Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்திரைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்திரைகள்

April20
 

அண்டம்,பிரபஞ்சம் ,யுனிவர்ஸ் என்றெல்லாம் சொல்கிறார்களே. ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி யோசனை செய்து பாருங்கள் , இது எப்படி நடக்கிறது. விஞ்ஞானம் ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும் அனைவருக்கும் புரிந்துவிடாது.

ஒரு வெற்றிடமான அந்தரங்கத்தில் சூரியன் ,கோள்கள் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இவை எப்படி ஒரு ஒழுங்கு முறையோடு அதனதன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது.இதற்கு யார் காரணம்?

pirapanjam.png

 

இது எப்படி சாத்தியம்? நாம் என்றைக்கும் சிந்தித்துணர முடியா விஷயம். ஆனால் இறை ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே சொன்னது ,இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒழுங்கான இயக்கத்தில் தன்பணியை தொடர்ந்து செய்வதன் காரணம்,நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,நெருப்பு, இந்த ஐந்து விஷயங்கள்தான்.இந்த ஐந்தையும் பஞ்சபூதம் என்கிறோம். இதில் எதாவது ஒன்றில் அதன் செயல்பாட்டில் குறைவுபட்டோ,மிகுந்தோ போனால் பிரபஞ்சம் ,அண்டம் ,யுனிவர்ஸ் என்கிற இந்த விஷயம் இல்லாமல் போயிருக்கும்

சரி அதைவிடுங்க…நாம மனிதனாக உருவம் கொண்டு …..பேசுகிறோம்,..கை, கால்களை அசைக்கிறோம் …இன்னும் என்னவெல்லாமோ ஜகஜால வித்தையெல்லாம் செய்யறோம் . இதற்க்குக் காரணம் ஒரு ஆற்றல் நமக்குள்ளே இருக்கிறது அதை உயிராற்றல் என்று சொல்லிவிடலாம். இந்த உயிரை யாராவது பார்த்ததுண்டா ? இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தும் விடை தெரியா புதிர் தான் உயிர்.

””’பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தரம் மாறில்

தோன்றும் பிறப்பு”””

அவ்வையார் பாட்டைப் பொருளுணர்ந்து பார்க்கும்போது இந்த உயிர் என்கிற மேட்டர் இந்த உடல் என்கிற விஷயமாக மாறுவதற்கு முன்பு கண்களுக்கு புலப்படாத நுண் மூலகங்கலாகத் தான் இருந்தது என்கிறார். அப்படியென்றால் இந்த உயிர் என்பது பஞ்சபூதங்களின் கலவை(our body and soul is a mixture of five elements) என்று உணர முடியும்.

நீங்கள் நன்றாக யோசித்துப் பார்க்கும்போது இந்த பிரபஞ்சம் , இந்த உடல் இவைகளின் மூலம் ,அடிப்படை எல்லாமே இந்த நீர்,நிலம், காற்று, ஆகாயம்,நெருப்பு என்கிற பஞ்ச பூதங்கள்மட்டுமே.அதனால் தான்

”””அண்டத்தில் உள்ளதே ,பிண்டத்தில் உள்ளது

பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது

அண்டமும் ,பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும்போது””””””

 

நோய் தீர்க்கும் முத்திரைகள்

முத்திரைகள் நமது முன்னோர்களின் இறை ஞானத்தின் மூலம் உணர்ந்து கொள்ளப்பட்ட ஒரு விஷயம். நல்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய,நம் உடலின் நோய்களை தீர்க்கக்கூடிய வல்லமைகொண்ட அற்புதங்களை நிகழ்த்தும்  ஒரு  முறை. அன்றாடம் நம் வாழ்வில் தேவைப்படும் சமயத்தில், தேவைப்பட்ட முத்திரைகளைச் செய்யும்போது நம் உடல் சம்பந்தமான சிக்கல்களை மிக எளிதாக சரி செய்து கொள்ள முடியும்.

