Jump to content

யாழ் பொது நூலகம் - எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

- என்.செல்வராஜா, (நூலகவியலாளர். லண்டன்)

 

- யாழ்ப்பாணப் பொது நூலகம் சிங்கள வன்முறையாளர்களால் தீவைத்து அழிக்கப்பட்ட நினைவுநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது (01.06.2013) -

 

jaffnapubliclibrary5.jpg

 

 

நூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக்கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளாக உலகெங்கினும் உள்ள அரசியல் அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இருந்த நூல் ஒரு பிரதியோ, சில பிரதிகளோ  ஏடுகளிலும், களிமண் தகடுகளிலும் எழுதப்பட்டுப் பேணப்பட்டு வந்திருந்தன. அவற்றை அழிப்பதன் மூலம் அதிகார வர்க்கம் அதிலிருந்த கருத்துக்களை குழி தோண்டிப் புதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்று அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்காலத்திலும் இந்த நடைமுறையைக் கைக்கொள்வதினால் இவர்கள் எதைச்சாதித்து விட்டார்கள்?

கி.மு. 213இல் புராதன சீனாவின் சக்கரவர்த்தி Shih Huang-ti. ஓருங்கிணைக்கப்பட்ட பெருஞ்சீனப் பேரரசின் முதலாவது மன்னராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர். இவர் தான் சீனப்பெருஞ்சுவரைக் கட்டுவிப்பதில் முன்னோடியாயிருந்தவர். தனது ஆட்சிக்காலத்தில் தான் சீன வரலாறு எழுதப்படவேண்டும் என்ற நோக்கில் விவசாயம், விஞ்ஞானம் மற்றும் எதிர்வு கூறும் சாத்திர  நூல்களைத் தவிர்ந்த அனைத்து நூல்களையும் சீனாவில் எரித்துவிடும்படி உத்தரவிட்டிருந்தார். மாய மந்திரக்கலைகளின் பாலிருந்த இவரது அதீத ஈடுபாட்டுக்கு கன்பூசிய  கொள்கையாளர்களினால் தெரிவிக்கப்பட்ட மாற்றுக் கருத்தும் இந்த முடிவுக்குக் காரணம் என வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். தடைசெய்யப்பட்ட நூல்கள் பற்றிக் கலந்துரையாடுவதே மரணதண்டனைக்குரிய குற்றமாகப் பிரகடனப்படுத்தியிருந்தார். இதன் மூலம்  எதிர்பார்த்த நீடித்த ஆட்சி அவருக்குக் கிடைக்கவுமில்லை. பெருஞ்சீன வரலாறு திருத்தி எழுதப்படவுமில்லை. சீன உளவியல் கருத்துக்கள் உலகப்புகழ்பெறத் தவறவுமில்லை.

மாறாக, கி.மு.206 இன் பின் அவரது ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர்களால் சீன இலக்கியம் செழிக்கவைக்கப்பட்டது. ஆவணக்காப்பகங்கள் உருவாகின. பழைய வரலாறு பேண வழிகோலப்பட்டது. 

கிரேக்கத்தில் அலெக்சாந்திரியா நூலகம் கி.மு.283இல் பல்லாயிரம் ஆவணச் சேகரிப்புகளால் பெருமை பெற்றிருந்தது. ஏதென்சின் பலநூறு நாடகப்பிரதிகள் அங்கிருந்தன. அரிஸ்டாட்டிலின் சொந்தச் சேர்க்கைகள் கிரேக்க இலக்கியங்கள் அனைத்தும் அந்த நூலகத்தில் பேணப்பட்டு வந்தன. நவீன பொது நூலகச் சிந்தனை இங்கு தோற்றம் பெற்றிருந்தது. பல்வேறு படையெடுப்புக்களால் இவை சேதமாக்கப்பட்ட போதும் கிரேக்க இலக்கியமோ அரிஸ்டாட்டிலின் தத்துவங்களோ மறைந்துவிடவில்லை.

தமிழகத்தில் சோழர் கால சாசன ஆவணங்களிலே அடிக்கடி இடம்பெறுகின்ற சரசுவதி பண்டாரகங்கள் என்பது அக்காலத்தில் இருந்த நூலகங்களே என்பது வரலாற்றாய்வாளர் கூற்று. இவை பின்னாளில் சரஸ்வதி மகாலயம் என்றும் குறிக்கப்பட்டு வந்துள்ளது. படையெடுப்புக்களால் நூலகங்கள் அழிந்த போதிலும் இங்கு பேணப்பட்டு வந்த தமிழ் இலக்கியங்கள், இந்து சமயத் திருமுறைகள் எவையும் அழியாமல் இன்றும் நிலை பெறுகின்றன.

ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக் காலகட்டத்தில் மே 1933இல் இடம்பெற்ற நூல் எரிப்புக் கொண்டாட்டமும் எமக்கு வரலாற்றில் சீன மன்னன் Shih Huang-ti  யின் நடவடிக்கைகளை நினைவூட்டுகின்றன. அன்று ஹிட்லரின் நாசி ஆதரவாளர்களால் நூல்கள் பலாத்காரமாகப் பறிமுதல் செய்யப்பட்டும் சேகரித்தும் எரிப்பதற்காகப் பொது இடமொன்றில் மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த அறிவியல் மற்றும் வரலாற்று நூல்களின் முன்னால் நின்று அன்றைய நூல் எரிப்பு வைபவத்தை சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி (எரித்து) வைத்துப் பேசும் போது ஜேர்மானிய கொள்கைத்திட்ட மந்திரி ஜோசப் கொயபெல்ஸ் (Joseph Goebbels) கூறிய வாசகங்கள் இவை.

 

'அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு ஜேர்மானிய வாழ்க்கை முறையே உலகெங்கும் விதந்து பேசப்படப்போகின்றது. இன்று கொழுந்து விட்டெரியப் போகும் இத்தீயின் சுவாலைகள் ஒரு பழைய சகாப்தத்தின் முடிவைத் தெரிவிப்பதுடன் புதிய சகாப்தத்தின் மலர்வுக்கும் ஒளியூட்டப் போகின்றது. வரலாறு திருத்தி எழுதப்படுகின்றது.'

தமது அதிகார வலிமையால் ஜேர்மனியர்களின் பழைய வரலாற்றை இந்த நூல் எரிப்பால் ஜோசப் கொயபெல்ஸ்ஸாலும் அவரது அதிகாரவர்க்கத்தாலும் துடைத்தெறிய முடியவில்லை. மாறாக அந்த எரிப்பின் பின் எஞ்சிய சாம்பல் தான் அவர்களது முகங்களில் கரியாய் நிலைத்தது.

சமகால நிகழ்வுகளை நாம் பார்ப்போமானால், 1981இல் எமது தாயக மண்ணில் தமிழ் இன அழிப்பைத் திட்டமிட்டவர்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள். ஈழநாடு பத்திரிகைக் கட்டிடத்தை எரித்தார்கள். அவர்கள் கண்டது என்ன? பல வருடங்களாகியும் அந்த ரணம் மாறாத நிலையில் உலகளாவிய ரீதியில் யாழ்ப்பாண நூலகம் பற்றிப் பேசப்படும் நிலை உருவாகியது. அந்த எரிப்பின் பின் விடுதலைப்போராட்டம் பற்றிய தீவிரம் அதில் அதுவரை அக்கறைப்படாதிருந்த பல புத்திஜீவிகளையும் அரசியலுக்கு அப்பாலும் கவர்ந்தது. மேலும் பல்லாயிரம் விடுதலைப் போராளிகளை போராட்டம் உள்வாங்கியது. இன அழிப்பு மற்றும் ஈழ விடுதலைப்போராட்டம் பற்றிய செய்தியை, யாழ். நூலக எரிப்பு உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றது. அன்று அங்கிருந்த ஒரே ஒரு பத்திரிகை ஈழநாடு ஏரியுண்டதன் பின் என்ன நடந்தது என்று பாருங்கள். எத்தனை பத்திரிகைகள் அங்கு பின்னர் முளைவிட்டன. இங்கு புகலிடம் வரை அல்லவா அவை படர்ந்துள்ளன. இது தான் வரலாறு. இவை எல்லாம் 1981 மே 31ம் திகதி ஊரடங்கு நள்ளிரவில் இலங்கை அரசின் காவலர்கள் உரசிய ஒரு தீக்குச்சியின் பலாபலன்.

பொஸ்னியாவில் 1890இல் கட்டப்பெற்று 155 000 அரிய நூல்கள் உள்ளிட்ட ஒன்றரை மில்லியன் நூல்களைக் கொண்டிருந்த தேசிய, பல்கலைக்கழக நூலகங்களை சேர்பியர்கள் ஆகஸ்ட் 1992 இல் மூன்று நாட்களாக முயன்று எரித்தார்கள். விளைவு? உலக அரங்கில் பொஸ்னியாவின் விடுதலைக்கான ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கிலும் இருந்து பொஸ்னிய ஆவணங்களைச் சேகரிக்கும் இயக்கத்தை ஸ்தாபித்தார்கள். அத்துடன் இலங்கை போலவே பொஸ்னிய-சேர்பிய தகராறும் உலக அரங்கில் வெளிச்சத்துக்கு வந்தது.

