Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மக்களை ஏமாற்றும் நாடகமே :சதாசிவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வட கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்திய அரசாங்கம் முயற்சி செய்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாமல் இன்றும் வடகிழக்கு தமிழ் மக்களுக்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

 

இது இவ்வாறிருக்க இந்நாட்டில் வாழும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்குள்ள பிரச்சினைகளை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தீர்த்து வைப்பதாகக் கூறும் மலையக இந்திய வம்சாவளி தொழிற்சங்க அரசியல்வாதிகள், இந்தியாவிற்கு சென்று அங்குள்ள அமைச்சர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது மீண்டும் மலையக இந்திய வம்சாவளி மக்களை ஏமாற்றி நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் தமது கட்சி வெற்றி பெறுவதற்கான கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

 

இவ்வாறு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்றம் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ். சதாசிவம் பொகவந்தலாவை காரியாலயத்தில் நடைபெற்ற முன்னணியின் தோட்டக் கமிட்டி தலைவர்கள், பிரதேச அமைப்பாளர்கள், இளைஞர் யுவதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

 

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் எஸ். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சதாசிவம் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று துன்ப துயரத்துடன் தனது வாழ்வாதாரத்தையே கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகின்றார்கள்.

 

செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தீர ஆலோசித்து தொழிலாளர்களின் தேவைகளை உணராது அவர்களின் அபிலாசைகள் என்னவென்று தெரியாமல் திடீரென செய்துகொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தால் இன்று பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்கள் பெருந்தோட்ட பகுதியில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே வேலை வழங்குகின்றனர்.

இவ்வாறு மாதத்தில் குறிப்பிட்ட வேலை நாட்கள் வழங்கப்படுவதால் தோட்ட தொழிலாளர்கள் முழுமையான தனது ஊதியத்தை பெற முடியாமல் இருக்கின்றனர். அத்தோடு தோட்ட நிர்வாகங்களும் தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் பயன்படுத்துகின்றார்கள். அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளையும் உரிமைகளையும் வழங்குவதில்லை.

 

அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழையினாலும் காற்றினாலும் பெருந்தோட்ட பகுதியில் பலரின் வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்ததோடு பலரின் வீடுகளும் உடைந்து சேதமாகியுள்ளன.

இவ்வாறு சேதமாகிய வீடுகளை தோட்ட நிர்வாகமும் அரசாங்கமும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

 

அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கும் மலையக பிரதிநிநிதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை புனரமைக்க முடியாதவர்கள் மீண்டும் மலையக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அமைச்சர்களுடனும் இந்திய தலைவர்களுடனும் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுவது விந்தையாக இருக்கின்றது.

 

எனவே மலையக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறாமல் மக்ளுக்காக சேவை செய்யும் மக்கள் பிரதி நிதிகளுக்கு வாக்களிப்பது இந்திய வமாவளி மக்களின் கடமையாகும்.

 

நாம் பெற்ற உரிமைகளை இழந்து வரும் இவ்வேளையில் இருக்கின்ற உரிமைகளையாவது பாதுகாத்துக் கொள்ள எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் சரியான பிரதி நிதிகளை மலையக மக்கள் தெரிவு செய்வது காலத்தின் தேவையாகும் என சதாசிவம் கூறினார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.