 
 
 
 
பஞ்ச பூதங்கள் இந்த அண்டத்திலும் உள்ளது. நம் உடலினுள்ளும் எப்படி பிரதிபலிக்கிறது என்பதையும் நாம் முந்தைய பதிவில் கண்டோம்.
பஞ்சபூதங்கள் சமநிலையிலிருந்தால் பிரபஞ்சம் தொடர்ந்து தன பணியை செவ்வனே செய்து கொண்டிருக்குக்கும். அப்படி செய்து கொண்டிருப்பதாலேயே  இன்றளவும்  சீராக இயங்கிக்கொண்டிருகிறது.நம் உடலும் பஞ்சபூத சமன்பாட்டின்படியே சீராக இயங்கிகொண்டிருக்கிறது.நோய்களற்ற நிலையில் உள்ளது.
 
002.jpg கட்டைவிரல் 001.jpg நடுவிரல் 004.jpg ஆள்காட்டிவிரல்

 

003.jpg மோதிரவிரல்

 

 ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’அய்யன் வள்ளுவர் வாக்குப்படி, இந்த பஞ்ச பூதங்களில் செயல்பாடு மிகுந்து போனாலோ ,அல்லது குறைவு பட்டு போனாலோ அதாவது இயல்பான நிலையிலிருந்து சற்று பிசகிவிட்டாலோ நம் உடல் நோய் வசமாகிவிடும், துன்பம் நம்மை ஆட்கொண்டுவிடும்.
005.jpg சுண்டுவிரல்
நம்முடைய ஐந்து விரல்களும் ஒவ்வொரு பஞ்சபூத மூலகத்தை குறிக்கும்.கட்டைவிரல் நெருப்பையும் ,ஆள்காட்டி விரல் காற்றையும்,நடுவிரல் ஆகாயத்தையும்,மோதிரவிரல் நிலத்தையும்,சுண்டுவிரல் நீரையும் குறிக்கும்.பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது.
தினமும்

காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து

தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும்

விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும்?

 

hhhhhhhhhhhhhh.jpg

முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை இப்போது காணலாம்.நமது ஒவ்வொரு விரலும் ஒரு மூலகத்தை சார்ந்திருக்கிறது, தேவைக்கேற்ப விரல்களை தொடுவதன் மூலம் நம் உடலின் பஞ்ச பூத சமன்பாட்டை நேர்படுத்தி நோயிலிருந்து முழுமையாக் விடுபடலாம்.
                                  கழிவுகளின் தேக்கம் நோய்.அப்படியானால் கழிவுகளின் நீக்கமே மருந்து. எனவே கழிவுகளை முழுமையாக நீக்கிவிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.அதனால் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர் முதலில் இந்த முத்திரையைத் தொடர்ந்து ஒரு பதினைந்து நாட்கள் செய்ய வேண்டும். அதாவது ஒரு அம்மாவாசை நாளில் ஆரம்பிக்க வேண்டும். வளர்பிறை நாட்களில் செய்தால் நல்ல பலன் கிட்டும்.
                                                          இதற்குப் பெயர் கழிவுநீக்க முத்திரை

mudrai.jpg 

 

கட்டைவிரலின்நுனிப்பகுதியால்மோதிரவிரலின் கீழஅதாவதுமூன்றாவதுரேகைஉள்ளஇடத்தைதொடவும்.மெல்லியஅழுத்தம்போதுமானது.சம்மணம் ,பத்மாசனம்,சித்தாசனம்இந்தநிலையில்சுவாசத்தைசாதாரணமாகநிலையில்வைத்துஅதைகவனித்துவரவேண்டும்.ஒரு௨௦நிமிடங்கள்செய்யும்போதுஉடலின்கழிவுகள்வெளியேறஆரம்பிக்கும்.அப்போதுசிறுநீர்அதிகம்போவது,அதில்வாடைவீசுவது,மலம்அதிகவாடையுடன்அடிக்கடிபோவது,கறுத்துமலம்வெளியேறுவது.வியர்வைஅதிகம்வெளியேறுவது ,அதில்வாடைவீசுவது,பேதிஉண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம். பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது. 

