Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் ஒருபகுதி மக்களை பலிகொண்டது எஞ்சிய மக்களை லீசிங் கம்பனிகள் பலிகொள்கின்றன - குளோபல் தமிழ் செய்தியாளர்

Featured Replies

'யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்'

 

 

 

யுத்தம் ஒருபகுதி மக்களை பலிகொண்டது எஞ்சிய மக்களை லீசிங் கம்பனிகள் பலிகொள்கின்றன - குளோபல் தமிழ் செய்தியாளர்

 

 

வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இப்பொழுதுலீசிங் கம்பனிகளும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டுவியாபாரத்தில் இறங்கியுள்ளன. போரில் எல்லாவற்றையும் இழந்தமக்களிடம் இருக்கும் கொஞ்சப் பணத்தையும் காணிஉறுதிகளையும் இந்தநிறுவனங்கள் சூறையாடுவதில் கடும் முனைப்போடுசெயற்படுகின்றன. நாட்டில் வேறெங்கும் இல்லாதகம்பனிகள் எல்லாம் ஒரே இடத்தில் குவிந்துவிட்டன. 

போர் முடிந்தபின்னர் லீசிங் கம்பனிஒன்றில் வெட்டுமெசின் வாங்கியதாகவும் அதனால் பட்டகடனை இன்னமும் அடைக்கமுடியாமல் உள்ளதாககிளிநொச்சி இரண்டாம் வாய்க்காலைச் சேர்ந்தவிவசாயி இராசரத்தினம் குறிப்பிடுகின்றார். காநிலைமாற்றங்களேவிவசாயத்தில் ஏற்பட்டபின்னடைவுக்குகுகாரணம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 

லீசிங் கம்பனிகள் எந்தப் பொருட்களை வேண்டுமானாலும் தவணை முறைகட்டண அடிப்படையில் கொடுக்கத் தயாராகின்றன. போர் நடந்தகாரணத்தினால் நீண்டகாலமாக வன்னிக்கு வராதிருந்த பொருட்கள் எல்லாம் இப்பொழுது கொண்டுவரப்படுகின்றது. மின்விசிறி, தொலைக்காட்சி, ஆட்டோ, மெசின் என்று பலவிதமான பொருட்கள் வன்னிச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

விடுதலைப் புலிகள் காலத்தில் பல்வேறு தொழில்களை செய்தவர்களும் இப்பொழுது தொழில் ஏதுமின்றிலீசிங்கில் ஆட்டோவாங்கி ஓடுவது போன்ற வேலைகளை செய்கின்றனர். மாதம் தோறும் லீசிங் கம்பனிகளுக்கு பணம் செலுத்த வேண்டி இருப்பதால் அதற்காகவே உழைக்க வேண்டியுள்ளது. 

போரினால் எல்லாவற்றையும் இழந்தபின்னர் மீள்குடியேறிய பொழுதும் சொந்தமாகஎதையும் செய்ய முடியாத நிலமை காணப்படுவதாகச் சொல்லுகிறார் அக்கரானைச் சேர்ந்த நகுலேஸ்வரன். மீள்குடியேறியவுடன் வாங்கிய ஆட்டோவுக்காக இன்னமும் எண்பதாயிரம் ரூபாவை செலுத்தவேண்டி இpருப்பதாகவும் சொல்லுகிறார். 

கவர்ச்சிகரமான அலுவலகங்களுடன் கவர்ச்சிகரமான வாசகங்களுடனும் லீசிங் கம்பனிகள் புகுந்திருக்கின்றன. சாதாரணமாகவே ஒருமின் விசிறியைக் கொடுத்தாவது மக்களை கடனாளியாக்குவதில் கடுமையாக செயற்படுகின்றன. ஐயாயிரம் ரூபாவில் வாங்க கூடிய மின் விசிறி ஒன்றைஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. 

மீள் குடியேற்றத்தின் பொழுது தற்காலிக வீடுஒன்று அமைத்துத் தரப்பட்டதாகச் சொல்லும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தேவிகா என்பவர் தகரவீட்டிற்குள் இருக்கமுடியாத நிலையில் மின்விசிறி ஒன்றைவாங்கியதாகச் சொல்லுகிறார். ஒரேதடவையில் பணத்தை செலுத்தி வாங்கமுடியாத காரணத்தினால் இப்படி லீசிங்கில் மின்விசிறியை வாங்கியுள்ளார். 

போரில் தன்னுடைய முழுச் சொத்துக்களை இழந்ததாகச் சொல்லும் முரசுமோட்டையைச் சேர்ந்த செல்வரத்தினம் தன்னுடைய காணியின் உறுதியை கொடுத்தே லீசிஙகில் வெட்டுமெசின் உட்பட விவசாய உபகரணங்களை வாங்கியதாக சொல்லுகிறார். இப்பொழுது காணி உறுதியை மீட்கமுடியாத நிலையில் தான் இருப்பதாவும் குறிப்பிடுகின்றார். 

வெட்டுமெசின்களின் வருகையாமல் பெருமளவான கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கையால் அரிவுவெட்டும் வேலை இல்லாமல் போயுள்ளது. உழவு, விதைப்பு, அறுப்பு என்றுஎல்லாமே இயந்திரங்களால் நடப்பதால் பெருமளவான கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

லீசிங் கம்பனிகளிலும் இன்சுரன்ஸ் கம்பனிகளிலும் வேலைக்குச் சேரும் வன்னி இளைஞர்களின் நிலமையும் மிகமோசமாக உள்ளது. கையில் காசில்லாத மக்களை சென்றுலீசிங்கில் பொருட்களைவிற்கவும் இன்சூரன்ஸ் பொலிசிபோடவும் அலைவதுமிகப்பெரும் போராட்மாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். 

உரிய தவனையில் பணம் செலுத்தப்படாத நிலையில் பலவாகனங்கள் காவல்துறையின் உதவியுடன் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகின்றன. கிளிநொச்சியில் சேவியர்கடைச் சந்தியில் உள்ள ஐஸ் கிரீம் வண்டி ஒன்று பயனாளியிடமிருந்து இழுத்துப் பறித்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக்கியது. 

அண்மையில் இவ்வாறுபறித்துச் செல்லப்பட்ட வாகனங்களை மீண்டும் அறிவிக்கப்பட்ட தவணையில் பணம் செலுத்தாத நிலையில் குறித்தலீசிங் கம்பனி கொழும்பில் உள்ள தலமையச் செயலகத்திற்கு கொண்டு சென்றபொழுது ஆட்டோஒன்றிற்கு பெற்றோல் முடிந்துள்ளது. உடனே ஆட்டோவில் இருந்த மீடியாபிலேயர் ஒன்றை எடுத்து விற்று விட்டு பெற்றொல் நிரப்பியுள்ளனர். 

வன்னிமற்றும் யாழ்ப்பாணமக்களின் உழைப்பு திட்டமிட்டபடி சுறண்டப்படுவதுடன் மக்கள் கடனாளிகளாக்கப்பட்டு உள்ளனர். அடுத்த தவனைக்குஎப்படிப் பணம் கட்டுவது என்ற போராட்டத்திற்குமுகம் கொடுத்தநிலையில் மக்களின் வாழ்க்கையுள்ளது.  

குளோபல் தமிழ் செய்தியாளர்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92914/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.