Jump to content

ஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை.


Recommended Posts

ஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை.

ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த வீடு நிலங்களை இழந்து அலைந்து மீண்டும் தமது ஊரில் குடியேறியுள்ள ராணமடு , மாதிரி கிராமம் , மண்டுரைச் சேர்ந்த சிவபாலன் தம்பதிகளின் பிள்ளைகளான பவாதாஸ் 12வயது , விருத்திகா 7வயது ஆகிய இருவரும் எவ்வித குறைபாடுகளும் இல்லாது உலவிக் கொண்டிருந்தனர். திடீரென இருபிள்ளைகளும் நடக்க முடியாது மனவளர்ச்சி குன்றியவர்களாகிவிட்டனர்.

DSC01140_zpsbd59b4eb.jpg

கூலித்தொழில் செய்து குடும்பத்தைக் கவனிக்கும் சிவபாலன் அவர்களால் ஊனமுற்ற குழந்தைகள் இருவரையும் பராமரிக்கும் வசதியின்றி இருக்கிறார்கள். யுத்தத்தின் தாக்கத்திலிருந்து மீண்ட குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே மிகவும் அவதியுறுகின்றனர்.

 

பல அரச அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் இக்குடும்பத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். தம்மால் பிள்ளைகளுக்கான வசதிகளைச் செய்து தர முடியுமென்று வாக்குறுதியளித்தும் சென்றுள்ளனர். ஆயினும் பார்வையிட்டுச் சென்றவர்கள் திரும்பி எதனையும் செய்யவுமில்லை பார்க்கவுமில்லை.

DSC01142_zps91759261.jpg

கிராம உத்தியோகத்தர் அரச உதவிக்கு விண்ணப்பித்தும் இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லையென்பதனை கிராம உத்தியோகத்தர் உறுப்படுத்திய கடிதத்தையும் எமக்கு வழங்கியுள்ளார்.

 

பிள்ளைகள் இயற்கைக் கடன்களை கழிக்க வேண்டிய வசதிகளோ அல்லது அவர்களது மனவளத்தை மேம்படுத்தக்கூடிய மருத்துவமோ செய்ய முடியாது துயரமுற்றிருக்கும் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு சக்கரநாற்காலியொன்றும்மேலும் சில உதவிகளையும் வேண்டியுள்ளனர்.

DSC01244_zps89e36991.jpg

இந்தப் பிள்ளைகளுக்கு சகல வசதிகளோடும் கூடிய ஒரு சக்கரநாற்காலியினை வாங்குவதற்கு  28ஆயிரம் ரூபா (175€) தேவைப்படுகிறது. ஒவ்வொரு அம்மாவும் அப்பாவும் தங்கள் பிள்ளைகள் ஊனமுற்று முடங்கிப்போனால் மனசால் அடைகிற உழைச்சல் கவலையை ஒவ்வொரு பெற்றோராலுமே புரிந்து கொள்ள முடியும்.

இந்தப் பிள்ளைகளுக்கு ஒரு சக்கர நாற்காலியை வழங்க கருணையுள்ளம் படைத்த பெற்றோர்களை வேண்டுகிறோம்.

 

தந்தை சிவபாலன் அவர்கள் எழுதிய கடிதமும் கிராம உத்தியோகத்தரின் உறுப்படுத்தலும்:-

sivabalan1_zps5f8f4140.jpg

sivabalan2_zpsc6b4e092.jpg

DSC01139_zpse6690858.jpgDSC01141_zps815309fa.jpg

 

தொடர்பு கொள்ளுங்கள் :-

 

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418

 

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/

 

 

Link to comment
Share on other sites

இந்தக் குழந்தைகளுக்கான சக்கரநாற்காலிக்கான உதவியை கள உறவு ஒருவர் உதவ முன்வந்து தனிமடலிட்டுள்ளார். தனது பெயரைக் குறிப்பிட வேண்டாமென கேட்டுள்ளார். எனினும் அந்த உறவுக்கு இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரையிலும் சக்கரநாற்காலி இல்லாமல் சிரமப்பட்ட அந்தக் குழந்தைகள் இனி சக்கர நாற்காலியில் தங்கள் இயற்கைக்கடன்களை கழிக்கவும் உலவித்திரியவும் இந்த உதவி பேருதவியாக அமையும்.

உதவ முன்வந்த உறவே உங்கள் உதவியை என்றென்றும் அந்தக் குடும்பம் மறக்காது.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஊனமுற்ற பிள்ளைகளுக்கான சக்கரநாற்காலி வழங்கல்

 

மண்டுரைச் சேர்ந்த சிவபாலன் தம்பதிகளின் பிள்ளைகளான பவாதாஸ் 12வயது , விருத்திகா 7வயது ஆகிய இருவரும் எவ்வித குறைபாடுகளும் இல்லாது உலவிக் கொண்டிருந்தனர். திடீரென இருபிள்ளைகளும் நடக்க முடியாது மனவளர்ச்சி குன்றியவர்களாகிவிட்டனர்.

 

இக்குழந்தைகளுக்கான சக்கரநாற்காலிக்காக எம்மிடம் குழந்தைகளின் தகப்பன் விண்ணப்பித்திருந்தார். அவர்களுக்காக பெயர் குறிப்பிடாத உறவு முன்வந்து உதவியிருந்தார்.

 

உதவி வழங்கப்பட்டதற்கான படங்கள் :

DSC01308_zps3ecae49f.jpg

DSC01307_zpsadefbeca.jpg

DSC01299_zpsf775527b.jpg

DSC01297_zps7847147a.jpg

நன்றிக்கடிதம் :-

3Wheel_zps517d71c3.jpg

சக்கரநாற்காலி கொள்வனவுச் சிட்டை :-

3wheelbill_zps8d49f5d6.jpg

தொடர்பு கொள்ளுங்கள் :-

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418

 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

தொடர்புபட்ட செய்தி:-http://nesakkaram.or…குழந்தைகளுக்கா/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.