2000 மார்ச் 9ம் திகதி, கியுபாவின் நூலகங்களின் நண்பர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஸ்பெயின் அரசு கலாச்சார உதவித்திட்டத்தின் கீழ்; கியுபா அரசுக்கென அன்பளிப்புச் செய்த நூற்றுக்கணக்கான நூல்கள் கொண்ட பொதிகள் எரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டதாகக் குற்றஞசாட்டியுள்ளது. கியுபாவின் மோசமான தணிக்கை விதிகளை அறிந்திராத வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் அனுப்பும் நல்லெண்ண உதவிகள் எதுவும் கியுபாவின் நூலகங்களை பெரும்பாலும் அடைவதே இல்லை என்பதை இந்த அமைப்புக்கள் அறிவதில்லை. இப்படி அழிக்கப்படும் நூல்களில் அரசியல் சித்தாந்தங்களையோ, சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களையோ பிரதிபலிக்காத சாதாரண அறிவியல் நூல்களும் சிறுவர் நூல்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சல்மான் ரூஷ்டிக்கு மரண தண்டனை விதித்ததும் ஈரானிய கொமெய்னிகளின் திட்டம் பலித்ததோ என்னவோ ரூஷ;டியின் நாவல்கள் உலக அரங்கில் விறுவிறுப்பாக விலை போயின. அந்;த எழுத்தாளனை உலகின் மூலை முடுக்கெல்லாம் பிரபல்யப்படுத்தியது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியின் கதையாக முடிந்த வரலாறு இது மட்டுமல்ல.

ஜே.கே.ரோலிங் இன் சிறுவர் நாவலான ஹரிபொட்டர் (Harry Potter and the Sorcerer’s Stone ) 1999-2000 இல் சினிமாவாக்கப்பட்டு வெளிவந்ததும், சில கிறிஸ்தவர்கள் பாதிரியார் Jack D Brock என்பவரின் தலைமையில் நியு மெக்சிக்கோவின் கிறிஸ்தவ சமூக தேவாலயமான அலாமொகோர்டோ தேவாலயத்தில் திரண்டெழுந்தனர். அந்த நூல் மாந்திரீக மாயாஜாலங்களுக்கு எதிரான கிறிஸ்தவ இறையியலின் நம்பிக்கையை கேலிக்குள்ளாக்குகின்றதென்பது அவர்களது குற்றச்சாட்டு. இதன் வெளிப்பாடாக அந்த நூலின் பிரதிகளை ஆலயத்தின் உறுப்பினர்கள் எரித்து அழித்தார்கள். விளைவு ஜே.கே.ரோலிங்கை கண்டு கொள்ளாதவர்களெல்லாம் அவரது நூல்களைப்பற்றிய தேடலில் தம்மை ஈடுபடுத்தினர். விளைவு? வறுமையில் உழன்ற அவரை இன்று உலகின் பெரும் பணக்காரர்களின் வரிசையில் வரலாறு இடம்பெற வைத்துள்ளது.

நூல்களையோ நூலகங்களையோ தற்காலிகமாக புவியியல் வரையறைக்கும் அதிகார வரம்புக்கும் உள்ளே வைத்து அழிக்கலாம். ஆனால் நவீன ஊடக வளர்ச்சி மிக்க இந்நாளில் தொடர்ந்தும் எவ்வளவு காலத்துக்குத் தான் இத்தகைய அநாகரீக முறைகளை அதிகாரவர்க்கம் பின்பற்றப் போகின்றது? தாங்கள் விரும்பாத பக்கங்களை கிழித்தெடுத்து அழிப்பதன் முலம் வரலாற்றை ஒரு சிலரின் பார்வையில் இருந்து சில காலங்களுக்கு அப்பறப்படுத்தலாம். அதுவே முழு உலகின் பார்வையையும் அந்தக் கிழிந்த பக்கங்களின்பால் பின்னர் தீவிரமாகச் செலுத்த உதவும் என்பதை அதிகார வர்க்கம் உணரவில்லையா என்ன?

