Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூர் ராசாக்களின் தந்திரங்களும், வெளியூர் ராசாக்களின் மந்திரங்களும் - இதயச்சந்திரன்

Featured Replies

நவிபிள்ளை அம்மையார், விடுதலைப் புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘இராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள். வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை தனித்துவிட்டோம்’ என்று சுயதிருப்தி கொள்வார்கள். இதுவும் ஒருவகையில், மக்களின் போராடும் உணர்வினை மழுங்கச் செய்யும், ஒடுக்குமுறையாளர்களின் உத்திதான். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளிலேயே திட்டமிட்ட வகையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

Elephant-Parade-painted.jpg

உண்மையிலேயே, தலைவரோடு நீண்ட காலமாகக் களத்தில் நின்று போராடியவர்கள், வேறு இயக்கங்களில் இருந்து சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கெதிராக களமாடியவர்கள் எவரும், போராட்டங்களிலிருந்து மக்கள் தனிமைப்பட்டுப் போகும் வகையில் செயல்படுவதில்லை. நான் முதல் batch, இரண்டாம் batch என்று சுய பிரகடனம் செய்து, தான்தான் அண்ணையின் ஒரே வாரிசு என்பது போலொரு தோற்றப்பாட்டினை செயற்கையாக உருவாக்கும் அதேவேளை, நவிப்பிள்ளையின் ‘விடுதலைப் புலிகள்’ மீதான விமர்சனத்திற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு, மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடும் சிலர் இன்னமும் எம்மிடையே இருக்கின்றார்கள்.

ஒடுக்குமுறையாளர்களின் உள்ளூர் இராசதந்திரிகள் போல் தொழிற்படும் இந்தப் பிரகிருதிகள், எந்தத் தளத்தில், எந்த முகாமின் பின்னணியில் இயங்குகிறார்கள் என்பதை உடனடியாக மக்களால் புரிந்து கொள்ள முடியாது. ‘விடுதலை’ வேடம், ‘புலி’ வேடம் போட்டபடியே அவர்கள் உலவுவதால், இந்தத் தடுமாற்றம் ஏற்படுகிறது. 2009 இற்கு முன்னர் யாருமே இவர்களைத் தரிசித்திருக்க முடியாது. களத்தில் நின்ற எவருக்குமே இவர்களைத் தெரிந்திருக்காது.

அதேவேளை, மக்களுக்கும் அதுபற்றியதான கவலைகள் கிடையாது என்பதை இந்தத் தனிநபர்கள் புரிந்து கொள்வதில்லை. தாங்கள்தான் இனி அடுத்த ‘அண்ணை’ என்பது போலவும், கிளிநொச்சி பத்திரிக்கையாளர் மாநாட்டில் பதிலளிப்பது போலக் கற்பிதம் கொண்டு, எழுத ஆரம்பித்துவிடுவார்கள். இவைதவிர, வல்லரசு ராசாக்களின் மந்திரங்களை, மக்களிடம் கொண்டுசெல்லும் உள்ளூர் தந்திரவாதிகளாக தாம் செயற்படுவதாக நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் அந்த மந்திரவாதிகள், இந்த உள்ளூர் தந்திரவாதிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது வேறு கதை.

எங்கள் தந்திர ஈசர்கள், இயங்கும் முறை மிகவும் வித்தியாசமானது. மக்களைப் பற்றிய அக்கறை இவர்களிடம் துளியளவும் இருக்காது. எந்தப்போராட்டத்திலும் இவர்களை நீங்கள் காணமுடியாது. ஆனால் போராட்ட அமைப்புகள் பலவற்றோடு தொடர்புகளைப் பேணுவார்கள். அதிலும் மேல்மட்டத்தோடுதான் அந்த உறவு இருக்கும். சில நிதி உதவிகளைச் செய்து மேல்மட்டத்தினரின் நன்மதிப்பினையும் பெற்றுவிடுவார்கள். இந்தப் புல்லுருவிகள் வெளித்தோற்றத்தில் விடுதலைப்பயிர் போன்றே காட்சியளிப்பார். தேசிய விடுதலைப் போராட்டத்தை இனவாதப் போராட்டமாக திசை திருப்பும் காரியத்தை கட்சிதமாக மேற்கொள்வார்கள். பிரதேசவாதம், மதவாதம் போன்ற, தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான, அத்தனை சீர்குலைவு சித்தாந்தங்களையும் முன்வைப்பார்.

