Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் பாதையில் தமிழ்நாடு? – நிராஜ் டேவிட்.

Featured Replies

579033_375145159279634_1429627484_n.jpg
தமிழீழ விடுதலைப் பாதையில் தமிழ்நாடு?

– நிராஜ் டேவிட். 

ஸ்ரீலங்காவுடன் ஒப்பந்தத்தைச் செய்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக ஒரு கொடிய யுத்தத்தை இந்தியா தொடங்கியிருந்த காலம் அது. 

================================================

தமிழ் நாட்டின் அதிகாரம் ஒரு உண்மைத் தமிழனின் கரங்களில் இருந்திருக்குமேயானால், ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் வேறு ஒரு பரிணாமத்தை நிச்சயம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் 

இல்லை. 

================================================

ஆதித் தமிழ்க் குடியே!! ஆண்ட பரம்பரையே!!!

நீதி நெறி வகுத்து நெடியாட்ச்சி செய்துவிட்டு

சாதி வகுத்த சாண்டாளராற் சரிந்து பாதியாகிவிட்ட பைந்தமிழீர்!!

உங்களுக்குச் சூடு.. சொரணை… சொந்த ஒரு மூளை சிறிதும் உண்டோ?..

70களின் பிற்பகுதிகளில் ஈழத் தமிழரை நோக்கி எழுப்பப்பட்ட இதுபோன்ற உணர்ச்சிக் குரல்கள் தற்பொழுது தமிழ்நாட்டுத் தமிழர்களை நோக்கி சில உண்மைத் தமிழர்களால் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சினிமா மாயைகளுக்குள்ளும், தொலைக்காட்சி மெகா சீரியல்களுக்குள்ளும், இலவசத்திட்டங்களுக்குள்ளும் தம்மை மாத்திரமல்ல, தமது இனத்தையும் சேர்த்துத் தொலைத்துவிட்டு, எதிர்காலம் பற்றி பிரஞ்ஞையே இல்லாது காணப்படும் தமிழ் நாட்டுத் தமிழர்களை, தமது இனம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தும் முற்ச்சிகள் தற்பொழுது தமிழ்நாட்டில் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளன.

எம்.ஜீ.ஆர். என்ற மலையாளியாலும், ஜெயலலிதா என்ற கன்னடத்தியாளும், கருணாநிதி என்ற தெலுங்கனாலும் தமிழ் நாடு மாறி மாறி ஆட்சி செய்யப்பட்டுவருவதாலேயே தமிழர்கள் சொல்லமுடியாத அநீதிகளுக்கு உள்ளாகவேண்டி இருக்கின்றது. எனவே இனிமேல் தமிழ் நாட்டை ஒரு தமிழனே ஆட்சி செய்யவேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

உண்மையிலேயே நியாயமான ஒரு குரல்.

தமிழ் நாட்டின் அதிகாரம் ஒரு உண்மைத் தமிழனின் கரங்களில் இருந்திருக்குமேயானால், ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் வேறு ஒரு பரிணாமத்தை நிச்சயம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைக்குக்கூட, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பற்றி தமிழ் நாடே தொதித்தெழுந்து குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது, தமிழ் நாட்டின் ஆட்சி வெளிக்காண்பிக்கும் மௌனமானது, தமிழ் நாட்டினை ஒரு தமிழனே ஆழவேண்டும் என்ற தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையில் காணப்படும் நியாயப்பாட்டினை நிரூபிப்பதாகவே இருக்கின்றது.

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு மையப் புள்ளியாக தற்பொழுது தமிழ் நாடு மாறி வருகின்றது. தமிழீழ மண் முற்றுமுழுதாக அன்னிய ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி, தமிழரின் அபிலாசைகளுக்கான எந்தவித நகர்வையும் செய்யமுடியாத ஒரு தேசமாக அது மாற ஆரம்பித்ததைத் தொடர்ந்து, தமிழ் நாடே தமிழருக்கான செயற்பாடுகளைச் செய்யக்கூடிய ஒரு தளமாக மாற்றமடைய ஆரம்பித்து வருகின்றது. இந்திய ஆட்சி அதிகாரங்களின் தடைகள், மாநில ஆட்சியின் மிரட்டல்கள், கருணாநிதி குடும்பத்தினரின் இலத்திரனியல் மாயைகள் – இவைகளைக் கடந்து, தமிழர் பற்றிய அக்கறை பரவலாக அங்கு வெளிப்பட ஆரம்பித்துள்ளன.

தமிழ் நாட்டில் மையங்கொள்ள ஆரம்பித்துள்ள அந்த போராட்ட நகர்வுகள் பற்றியும், அந்தப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் எப்படியான பங்களிப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும் என்பது பற்றியும்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் விரிவாக நாம் ஆராய இருக்கின்றோம்.

மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்று ஒரு பலமான தொப்புள் கொடி உறவைக் கொண்டுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் நாங்கள் நல்ல உறவைப் பேண வேண்டும் என்பதில், அக்காலம் முதற்கொண்டு ஈழத் தமிழ் தலைவர்கள் மிகவும் கவனமாக இருந்து வருகின்றார்கள். எமது விடுதலைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் துணை நின்ற தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு நாங்கள் என்றும் நன்றியாக இருக்கவேண்டும் என்பதுடன், எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களினதும், தமிழ்நாட்டுத் தமிழர்களினதும் சந்ததிகள் பரஸ்பரம் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதில், தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதற்கு, இந்தியப்படை ஆக்கிரமிப்பு காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் நல்லதொரு உதாரணம்.

