Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் .இந்துக் கல்லூரிக்கு அருகில் நான்கு நட்சத்திர ஹோட்டல் - இளம்பிறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், கே.கே.எஸ் வீதி, தட்டாதெரு சந்திக்கு அண்மையில் அமைக்கப்பட்டு வருகின்ற நல்லூர் கிறான்ஹோட்டல் எனும் பெயர் கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டல் தொடர்பாக சுற்றாடலில் வசிக்கும் சிவில் சமூகத்தினர் தமது அதிர்ச்சியையும், வேதனையையும், வெளிப்படுத்துவதோடு இது தொடர்பாக அதிகாரிகள், கவனத்திற்கும் மக்கள் கவனத்திற்கும் பின்வரும் விடயங்களை  முன்வைக்கின்றார்கள்.

 

மக்களது ஒழுக்கம் கலாசாரம் தொடர்பானது.

இப்பாரிய ஹோட்டல் நீச்சல் தடாகத்தை உள்ளடக்கிய நான்கு நட்;சத்திர ஹோட்டல் என்று அறியவருவதால் இதனுள் மதுபான சாலைகள், நீச்சல் தடாகங்கள் என்பன அமைய இருப்பதால் நெருக்கமான குடியிருப்பு உள்ள இப்பகுதியில் இதனை அமைப்பது பொருத்தமற்றது என மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைவிடத்திலிருந்து 100 யார் தொலைவில் யாழ் இந்துக்கல்லூரியும், யாழ் இந்து ஆரம்ப பாடசாலையும் அமைந்துள்ளன. ஏறத்தாழ 400-500 யார் தூரத்தில் யாழ் இந்து மகளிர் கல்லூரியும் அமைந்துள்ளது. மேலும் ஒரு கி.மீ தூரத்தில் யாழ் பல்கலைக்கழகமும் அதன் விடுதிகளும் அமைந்துள்ளன. விடுதி வசதியற்ற பல்கலைக்கழக மாணவர்கள் இச்சுற்றாடலிலுள்ள குடியிருப்புக்களிலே வசிக்கின்றனர். நீண்ட பாரம்ரியத்தைக் கொண்ட சைவபரிபாலனசபை சிவத்தொண்டன் நிலையம் என்பனவும் அயலில் அமைந்துள்ளன. இப் பகுதியிலிருந்து 300 யார் சுற்று வட்டத்தில் சிறிதும் பெரிதுமான பத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைந்துள்ளன. கல்வி நிலையங்கள,; ஆலயங்கள் பெருமளவு அமைந்துள்ளன இச்சூழலில் இவ்வாறான ஒரு ஹோட்டல் உருவாவதை சூழவுள்ள குடிமக்கள் வன்மையாக ஆட்சேபிக்கின்றார்கள்.

 

 2. சுற்று சூழல் மாசடைதல் தொடர்பானது.

யாழ்ப்பாண குடாநாடு 'மயோசின்கால' சுண்ணக்கற்களால் ஆனது. தரைகீழ் நீர்மூலம்  கிணறுகளிலிருந்தே  மக்கள் குடிநீர் பெற்றுப் பயன்படுத்துகின்றனர். ஹோட்டலில் இருந்து பாரிய நீர்க்கழிவுகளும் மலசல கழிவுகளும் நிலத்தினுள் சேமிக்கப்படவேண்டுமாகையால் சுற்று அயலில் உள்ள கிணறுகளில் அவை கலந்து நீரை மாசுபடுத்துமென மக்கள் அஞ்சுகின்றர்கள் 

 

பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர் இதனை உறுதிப்படுத்துகின்றனர். நமது யாழ் பிரதேசத்தில் கழிவு வாய்கால்களோ, மலசல கழிவுகளை அகற்றம் தரைகீழ் குழாய் அமைப்புக்களோ இல்லை. எனவே நெருக்கமான குடியிருப்புகள் உள்ள இப் பகுதியின் நீர்வளம் மாசடையும் என மக்கள் அஞ்சுவதால் இக் ஹோட்டல் இப்பகுதியில் அமைவதை வன்மையாக மக்கள் கண்டிக்கிறார்கள.; மேலும் இக் ஹோட்டல் வாகனத்தரிப்பிடம் நிலத்திற்கு அடியில் உருவாக்கப்படுகின்றது. இது சுண்ணாம்புக் கல்லை அடிப்பாறையாகக்  கொண்ட பகுதிக்குப் பொருத்ததற்றதென பொறியியல் நிபுணர்கள்; அபிப்பிராயப் படுகின்றார்கள். இவ்வாறான நடவடிக்கைகளால் கிணறுகளின் கீழ் நீரோட்டம் தடைப்படுவதோடு. அவை மாசடைவது தவிர்க்க முடியாத செயலாகிவிடும் எனவும் கருதப்படுகின்றது.

 

இவ்வாறான ஹோட்டல் நிர்மாணப் பணிகளுக்கு மாகரசபை, சூழுல் ஆணைக்குழு என்பன எவ்வாறு அனுமதி வழங்கின என்பது மர்மமாக உள்ளதாகவும் இவை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இப்பகுதி வாழ் மக்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

 

மேற்படி ஹோட்டல் நிர்மாணிப்பவர் மத்தியகிழககு நாட்டில் கணக்கியலாளராகப் பணியாற்றி வருபவர்  என்றும் அவரது சகோதர் அரச உயர் பதவி வகித்து ஒய்வுபெற்றவர் என்றும் அரசியலும் பணமும் தாராளமாகம் இவர்களிடம்; உள்ள தால் ஊர்மக்கள் பிரச்சளைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை என்றும் மக்கள் பேசிச்கொள்கின்றாhகள்; சில தர்மகாரியங்கள் செய்யும் இவர்கள் அப்பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்ற நிரந்தர வருமானம்பெற இக்கைங்காரியத்தை செய்கின்றார் என்னும் இது சிரிப்புக்கிடமான தர்க்கம் என்றும் இச் செயலை புத்திஜீவிகள்  விமர்சிக்கின்றனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96333/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.