Jump to content

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?
”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி)

என்றும்,

”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

‘நான் கன்னடியன்’ என்று சொல்லிக்கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்ப் புலவர்களை விமர்சித்த விமர்சனங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

தமிழ் புலவர்களைப் பற்றிய விமர்சனம்:

‘தமிழும் தமிழுரும்’ என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:

”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன்.

இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

இதுதான் முக்கியத் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய பார்வை ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. தொல்காப்பியரும், கம்பனும் துரோகிகள்! சரியான பட்டம்!

தமிழுக்காக தமிழ் இலக்கியத்தை படைத்த இவர்கள் தமிழ்த் துரோகி என்றால் அதே தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் துரோகிதானே! ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழை எவ்வாறெல்லாம் விமர்சித்தார் தெரியுமா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி:

”தமிழும் தமிழரும்” என்ற நூலிலே, ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.”

”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.”

(அதாவது தமிழ் படித்ததால்தான் பகுத்தறிவு இல்லாமல் போய்விட்டார்களாம். உலகம் அறியாதவர்களாகி விட்டார்களாம். நூலாசிரியர்.)

”தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?”

”புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?”

”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?”

”இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.”

(தமிழ்ப்பற்றால் இந்தியை எதிர்க்கவில்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்துள்ளார் – நூலாசிரியர்.)

”தமிழ் காட்டுமிராண்டிக் காலத்துமொழி”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”தமிழ் ஒரு நியூசென்சு, தமிழ்ப் புலவர்கள் (யாவரும்) குமுக எதிரிகள்”
(நூல்: தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம்)

”தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?”

”இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்கள்தானே.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

இதுதான் தமிழைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கணிப்பு. இன்று தமிழுக்காக போராடுகின்ற தமிழறிஞர்கள் முதலில் எதிர்க்க வேண்டியவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(இதிலே இன்னொரு விஷயம் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடராகவே இருந்தது, பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுமேல் சிறிது ஐயம் கொள்ளவைக்கிறது.)

தமிழைப் பற்றி இவ்வளவு தரக்குறைவுடன் கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழியைப் பற்றி பெருமையாக கூறிய கருத்துக்களைப் பற்றி பார்ப்போம்.

- தொடரும்

சில குறிப்புகள்:

01. ஈ.வே. ராமசாமி நாயக்கர் கன்னடர்…

பெரியார் ஈ.வே.ரா நாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம் அவரது வீட்டு மொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டார்.

டாக்டர் ம.பொ. சிவஞானம்
நூல்: தமிழகத்தில் பிறமொழியினர்

02. கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதியா?

சிலர் இலக்கிய ஆராய்ச்சி முறைக்கு மாறாகக் குறுக்கு வழியிலே புகுந்து கம்பனைப் பற்றி ஏதேதோ எழுதுகின்றனர். பேசுகின்றனர். அரசியல் கொள்கை, இன வெறுப்பு, பண்பாட்டு வெறுப்பு இவைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கம்பன் மீது காய்ந்து விழுகின்றனர்.

‘கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதி: தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி. தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. நாட்டுப்பற்றில்லாதவன். மொழிப்பற்றில்லாதவன். கலாசாரப் பற்றில்லாதவன்’ என்றெல்லாம் ஒரு சிலர் ஓங்கிப் பேசுகின்றனர். இது உண்மைக்கு மாறான பேச்சென்பதே கம்பனை நடுநிலையிலிருந்து கற்றவர்களின் கருத்து.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
நூல்: கம்பன் கண்ட தமிழகம்.

03. கம்பன் காவியத்தைக் கொளுத்தலாமா?

கம்பன் மீது இன்று சிலர் காய்ந்து விழுகின்றனர். தமிழின் சிறப்பைத் தரணியிலே விளக்கி நிற்கும் இக்காவியத்தை கொளுத்த வேண்டும் என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். கம்பன் காவியத்தைக் கையினால் தொடக்கூடாது என்றும் பேசுகின்றனர்.

