Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கட்டட வேலை செய்தவர் நாக்கினை அறுத்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவர் தனது நாக்கினை கத்தியால் அறுத்துக் கொண்டு இரத்தம் வடியவடிய கோயிலுக்குள்ளே ஓடித்திரிந்ததால் நேற்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலின் கட்டிடப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கட்டட வேலையில் ஈடுபாட்டிருந்த பணியாளர் ஒருவர் நேற்று காலை கோவிலுக்குள் அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தார். இவரது செயற்பாடுகள் வித்தியாசமாக அமைந்திருந்தன. இவரைக் கட்டுப்படுத்த அங்கிருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

 

இந்நிலையில் முற்பகல் 10 மணியளவில் இந்நபர் கூரிய கத்தி ஒன்றினால் தனது நாக்கை இழுத்து தானே அறுத்துக்கொண்டார். இதன் பின்னரும் ஆலயத்துக்குள் அவர் ஓடித்திரிந்தார். நாக்கில் இருந்து வெளியேறிய இரத்தம் கோவிலில் பல இடங்களிலும் சிந்தியது.

 

பின்னர் ஒருவாறு இவரை மடக்கி பிடித்த சக பணியாளர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

 

இவரது இச்செயற்பாட்டின் காரணமாக கோயிலில் நடைபெறும் மதிய நேர பூஜை வழிபாடுகள் தாமதமாகின. தொடர்ந்து பிராயசித்த பூஜை வழிபாடுகள் அங்கு இடம்பெற்றன. இவரின் இந்த செயலால் ஆலயத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. வழிபாட்டுக்கு சென்றிருந்த பக்தர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

 

நாக்கை அறுத்துக்கொண்ட நபர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும், இங்கு கட்டட வேலைகளில் அவர்  ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரியவருகிறது.

 

http://www.sankathi24.com/news/28762/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.