Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்ஸவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ஸவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...

30 செப்டம்பர் 2013


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸ்வரி...



வடமாகாண சபைக்கான போனஸ் ஆசன இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 நாட்களுக்கு பின்புதான் இந்த மகா இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

அதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று மன்னாரில் போட்டியிட்ட முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கு என்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி முடிவாகி உள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதே. மன்னாரில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அயூப் அஸ்மிக்கு இந்த ஆசனம் கிடைத்துள்ளது. இனத்துவ முரண்பாடுகள் நிலவும் நாடுகளில் முதலாவது பெரும்பான்மைத் தேசிய இன ஆட்சியாளர்கள் இரண்டாவது 3ஆவது சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இடையில் பகைமையை வளர்த்து முட்டி மோதவைத்து அதில் குளிர் காயும் நிலை தொடரும் நிலையில் இரண்டு தசாப்தங்களாக தொடரும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கிடையிலான பிழையான புரிதல்களை தணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இதனைக் கொள்ளலாம்.

அதனாற்தான் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுதாரணத்தை இப்படிக் கூறுகிறார்....

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு வழங்க முன் வந்துள்ளமை பாராட்டுக்குரியது

தேர்தல் காலத்தில் பெரிய கட்சி சிறிய கட்சிகளுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என்ற முன்மாதிரைியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காண்பித்துள்ளது'

'தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு வழங்க முன்வந்தததை நான் வரவேற்கின்றேன். குறிப்பாக தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளை நிறைவேற்று வதில்லை. எமது கட்சியும் ஆரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாடுகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை'

இவ்வாறான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு போனஸ் ஆசனத்தை வழங்கியதன் மூலம் தனது உறுதிமொழியை காப்பாற்றியுள்ளது. இது பெரிய கட்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் பாடமாகவும் உள்ளது. அத்துடன் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் சிறிய கட்சிகள் மேல் மக்கள் நம்பிக்கை வைப்பர். இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிமொழியை நிறைவேற்றி தமிழ் மக்களின் பாரம்பரியத்தை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.'

இந்தக் கருத்து மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் தெரிவித்த முக்கியமான கருத்து.

மற்றைய போனஸ் ஆசனம் தமிழர் விடுதலைக்கூட்டணியில் முல்லைதீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியினை தழுவிய மேரிகமலா குணசீலனுக்கு 1 வருடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 வருடங்களுக்கு பிராந்திய மற்றும் கட்சி அடிப்படையில் சுழற்சி முறையில் நால்வருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த முடிவு எடுப்பதற்கு நீண்ட விவாதம் தொடர்ந்த அதேவேளை பலருக்கு அது குறித்து இன்னுமே திருப்தி ஏற்படவில்லை.