சிறந்த காவியங்கள் – உயர்ந்த இலக்கியங்கள் – எந்தக் காலத்திலும் மக்கள் உள்ளத்திலிருந்து ஓடிப் போய்விடமாட்டா. அவைகளை அழிக்க முயன்றவர்கள் யாராயினும் வெற்றி காணமாட்டார்கள். இந்த உண்மையை நாம் தமிழ் இலக்கிய வரலாற்றிலே காணலாம்.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
நூல்: கம்பன் கண்ட தமிழகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ இது சாதிய வசவு சொல் என அறிந்தே பயன்படுத்தி உள்ளீர்கள். மலையாளி என்பது இன அடையாளம். வசவு அல்ல. நீங்கள் அவரை என்னவாக அழைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது என் தொழில் அல்ல. ஆனால் ஒரு முற்போக்கான பொது இடத்தில் ஒரு தாழ்தப்பட்ட சாதியினை சேர்ந்தவரை அவர் சாதி சொல்லி அழைத்தால் கூட பரவாயில்லை, சாதிய வசை சொல்லை, அது வசை என தெரிந்தே நீங்கள் பயன்படுத்தியதைதான் சுட்டி காட்டினேன். இதில் கயவன் கருணாநிதியை நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு பொருட்டில்லை. கருணாநிதியோ, மகிந்தவோ சாதிய வசவால் அவர்கள் அழைக்கப்படும் போது அதை சுட்டி காட்டுகிறேன் அவ்வளவே. அப்பட்டமான சாதிய கருத்து இது. என்னை கடுப்பேத்துவதாக நினைத்து உங்கள் உண்மை முகத்தை நீங்கள் உலகறிய செய்கிறீர்கள்.
    • என்ன சொன்னாலும் சின்னமேளச்சாதி என்ற அடையாளம் அவரை விட்டு போகாது. அதாவது பெத்த பெத்த சாதிகளை விழுங்கி புது சாதியை உருவாக்கி தன்னை பெத்த சாட் (பிக் ஷாட்) ஆக காட்டினாலும் போகாது. வேணும்னா உங்களுக்காக சின்னமேளச்சாதியை சேர்ந்த ,சின்னமேள குலத்தொழில் செய்யாத நல்ல ஓங்கோல் சின்னமேளம் என்று அழைக்கட்டுமா ...?   நான் நினைக்கிறேன் சின்னமேள ஆட்டம்தான் பிற்காலத்தில் ரெக்கார்ட் டான்ஸாக பரிணமித்திருக்க வேண்டும். இன்றும் திராவிட மேடைகளில் உ.பிக்களை குஷிப்படுத்த ஆடப்படுகிறது. சாதி கனெக்ஷன் உண்மை தான் போல  
    • யாரு @அக்னியஷ்த்ரா வா? பிரதேசவாதம் தலைகேறி, டீ ஆர் ஓ பெண்ணை வெலிகந்தையில் வைத்து வன்புணர்ந்து, டம்ப் பண்ணியவருக்கு ஆதரவாக வாக்கு போட என 2020 இல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு டிக்கெட் எடுத்து போனேன், என்னை சூழ உள்ளவரையும் அவருக்கே வாக்கு போடுமாறு கேட்கிறேன் என யாழில் எழுதிய அண்ணல் அவர். அதே போல் புலம்பெயர் தமிழருக்கும், வெள்ளையினதவருக்கும் பிறந்த பிள்ளைகளை “செம்படைகள்” என யாழில் எழுதியவரும் இவரே. சாதிய எண்ணம், பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் எல்லாம் அண்ணன் தம்பிகள்தான். கன்னங்கர கொடுத்த இலவச கல்வி, தகமைகளை கொடுக்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்பை, செல்வத்தை கொடுக்கும், மனத்தின் அழுக்கை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். உண்மைக்கு நன்றி.
    • இது மிக பெரும் ஒன்றிணைந்த கல்வி சமூகத்தை கட்டியமைக்கும் திட்டம் , எவ்வளவு தூரம் சாத்தியமாக்குவீர்களோ தெரியாது. ஆனால் முடிந்தவரை  இப்போதிலிருந்தே படிப்படியாக ஆங்கில கல்வி முறைமையை இலங்கை முழுவதும் அறிமுகபடுத்துங்கள், அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக இருக்கட்டும். சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் இளம் தலைமுறையாவது மேற்குலக சிறுவர்கள்போல் தமக்குள்ளேயே ஒரு நட்புறவை உருவாக்கி  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாக்குக்காக வன்மம் வளர்க்கும் அரசியலையும் அரசியல் வாதிகளையும் ஓரளவாவது ஓரம் கட்டலாம். ஆக குறைந்தது உயர்தரம்வரை படித்தால் கூட ஆங்கில அறிவின்மூலம் இணையவழி கல்வியின் மூலமாகவாவது சர்வதேச கல்விதரத்தை  அடையலாம் வேலை வாய்ப்புகள் பெறலாம். சொந்த மொழியில் பாடத்திட்டங்களை கற்றுவிட்டு பல்கலைகழகம் கிடைக்கவில்லையென்றால் அப்பன் தொழிலையோ அல்லது அகப்பட்ட தொழிலையோ செய்துகொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடியபடி  மறுபடியும் படிக்காத ஒரு சமூகம் போலவே வறுமையுடன் இளைஞர்களின் எதிர்காலம் தொடரும். இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.
    • நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறதே, சின்ன மேளம் என ஒருவரை அடையாளம் காண்பது,  ஒருவரின் சாதியை, அதுவும் சாதி உட்பிரிவை கொண்டு அவரினை ஆர் என அடையாளம் கண்டு அதன் படி அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பது. அதாவது பெரிய மேளம் என்றால் ஒரு மரியாதை, சின்ன மேளம் என்றால் இன்னொரு மரியாதை. இதைத்தான் சா-தீய எண்ணம் என்பார்கள். இங்கே கருணாநிதியை, ரெண்டு பெண்டாட்டி காரன் என பழித்திருக்கலாம். தமிழின கொலையாளி, துரோகி என பழித்திருக்கலாம். இன்னும் எவ்வளவோ இருக்கு அந்த ஈனப்பிறவியை பழிக்க. ஆனால் நீங்கள் பழிக்க எடுத்து கொண்ட சொல் சின்ன மேளம். எப்பொருள் யார் யார் வாயும் கேட்கலாம் ஆனால் உள்ள கிடக்கை அவர் அவர் எழுத்தில் வெளிவந்து விடும்.  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.