 

N.Selvarajah

Bibliographer

Compiler, Noolthettam: Bibliography of Sri Lankan Tamils Worldwide

Postal Address: 48 Hallwicks Road, Luton, LU2 9BH, United Kingdom

Telephone: (0044) 7817402704

E-Mail: noolthettam.ns@gmail.com

website: Noolthettam.com

 

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1542:2013-05-31-22-39-53&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


யாழ் நூலக எரிப்பு (நினைவுக் கவிதை)

ஏன் செய்தார் இந்த இழிவு தரும் செய்கை தனை
சதிகாரர் எங்களுக்குச் சகுனப் பிழை காட்ட
மூக்கை அறுத்துவிட்டு முழு வியளம் வந்தனரா?
போக்கிரிகள் ஏன் இந்தப் பொல்லாப்பைச் செய்திட்டார்?
தீக்கு இரையாகத் தேசத்தின் செல்வத்தை
ஆக்கியதால் மூடர் அடைந்த நயமென்ன?

ஆங்கிலத்தில் ஆரியத்தில் அருந்தமிழில் சிங்களத்தில்            
பாங்காய் அறிவு தந்து பயன்பட்ட நூல்களெல்லாம்
தீங்கென்ன செய்தன இத் தீயவர்க்குத் தீயிலிட?

அன்னைத் தமிழ்  மண்ணின் அறிவுக்கு அணைபோடும்
அவலை நினைத்து வெறும் உரலை இடித்தனரா?
சூரியனைக் கொள்ளியினாற் சுட்டெரிக்க முயல்கின்ற
காரியத்தை இந்தக் கடைப்பழிகள் ஏன் செய்தார்?
நாசத்தைச் செய்து நம்மை அழித்திடவா
தேசத்தின் சொத்தைச் சிதைத்தார் முழு மூடர்

உள்ளத்தில் உண்மை ஒளி பாய்ச்சம் பேரறிவு
வெள்ளத்தின் மீது வெறுப்புற்ற மூடர்களாய்
மன வழுக்கை நீக்கி மதி கூட்டும் நல்லறிவுக்
குளத்தோடு கோபித்துக் குப்பையை ஏன் போட்டார்கள்

தூசி விழுந்த கண்ணைத் துடைத்து விடமாட்டாமல்
ஊசி கொண்டு குத்தி ஒளி இழந்த பேதையராய்
தம் கண்ணில் தாமே மண் வாரிப் போட்ட இந்த
வம்பர்களைப் பார்த்து வரலாறு சிரிக்கிறது
மானுடமோ தன்றன் மதிப்பைக் குறைத்திட்ட
ஈனப் பிறவிகளை எண்ணிக் குமைகிறது
மண்ணை இழிவுசெய்ய மலம் சொரிந்து மகிழ்ந்திட்ட
பொண்ணையரைப் பார்த்திந்தப் பூமி முறைக்கிறது        (பெண்மையர் எனவும் வரலாம்)
உளங்காட்டும் கீழ்மை உணர்வைப் பறைசெய்த
வளங்காதவாகளுக்காய் வையம் சிரிக்கிறது
மூக்கையறுத்துத் தடிமலுக்குச் சிகிச்சை செய்த
மொக்குத் தனத்தையெண்ணி முழுவுலகும் அழுகிறது

சிரித்தென்ன அழுதென்ன திருவழிந்து போனபின்னர்
உரித்தாய் எமக்கிருந்த ஒப்பற்ற நூல்கள்தமை
அரித்த கறை யான்களுக்கு ஆறறிவா ஓரறிவா
யார்க்கிதனால் லாபமென்று நாய்க்குணத்தோர் கேடு செய்தார்?
அறிவை அழித்தொழிக்க அற்பர்கள் ஏன் பாடுபட்டார்

கடலை அழுக்காக்கக் காறி உமிழ்ந்தது போல்         
முடைநாற்றச் சாக்கடையை முல்லைக் கெறிந்ததுபோல்
அம்புலியைக் கையால் அணைக்க முயன்றதுபோல்

அன்னை தமிழை அறிவுச் சுடர் வீசும்
பொன்னை இழிவு செய்யப் புகையடித்துப் பார்த்தாரா?

கோயிற் சிலைக்குக் குத்துகின்ற முள்ளெடுத்துச்
சாத்தி; மகிழ்ந்திட்ட  தரங்கெட்ட செய்கையினால்
யாருக்கு நட்டம்? நாங்கள் விழுதெறிந்த
ஊருக்கா? உயிராம் தமிழுக்கா? இல்லை   
பாருக்கு,  கல்விப் பயனறிந்த யாவருக்கும்.