 

 காற்று மூலகம் METTAL ELEMENTமெட்டல் என்கிற  காற்று மூலகம்

 

                                                            காற்று  இல்லாமல் நம்மால் கண்டிப்பாக உயிர் வாழ முடியாது.இன்று அநேகப் பேர்  ஏன் அனைவருமே மூச்சு என்கிற விஷயத்தை நினைப்பதேயில்லை. பொத்தாம் பொதுவாக மூச்சு முக்கியம் என்று சொன்னாலும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிய முனைவதில்லை. ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.இறை ஞானிகள் அதைக் கற்றுத்தேர்ந்தவர்கள். மூச்சுக்காற்றை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். நாம் அந்த அளவு தெரிய வேண்டியதில்லை,கொஞ்சம் முறையான சுவாசம் செய்யத் தெரிந்தாலே ஆரோக்கியம் நமக்குச் சொந்தம்.நீண்ட மூச்சு உள்வாங்கி, நீண்ட மூச்சாக வெளிவிடவேண்டும். பொதுவாகவே நம் அவசரகதி வாழ்க்கையில் வேகமான சுவாசமே அன்றாடம் நடக்கிறது. நாம் உள்ளிழுக்கும் காற்றானது நம் நுரையீரலை முழுமையாக அதன் அடிப்பகுதி நுண்ணறைகள் வரை செல்கிறதா என்றால் , கண்டிப்பாக இல்லை. இந்த மண்ணெண்ணெய்  பம்ப் ஸ்டவ்வில் எப்படி காற்றடிப்போமோ அந்த மாதிரி பொசுக்,பொசுக் என்று தான் மூச்சு விடுகிறோம் . நாம் இழுக்கும் காற்று நுரையீரல் வாயில் (entrance) வரை சென்று ,வெளியேறிவிடுகிறது. காரணம் படபடப்பு ,பதட்டம், ஓட்டம் .பணம் பண்ணவேண்டும் ,பணம் பண்ணவேண்டும் என்ற ஓட்டம்.நம்முடைய உடலின் கடைக்கோடி ஒவ்வொரு அணுவுக்கும் உண்டான ஆக்சிஜன் கிடைத்ததா என்று உணர மறந்துவிட்டோம்.முடிவில் நோய் ,வாழும் வயதில் மரணம் .இதற்க்கு யார் காரணம் . நாம், நம் மனம்.
“நான் உன்னைப் படைத்ததே என்னை வணங்குவதற்கன்றி வேறெதற்காகவும் இல்லை”
                              இறைவன் சதாசர்வ காலமும் தன்னை  நினைப்பதற்கும் வணங்குவதற்கும் தான் மனிதனாகிய உன்னைப் படைத்தேன்.அதாவது இறையைத்தேடுஎன்கிறான் .நமக்கு இந்த வல்லினம் ,மெல்லினம்,இடையினத் தகராறு எப்போதும் இருப்பதால் நாம் இறைவனைத் தேடாமல் இரையைத் தேடி ஓடுகின்றோம். இந்த அவசரமான ஓட்டம் நிறைந்த இந்த வாழ்க்கை முறையில் முறையான சுவாசம் என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. உணர்ந்தவர்கள் முறையாகச் செய்து ஆரோக்கிய வாழ்க்கையைப் பெறுகின்றனர். நம் உடலில் உயிர் என்பது பஞ்சபூதக் கலவை என்று முன்னர் கண்டோம். இந்த பஞ்சபூதங்கள் எங்கே இருக்கிறதோ அங்கே உயிர் நலமாக இருக்கும். பஞ்ச பூதம் ஒன்றில் குறைவு ஏற்ப்பட்டாலும் நம் உயிருக்கு நலம் கெடும் என்பது உறுதி.
                                                         அப்போ , இந்த காற்று என்கிற மூலகத்தை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதை கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும். மீண்டும் முத்திரையோடு சந்திக்கிறேன்……
METTAL(காற்று)மூலகம் அதிகமாக இருந்தால் செய்ய வேண்டிய முத்திரைகாற்று மூலகம் நம்முடைய உடலில் அதிகமாக இருக்கும்போது என்னென்னதொந்தரவுஏற்படும், குறைந்தால் என்ன மாதிரி இருக்கும் என்பதை

 

 நாம் உணர வேண்டும். அக்குப்பங்க்சர் நோக்கில் பார்க்கும்போதுமெட்டல் மூலகம் குறைந்தால்
 தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ,
சுவாசிப்பதில் சிக்கல்,
ஆஸ்த்மா ,
சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகும்.
       அதே நேரம் மெட்டல் மூலகம் அதிகமாகிப் போனால்
 செரிமானக் குறைபாடு ,
மூட்டு வலி,
முதுகு, கழுத்துப் பகுதிகளில் உண்டாகும் வலி,
அடிக்கடி ஏப்பம் ,
வயிற்றுபகுதி உப்புதல் ,
இந்த மாதிரி நோய்கள் உண்டாகும்.
Vayu_Mudra.jpg காற்று என்கிற மெட்டல் அதிகமிருந்தால் இந்த முத்திரை செய்ய வேண்டும்

