Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவீந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிறிலங்காவின் உயர் விருதுகள் வழங்கி கௌரவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
awarding_ceramony_srilanka-army-455-001.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று சாவதேசத்தால் குற்றம்சாட்டப்பட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், பிரிகேடியர் ரவிப்பிரிய மற்றும் சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோருக்கு சிறிலங்கா அதிபர் உயர் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் மனிதாபிமானப் போர் நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கத்தினால் குறிப்பிடப்படும் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற, உயிரிழந்த படையினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

  

இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச 216 சிறிலங்காப் படை அதிகாரிகளுக்கு வீர விக்ரம விபூசணய விருது, ரணவிக்கிரம பதக்கம் என்பன வழங்கப்பட்டன. வீர விக்ரம விபூசணய விருது சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த, மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மற்றும் பிரிகேடியர் ரவிப்பிரிய ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

வீரவிக்ரம விபூசணய விருது சிறிலங்கா படையினருக்கு வழங்கப்படும், மூன்றாவது உயர் விருதாகும். சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரம, ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோருக்கு ரண விக்ரம பதக்கங்கள் வழங்கப்பட்டன.

 

நேற்றைய நிகழ்வில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 147 அதிகாரிகளுக்கும், கடற்படையைச் சேர்ந்த 43 அதிகாரிகளுக்கும், விமானப்படையைச் சேர்ந்த 26 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இறுதிப் போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரில், 19,158 பேருக்கு கௌரவ விருதுகள் வழங்கப்படவுள்ளன.

 

இவர்களில், 156 படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு வீர விக்ரம விபூசணய விருதும், 2232 படையினருக்கு ரணவிக்ரம பதக்கமும், 16,770 படையினருக்கு ரணசூர பதக்கமும் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

awarding_ceramony_srilanka-army-450-003.

 

 

awarding_ceramony_srilanka-army-455-001.

 

 

awarding_ceramony_srilanka-army-435-002.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=87646&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.