எமது விடுதலைக்கு ஆதரவான முஸ்லிம்களை ‘தொப்பி பிரட்டி’ என்று கேவலப்படுத்தி, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையே விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களாக மாற்றி விடுவார்கள். இதைவிட மோசமானதொரு சிதைவு செயற்பாட்டில் இவர்கள் ஈடுபடுவதே மிகவும் ஆபத்தான விடயமாகும். அது வேறொன்றுமில்லை... 2004 இல் ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கு காரணமாக கருணாவால் சொல்லப்பட்ட ‘பிரதேசவாதம்’ என்கிற நச்சுக் கருத்தே அதுவாகும். ‘புதுவை’ இரத்தினதுரை, ‘முல்லை’ அமுதன், ‘திருமலை’ நவம், ‘வல்வை’ தேவன் என்கிற பெயர்களெல்லாம், அவர்களாகவே தங்களுக்கு சூட்டிக்கொண்ட எழுத்துலக அடையாளப்பெயர்கள். வேறு யாரும் அவர்களுக்கு இந்தப் பெயர்களை வைத்ததில்லை.

ஆனால் இந்த முதலாம் batch வாசிகள், இதயச்சந்திரனின் பேருக்கு முன்னால் ஊரின் பெயரை போட்டு, அவர் வேறு பிரதேசத்தைச் சார்ந்தவர் என்று அடையாளப்படுத்த முற்படுவார்கள். அதனூடாக மக்கள் மனங்களில், அவர் ஒரு வேற்றுக்கிரகவாசி என்பது போலானதொரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி , மக்களிடையே பிரதேச உணர்வுகளை மறைமுகமாகத் தூண்ட வழிகோலுவார்கள். அண்ணையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் தம்பிகள்.

இவையெல்லாம் சிறிய உதாரணங்கள். இதைவிட மக்களை மூளைச் சலவை செய்ய முனையும், பல சங்கதிகள் உண்டு. ‘இராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம்’ என்று பத்திரிக்கை மாநாட்டில் தேசியத்தலைவர் கூறியதால், விடுதலைப் புலிகளே அக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று ஒரு கருத்துத் திணிப்பினை மேற்கொள்ள இவர்கள் விரும்புகிறார்கள். சுப்பிரமணிய சுவாமியின் வலது கையாகத் திகழ்ந்த ‘திருச்சி’ வேலுச்சாமியின் நூலை இந்த ‘தம்பிகள்’ படிக்கவில்லை போல் தெரிகிறது.

இவைதவிர, ரகோத்மனின் கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் இன்னமும் பதில் வழங்கவில்லை. இந்த வழக்கின் துன்பியல் வரலாறு தெரியாதோர், சுப்பிரமணிய சுவாமியின் வாரிசுகள் போல், நிரூபிக்கப்படாத குற்றத்தை ஏற்று, குனிந்து செல்ல வேண்டுமென மக்களுக்கு அடிபணிவு அரசியலின் தத்துவத்தை போதிக்க விரும்புகிறார்கள். அதுவும் அண்ணையின் பெயரால்.

இந்த ஈழத்து ‘கோயபல்ஸ்கள்’, நீண்டகாலமாகவே மக்கள் போராட்டங்களோடு தம்மைப் பிணைத்துக்கொண்ட பல ஊடகவியலாளர்களைக் குறிவைத்தே தமது உளவியல் பரப்புரைகளை செய்கின்றார்கள். மக்கள் மத்தியில் பரவலாக அவதானிக்கப்படும் நபர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என்போரை நோக்கியே இந்த ‘அண்ணை’ முகமூடிகளின் தாக்குதல் தொடங்கும். பின்னர், தேசியத்தின் மீதும், மக்களின் விடுதலையின் மீதும் பற்றுறுதி கொண்ட ஊடகவியலாளர் மேல் தனிநபர் தாக்குதலை தொடுப்பார்கள். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும்’ என்கிற முதுமொழிதான் இவர்களின் தத்துவம்.