ஸ்ரீலங்காவுடன் ஒப்பந்தத்தைச் செய்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக ஒரு கொடிய யுத்தத்தை இந்தியா தொடங்கியிருந்த காலம் அது. ஸ்ரீலங்காப் படைகளையும், தமிழ் ஆயுதக் குழுக்களையும் துணைக்கழைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு அளவிலான ஒரு அழித்தொழிப்பு யுத்தத்தை இந்தியா நடத்திக்கொண்டிருந்தது. எந்தவித யுத்த தர்மங்களையோ, சர்வதேச யுத்த நியதிகளையோ, மனித உரிமை விடயங்களையோ கனக்கில் எடுத்துக்கொள்ளாமல், இந்தியப் படைகள் ஈழ மண்ணில் களமாடிக்கொண்டிருந்தார்கள். யுத்தம் என்ற பெயரில் பாரிய மனித வேட்டை நடாத்திக்கொண்டிருந்தார்கள். மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண் உரிமைகள் என்று வாய் கிழியக் கூச்சலிடும் அமைப்புகள், நாடுகள் எதுவுமே, ஈழத்தில் இந்தியப் படை ஜவான்கள் ஆடிக்கொண்டிருந்த கோர தாண்டவங்கள் பற்றி வாயே திறக்கவில்லை. ஒரு சிறுபான்மை இனமொன்றின் உரிமைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்காக, இந்தியா என்கின்ற ஒரு பிராந்திய வல்லரசு தனது முப்படைகளையும் களத்தில் இறக்கியிருந்தது. ஒரு இலட்சத்திற்கும் மேலான இந்தியத் துருப்புக்கள் வடக்கு கிழக்கில் நிலை கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படைகளுக்கு எதிராக களமாடிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அக்காலகட்டத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. வன்னியின் அலம்பில் காடுகளிலும், கிழக்கில் கண்ணாக்காடுகளிலும் மறைந்திருந்தபடி, பெரும் எண்ணிக்கையிலான இந்தியப் படையினருக்கு எதிராக கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புலிகள், பாரிய அளவில் உணவு மற்றும் ஆயுதத் தட்டுப்பாட்டுக்கு உள்ளானார்கள். நெருக்குதல்கள் அதிகமாக, அதிகமாக புலிகள் அமைப்பின் தளபதிகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சில தளபதிகள் தமக்குள் பேசி ஆலோசனை நடாத்திவிட்டு, புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களிடம் வந்து, தாம் கலந்துரையாடிய விடயத்தைத் தெரிவித்தார்கள்.

‘இந்தியப் படையினரின் நெருக்குவாரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. இந்தியப்படையினரின் தொடர் முற்றுகைகளை முறியடிக்கவேண்டுமானால் எமக்கு நவீன ஆயுதங்களும், வெடிபொருட்களும் அதிக அளவில் தேவை. இந்தியப் படைகளுக்கு எதிராக போராடுவதற்கு, நாம் ஏன் பாக்கிஸ்தானிடமும், சீனாவிடமும் ஆயுத உதவி கோரக்கூடாது?’- என்று தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

அவர்கள் கேட்டதற்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் தலைவரிடம் இருந்து பதில் வந்தது:

‘இந்தியாவிற்கு எதிராகப் போராடுவதற்கு என்றால், பாக்கிஸ்தானும், சீனாவும் விழுந்தடித்துக்கொண்டு எங்களுக்கு ஆயுதங்களை அள்ளி இறைப்பார்கள் அதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த விடயத்தில் நான் தமிழ்நாட்டைப் பார்க்கின்றேன். அவர்கள் எமக்கு காண்பித்த அன்பைப் பார்க்கின்றேன். நீங்கள் கூறும் இந்த பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளை தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமது எதிரிகளாகத்தான் பார்க்கின்றார்கள். நீங்கள் கூறுவது போன்று, நாங்கள் இந்த நாடுகளிடம் இருந்து இலகுவாக உதவிகளைப் பெற்று, இந்தியாவிற்கு எதிராக போராடிவிடலாம். ஆனால் நான் எமது அடுத்த தலைமுறைகளைப் பற்றி யோசிக்கின்றேன். ஈழத்தமிழர்களது பிள்ளைகளும், தமிழ்நாட்டுத் தமிழர்களது பிள்ளைகளும் எதிர்காலத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் இந்தியத் தமிழர்களின் எதிரிகளிடம் உதவிபெற்று இந்தியாவிற்கு எதிராப் போராடினால் நம் இரண்டு தரப்பினரது எதிர்காலச் சந்ததியினரிடையே இந்தக் கறை இருந்துகொண்டே இருக்கும்’ – என்று தெரிவித்தார்.

தளபதிகள் வாயடைத்துப் போனார்கள்.

விடுதலைப் புலிகளது தலைமை, தமிழ்நாட்டுத் தமிழர்கள் விடயத்தில் எத்தனை அன்பாக, அக்கறையாக, தொலைநோக்கோடு இருக்கின்றது என்பதற்கு மேற்குறிப்பிடப்பட்ட சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

இந்தியாவின் துரோகங்களுக்கு மத்தியில், இந்தியாவின் நடுவன் அரசையும் பகைத்துக் கொண்டு, தமிழ் நாட்டு ஆட்சி வழங்கிய தொந்தரவுகளையும் சமாளித்துக்கொண்டு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ் நாட்டுத் தமிழர்கள் வழங்கிய ஆதரவுகள், அவர்கள் செய்த தியாகங்கள் என்பன பற்றி எதிர்வரும் வாரங்களில்; விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். அது, தமிழ்நாட்டு உறவுகளது போராட்டத்திற்கு புலம்பெயர் ஈழத் தமிழர்கள் உதவவேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

தொடரும்…

 
Niraj David FB

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.