Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை. அவர்கள் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராட்டிய புனிதர்கள் - ஆனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை. அவர்கள் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராட்டிய புனிதர்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி எளிலனின் மனைவியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வடக்குமாகாணசபைத் வேட்பாளருமான ஆனந்தி தெரிவித்தார்.

 

தமிழ் தேசிக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போற்க்குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறிப்பிட்டிருக்கும் விடையத்திற்கு நாம் முற்றாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடைய் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

 

நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தின் போது 3 இலட்சத்தி 50 ஆயிரம் மக்களுக்கு முன்னிலையிலும், முல்லைத்தீவு மாவட்ட அருட்தந்தையின் முன்னிலையிலேயே நாம் எமது உறவுகளை சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்தோம். அவ்வாறு ஒப்படைத்ததிற்கான சகல ஆதாரங்களும் எங்களிடம் இப்பொழுதும் உள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் வைத்து சரத் பொன்சேகா சொன்னது அனைத்தும் பொய். அவர் சிறிலங்கா அரசாங்கத்தினைக் காப்பாற்ற முயட்சிக்கின்றார்.

 

அவர் சொன்னத்தில் ஒரு வேடிக்கையான விடையம் என்னவேன்றார், நட்ட ஈடு பெற்றுக் கொள்வதற்காக காணமல் போனவர்கள் நாடகம் ஆடுகின்றார்கள் என்று சொல்லியிருந்தார்.

 

இவ்வாறு சொல்லுபவர் என்னுடைய கணவனை தரட்டும் நான் அவருக்கு 3 இலட்சம் ரூபா கொடுக்கின்றேன். எங்களுக்கு பணம் முக்கியம் இல்லை. எமது உறவுகளே தேவை. நாங்கள் என்றும் பொய் சொல்ல வில்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை. அவர்கள் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய புனிதமானவர்கள். அவர்களுடைய தியாகத்திலேயே தமிழர்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள் என்பதை ஒரு காலமும் மறந்துவிட முடியாது, மறந்துவிடவும் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.sankathi24.com/news/33015/64//d,fullart.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட தளபதி எளிலனின் மனைவி அனந்தியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.(படங்கள்)

செவ்வாக்கிழமை இரவு 9.45 மணயளவில் யாழ்.ஜந்து சந்தியில் வைத்தே மேற்படித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தில் அனந்தி மயிரிளையில் உயிர் தப்பித்துக் கொண்டதுடன் அவர் பயணித்த வாகனம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அனந்தி தெரிவிக்கையில்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றினை நிறைவு செய்து கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எனது வீட்டிற்கு யாழ் - மானிப்பாய் வீதியூடாகச் சென்று கொண்டிருந்தேன். இதன் போது ஜந்து சந்திப்பகுதியில் வைத்து எங்களுடைய வாகனத்திற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினுடைய வாகனம் எங்களுடைய வாகனத்திற்கு முன்பாகச் சென்றது.

திடீரென சிறிலங்கா இராணுவத்தினருடைய வாகனம் எமது வாகனத்திற்கு குறுக்காக வீதியில் நிறுத்தப்பட்டது. இதன் போது பின்னால் மோட்டார் சைக்கிலில் வந்த நபர்கள் வாகனத்தின் ஜன்னல் பக்கமாக இருந்த என்னை நோக்கி கல் தாக்குதல் மேற்கொண்டனர்.

எனினும் நான் விலத்திக் கொண்ட காரணத்தினால் என்மீது கல் படவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கல் தாக்குதலில் எனது வாகனம் முழுமையான சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறிது நேரம் அங்கு நின்று தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் மக்கள் அவ்விடத்தில் கூடுடியதை அடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

aananthi%20vann%20400.jpg

aananthi%20vann%2001.jpg

 

சிங்களவன் உடாடியாக தன்னுடைய குணத்தை காட்டிவிட்டான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.