்திகளை நம்பி உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பாகப் பிரிவினையில் மனக்கசப்புகள் வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
 
கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். ஆரோக்யம் சீராகும். தள்ளிப் போன கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.
 
மாணவ-மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத் திறன் வளரும். அரசுத் தேர்வில் மதிப்பெண் கூடும்-. கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். 
 
வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்வீர்கள். சில நுணுக்கங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். வியாபாரம் தழைக்கும். வைகாசி, ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில்யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். விசுவாசமாக நடந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்ட்வேர், ஹோட்டல், ஸ்பெக்குலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள். வணிகர் சங்கத்தில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
உத்யோகஸ்தர்களே! சோர்வு, களைப்பு நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அலுவலகத்தை நவீனமயமாக்குவீர்கள். உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.
 
கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். அரசாங்கத்தால் சில சலுகைகள் கிடைக்கும்.
 
இந்தப் புத்தாண்டு ஏமாற்றம், எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் நீண்ட கால கனவுகளை நனவாக்கி அடுத்தடுத்து சாதிக்கத் தூண்டுவதாக அமையும்.
 
பரிகாரம்:
 
சூரியனார் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீசூரிய பகவானை ஏதேனும் ஒரு அமாவாசை திதி அல்லது ஞாயிற்று கிழமையன்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயுளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மகரம்!

 
பூவைப்போல் புன் சிரிப்பும் மெல்லிய மனசும் கொண்ட நீங்கள் சில நேரங்களில் புயலாக சீறிப்பாய்ந்து புரட்சி செய்வீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சுகஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விஜய ஆண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வசதிக் கூடும். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.
 
குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டிற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள். கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள்.
 
27.5.2013 வரை உங்களின் சேவகாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்குக் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். வாகன வசதிப் பெருகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.
 
ஆனால் 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் அதுமுதல் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் சாதாரண பிரச்னையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை தவறான பாதைக்கு தூண்டுவார்கள்.
 
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப்பாருங்கள். எதிர்பாராத திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். சிலர் உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள், பணத்தை கவனக் குறைவால் இழக்க நேரிடும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
 
உங்கள் ராசிநாதன் சனிபகவான் இந்த விஜய வருடம் முழுக்க 10-ம் வீட்டிலேயே உச்சம் பெற்று தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்யம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உங்களை புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்துப் போகும். மேலதிகாரி உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட வேண்டாம்.
 
இந்தாண்டு முழுக்க ராகுபகவான் 10-ம் வீட்டிலும், கேது ராசிக்கு 5-ம் வீட்டிலும் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவுகளெடுப்பதில் தடுமாற்றம் வந்துச் செல்லும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தைப் பெறுவதில் பிரச்சனைகள் வந்து நீங்கும்.
 
உறவினர்களில் சிலர் உங்களை காரியம் ஆகும் வரை பயன்படுத்திக் கொண்டு விலகுகிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். சில நாட்கள் தூக்கமில்லாமல் போகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். முன்பின் தெரியாதவர்கள் யாரேனும் உங்களுக்கு உதவுவதாக முன்வந்தால் உடனே நம்பி ஏமாற வேண்டாம். நயமாக பேசுகிறார்கள் என்று குடும்ப அந்தரங்க விஷயங்கள், சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். ஆனால் புகழ்பெற்ற புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். வழிபாடுகளில் ஆர்வம் பிறக்கும்.
 
செவ்வாய் பகவான் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்காலக்கட்டத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அவருடன் கருத்து மோதல்களும் வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்கள் அவ்வப்போது கோபப்பட்டாலும் பாசம் குறையாது. பிதுர்வழி சொத்தைப் போராடி பெறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்தவரையே மணம் முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். 
 
மாணவ-மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் போராடி சேர்வீர்கள். சிலர் நன்கொடை கொடுத்து சேரும் சூழ்நிலை வரும். சிலர் வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் தங்கி படிக்க வேண்டி வரும். 
 
வியாபாரிகளே! லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிவீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சித்திரை மற்றும் வைகாசி மாதத்தின் முற்பகுதி வரை பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். ஆனி மாதத்தில் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். புது வேலையாட்கள் அமைவார்கள். புது முதலீடுகள் செய்வது குறித்து நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசிப்பீர்கள். ஏற்றமதி-இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள். 
 
உத்யோகஸ்தர்களே! நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்தை சலுகைகளை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.
 
கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். ஆனால் வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. 
 
இந்த விஜய வருடம் அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:
ஸ்ரீரங்கம் ரங்க நாதப் பெருமாளை ஏதேனும் ஒரு புதன் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். ஏழைக் கன்னிப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். 
 
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கும்பம்!
 
நியாயமாக தனக்கு கிடைக்க வேண்டியதைக் கூட சில நேரங்களில் விட்டுக் கொடுக்கும் நீங்கள் மற்றவர்களின் மீது அதிக பாசம் வைப்பீர்கள். செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். இரத்த சொந்தங்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். 
 
உங்களின் சப்தாமதிபதி சூரியன் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்த விஜய வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
 
27.5.2013 வரை உங்களின் தன-லாபாதிபதியான குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். தாயாருக்கு மூட்டுவலி, இரத்த அழுத்தம் வந்துப் போகும். தாய்வழி உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். தாய்வழி சொத்துப் பிரச்னையில் கோர்டு, கேஸ் என்று போகாமல் சுமூகமாக பேசி தீர்க்கப்பாருங்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
 
28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 5-ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.
 
மகளுக்கு தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சொந்தம் பந்தங்கள் மதிப்பார்கள். எப்போதும் மருந்து மாத்திரை என்றிருந்த தாய் குணமடைவார்.
 
