Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்; ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் லண்டனில் புதிய அறிக்கை வெளியிடவுள்ளது.

Featured Replies

29 ஏப்ரல் 2013

 

இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், இப்போதும் அங்கு தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய அறிக்கையை அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் நாளை (செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து தலைநகர லண்டனில் வெளியிடவுள்ளது.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த அறிக்கையை இந்திய நேரப்படி ஏப்ரல் 30ஆம் தேதி அதிகாலை சுமார் 4.30 மணிக்கு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர் நடந்தபோது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுடப்பட்ட புகைப்படங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆதாரத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் உலகத்தின் பார்வையே இலங்கை மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டு அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம், நீதித் துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது, அதை எதிர்த்த அந்த நாட்டு நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள், அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் காணாமல் போவது, இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் மீது தொடரும் தாக்குதல்கள், பிபிசி செய்தி நிறுவனத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டலும் சேவை துண்டிப்பும், மகளிர் தொண்டு அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோருக்கு விடுக்கப்பட்டு வரும் மிரட்டல்கள் ஆகியவையும் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/29/1130429008_1.htm

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.