ஆனால் உரத்து அடித்தால், அடித்தவனின் கையே உடைந்து போகும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. எவ்வளவு அடித்தும் அம்மி நகர மறுத்தால், தனிநபர் தாக்குதலை ஆரம்பிப்பார்கள். மனைவியைக் கொடுமைப்படுத்துகிறார், கோத்தாவுடன் கொஞ்சிக் குலாவுகின்றார், அமெரிக்காவின் உளவாளி, வீட்டிற்கான வங்கிக் கடனை பசிலிடம் வாங்கினார் என்று கற்பனைக் குதிரைகளை தட்டி விடுவார்கள். இந்த உள்ளூர் ராசாக்கள், வல்லரசு மந்திரங்களால் கட்டுண்டு, மகுடி வாசிப்பது பற்றியும் பார்க்க வேண்டும். நவிபிள்ளை அம்மையாருக்கு மகுடி வாசிப்பதில் இருந்து ஆரம்பமாகி, ஐ.நா.சபையில் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானங்களுக்கு விளக்கம் கொடுப்பதுவரை, இந்த லோக்கல் ராசாக்களின் தந்திரோபாய விளக்கங்கள் களை கட்டும்.

ஐ.நா.சபையே, உலக மக்களின் உயர் நீதிமன்றம் என்கிற நம்பிக்கை இந்த உள்ளூர் தந்திரிகளிடம் உண்டு. பாதுகாப்புச்சபையில், 5 வெட்டு வாக்குச் சண்டியர்களால் அச் சபை ஆளப்படுவதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். ஈராக் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் இரண்டு வல்லரசுக்களால் முன்னெடுக்கப்பட்ட போது, இந்த உயர் பீடம், விடுமுறையில் சென்ற விட்டது. அதுமட்டுமா... ‘ஒரு நாளைக்காவது சிரியாவுக்கு அடிக்க விடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் உலக நாயகன். அவர் அடித்தாலும் கேட்க ஆட்களில்லை. ஐ.நா. சபையின் பலம் அத்தகையது.

அமெரிக்க வென்று தரும், நீங்கள் வீட்டினுள் முடங்கிக் கிடவுங்கள் என்பதுதான், இந்த மகுடிகளின் அறிவுரை. மக்கள் திரளின் மீது நம்பிக்கையற்று, வல்லரசுகள் எமக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என்கிற, கானல் நீரினைக் கண்டடைவதற்கான பாதையைக் காட்டும் நபர்கள் குறித்து, மிகுந்த அவதானம் தேவை. நரி வேசத்தை விட, புலி வேசமே மிகவும் ஆபத்தானது. யானைக்கு வெள்ளையடித்தாலும் அது வேஷந்தான்.

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/33047/64//d,fullart.aspx

ஆனால் உரத்து அடித்தால், அடித்தவனின் கையே உடைந்து போகும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. எவ்வளவு அடித்தும் அம்மி நகர மறுத்தால்

 

 

இந்த சின்னப் பழ்மொழியை விளங்கிக்கொள்ளமாட்டாத ஆய்வாளர். " இறுக்கி அடித்தால்" அல்ல, "அடிமேல் அடிஅடித்தால்" என்பதுதான் பழமொழி. இதில் இவர் செருகும் இறுக்கி அடித்தால் எங்கிருந்து வருகிறதோ?

 

இந்தாள் ஆரம்பம் தொடக்கம் முடிவரையும் சும்மா அறுத்திருக்கு. ஒரு இடத்தில் ஒரு அரசியல் சமாசாரத்தை தொடவில்லை. மொத்ததில் நவநீதம் பிள்ளைதான் முள்ளிவாய்க்கால் அவலத்தை கொண்டு வந்திருந்தால் கூடப் படத்தேவை இல்லாத கோபத்தை நவநீதம் பிள்ளை மீது காட்டுகிறார். இதை பங்கிமூன், நம்பியார், மாட்டின் நேஸ்கி..... யராவது ஒருவர் மீது காட்டியிருந்தால் அது உபயோகமான கதை. 

 

முதலில், எல்லாச் சபைகளிலும், நாடுகளிலும் சில மனிதர்கள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுவேதான் இந்தியாவில், இலங்கையில், அமெரிக்காவில், ஐ.நாவின் இரண்டு சபைகளிலும் கூட நடக்கிறது. புலிகளின் தலைமை வெளியில்  இல்லாத போது இப்படி வேறும் குண்டிகள் தூக்கி அடிப்பதும் அதனால்த்தான். எனவே அதிகாரிகள் மாற எங்குமே அரசியல் மாறலாம்.

