Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்ப நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

refugees(1).jpg

-கெலும் பண்டார

அடுத்த வருட முற் பகுதியில் நடைபெறவுள்ள இந்திய - இலங்கை ஆணைக்குழுவின் கூட்டத்தில் 100,000 இலங்கை அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்புவது பற்றி ஆராயப்படும் என அதிகாரிகள் தெரிவித்தன.

யுத்த காலத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அடைக்கலம் கோரி தமிழ் நாட்டுக்கு சென்றனர். இவர்களில் 68,058 இலங்கை அகதிகள் 110 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் 34,471 அகதிகள் இந்தியாவில் தமக்கு தெரிந்த குடும்பங்களுடன் தங்கியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 5,628 அகதிகள் தாமாக இலங்கை திரும்பியதாகவும் இதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை உதவியளித்ததாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தெரிவித்தார்.

மேலும் 2,400 பேர் இலங்கைக்கு திரும்பி வர சம்மதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வருட ஜனவரியில் முதற் தடவையாக கூடிய இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழு அதன் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புதலையும் சேர்த்திருந்தது.

திரும்பி வருவோருக்கு இலவச விமானச் சீட்டுக்கள், 25,000 ரூபா உதவி தொகை ஆகியன ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை உதவியுடன் வழங்ப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இவர்களுக்கு 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் நாடு அரசாங்கம் பலவிதமான உதவிகளை வழங்கியுள்ளது. அவர்களின் பிள்ளைகள் நல்ல கல்வி பெற்றுள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் படிப்போர் இங்கு உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

"நாம் அவர்கள் நாடு திரும்புவதை ஊக்குவிப்போம். இது சுயவிருப்பின் அடிப்படையிலான ஒரு செயன்முறையாகும்" என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81851-2013-09-09-09-25-31.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.