மறுபுறம் கூட்டமைப்பு கட்சிகளிடையே அமைச்சுக்களை பகிருதல் என்பதிலும் இழுபறி தொடர்கிறது. இருப்பதோ முதலமைச்சருடன் 5 அமைச்சுக்கள். அவரைத் தவித்தால் 4 அமைச்சுக்கள். இந்த அமைச்சுக்களை யார் யாருக்கு பகிருதல் என்பதில் நீண்ட வாதப் பிரதி வாதங்கள் தொடர்கின்றன. கூட்டமைப்பில் 5 கட்சிகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. அதில் மகாண சபையில் 4 கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளுமே மக்களின் ஆதரவை பெற்றுள்ளனர். அதிகமான விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சுப் பதவி என 4 அமைச்சுக்களை பகிர்ந்துகொள்வதே கூட்டமைப்பின் இலக்கணத்திற்கு பொருத்தமுடையது. (முதலமைச்சரிடம் 3 அமைச்சுக்கள் செல்கின்றன. மேலதிகமாக 1 அமைச்சசையும் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொள்கிறது. ஏனைய 3 கட்சிகளுக்கும் தலா ஒரு அமைச்சு.) இந்த நிலையில் கூட்டமைப்பில் கட்சிகளை இணைத்த பின்பு 'நான் பெரிது நீ பெரிது, நீ முன்பு அப்படிச் செய்தாய் இப்போ இப்படிச் செய்கிறாய், நான் அப்பவும் இப்பவும் இப்படி இருக்கிறேன்' என்றெல்லாம் உள்வீட்டுச் சண்டை பிடிப்பது கூட்டமைப்பு என்பதற்கும் ஒற்றுமை என்பதற்கும் பொருத்தமான விடயங்களாக இருக்க மாட்டாது.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த போது கூட அவர்களின் உந்துதலில் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள்; ஒருகாலத்தில் தமக்கு பரமவைரிகளாக இருந்தும் சம அந்தஸ்த்தை வழங்கியிருந்தார்கள். (இன்னும் ஒருசில கட்சிகளை இணைப்பதற்கு சாத்தியக் கூறுகள் இருந்த போதும் ஒரு சிலரின் சதியால் அப்போது அவை வெளித்தள்ளப்பட்டன என்பது வெளிவராத உண்மைகள்.) என்பதனை அனைவரும்; புரிந்துகொள்ள வேண்டும்.

உண்மையில் இன்று எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் விரும்புவது ஒற்றுமையுடன் கூடிய பலமான அரசியல் சக்த்தியை. அதனால் தான் அரை நுற்றாண்டுகளுக்கு மேல் கொழும்பில் வாழ்ந்து திடிரென வடபகுதி மக்களிடம் சென்று தேர்தலில் குதித்த சீ.வீ விக்னேஸ்வரனுக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்திக்கும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்திற்கும், சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய சகோதரர் சர்வேஸ்வரனுக்கும், கஜதீபனுக்கும், சீவீகே சிவஞானத்திற்கும், ஐங்கரநேசன் என இன்னும் பலருக்கும் ஒரு கலவையாக மக்கள் வாக்களித்திருந்தனர்.

இந்த வாக்களிப்பில் அரசியல் குடும்பப் பின்னனிகளும் தனிப்பட்ட ஆளுமைகளும் விருப்பு வாக்குகளில் குறிப்பட்ட செல்வாக்கை செலுத்தினாலும் கூட மக்கள் கூட்டமைப்பிற்கு அதன் ஒற்றுமைக்கே வாக்களித்தார்கள் என்பது முள்ளிவாய்க்காலுக்கு பின் நடந்த பல தேர்தல்களும் ஏன் முள்ளிவாய்க்காலுக்கு முன் நடந்த தேர்தல்களும் நிரூபித்திருக்கிறார்கள்.

இதனைத் தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தனது தோல்வியின் பின் சொல்லும் போது ' ஒரு தடியை நட்டுவிட்டு அது கூட்டமைப்பு என்று சொன்னாலும் மக்கள் வாக்களிப்பார்கள்' என்று. இதற்கு பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், ஆனந்தசங்கரி தமைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தல் களத்தில் போட்டியிட்டு இருந்தால் யாழ்ப்பாணத்திலும்;, வவுனியாவிலும் தலா 1ஆசனங்களை கைப்பற்றி இருக்கமுடியும். அவ்வாறாயின் போனஸ் ஆசனமும் அதிகரித்திருக்கும். ஆனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதனால் அந்த 2 ஆசனங்களும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குச் சென்றது.

இம்முறை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தவிர (இணையாவிட்டாலும் மக்களை வாக்களிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை) ஏனைய கட்சிகள் இணைந்தமையினால் இந்த அறுதிப்பெரும்பான்மை பெறப்பட்டது என்பதனை விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நன்கு விளங்கிக் கொண்டவர்கள் புரிந்து கொள்ள முடியும். இந்த விடயங்களை புரிந்து கொண்டால் எதிர்காலத்தில் இளம் ரத்தங்களாக வீறுடன் செயற்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்தப் பொதுவான கூட்டமைப்பில் குறைந்த பட்ச உடன்பாடுகளுடனாவது இணைய வேண்டும்.

