Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னாட்சி உரிமையில் உறுதியாக உள்ளதை வாக்குகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் - சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன்னாட்சி உரிமையில் உறுதியாக உள்ளதை வாக்குகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் - சித்தார்த்தன்
[ புதன்கிழமை, 11 செப்ரெம்பர் 2013, 08:22 GMT ]


வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வெற்றியை அளிப்பதன் மூலம், நாம் ஒரு தோற்றுப்போன இனமல்ல என்பதையும், தன்னாட்சி உரிமையில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் சிறிலங்கா அரசுக்கும், எம் மீது அக்கறை காட்டுகின்ற நாடுகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு என்று புளொட் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் சங்க கேட்போர் கூடத்தில், கொழும்பில் வாழும், யாழ்.மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடலில் கடந்த 5ம் நாள் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வட மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது.

நீண்டகால இழுத்தடிப்புக்குப் பின்பு,அனைத்துலக அழுத்தங்களினால் நடத்தப்படவுள்ள இந்தத் தேர்தலின் முடிவை பல நாடுகள் உன்னிப்பாக அவதானித்தபடி உள்ளன.

எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பாரிய வெற்றி ஒன்றைப் பெறுவதை தமிழ் பேசும் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இதன் மூலமாகவே, தாம் ஒரு தோற்றுப்போன இனமல்ல என்பதையும், தங்களுடைய தன்னாட்சி உரிமையைத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் உறுதியாக வலியுறுத்துகிறார்கள் என்பதையும், சிறிலங்கா அரசுக்கும், எம் மீது அக்கறை காட்டுகின்ற நாடுகளுக்கும் நாம் தெளிவுபடுத்த முடியும்.

எனவே, வாக்குரிமையுள்ள ஒவ்வொரு வடமாகாணத் தமிழனும் செப்ரெம்பர் 21ம் நாள் அந்த உரிமையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அது அவர்களுடைய வரலாற்றுக் கடமை.

1987ம் ஆண்டு, இந்திய – சிறிலங்கா உடன்படிக்கை கையெழுத்திடப்படுவதற்கு முன்னதாக தமிழ் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய எங்களை அழைத்து அந்த ஒப்பந்தத்தின் நகலை ராஜீவ்காந்தி அவர்கள் வழங்கினார்.

அதனைப் படித்துப் பார்த்ததன் பிரகாரம் அந்த உடன்படிக்கையின் வாயிலாக உருவாக்கப்படவிருந்த மாகாணசபை முறை தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பூர்த்தி செய்யாது என்பதை நாம் கண்டறிந்தோம்.

அந்த விடயத்தை ராஜீவ்காந்தியிடம் அப்போதே நாங்கள் மிகத் தெளிவாக தெரிவித்துமிருந்தோம்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ராஜீவ்காந்தி, 13வது திருத்தச் சட்டத்தை ஒரு ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொள்ளும்படியும், படிப்படியாக அதனைப் பலப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

ஆனாலும், மாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்ந்தும் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே.

இப்போது கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு – அப்போது அரைகுறையாக இருந்த அதிகாரங்கள் கூட பறிக்கப்பட்டு, வடக்கும் கிழக்கும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

நாங்கள் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாவிட்டால் நிச்சயமாக இந்த மாகாணசபை அதிகாரம் அரச கட்சிக்குச் செல்லும்.

மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சியே மாகாண சபையையும் ஆளுமானால், மாகாண சபை முறைமையில் இருக்கின்ற குறைபாடுகளும், அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வகையிலும் பூர்த்தி செய்யவில்லை என்ற விடயமும் நிரூபிக்கப்பட முடியாமல் போய்விடும்.

எனவே இந்த நிரூபணத்தை நடைமுறையில் காட்டுவதற்காக இந்த மாகாணசபைத் தேர்தலில் நாம் போட்டியிட்டே ஆக வேண்டும்.

போட்டியிடுவது மட்டுமல்ல, அதில் நாம் மகத்தான வெற்றியையும் பெற வேண்டியது கட்டாயமாகும்.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மிகவும் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்தால் தான், தமிழ் மக்களின் கோரிக்கைகளை தம்மால் நியாயப்படுத்த முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தம்மால் தடுத்துவிட முடியாதென்பதை பல தடவைகள், பல சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே தெரிவித்திருக்கின்றார்.

இருந்தாலும், சிறிலங்கா அரசாங்கம் இப்போது எடுக்கும் கடும் முயற்சிகள் எல்லாமே கூட்டமைப்பு பெறக்கூடிய மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மையைத் தடுப்பதற்கான முயற்சிகளே.

அந்த முயற்சிகளின் அங்கமாகத் தான் பல கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் அரசாங்கம் களமிறக்கியுள்ளது.

இதன்மூலம் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து, மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மை வெற்றியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுவதை தடுப்பதற்கான கடும் பிரயத்தனங்களை அரசாங்கம் செய்து வருகின்றது.

அதனால், வாக்குரிமை உள்ள ஒவ்வொரு வட மாகாணத் தமிழரும் – குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத் தமிழர்கள் சிரமங்களைப் பொருட்படுத்தாது தங்களது வாக்குகளை கட்டாயமாகச் செலுத்த வேண்டும்.

வட மாகாணத்தில் இருக்கின்ற இராணுவ ஆதிக்கம், நிலப்பறிப்பு, பௌத்த மயமாக்கல், காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள் என்றவாறாக – தமிழ் மக்களின் சார்பில், அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லுகின்றது.

வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாதவிடத்து தமிழ் மக்களின் சார்பில் கூட்டமைப்பு முன்வைக்கும் நிலைப்பாடுகள் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அவை எவையுமே தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறாதவை என்றும் மகிந்த அரசு அனைத்துலகத்துக்கு கூறிவருவது சரியானதே நிரூபிக்கப்பட்டு விடும்.

அதனால், வட மாகாணத் தமிழர்கள் யாவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் “வீடு” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது கட்டாயமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

தி. பரந்தாமன் (வழுதி) தலைமையில் 3 மணி நேரம் வரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் - பொருளியல் விரிவுரையாளர் வரதராஜன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டு வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பான தமது கருத்துக்களை வழங்கினர்.

http://www.puthinappalakai.com/view.php?20130911109026

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.