அன்னை தமிழீழத்தின் அறிவுக் கருவூலத்தில்
சின்ன மதியால் சேறிறைத்த  தீச்செயலை
முழுவுலகும் பார்த்து மூக்கில் விரல் வைக்கிறது!
இப்படியும் ஓர் உணர்வா? இப்படியும் ஓர் பகையா?
யார் இவர்கள்? எக் காட்டு நாய் நரிகள்?
ஏன் இவர்கட்கிந்த இழிபுத்தி-இந்தப்
பாரின் வரலாற்றில் பழி முடிக்க இத்தகைய
கோரச் செயலைக் கொடுமைதனை ஓர் நாளும்
யாரும் புரிந்ததில்லை நாகரிகம் கெட்டதில்லை


பாசிசத்திலூறிப் பழிபுரிந்த ஹிட்லரும் தன்
நாசிப் படைகளுக்கு ஆணையிட்டபோதினிலே
வீசு குண்டை லண்டனுக்கு  மியூசியத்தைத் தாக்காதே
என்றுதான் சொன்னான் ஏன் சொன்னான்?அங்குதான்!
அறிவுக் கருவூலம் அடங்கிக் கிடந்ததன்று

(1)மோடையரோ? இந்தக் கேம கண்ண யோதையரோ
தெற்காசியாவின் சிறந்ததொரு நூலகத்தை
செக்கோ சிவலிங்க மென்றோ அறியாமல்
நக்கி முகர்ந்தும் நலமெதுவும் காணாமல்
கால் தூக்கி நின்று கழிவு செய்த  பேதமையை
மறக்க முயன்றாலும் மனமதனைச் செய்திடுமா?

பாவியர்கள் எங்கள்   படிப்புச் சுரங்கத்தைக்
காவு கொண்ட இந்தக் கயமைத் தனந்தன்னை
நாவு கொண்டு தூற்ற நமக்கேது சொல் உலகில்?
சாவு வந்த பின்னும் தமிழ் மீது பற்றுடையோர்
ஆவி இவர்மீது அழுதழுது சாபமிடும்

செய்வதையும் செய்துவிட்டு பொய்மையிலே ஊறியவர்
கண் தீப் புனல் சொரியும் கலைவாணித் தாயவளாம்
(2)வெண்தாமரையாளை வேதனைக்குள் ஆழ்த்திவிட்டு
புண்தீவிரம் குறையப் புனுகு தடவுகிறார்
தயக்கமெதுவுமின்றித் தமிழை அழித்தவர்கள்
இயக்கம் அமைத்தெமக்காய் என்ன செய்யப் போகின்றார்?
கல்வி தனை மதியாக் கயவர் எமக்காகக்
கல்சேர்த்து நூல் சேர்த்துக் காட்டுகின்றார் பம்மாத்து
ஆடைதனைத் தூக்கி  அவர்கள் வெட்கம் போக்குதற்காய்
முகம் மறைத்து நிற்கின்றார் முழுவுலகும் சிரிக்கிறது.

வார்த்தையினாற் சீறி வசைபாடி நின்றாலும்
ஆர்த் தெழுந்து இந்த அறிவிலிகள் தோற்றோட
போர்த்திறன்கள் காட்டிப் புயலாயடித்தாலும்

கழுதையறியாது கற்பூர வாசனையை
கல்வி அதற்கு வெறும் காகிதம் தான்  தின்று விடும்
அறிவை  அசைபோடும், ஆர்ப்பரித்துக் கூச்சலிடும்.

ஆதலினால் என்றன் அருமை உறவுகளே!
தீதே இயற்கையதாய்ச் செயல்புரிவோரால் உற்ற
வேதனையைத் தூக்கி வீசியெறிந்திடுவோம்.
பாதகர்கள் செய்யும் பழிக்கு மருந்தாக
கல்வியிலே ஊறிக் கரைதேர்ந்து நாமுயர்வோம்
இல்லங்கள் தோறும் இணையில்லா நூல்கள் பல
நாம் சேர்த்து எங்கள் நாட்டிற்காய்வைத்திடுவோம்

காய்ந்து வெடித்த கழித்தரையில் நீர் சேர
ஓய்ந்து விடாது உடன் முகிழ்த்துப் பூச்சொரியும்
ஆம்பர், ஒட்டி. அல்லி, அரவிந்தமாய் மலர்வோம்.
சாம்பரிலே நின்று பீனிக்ஸ் பறவைகளாய்
மீண்டும் எழுவோம் விரைந்துயர்வோம், இஃதுறுதி.

முற்றும்

1.சிங்ஹலயா மோடையா(மடையர்) காம கண்ண யோதையா (சோற்றுத் துருத்திகள்) என்பது சிங்களவர் தமக்கே கூறிக் கொள்ளும் பழமொழி.
2. இது இலங்கையரசின் வெண்தாமரை இயக்கம் பற்றியது -- அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.