உங்கள் ராசிநாதன் சனிபகவான் இந்தாண்டு முழுக்க உச்சம் பெற்று 9-ம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் இந்தாண்டு முழுக்க ராகுவும் 9-ம் வீட்டிலேயே நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள்.
 
நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். தந்தையாருக்கு நெஞ்சு வலி, சர்க்கரை நோய், கை, கால் வலி வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கல் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். குற்ற மற்றவர்கள் யாரும் இல்லை யாராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் சிறுசிறு குற்றம், குறைகள் இருக்கத்தான் செய்யும். குற்றம் பார்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது.
 
இந்தாண்டு முழுக்க கேது பகவான் 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் மனோ பலம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு உங்களிடம் கருத்து மோதல்களுடன் இருந்து வந்த பழைய நண்பர் இப்போது வலிய வந்துப் பேசுவார். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.
 
செவ்வாய் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை 8-ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்காலக்கட்டத்தில் நெருப்பு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களுடன் பிணக்குகள் வரும். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரிக்கும். யாருக்கும் உறுதிமொழி தந்து விட்டு பிறகு அதை நிறைவேற்ற போராட வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நல்ல வரன் அமையும். விடுபட்ட பாடத்தை எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி, தூக்கமின்மை நீங்கும். பெற்றோரின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் பெருகும். போட்டி, பொறாமைகளுடன் பழகிய சக மாணவர்கள் திருந்துவார்கள். உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்வீர்கள். விளையாட்டு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.
 
வியாபாரிகளே! தொழிலில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகள் செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூடுதல் லாபம் கிடைக்கும். அனுபவமிக்க பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். ஆவணி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புதிய பங்குதாரர்கள் அமைவார்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெக்குலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.
 
உத்யோகஸ்தர்களே! வழக்கில் வெற்றி பெற்று பெரிய பதவியில் அமர்வீர்கள். சந்தித்த அவமானங்கள் நீங்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாராணமாக செய்து முடிப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சம்பளம் உயரும். புது பொறுப்புகளும், சலுகைகளும் கிடைக்கும். உங்கள் அலுவலகம் நவீனமாகும்.
 
கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு மதிப்பு, மரியாதைக் கூடும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
 
தொட்ட காரியங்கள் துலங்குவதுடன், சாதித்துக் காட்டும் வருடமாக இந்த விஜய வருடம் உங்களுக்கு அமையும்.
 
பரிகாரம்:
தஞ்சையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு பிரகதீஸ்வரரையும், நந்திதேவரையும் மாத சிவராத்திரி நாளில் அல்லது பிரதோஷ நாளில் சென்று வில்வ தளத்தால் அர்ச்சித்து வணங்குங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள்.
 
தமிழ் புத்தாண்டு ராசி பலன் : மீனம்!
 
மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக்கூடியவர்கள். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் போது இந்த விஜய வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும், சமயோஜிதமாக யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐ.பிகள் உதவுவார்கள்.
 
டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல் போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். 
 
உங்களின் சுக-சப்தமாதிபதியான புதன் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்மாமன், அத்தை வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 
 
உங்கள் ராசிநாதன் குருபகவான் 27.5.2013 வரை 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரை கடிந்துக் கொள்வீர்கள். தோலில் நமைச்சல், நரம்புச் சுளுக்கு, யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும்.
 
தாயாரிடம் கோபப்படாதீர்கள். அவருக்கு இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்துப் போகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்தை போராடி பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கினாலும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்து சில விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. சொத்து வாங்கும் போது பத்திரத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். அசிடிட்டி, வாயுக் கோளாறு வந்துப் போகும். 
 
இந்தாண்டு முழுக்க கேது உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் ராகு நீடிப்பதாலும் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு வந்துச் செல்லும். சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் மற்றும் காது வலி வந்துப் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.
 
குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்விக் கேட்டு குழம்புவீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும். 
 
இந்தாண்டு முழுக்க சனியும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். நெடுநாட்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.
 
திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். வெளி உணவுகள், லாகிரி வஸ்துகளை தவிர்ப்பது நல்லது. இயற்கை உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பணம், நகை களவு போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது. கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
 
கன்னிப்பெண்களே! காதலை தள்ளி வையுங்கள். சிலரின் ஆசை வார்த்தை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும். 
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
 
வியாபாரிகளே! இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள். ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். போட்டிகளை முறியடிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் லாபம் கூடும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். சில சமயங்களில் கோபப்படுத்துவார்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்களுடன் சச்சரவு வரக்கூடும். சிலர் தன் பங்கை கேட்டு வழக்குத் தொடுப்பார்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களையெல்லாம் தொழிலில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். அவ்வப்போது சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். கடன் வாங்கி கடையை நவீனமாக்குவீர்கள். ஆவணி, மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று வரவு உயரும். 
 
உத்யோகஸ்தர்களே! ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அலுவலக ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரி தவறான வழிகளை கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். வைகாசி, ஆவணி, மார்கழி, தை மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகள் வரும். புது வேலையும் அமையும். 
 
தைரியத்தாலும், விருப்பு, வெறுப்பற்ற நடுநிலை முடிவுகளாலும் தர்மசங்கடமான நிலைகளை சமாளித்து முன்னேறும் வருடமிது.
 
பரிகாரம்:
திருச்சி மலைக்கோட்டையில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஉச்சிப் பிள்ளையாரையும், ஸ்ரீதாயுமானவர் சுவாமிகளையும் சதுர்த்தி திதி அன்று சென்று வணங்குங்கள். முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.