Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும்வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன் ஆகும்அப்போது அங்குஇலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாதுகிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களேஎங்கிருந்துகுடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளதுகிரீட் தீவு என்பவர் பலர்எத்ருஸ்கன் மொழியோஇந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் தொடர்பற்றதா இருந்ததுஎனினும்திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.

 

 
ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?

(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள்குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர்எனவேதான்,திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!

(2) மங்கோலியர்சீனர்மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள்அரபிய மற்றும் சிலாவியர்ரோமானியர்ஜெர்மானியர்மலேசியபாலினேசியர்இந்தோ ஆரியர்தென் அமெரிக்கர்ஆப்பிரிக்க மக்கள்ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள்பிரிவினர் யாவருமே திருவிடரேகடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்குவெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே!

(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர்அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியாமொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர்ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தேவடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும்எனவே திருவிட மொழியாம் தமிழ்உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது.
 
தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம் ஏன்உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசுஉலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதிகூறுகிறார்பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர்எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறதுஇதனால்தான்எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின்இத்தகைய வீச்சிற்கும்வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?
 
இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும்இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும்உச்சரிக்கக் கடினமானசொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர்மேலும் மொழி என்பதுபாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர்சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒருதடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர்எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.
 
தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிரஒரு சிறு எல்லைக்குள்நிலைபெறவில்லை. கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பானசூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம்என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.
 
தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்:
 
1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன்அதிலிருந்து வட்ட எழுத்துகோட்டு எழுத்துநகர்ப்புற நகரிஎழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன்படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும்அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2. சங்கங்கள் அமைத்துமொழியை வளர்த்தவனும் தமிழன்தான்ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3. சாதிசமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லைஇல்லவே இல்லைஆனால் உரோமபுரி,கிரேக்கம்சீனம்எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும்மந்திரதந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4. தத்துவங்கள்வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தனதமிழன் இவற்றைக் காப்பாற்றாததால்பிறர்பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன்திருக்குறளைக்காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன்அதன் தொடர்ச்சியாக லோத்தல்முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன்இம்மட்டோபத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர்தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும்உருக்குசெய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன்ரோமாபுரி வீதிகளிலும்கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும்,வாளும்ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8. மருத்துவத் துறையிலும்அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர்மருத்துவ சேவைக்குச் சென்றனர்.முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர்இயற்கை வளமும்மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9. கல்வி கற்பதிலும்தமிழர்கள் திகழ்ந்தனர்சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள்கொரிய மொழிக்கு தமிழை ஒட்டியஎழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள்சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள்சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும்தமிழர்களே.

11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலைஎட்டிப் பார்த்தனர்2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.

12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லைதீவில்லைஇட்சிங் என்ற சீனத்துறவி கி.பிஆம் நூற்றாண்டினர்இவரது கூற்றுப்படி,சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளாஇருந்தன.

13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லைதீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல்.உலக நதிகள்மலைகள்கடல்கள்ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான்மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.

14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான்அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான்சாவகம் சென்றுபவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான்இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்றுபட்டிற்குத் தங்கம் பெற்றான்தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதைஅவனியில் அவன் கல்வியையும்,சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன்வாளெடுக்காமலும்வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும்விதைத்தவன்இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமேஅற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல்இருப்பதுவும் பிறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.

15. அறநூலகத்திற்குப் பின்சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான்புத்தசமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான்இன்று உலகெங்கும் இருப்பது தமிழன்பரப்பிய புத்த மகாயானமே (பெருவழிசீனாவில்சப்பானில்கொரியாவில்இந்தோ சீனநாடுகளில்பர்மாவில்இருப்பனமகாயானமேபுத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்அழிந்துவிட்டது.

16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியதுஇதன்எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டதுஇசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால்கி.பி1400 க்குப் பின்னரேமதநெறியாகியது. சோமபானத்தையும்சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று,சோமாதமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தைபேதமையின் பிதற்றலைதமிழ் நாகரிகம்எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லைஇசுலாம்கிறித்தவம் படைத்த தீவிரவாதங்களையும் உலகப் போர்களையும் தமிழ் நாகரிகம்ஏற்கவே இல்லை.

17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியதுதமிழ் நாகரிகமேதோலாடை கட்டியும்மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்துநாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம்இல்லாத கடவுளான சோமன்சுராஉசாஇந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர்கைவிட்டனர்தமிழரின் சமயங்களை சிவன்சக்திமயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமேவட இந்தியாவில்அம்மணமாகத் திரிந்து பனியிலும்குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.
 
18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளனஇதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடுதமிழகத்தில் உள்ளனஇதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளனநன்றி என்பதற்குஅர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள்தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும்சகிக்கத்தான் வேண்டுமாசிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன்கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்றுஉள்ளிருந்துகொட்டம் அடிப்பது மட்டுமின்றிதமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வதுதமிழ் நாகரிகத்தையே அவமதிப்பதுஅல்லவாகைநீட்டிப் பிச்சை எடுத்த பரம்பரைகொடையாளித் தமிழனுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தேன் - என்று கூறுவதுஎத்தனை பெரிய பொய்.
 
19. ஆரியக் கூட்டத்தினரை நாம் தாம் நாகரிகப் படுத்தினோம்ஆனால் இந்த நெறியற்ற கூட்டம்வெள்ளைத் துரைமாரை ஏமாற்றி,வரலாற்றுப் புரட்டாகதமிழரை - இந்தியரை சமஸ்கிருதமாக்கியுள்ளோம் - என்று கூறுவது பொய்மையிலும் கடைந்தெடுத்தபொய்மையாகும்இக்கயவரை இன்னும் அனுமதிப்பது தமிழ் நாகரிகம் அன்றோ?
 
20. தமிழகம் தென்கோடியில் உள்ளதுஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில்கொடியேற்றியவர் தமிழரேநேபால்நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்திமறைக்கப்பட்ட பலநூறுதமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும்சோழர் கணவாய்சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளனமலேசியாவில்கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிறுவியுள்ளதுஎத்தனை வையாபுரியர்களும்,அறவாணர்களும்எஸ்.ஆர்.ராவ்களும்மாக்கமுல்லார்களும் தமிழ் நாகரிகச் சிறப்பை ஒழிக்க முற்பட்டாலும் இயற்கை நமக்குஎன்றென்றும் கைகொடுக்கிறதே?
 
-    திரு. சாத்தூர் சேகரன்.
 
நன்றி : இலக்கிய முரசு
 
(தொடரும்...)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அதென்ன திருவிட மொழி?   அதென்ன திருவிடர்கள்? குமரிக்கண்டத்தில் இருந்தவர்கள் அனவரும் தமிழர்களே. திருவிடருமில்லை திருவிட மொழியுமில்லை. இதுவரை தமிழர்கள் திராவிடத்தால் இழந்தது போதும் இனிமேல் இழக்க ஒன்றுமில்லை. இன்று முதல் நாம் அனவரும் தமிழர்களாயிருப்போம். திருவிடரும் வேண்டாம் திராவிடரும் வேண்டாம்.

 

"திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர்". இல்லை இல்லை தமிழர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். ஐயா திரு. சாத்தூர் சேகரன். மேலும் குழப்பாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.