Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபைத் தேர்தல் முடிந்த கையோடு ஒரு கல்லில் இரண்டு காய்களை விழுத்த அரசாங்கம் தயாராகிறது!

Featured Replies

வடமாகாணசபைத்  தேர்தல் முடிந்த கையோடு ஆளுநர் பதவியில் மாற்றம்  ஏற்பட இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவிக்கின்றன. 

 
நடைபெறவிருக்கின்ற வடமாகானசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான  வாக்குகளுடன் வெற்றி பெறும் என்று அரசியல்  ஆலோசகர்கள் தெரிவத்துள்ள  நிலையிலும் சர்வதேச அழுத்தங்களைக் குறைத்து  அவற்றின் ஆலோசனை வர முன்னரே  ஆளுநர் பதவியில் சிவில் சமூகம் சார்ந்த ஒருவரை நியமிக்க அரச மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தகவலறிந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன. தமிழ் அரசியல் வட்டாரங்களிலும் இந்தப் பேச்சு கசிந்துள்ளது.
 
முன்னர் வடகிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பிரபல சிங்கள நடிகரும் தொழில் அதிபருமான காமினி பொன்சேகா மூன்று வருடங்கள் (1995-1998) பணியாற்றினார். 
 
இவர் ஜனாதிபதி  சந்திரிகாவினால்   வடகிழக்கு  ஆளுநராக  அமர்த்தப்பட்டார் . சிங்கள தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற இவர்  பின்னர் அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். 
 
இதற்கு முன்னர் யாழ் முன்னாள் அரச அதிபர் லயனல் பெர்னாண்டோ (1993-1994) வடகிழக்கு ஆளுநராக அன்றைய ஜனாதிபதி   டீ பீ  விஜெதுங்கவால்  நியமிக்கப்பட்டடு இருந்தார்.  
 
லயனல் தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற ஒரு சிறந்த நிருவாகி என்பதுடன் புலிகளுடன் சந்திரிகா அரசு நடத்திய முதல் சுற்றுப் பேச்சுக்களிலும் கலந்து கொண்ட  ஒருவராவார். பேச்சுக்களில் இவரை அமைத்திய பொழுது சந்திரிகாவின் அரசியல் நேர்மையை அப்பொழுது தமிழர் தரப்புப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
 
ஐ தே க வின் சிரேஷ்ட  அமைச்சராக  இருந்த  டிரோன்  பெர்னாண்டோ வும்  2004 முதல் 2006 வரை  பணியாற்றினார். இவர்  ஒரு சிறந்த  சட்ட  அறிஞராவர்.   
 
இவர்கள் மூவரையும் தவிர இவருக்கு  முன்னர்  பணியாற்றிய  லெப்டினன்ட் நாளின்  செவிரத்னவும்   (1988-1993)  மேஜர்  ஜெனரல் அசோகா ஜெயவர்த்தன (1998-2004).  ரியர் அட்மிரல் மோகன் விஜேவிக்கிரம (2006-2006). மற்றும் இன்று பணியாற்றும் மேஜர் சந்திரசிறி ஆகியோர் படைத் தரப்பைச் சேர்ந்தவர்களே.
 
தமிழர் தரப்பில் இதுபற்றி பல இடங்களிலும் பல சர்வதேச தரப்புகளிடத்திலும் முறையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
அண்மையில் இலங்கை சென்ற நவநீதம் பிள்ளை அம்மையாரிடமும் தமிழர் தரப்பினர் இந்த விடயத்தையும் சுட்டி நின்றதாக அறியப்படுகிறது. 
 
இதேவேளை  யாழில்  நடைபெற்ற  உட்கட்சி  சம்பாவிதங்களில்  ஆளுநரின்  நட்புக்  கலந்த  விவகாரமும்  அரச  மேலிடத்திக்கு  நெருக்கடியை  கொடுத்திருக்கிறது. இரண்டு தரப்பிற்கும் உயர் மட்டத்திலிருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக யாழ் ஆளுங்கட்சி வட்டாரங்கள் தமிழ்க் கட்சி நண்பர்களிடம் சொல்லிக் கவலைப்  பட்டுள்ளன.
 
அரசுடன் ஒத்தூதும் கட்சி வட்டாரங்களும் அரச மேலிடத்திற்கும்  சிரேஷ்ட  அமைச்சர்கள் சிலருக்கும்
 ஆளுநரின் அடாவடித்தனம் பற்றி சிலாகித்துள்ளன என்றும் இதனால் தேர்தல் முடிந்த கையோடு சில முக்கிய  மாற்றங்களை பரவலாக மேற்கொள்ள உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்படு உள்ளதாக 
தகவல் கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில்  ஊர்ச் சண்டித்தனம் காட்டும் நிலைக்குப் போயுள்ள படைத்தரப்பின் ஆளுனரை மாறுவதன் மூலம் அரச உயர் மட்டம் ஒரு கல்லில்   இரண்டு காய்களை விழுத்த எண்ணியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகின்றது
 
ஒன்று தமிழ் தரப்புடன் பேசி உறவாடக் கூடிய ஒருவரை நியமிப்பதன் மூலம் தங்கள் தோல்வியை ஒரு யுத்த வெற்றியின் அடுத்த அங்கமாகக்   கொள்வதாக தென்னிலங்கைக்கும், இரண்டு சர்வதேசத்திற்குத் தங்கள் ஜனநாயக நேர்மையைக் காட்டவும்  தகுந்த ஒருவரை நியமிக்க எண்ணியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
 
இப் பதவிக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் எ எச் எம் அஸ்வரின் பெயர் சில வட்டாரங்களில் பேசப்பட்ட போதிலும் பௌசி அவர்களே தமிழர்கள் மத்தியில் அஸ்வரை விடவும் மதிப்பு மிக்கவர் என்றும் மேலிடத்துக்கு சிரேஷ்ட வட்டாரங்கள் சொல்லியுள்ளதாகக் கூறப்படுகிறது.  அஸ்வரின் அண்மைக் காலப் பேச்சுகள் தொடர்பாக அரசுடன் இணைந்துள்ள தமிழர் கட்சி வட்டாரங்களும் மேலிடத்திற்குத் தமது அதிருப்தியைத் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளன.
 
 
என்ன எதுவாக  இருந்த போதிலும் அதி மேலிடம் தனது அரசியல் மதிக்கும்  அனுபவத்திற்கும்  எட்டிய வகையில் இடது சாரித் தலைவர்களான   வாசுதேவ அல்லது  டியூ குணசேகரவை நியமிப்பது பற்றியே கவனமெடுப்பதாக  தமிழர் தரப்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசுடன் இணைந்துள்ள  தமிழ்க் கட்சி முக்கியஸ்தர்களும் இவர்களையே  விரும்புவதாகக் கூறப்பட்டது.
 
இதன் அடிப்படையில் தான் வாசு தேவ டியூ குணசேகர  ஆகியோரின்  அண்மைக்கால  உரைகள்  தமிழ்  தேசியக் கூட்டமைப்பின்  வெற்றியை  வலியுறுத்துவதாக  அமைந்துள்ளன  எனப்படுகிறது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.