Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு தமிழ் தாயகம் எனில் ஏனையவை சிங்களவர் மாநிலங்களா? அநுர குமார

Featured Replies

நாட்டில் இனவாத அரசியல் தலைதூக்கியுள்ளது – ஜே.வி.பி.

Anura%20Kumara.1_CI.jpg

 

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று சொன்னால் ஏனைய ஏழு மாகாணங்களும் சிங்களவர்களின் தயகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸ்ஸநாயக்க. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று கூட்டமைப்பு தெரிவித்திருப்பது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று தெரிவித்த அவர் நாட்டில் உள்ள தமிழர்களில் 51.2 வீதமானவர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ளனர் என்றார். 

வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகம் என்றால் ஏனைய பகுதி தமிழர்களுக்கு உரிமை இல்லை என்றல்லவா அமையும் என்று குறிப்பிட்ட அவர் அது தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு செய்யும் அநீதி என்றும் தெரிவித்தார். 

அத்துடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயகம் என்றால் ஏனைய ஏழு மாகாணங்களும் சிங்களவர்களின் தாயமகமாகும் எனவும் தெரிவித்த அவர் இது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்றும் தெரிவித்தார்.  

நாட்டில் இனவாத அரசியல் தலை தூக்கியுள்ளது – ஜே.வி.பி.

நாட்டில் இனவாத அரசியல் தலை தூக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஏதேனும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் மேற்குலக நாடுகள் அல்லது இந்தியாவின் உதவியை பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தமிழ் மக்களை இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் மேற்குலக நாடுகள் அல்லது இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக கருதத் தொடங்கிவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் காவல்துறையை இயக்கக் கூடாது எனவும், வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டுமெனவும் கோரிய போது அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், அரசாங்கம் காவல்துறை திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிலிருந்து எடுத்து புதிய அமைச்சின் கீழ் இயக்க ஆரம்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அழுத்தம் காரணமாகவே வடக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது என மக்கள் கருதுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பிரச்சினையை சிக்கல் மிகுந்த நிலைக்குள் தள்ளுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தின் பின்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை எட்டக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்hளர். எனினும், அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்கள் விவகாரம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நாட்டம் காட்டத்தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாறாக தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். கடத்தல்கள் கைதுகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.