அதனை விடுத்து சுய அரசியல் லாபங்களுக்காகவும், தமது இலக்குகளை அiடைவதற்காகவும் தமிழ் மக்களையும் அவர்களது தியாகங்களையும் இழப்புகளையும் மறந்து ஏற்கனவே கூட்டமைப்பில் இணைந்திருக்கும் கட்சிகளையும் வெறுப்பூட்டி துரத்தும் நடவடிக்கைகளில் உள்ளிருக்கும் அரசியல், ஊடக, புத்திஜீவித்தனமான ஜாம்பவான்கள் முனையக் கூடாது.

ஒருமுறை அல்ல அண்மையியிலும் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அல்ஜசீராவுக்கு வழங்கிய செவ்வியில் கூட 'உலகிலேயே பல கட்சிகளை பல சித்தாந்தங்களை கொண்ட அரசியல் கூட்டமைப்பை எமது நாட்டில்தான் எனது தலைமையின் கீழ்தான் பார்க்கலாம்' என தெரிவித்திருக்கிறார். அதனைக் கேட்டுப் பாருங்கள். அதாவது மாக்ஸிஸவாதிகள் அவர்களிலும் சோவியத் சார்பு சீனசார்பு மாக்ஸிஸ்டுக்கள், கடும்போக்குவாதிகள், மலையகக் கட்சிகள், முஸ்லீம கட்சிகள், விடுதலைப் புலிகளில் இருந்து சென்றவர்கள்; என பலதரப்படரவ்களை இணைத்து வைத்திருப்பதோடு, அவர்களுக்கு கபினட் அமைச்சுக்களையும், பிரதி அமைச்சுக்களையும்; வழங்கியிருப்பதாகவும் ஒவ்வாருவரும் கட்சிகளும் தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டு இருந்த போதும் மகிந்த சிந்தனையை ஏற்று இருக்கிறார்கள் என இன்னுமொரு செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் இணைந்திருக்கும் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸவிதாரண, டீயூகுணசேகர, விமல்வீரவன்ஸ, சம்பிக்க றணவக்க, அத்தாவுல்லா, ஹிஸ்புல்லா, ரிஸாத்பதியுதீன், முன்னர் பேரியல் அஸ்ரப், இப்போ ஹக்கீமோடு முரண்பட்டு நிற்கும் பசீர் சேகுதாவுத் ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சிகளின் பலத்தின் அடிப்படையிலோ மக்களின் செல்வாக்கின் ; அடிப்படையிலோ, அவர்கள் முன்னர் என்ன செய்தார்கள் என்ற அடிப்படையிலோ இந்தப் பதவிகள் வழங்கவில்லை. தன்னை ஆதரித்து தன்னுடன் இணைந்தமைக்காக தனிக்கட்சிகளாக நின்றால் சொற்ப வாக்குகளை எடுக்க முடியாத இவர்களுக்கு பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்.

மறுபுறம் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு பிரதி அமைச்சர் பதவி, பிள்ளையானுக்கு முன்னர் முதரமைச்சர் பதவி, இப்போ ஜனாதிபதி ஆலோசகர் பதவியை மகிந்த வழங்கியிருக்கிறார். இவர்கள் புலிகளுடன் இருக்கும் போது அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எவ்வளவு தலைவலியை கொடுத்திருப்பார்கள்? ஒரு காலத்தில் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் சிம்மசொப்பனமாக இருந்த கேபீக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. முதன் முறையாக அண்மையில் செஞ்சோலையில் அருகருகே நின்று படம் எடுத்துக்கொண்டார் மகிந்த. காரணம் கேபியின் மூலம் அவரது அறிக்கையின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தின் மூலம் வன்னியில் ஒரு சிறு வெற்றியைப் பெற்றாலும் கூட சிறப்பானதே என அவர் கருதுகிறார்.

