Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனோர் எவரும் இல்லையென்றால் இறுதி போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் எங்கே - மனோகணேசன்

Featured Replies

காணாமற்போனோர் என எவரும் இல்லை என்று கூறும் அரசு, இறுதி போரில் இராணு வத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட மறுக்கின்றது. அரசின் இத்தகைய பதில்கள் இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளனவோ என்று சந்தேகப்பட வைக்கின்றன.    

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் நேற்று  தெரி வித்தார்.   இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:   "இலங்கையில் இரகசியத் தடுப்புமுகாம்கள் எங்கு இருக் கின்றன என்று பாதுகாப்புச் செயலர் சவால் விட்டுள்ளார்.

இது தெருவில்  அப்பாவி மக்களை அச்சுறுத்தி விட்டு முடிந்தால் அதற் கெதிராக நடவடிக்கை எடுங்கள் என்று சண்டித்தனம் காட்டுவதற்கு  ஒப்பானதாகும்.   வடக்கு, கிழக்கில் பலர் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றனர். அவர்கள் காணாமற்போன மற்றும் சரணடைந்த தமது சொந்தங்களின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  

இறுதிப் போருக்கு முன்னரும், போரின் போதும், அதன் பின்னரும் தமிழ் உறவுகள் பலர் காணாமற்போயுள்ளனர். இறுதிப் போரில் பலர் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். பலரை அவர்களின் உறவினர்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.    

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் திருமதி அனந்தி எழிலன் கூட தனது கணவரான எழிலனை எங்கே,  எந்த இடத்தில்,  எந்த இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார் என்பதை விலாவாரியாகக் கூறியிருக்கின்றார்.  

காணாமற்போன வண. பிதா ஜோசப் அடிகளார் பற்றியும் மறக்கமுடியாத செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் பலருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

எனவே, இவ்வாறு சரணடைந்தவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் எங்கே?   போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது காணாமற்போனவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றால், போர் முடிந்த பின்னர் சரணடைந்தவர்கள் மற்றும் அதன் பின்னர் காணாமற்போனவர்கள் எங்கே?   இலங்கை வரலாற்றில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருக்கிடையிலான போரின்போதும், ஜே.வி.பி. கிளர்ச்சியின்போதும் இரகசியத் தடுப்புமுகாம்கள் இருந்தே உள்ளன. இது கோத்தபாயவுக்கும் தெரியும்.  

சரணடைந்தவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் எவரும் இல்லை என்றால், இரகசியத் தடுப்புமுகாம்கள் இருக்கின்றன என்றுதான் அர்த்தம். இப்படித்தான் நவநீதம்பிள்ளை அம்மையாரும் நம்புவார்.     பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிட்டு மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதை அரசு உடன் கைவிடவேண்டும்''  என்றார்.

http://www.sankathi24.com/news/32988/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.