Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளுமையை வளர்த்து வெல்வது எவ்வாறு? முன்னேற விரும்புபவர்களுக்கு இது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிட லாம்” என்று நம்புகிறார்கள்.

“நான் சொல்லிகிட்டே இருக் கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான் சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!”

‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் சுயபுத்தி வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், வாழ்க்கையில் முன்னேற முடியாது..’

இப்படிப்பட்ட விமர்சனங்களெல் லாம் ஒருவரைப்பார்த்து மற்ற வர் சொல்கிறார் என்றால் கேட்ப வர் கவனக்குறைவு உள்ளவர் என்று அர்த்தம் கொள்ளலாம்.

இந்தச் சூழல்களை மாற்றி ‘பெர்ச னாலிட்டி’யை வளர்த்துக் கொள் வது தற்கான எளிய வழி முறை கள் இருக்கின்றன. அவ்வறுள் சில வற்றை காண்போம்.

 

1. உடல் அசைவுகள் (Body Language) கவனியுங்கள்

ஒருவர் பேசும்போது அவருடைய முக பாவனை (Facial Expression) எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவர் சிரித்துக் கொண்டு பேசுகிறாரா? கோபத்தில் பேசுகி றாரா? நிதானமாக பேசுகிறாரா? எரிச்சலு டன் பேசுகிறாரா? அன்புடன் பேசுகிறாரா? என்பதை அவரது முகத்தை பார்த்தே தெரிந்து கொள் ளலாம்.

‘Face is the Index of mind’ என்றது ஆங்கி லத்தில் பிரபலமான கருத்தாகும். அதாவ து, ‘ஒரு மனிதனின் முகம், அவரது மனதின் பிரதிபலிப்பாக அமை ந்துவிடும். இதன்மூலம் நம் மனதின் தன்மையை மற்றவர்கள் எளி தில் அறிந்துகொள்வார்கள்’ என்பது அதன் உட்கருத்தாகும்.

‘அவன் என்னைப் பார்த்து ‘ஏய்’ என்றுதான் சொன்னான். அவன் அந்த வார்த்தையை சொல்லும் போது அவன் முகமே சரியில் லை’ என்று சிலர் வருத்தப்படு வதை இன்றும் காணலாம்.

இங்கு, வார்த்தைகளுக்கு முக்கி யத்துவம் கொடுப்பதற்கு பதில் முக அசைவுகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு விளங்கும். சில நேரங்களில் வார்த்தைகளால் விவ ரிக்க வந்த கருத்தைவிட, ஒருவரது உடல் அசைவுகள் கொடுக்கும் கருத்துக்கள் விரிவான விளக்கம் அதிகமாகவே இருக்கும்.

முக பாவணையைப்போலவே ஒரு வர் நிற்கும் விதம், நடக்கும் விதம், வார்த்தைகளை உபயோகிக்கும் முறை, கை, கால், கண் அசைவுகள் ஆகிய உடலிலுள்ள பாகங்களின் அசைவுகளும் தகவல்களுக்கு வெ வ்வேறு அர்த்தங்களை தெரிவிக் கின்றன.

எனவே ‘உடல் அசைவுகள்’ பற்றி தெரிந்துகொண்டு, கேட்கும் போதே தகவல்களின் அர்தத்ததை புரி ந்துகொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்டு அர்த்தம் கொண்டால் முழுமை யான அர்தத்தை புரிந்து கொள்ள இய லாது. அதேநேரத்தில் ஒருவரது உடல் அசைவுகளையும், கருத்தில் கொண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் கொள்ளு ம்போது அந்தத் தகவலை முழுமை யாக புரிந்துகொள்ள இயலும். சில வே ளைகளில் மவுனங்களே வார்த்தை களாக மாறி பதில்களைத் தெரிவிக் கும்.

‘நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே நீ சினிமாவுக்கு ஒருகிறாயா’ என்று கேட்டான் நண்பன். ராஜேஷ் அமைதியாக நின்றான்.

‘மவுனம் சம்மதத்திற்கு அறி குறி. ராஜேஷ் ‘எஸ்’ சொல்லி விட்டான்’ என்றுசொன்னான் நண்பன்.

இப்படி சொல்லாத வார்த்தை களுக்கு கூட அர்த்தம் கண்டு கொள் பவர்கள் உண்டு.

ஒருவர் ஒரு தகவலைத் தரும் போது சுவாரஸ்யம் இல்லாமல் அந்தத் தகவலை கேட்பதை தவிர் க்க வேண்டும்.

எனவே பெர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்ள விரும்புவர் கள் உடல் அசைவுகளில் அதிக கவனம் செலுத்தி தகவல்க ளைப் பெறுவது நல்லது.

 

2. மனதை ஒருமுகப்படுத்த பயிற்சி தேவை

மனம் எதைப் பற்றி அதிக ஆர் வம் செலுத்துகிறதோ அதைப் பற்றி தகவல்களை அதிகம் தெரிந்துகொள்வதற்கு பலரும் கவனம் செலுத்துவார்கள். அதனை கூர்ந்து கவனிப்பார்கள். ஒருதவகைல் கூர்ந்து கவனிப்பதற்கு அடிப்படைத்தேவையாக அமைவது ‘மன தை ஒருமுகப்படுத்துதல்’ (Concentration of mind)ஆகும். இதற்கு ஒலிகள் (Sounds) மனதில் ஏற் படுத்தும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒலியின் தன்மைக்கு ஏற்ப கூர்ந்து கவனி க்கும் தன்மை உருவாகும்.