Edited by மல்லையூரான்

பகிடி என்ன என்றால் உடகவியலாரை " இவர்கள்" தாக்குகிறார்கள் என்று இதயசந்திரனின் எழுதுகிறார். கோழி முட்டியும் எதோ ஒரு இத்துப்போன சந்தர்ப்பத்தில் குஞ்சு முடமாகியிருக்கலாம். ஆனால் கடவுளுக்கு அர்சிக்க போட்ட மல்ர்களால் பிள்ளையாரின் கற்சிலை உடைந்து சிதறிப்போய்விட்டதே என்று தரிசிக்க வந்த அடியவர்களை விரட்டுகிறார் இந்த இயச்சந்திரன். "இடிப்பாரால் கெட்டுப்போன மன்னன்" பற்றி திருதாளக்குறள் எழுதுகிறார் இதயச்சந்திரன். ஊடகவியலாரை தாக்கி எழுதுதினால் ஊடகவியலார் கெட்டுப்போய்விடுவார்கள் என்று பதறுகிறார். "சுட்டால் பொன் சிவக்கும்" . ஆனால் சுட்டத்தால் பொன் கறுத்தகாக எழுதுகிறார் இதயச்சந்திரன். மகிந்தா கூட தனக்கு எதிரான கருத்த்த்தை சில சமயம் சகித்திருந்திருபார். ஊடக துறையில் இருக்கும் இதயசந்திரன் த்ன்னை தான் யாரோ விவரித்ததை தாங்கமுடியாமல் தகிக்கிறார். இதனால் முழு ஊடகத்துறையயும் யாரும் விவரிக்க கூடாது எங்கிறார். துவக்கோடு நிற்கும் காவலாளியை காப்பாற்றுங்கள் என்று இதயச்சந்திரன் கூக்குரல் போட்டல் காவலுக்கு யார் இனி வருவார்கள். அடக்குமுறை தலை எடுக்கும் போது எழுதி தங்களையும் மக்களையும் காப்பவன்தான் உண்மையான எழுத்தாளன். இந்த மனிதனுக்கு ஜனநாயகமும் விளங்கவில்லை. ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கும் விள்ங்கவில்லை. 

 

நீங்கள் சொன்னது மாதிரி ஒரு கருத்துக்களத்தில் இதயசந்திரன் எழுதினால் தன்னைத்தான் அளவிட்டுக்கொள்ள முடியும். ஊடகமொன்றில் எழுதிவிட்டு சம்பளத்தை பெற்றுக்கொண்டு வீடுதிரும்பும் ஊடகவியலாருக்கு தங்கள் எழுதிய கருத்துக்கள் பற்றி மக்கள் என்ன நினைத்தார்கள் என்பது பற்றி அக்கறை இல்லை. இந்த இதய சந்திரன், நீங்கள் கூறியவ்ற்றின்படி, யாரும் ஏற்றாமல் பப்பாமரத்தில் தானாகவே எறி விழுந்த வேதனையையை காட்டுவது போலிருக்கு அவரின் இந்த எழுத்து. அவர் தான் எழுதுவதை கருத்துக்களம் ஒன்றில் பத்திந்து வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றால் திருந்திவிடுவார் என்றும் வைத்துகொள்ளலாம்மானாலும் சிக்கலுமிருக்கு.

 

மற்றவர்கள் தலைவரின் பிரதிநிதிகளாக மாறி கிளிநொச்சி மகாநாட்டில் பதில் சொல்லுவதாக குற்றம் சாட்டுகிறார். அவரின் தனி ஆசை என்ன என்று விள்ங்கவில்லை. ஆனால் எந்த இடைஞ்சலிலும் "cool" ஆக நடந்து கொள்ளும் தலைவருக்குகாக இனிமேல் இதயசந்திரன் பதில் அளிக்க விரும்பினால் இப்படி தூக்கி அடிக்காமல், முதிர்ச்சியாக எழுதப் பழக வேண்டும். திரும்ப திரும்ப தனக்கு "அவர்களை" பற்றி தெரியாது என்று யாரையோ பற்றி எழுதியிருக்கிறார். தலைவர் ஒரு திட்டத்தை போட்டால் தான் அதில் சம்பந்தபட்ட விடையங்களை முழுவத்தாக தான் விள்ங்கிய பின்னர் தான் வெளியே மற்ற்வர்களுக்கு சொல்ல வருவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை வைத்துப் பார்த்தால் இதயச்சந்திரன் கிளிநொச்சி போக இன்னமும் நிறைய வளர இருக்கு. இப்போதைக்கு இருக்கிற இடத்தில் இருப்பது சௌக்கியம். கருத்துக்களங்கள் கூட கஸ்ட்டமான இடங்களாக இருக்கலாம்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.