Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சச்சுமாஸ்டரை சுட்டவருக்கு 10 ஆண்டுகளின் பின் பிணை! அன்று மட்டு.சிறையில் நடந்தது என்ன?

Featured Replies

சித்திரை 24, 2013

மட்டக்களப்பு சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் கருணா குழுவின் முக்கியஸ்தராகவிருந்த சச்சு மாஸ்டர் என்பவரையும் மற்றுமொருவரையும் கொலைசெய்து மற்றுமொருவரை கொல்ல முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் 10 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்த ம.புவிதரன் என்பவர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை, நிலாவெளியைச் சேர்ந்த மகேந்திரன் புவிதரன் என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றிய மேலதிக விவரமாவது

2004 ஆம் ஆண்டு கருணா பிரிந்து வெளியேறிய பின்னர் அவருடன் இணைநது செயற்பட்ட புலிகளின் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு கோட்ட பொறுப்பாளர் சச்சு மாஸ்டர் என்ற கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற நபரையே மட்டக்களப்புச்சிறைச்சாலைக்குள் வைத்து சுட்டுக்கொன்றார் மேற்படி நபர். உண்மையில் இவர் புலி உறுப்பினர் அல்ல. ஆதரவாளரே. கருணா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்த பின்னர் மேற்குறிப்பி்ட்ட நபரை அணுகிய புலிகளின் புலனாய்வுப்பிரிவினர் இந்நபரை இந்நடவடிக்கைக்கு உடன்பட வைத்தனர் . அதனையடுத்தே 2004 ஜீலை 14 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் சிங்கள படைகளின் பாதுகாப்புடன் இருந்த சச்சு மாஸ்டரை அவரது பிஸ்டலாலேயே சுட்டுக்கொண்றார் இந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramesh-LTTE.jpg

கேணல் ரமேஸ்

இந்த நடவடிக்கை குறித்து அந்நேரத்தில் கருத்துத்தெரிவித்த புலிகளின் முன்னாள் மட்டக்களப்புத்தளபதி கேணல் ரமேஸ்  இந்த நடவடிக்கையை சிறைச்சாலையில் கைதியாக இருந்த தமிழின உணர்வாளன் ஒருவரே மேற்கொண்டார் . இது கருணா குழுவினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கும். சச்சு மாஸ்டர் என்பவரே மாறன் என்ற பெயரில் சிறையிலிருந்தவாறு பல்வேறு ஊடகங்களுக்கு புலிகளுக்கெதிரான கருத்துக்களை பரப்பிவந்தவர் என்றும் தெரிவித்தார்

ஆயுதங்களுடன் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த போது சச்சுமாஸ்டர் உடபடசில கருணாகுழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு பொலிஸாரால் 31 மார்ச்2004 இல் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது( யோசப் பரராஜசிங்கம் எம்.பி யை கொலை செய்யும் நடவடிக்கைக்கு சென்று கொண்டிருந்த போதே பொலிஸாரால் பிடிக்கப்பட்டதாகவும்  சொல்லப்பட்டது.எனினும பின்னாளில் 2005 டிச 25 இல் யோசப் சுட்டுக்ககொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.) சிறையிலிருந்த போதும் அவருக்குத் தேவையான சகல வசதிகளை சிங்கள புலனாய்வுப்பிரிவு மேற்கொண்டிருந்ததுடன் அவர் சீன தயாரிப்பான் சில்வர் நிற பிஸ்டலையும் தன்னுடன் வைத்திருந்திருந்தார் சச்சு மாஸ்டர். அந்த பிஸ்டலாலேயே புவிதரன் சச்சுவை சுட்டுள்ளார்.அதற்கு முன்னதாக சச்சுவுடன் புலிகளின் அறிவுறுத்தலின் படி நெருக்கமாக பழகி அவரின் நம்பிக்கையை பெற்றிருந்தார் புவிதரன் என்றும் கூறப்படுகிறது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரியவே இரட்டைக்கொலைக் குற்றச்சாட்டில் 10 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தவரை நேற்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்துள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அவரை விடுவித்த நீதிபதி பிணை நிபந்தனைகளை மீறினால் பிணை ரத்துச் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

10 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த காதலனுக்கு அவருடைய காதலி விடுத்த கோரிக்கையை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை அனுபவிக்கும் புவிதரனுடன் தான் பாடசாலை காலத்தில் இருந்தே காதல் கொண்டிருந்ததாகவும், 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவருடைய காதலியான அம்பாறை தம்பிலுவில்லைச் சேர்ந்த அழகரத்னம் கவிதாஞ்ஜனி தனது பிணை மனுவில் தெரிவித்துள்ளார்.

t1mil6-tmvp.jpg

2004 இல் கருணா குழுவினர்

இருவருக்கும் இடையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே புவிதரனுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு 20வது வயதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அந்த பிணை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் 2010ம் ஆண்டு நிறைவுற்ற நிலையில் அவருக்கு எதிரான எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை.

இந்நிலையில்,; அவருக்கு வழங்கப்பட்டுள்ள 10 வருடகால சிறைவாசம் நிறைவடைந்து விட்டமையினால் திருமணம் முடிக்கும் வகையில் அவருக்கு பிணை வழங்கவேண்டும் என்றும் அந்த பிணை மனுவில் கோரப்பட்டுள்ளது.

பிணை மனுவை ஆராய்ந்த நீதிபதி பிரதிவாதியை மேற்குறிப்பிட்ட பிணையில் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார்.

http://urumal.com/archives/%E0%AE%9A%E0%AE%9A%E0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.