 

வீட்டில் முன் அறையில் பல ரோடு அரட்டை அடிக்கும் ஒலி அதிகமாக இருந்தாலும், தனது குழந்தையின் அழுகைச் சத்தம் தாய்க்கு மட்டும் தனியாக கேட் டுவிடுகிறது அல்லவா?

 

வகுப்பறையில் ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நட்டும்போதுகூட சில மாணவர்கள் அதனை கவனிப்பதற்கு தயாராக இருப்பதில் லை. அந்த ஆசிரியர் மீதுள்ள கோபம், அந்த ஆசிரயருக்கு ஒன்றும் தெரியாது என்ற எண்ணம், அவருக்கு ரசிக்கும்படி பேசத் தெரியாது என்னும் கருத்து, இந் தப் பாடம் அறுவை என்கின்ற சிந்த னை – போன்றவையெல்லாம் மாணவ – மாணவிகள் பாடத்தை கவனமாக கேட் பதற்கு தடையாக அமைந்து விடுகிறது. இங்கு மாணவர்கள் கூர்ந்து கவனிப்பத ற்கு தடையாக இருப்பது அவர்களது மன நிலைதான் என்பதை புரிந்து கொ ண்டு நல்ல சிந்தனையை வளர்த்துக் கொண்டால் மனதை எளிதாக ஒரு முக ப்படுத்தலாம். இதன் மூலம் பெர்சனா லிட்டியை நன்றாக வளர்த்துக்கொள்ளலாம்.

 

3. கருத்தைக் கவனியுங்கள்

தம்மோடு பேச வருபவர்கள் எந்தவிதமான கருத்தை சொல்வதற் காக வருகிறார்கள் என்று கவனிக்க வேண் டும். அவர்கள் பேச்சின் ‘உட்பொருள்’ அல் லது ‘உட்கருத்து’ (Content) எது? என்பதை கண்டறிவதற்கு பயிற்சி மேற்கொள்ள வே ண்டும். மாறாக, நம்மோடு பேச வந்தவர்க ளின் சொல்லும்விதத்தை (Delivery of Speech) கவனிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பேச்சுப போட்டியின் நடுவராக இருப்பவர் பேசுபவரின் கருத்து க்கு முக்கியத்துவம்

 

கொடுத்து எந்த அளவுக்கு கவனிக்கிறாரோ அதேபோன்றே உட்கருத்துக்கு முக்கி யத்துவம் கொடுத்து கவனிக்க வேண் டும். புத்திக்கூர்மை சற்று குறைந்தவ ர்கள் தான் பேச்சின் கருத்தை கவனி க்காமல் சொல்பவரைப் பார்த்து கிண் டலடிப் பார்கள்.

‘பெருசா பேச வந்துட்டான். அவன் மூஞ்சியைப் பார்’, ‘மீச முளை க்காத பயலெல்லாம பேசுற பேச்சைப் பாரு’ என்று நேரடியாகவே பேச்சில் இடம் பெற்ற கருத்துக்கள் பற்றி ஆராய்வத ற்குப் பதில் பேசுபவரின் உடலிலுள்ள குறைபாடுகளை வைத்து விமர்சனம் செய்வது கவனத்தை சித றடிக்கும் செயலாகும்.

எனவே பேச்சிலுள்ள கருத்தை ஆழ்ந்து கவனித்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

 

4. ‘காது – வாய் உறவு’ களை தெளிவு படுத்துங்கள்

காது- வாய் உறவு – 2.1 விகிதம் (Ratio) அளவில் அமையுமாறு பார்த் துக் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு மனிதருக்கும் இரண் டு காதுகள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு வாய்தான் இருக்கி றது.

இதன் அர்த்தம் என்னவென்றால் கேட் பது இரண்டு மடங்காக இருந்தால் பேசு வது ஒரு மடங்காக இருக்கட்டும் என்ப தை உணர் த்துவதற்குத்தான். ‘குறை குடம் கூத்தாடும்’ என்பார்கள்.

எனவே அறிவைப் பெருக்க வேண்டு மென்றால் பேச்சைக் குறைத்து தகவ ல்களை கவனித்துக் கேட்பதற்கு அதிக நேரம் ஒதுக்கவது நல்லது.

 

5. திறந்த மனதோடு கேளுங்கள்

‘அவள் என்ன பேச்சு பேசுகிறாள்?’, ‘அவன் இந்த வார்த்தையை பேசி விட் டான்’ என்றெல்லாம் எண்ணி பேசுபவர் பற்றிய ‘எதிர் மறை உணர் வுகளை’ (Negative Emotions) வளர்த்துக் கொள்ப வர்கள் உண்டு.

ஆனால் அதேவேளையில் வார்த்தைகள் என்பது கருத் துக்களை தெரிவிப்பதற்குத் தான் என்று எண்ணி பிறரின் பேச்சைக் கவனிப்பவர்கள் பேச்சின் முழு கருத்துக்களை யும் கவனிக்க வாய்ப்புள்ளது . திறந்த மனதோடு எந்த கவ ன ச் சிதறல்களும் இல்லாம ல், பிறரின் பேச்சைக் கவனி த்தால் பேச்சிலுள்ள அத்தனை கருத்துக்களையும் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளெல்லாம் பிறரின் பேச்சை கூர்ந்து கவனிக்கவும், அதன்மூலம் நல்ல தகவல்களை மனதில் பதி வைத்து பெர்சனாலிட்டி என்ப்படும் ஆளுமைத் தன்மையை சிறந்த முறையில் வளர்த்துக்கொள்ள உத வும்.

 

நன்றி உடையநாடு

 

http://www.ampalam.com/2013/07/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.