 

 

நம்முடைய ஆள்காட்டி விரலை மடித்து , நம்முடைய கட்டை விரலைக் கொண்டு ஆள்காட்டி விரலின் இரண்டாவது ரேகையின் பின்புறம் லேசாக வைத்து  தொட வேண்டும்.அதிக அழுத்தம் தேவையில்லை.சுவாசத்தை ஆழமாக அதே நேரத்தில் சீராக வைத்து , நம் கவனத்தை இந்த முத்திரை.யின் மேல் வைக்க வேண்டும்.இந்த முத்திரையைச் செய்யும்போது நம்முடைய காற்று மூலகத்தைக் குறைக்க முடியும.

இந்த முத்திரை உடனடியாக வயிற்றில் நிறைந்துள்ள அதிகப்படியான  வாயுவை வெளியேற்றிவிடும்.

மூட்டு வலி ,எலும்பு ஜாயிண்ட்ஸ் வலி இவற்றை நீக்கும் .

வாத வழிகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த முத்திரையால் பலன் பெறலாம் .

சின்னச் சின்னப் பிரச்சினைகளைக் கூட பெரியதாக்கி மனதளவில் துயரப்படுபவர்களுக்கும்,எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்களுக்கும்,மன உறுதியைக் கொடுக்கும்.தலைசுற்றல் , தூக்கமின்மையைச் சரி செய்யும் .

வாத தோஷத்தினால் ஏற்ப்படக்கூடிய முதுகு வலி, மற்றும் சைனோவியல் திரவம் சுரப்புக் குறைவினால் எலும்பு இணைப்புகளில் உண்டாகும் வலி, மற்றும் படக்,படக் என்ற சத்தம் இவைகளுக்கு நல்ல பலன் தரும்.

விக்கலைக்குறைக்கும்.

ஓரளவு காது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு தருவதோடு,தேவையில்லாமல் கண் இமைகள் துடிப்பதை சீராக்கும்.

தோலின் மென்மைக்கும்,மேன்மைக்கும் இந்த முத்திரை உகந்தது.

 

காற்று என்கிற மூலகம் குறைவாக இருந்தால் செய்ய வேண்டிய முத்திரை
 
இந்த முத்திரையை நமது ஆள்காட்டி விரலை மடித்து அதன் முதல் ரேகை அதாவது ஆள்காட்டி விரல் நகத்தின் மீது  கட்டை விரலை வைத்து மெதுவாகத் தொடவேண்டும்.
%252C%252C%252C%252C%252C%252C%252C%252C
இந்தமாதிரி செய்யும்போது மெட்டல் என்கிற காற்று குறையும்போது ஏற்படும் பிரச்சினைகளான உடல் அசதி ,மந்தத்தன்மை ,மூச்சு விடுவதிலுள்ள சிரமம் ,எக்சிமா ,நெஞ்சை அடைப்பது போன்ற உணர்வு  இவைகள் மறையும்

 

 பிரித்திவி முத்திரை

பிரித்திவி முத்திரை எப்படி செய்வது என்று பார்ப்போம் .

 
finger_mudras_013.JPG பிரிதிவி முத்திரை

 

 

பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவேண்டும் . இப்படிச் செய்வதால்  – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
இது உங்கள் மேனி எழிலுக்கும்,தோல் நிறத்துக்கும் உதவுகிறது. 
இந்த முத்திரையை மதியம் உணவுக்கு முன்பு ஒரு இருபது நிமிடங்கள்  செய்துவிட்டு சாப்பிடவும். பிறகு அந்த நாள் முழுவதும் உங்கள் சுறுசுறுப்பைப் பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.காலையில் செய்யும்போது உங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைத்துவிடும்.நீண்ட நாள் நோயால் பாதிப்படைந்த நபர்களுக்கு இது ஒரு டானிக் மாதிரி.
மொத்தத்தில் அக்குப்பங்க்சர் பார்வையில் இது மண் மூலகத்தைச் சமன் படுத்தும் வேலையைச் செய்யும்.
அபான முத்திரை
 
 
 
apan.jpg

அபான முத்திரையை  மேலே உள்ள படத்தில் இருப்பதைப் போல செய்ய வேண்டும்.

