Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன உறவுகளை தேடுவது என்பது பசில் ராஜபக்ஸவின் பார்வையில் சுயநல அரசியலா?

Featured Replies

"அப்படியானால் காணாமல் போன தந்தையை தேடி அழுது கொண்டிருக்கும் 3 பெண் குழந்தைகளின் தாய் என்ற வகையில் கணவரது வருகை எனக்கு சுயநலம் மிக்கது ஒன்றே"

Elilan%202_CI.jpg

இலங்கை அரசு ஒரு புறம் நீதியானதும் நேர்மையானதுமானதேர்தல் பற்றி கதைக்கின்றது.அரசின் முக்கிய அமைச்சரானபஸில் ராஜபக்ஸவோ காணாமல் போனோர் பற்றி கதைக்கவேண்டாமென்கிறார்எங்கள் குடும்பத் தலைவர்களை எங்கள்குடும்ப உறவுகளை பற்றி கதைப்பது சுயநல அரசியல்நோக்கமென்கிறார்இவ்வாறெல்லாம் ஞானோபதேசம்செய்துவிட்டு இரவு ஆட்களை விட்டுத்தாக்குகிறார்கள்.இதுவோ அவர்களது ஜனநாயக அரசியல் என கேட்கவிரும்புகின்றேன்.

நாங்கள் எவருமே காணாமல் போனவர்களிற்காக தேர்தல்காலத்தில் மட்டும் குரல் எழுப்பவில்லையாழ்.குடாநாடுபடையினரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட 1996 ம்ஆண்டு காலப்பகுதி தொடக்கமாயினும் சரி  அதே போன்றுவன்னி படையினரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட 2009மே 19 இன் பின்னரும் சரி ஆயிரமாயிரம் தமிழ் குடும்பங்கள்காணாமல் போன உறவுகளிற்காக இந்நிமிடம் வரை குரல்எழுப்பிக் கொண்டிருக்கின்றன.  எமக்கான  நீதி கிடைக்கும்வரை  இந்தக்குரல்கள்  ஓயப் போவதுமில்லை.

அனந்தி  சசிதரனாகிய  நான் பல தடைவைகளாக எனதுநிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளேன்அரசியலுக்குஅப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் உறவுகளிற்காகஎவருமே குரல் தர முன்வராத நிலையில் பாதிக்கப்பட்டவள்என்ற அடிப்படையில் ஏனையவர்களையும்இணைத்துக்கொண்டு குரல் எழுப்ப நான் முன்வந்திருந்தேன்.

இத்தேர்தலில் வெற்றி தோல்வி என்பதற்கப்பால் காணாமல்போனோருக்காக குரல் எழுப்புவதென்பது எனது வரலாற்றுக் கடமையாகும்எமது குரலிற்கான ஓர் அங்கீகாரத்தைபெற்றுக்கொள்ளவே இத்தேர்தல் களத்தில் குதிக்க நான் முடிவுசெய்திருந்தேன்அமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறுவது போலகாணாமல் போனோர் பற்றி கதைப்பது சுயநலமென்ற கருத்தில்எனக்கு அதில் ஒருபகுதி உடன்பாடுண்டுஏனெனில் காணாமல்போயுள்ள தமது தந்தையை தேடி அழுது நாள் தோறும் கொண்டிருக்கும் மூன்று பெண் குழந்தைகளினது தாய் என்றவகையில் எனது கணவரது வருகை எனக்குசுயநலமிக்கதொன்றேஎன்னைப்போன்றே ஏனைய பெண்களும்தங்களது குழந்தைகளிற்காக காத்திருப்பர்.

தாக்குதல்களை நடத்துவதாலோ மிரட்டல்களை விடுப்பதாலோஎன்றுமே எனது குரல்களை ஒடுக்கிவிடமுடியாதுஎமதுஉறவுகளது வருகைக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்.அச்சமூட்டல்களும் தாக்குதல்களும் உணர்வுகளை முடக்கிவிட முடியாதென்பதை மீண்டு மொருமுறை இப்போதும் சுட்டிக்காட்ட  விரும்புகின்றேன்.

எம்மீது யாழ்.நகரின் ஜந்து சந்தியில் நடத்தப்பட்ட தாக்குதல்தொடர்பில் கூட்டமைப்பின் தலைமைக்கும் தேர்தல்ஆணையாளருக்கும் புகார் செய்துள்ளேன்அப்பட்டமாக பின்தொடர்ந்து வந்து அத்தகைய தாக்குதல்களை நடத்துபவர்கள்யாரென்பது தொடர்பில் எவருக்கும் சொல்லிதரவேண்டியதில்லை.

நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடக்கப் போவதில்லை என்பதை மீண்டுமொரு முறை இத்தாக்குதல்அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றதென்பதை  சுட்டிக்காட்ட நான்  விரும்புகின்றேன்.

 

நன்றி

அனந்தி சசிதரன்

(எழிலன்)

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96393/language/ta-IN/article.aspx

 

ஏன் விதவைகள் கட்சியிடம் பசில் இந்த கேள்வியை கேட்கவில்லை. ஏன் எனில் அது அவரின் திரை மறைவு இயக்கம் என்பதால்தானே.

 

அனந்தி  தனது குடும்ப பிரதிநிதி மட்டுமல்லஅல்ல. தமிழர் பிரதிநிதி.

 

காணாமல் போனவர்களுக்குக்கான நீதியை தேடுவதின் மூலம்தான் இனச்சமத்துவம் இன ஐக்கியம் ஏற்படும் என்பதுதான் தமிழர்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.

 

இதில் அனந்தியை பிரித்து என்ன காணப்போகிறார் பசில். அதில் அரசியல் ஒன்றும் இல்லை என்றால் சர்வதேச தொண்டர் நிறுவனங்களை ஏன் தேட அனுமத்திக்க கூடாது. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.