Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர் ஏன் தீவிரவாதிகளானார்கள்?

Featured Replies

சிங்களவர் ஏன் தீவிரவாதிகளானார்கள்?

இந்தக் கேள்வியை கேட்டிருப்பவர் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய! அவரைப்பற்றி ‘இந்து நாளிதழ்‘ஆசிரியர் ராம் ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் முக்கிய விடயமொன்றைத் தெரிவித்திருந்தார். சிலமாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட விபரமாக இருந்தாலும் இங்கு அதனை எடுத்துக்கொள்வது பொருத்தமானதெனக் கருதுகிறோம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவர் அவரின் சகோதரர் கோதபாய என்பதை, அவர்தெரிந்துகொள்வது அவசியம் என்று ராம் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்று அடிக்கடி நிருபணமாகிக் கொண்டிருக்கின்றது. சர்வதேச பாதுகாப்பு தொடர்பான மகாநாட்டில் கோதபாய இந்தக் கேள்வியைக் கேட்டு பதிலையும் அவரே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையான சிங்களவருடன் சேர்ந்து வாழாததினாலேயே சிங்களவர்கள் தீவிரவாதிகளானார்கள் என்பது அவரின் கண்டுபிடிப்பு. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது பிரித்தே வைத்திருக்கும் கோதபாய இதனைத் தெரிவித்திருப்பது பெரும் விசனத்திற்குரியது. முஸ்லீம் கட்சிகள் அனைத்தும் அரசுடன் தான் இணைந்திருக்கின்றன. அப்படியிருந்தும் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டுபவர் அவர். இதுவரை 26 முஸ்லிம் பள்ளிவாசல்கள் சிங்கள இனவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இருப்பினும் சிங்களவர் தீவிரவாதிகளாவதற்கு முஸ்லிம்களே காரணமென அவர்கூறியுள்ளார். தமிழர் தரப்பில் எத்தனை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன? அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்று தமிழ் கட்சிகள் செயற்படவில்லையா? அப்படியிருந்தும் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கு யார் காரணம்?

கோதபாயவின் பொறுப்பற்ற உளறல்களினால் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் மிக அதிகமாக பாதிப்புக்கு இலக்காகி அவதிப்படுபவர்கள் தமிழர்கள் என்பதை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க வந்த திருமதி. நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்காலில் போரில் மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்டார். சிறிலங்கா அரசு தடுத்து நிறுத்தியது. அத்துடன் அவர் போரில் மரணமான புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்டார் என சர்வதேச ரீதியில் பரப்புரை ஒன்றையும் மேற்கொள்ள முற்பட்டது.

அதனால் ஐ.நா. சபை தலையிட்டு, திருமதி நவநீதம்பிள்ளை ஐ.நா. சபையின் அனுமதியுடனேயே சகல நடவடிக்கையையும் மேற்கொள்கிறார் என விளக்கமும் அளித்துள்ளது. சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளினால் அந்த நாட்டுக்கே பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பி வருகின்றன. புலிச்சாயம் பூசி உண்மையை மறைக்க எடுக்கும் சிறிலங்காவின் முயற்சி எப்போதும் கைகொடுக்காது என்பதை மகிந்த உணர்ந்து கொள்ள வேண்டும். ஐ.நா. சபைக்குத் தேவையான பல ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடவடக்கை எடுக்க இன்னும் ஏன் தாமதம் என உலகத்தமிழர்கள் கேட்கின்றனர்.

http://bit.ly/17Dxzfi

1234070_230422650445102_2023162373_n.jpg
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.