அதாவது மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு  லேசாகத் தொடவேண்டும். இதனால் என்ன பயன் நமக்குக் கிடைக்கிறதென்றால்,

சிறுநீரகம்மலக்குடல்பிறப்புறுக்கள்நன்கு வேலை செய்வதோடுசுகப்பிரசவம் தரும்கர்ப்பப்பை மாதவிடாய் கோளாறுகளைநீக்கவல்லதுபைல்ஸ்நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்வதால் அவற்றின்தாக்கத்திலிருந்து நிச்சயம் விடுபடலாம்.

நேர அளவு: எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும்.

பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும்.

� இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும்.

� கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும்

குறிப்பு:இதை கர்ப்பிணிகள்முதல் 8 மாதம் வரை செய்யக்கூடாது.

mudra_mahasirs.jpg

மகா சிரசு முத்திரை இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் கட்டை விரல் ஆள்காட்டி விரல் நாடு விரல் இவைகளின் நுனிகளை ஒன்றோடொன்று தொடவேண்டும். மோதிர விரலை மடித்து கட்டைவிரலின் அடிப்பாக சதைப் பகுதியில் மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும்.படத்தை நன்றாகப் பார்க்கவும்.சுண்டுவிரல் நேராக இருக்கும்படி வைக்கவும்.

பயன்கள்:     இதனால் தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும்.

                         தலைவலி,ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) டென்சன்  இவைகள் தீரும்.

Gyan%252520Mudra%252520.jpg வாயுவைச் சமன்படுத்தும் முத்திரை

சரி எனக்கு மெட்டல் என்கிற காற்று மூலகம் அதிகமா,குறைவா என அறிய முடிவில்லை என்கிறீர்களா . நீங்கள் வாயுவைச் சமன்படுத்தும்

முத்திரையைச்
செய்துகொள்ளுங்கள்.இந்த முத்திரைகளை சுகாசனம் ,சித்தாசனம் ,பத்மாசனம், இவைகளுள் ஏதாவதொரு இருப்பில் அமர்ந்து செய்ய வேண்டும். வஜ்ராசனம் சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து பத்து நிமிடம் செய்ய வேண்டும்.ஆரம்பத்தில் ஐந்து நிமிடம் செய்து பிறகு பத்து நிமிடம் செய்யலாம். பத்து நிமிடத்திற்கு மேல் செய்ய வேண்டாம்சுரபி முத்திரை

 

Surabhi-Mudra_18844.jpg

சுரபி முத்திரையை சற்று கவனமாகச் செய்ய வேண்டும்.பேரு விரல்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடாமல் இருக்க வேண்டும்.

விரல் நுனிகள் கீழ்க்கண்டவாறு தொடவேண்டும்:

வலது ஆள்காட்டி விரல் நுனி   +     இடது நடுவிரல் நுனி

வலது நடு விரல் நுனி   +   இடது ஆள்காட்டி விரல் நுனி

வலது மோதிர விரல்   +  இடது சுண்டுவிரல் நுனி

வலது சுண்டுவிரல்  +  இடது மோதிர விரல் நுனி

இதக் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். ஆரம்பத்தில் செய்யும் போது சற்று கடினமாக இருக்கும். இது மரம் (ஆகாயம்) ,  நெருப்பு,எர்த் (மண்), மெட்டல்(காற்று), நீர்  இந்த ஐந்து மூலகங்களையும் சமபடுத்தும் ஆற்றல் இதற்க்கு உண்டு.யோகக்கலை பயில்கின்ற நபருக்கு இது மிகவும் ஏற்றது .  மனதை  அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்க்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும்.

மேலும் உடல் வலுவாகும், சிறுநீரக நோய்கள் விலக இந்த முத்திரையை ஒரு இருபது நிமிடங்கள் வரைச் செய்ய வேண்டும்.

 

http://www.shivajothidanilayam.com/blog/?m=201304&paged=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.