Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை புனானையில் சிங்கள குடியேற்றம்- தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை -

Featured Replies

yogeswaran-136x150.jpgமட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புணாணை கிழக்கில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தை உடனடியாக நிறுத்த உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அனுப்பிவைத்துள்ள கடிதம் வருமாறு

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தின் புணாணை கிழக்கு பகுதியில் உள்ள புணாணை கிராமத்தில் அங்குள்ள இராணுவத்தின் உதவியுடனும், அங்கு விகாரை அமைந்துள்ள பிக்குவின் ஏற்பாட்டிலும் சிங்கள குடும்பங்கள் பல திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளன.

புணாணையில் 1988க்கு முன் ஐந்து சிங்கள குடும்பங்களே இருந்தது. இவர்கள் யுத்தப் பயத்தினால் தாங்களாகவே இடம்பெயர்ந்து கடவத்தை என்னும் அருகில் உள்ள சிங்கள பகுதிக்கு சென்று காணி, வீடு என்பவற்றை அரசாங்கத்திலிருந்து பெற்றதுடன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக அரச நிவாரணமும் பெற்று வாழ்கின்றனர். இவர்களில் இரு குடும்பம் காணிணை விற்று விட்டு சென்றுள்ளது.

இவ்வேளை கடந்த காலங்களில் சிறு புத்தர் விகாரை இருந்ததாக கூறி ஒரு பிக்கு இங்கு பிரமாண்டமான ஒரு விகாரையை விநாயகர் ஆலய முன்பாக அமைத்துள்ளதுடன் தானும் குடியாக இங்கு அமர்ந்துள்ளார். இவரின் திட்டமிட்ட செயற்பாடாக இராணுவ துணையுடன் இங்கு சிங்கள குடியேற்றம் இடம்பெறுகின்றது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தங்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு புணாணை கிழக்கில் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழைச்சேனை உட்பட்ட கிராமங்களில் வாழும் மக்களை மீள குடியமர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இவர்களுக்கான வீடுகளை இந்திய தூதரகம் வழங்க வேண்டுமென்று கோரியுள்ளோம். அது சார்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வேளை இம்மக்கள் இப்பகுதியில் குடியேறுவதில் இங்கு இராணுவ முகாம் இருப்பது பாரிய பிரச்சனையாக உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு மாற்று இனத்தை சேர்ந்தோர் தங்களது பகுதியில் பிழையான நடவடிக்கையின் நிமிர்த்தம் உலாவியதையும், இதை தடுக்க தாங்கள் கடும் கஷ்ரப்பட்டதையும் குறிப்பிட்டனர்.

எனவே தங்களது பாதுகாப்பு கருதி பொலிஸ் பகுதியினரின் பாதுகாப்பு அரன் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கோருகின்றனர். ஆனால் இராணுவம் அங்கு முகாம் இடுவதை எதிர்க்கின்றனர்.

கடந்த 1990ம் ஆண்டளவில் புணாணை மயிலந்தன்னை கிராமத்தில் இராணுவத்தினரால் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் கடும் காயமடைந்ததாகவும், இதனால் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக அகதியாக இடம்பெயர்ந்து வாழ்ந்து சிலர் தற்போது குடியேறியுள்ளதாகவும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சார்பாக 19 வருடமாக நீதி மன்றில் சந்தேக நபராக இராணுவத்தினர் சிலரை நிறுத்தி வழக்காடியும், யூரிமாரின் தீர்ப்பால் தங்களுக்கு இது பாதகமாக அமைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே இராணுவம் தங்களை மேலும் பழிவாங்கும் என்பதனால் தாங்கள் இதுவரை குடியேற பயப்படுவதாகவும், இராணுவத்தின் முகாம் இங்கு அமைவதை தடுக்குமாறும் கோருகின்றனர். இவ்விடயமாகவும் கவனம் செலுத்தி நியாயமான முடிவை மக்களுக்கு வழங்க முன்வருமாறும், இராணுவ முகாமை இங்கிருந்து வெளியேற்றுவதுடன், இடம்பெயர்ந்த மக்கள் குடியேற உதவுமாறும், இது சார்பான தங்களது நடவடிக்கையை தெரியப்படுத்தி உதவுமாறும் அன்பாக வேண்டுகின்றேன்’ என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் பிரதிகள் வாகரை பிரதேச செயலாளர், வாகரை பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

- See more at: http://www.thinakkathir.com/?p=50786#sthash.Gap1FqcM.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.