எக்காலத்திலும் ஒரு கோட்டில் சந்திக்க முடியாது என்று இருந்த பரம எதிரிகளையே ஒரு கூட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சங்கமமாகவைத்திருக்கிறார். இப்போ அந்த கூட்டில் மகிந்தவுடன் சங்கமித்ததனால் சிறு சிறு கட்சிகளின் பேச்சை கேட்க முடியவில்லை.

இந்த உதாரணங்களோடு இறுதியாக தயாசிறி ஜெயசேகரவை சேர்த்துக்கொள்ள வேண்டும். சில வருடங்களுக்கு முன் அரசாங்கத்திற்கும் மகிந்த சகோரர்களுக்கும் எதிரான ஆயுதமாக தயாசிறி ஜெயசேகரவை ஐக்கியதேசியக் கட்சி பயன்படுத்தி இருந்தது. அவர் நடத்திய ஊடக சந்திப்புக்களில் மகிந்த சகோதரர்களையும் அரசாங்கத்தையும் எப்படி நார் நாராக கிழித்திருப்பார் என்பதனை அவரது ஊடக மகாநாடுகளுக்கு சென்றவர்களுக்கு தெரியும். ஆனால் அவரரை உள்ளீர்த்து முதலமைச்சர் வேட்பாளராக்கி தன்னருகே வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. இத்தகைய நடவடிக்கைகளின் போது மற்றயவர்களின் விமர்சனங்களை அவர் கணக்கில் எடுப்பதில்லை.

ஆனால் அரை நுற்றாண்டுகளுக்கு மேல் இரண்டாம்தரப் பிரஜைகளாக்கப்பட்டு 3 தசாப்பகால ஆயுதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளை காவுகொடுத்து, இறுதியில் முள்ளவாய்காலில் பதைபதைக்க துடிதுடிக்க லட்சக்கணக்கான எங்கள் மக்கள் பலியெடுக்கப்பட்ட பின்பும்.... அந்த வலிகளை சுமந்து கொண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மேல் இனியும் சவாரி செய்வதனை போல வேறு அபத்தம் உலகில் இருக்க முடியுமா?

ஓவ்வொருவரும் உங்கள் மனச்சாட்சியை நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் கிடைத்த அறுதிப்பெரும்பான்மை தனிப்பட்ட கட்சிகளுக்கு அல்லது தனிப்பட்ட தலைகளுக்கு கிடைக்கப் பெற்றதா? பல்வேறு உள்வீட்டுக் குத்துவெட்டுகளிடையேயும் ஒற்றுமையாக நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அந்த குறியீட்டுக்கு கிடைத்த வெற்றியே அறுதிப் பெரும்பான்மை. அந்தக் குறியீட்டை விட்டு வெளியில் சென்று எத்துணை செல்வாக்கு, ஊடக பலம், பணபலம் என அனைத்தையும் வைத்து தேர்தலில் போட்டியிட்டுப் பாருங்கள் மக்கள் என்ன சொல்வார்கள் என்று...

ஆக இனிவரும் காலங்களிலாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சாணக்கியத்தை பார்த்து சிறிய பெரிய கட்சிகள், செல்வாக்கு உள்ளவர்கள் செல்வாக்கு அற்றவர்கள், முன்னர் என்ன செய்தார்கள் இப்ப என்ன செய்கிறார்கள் என்ற விடயங்களை உங்கள் சொந்த நலன்களுக்கான கவசங்களாக அணியாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...

ஒரே கூட்டமைப்பாக இருந்து கொண்டு ஒவ்வொரு கட்சிகளைப் பற்றியும், அந்தக் கட்சிகளில் உள்ளவர்களைப் பற்றியும் மொட்டைக் கடிதங்களும், பொய்யான பெயர்களில் அறிக்கைகளும், ஊடக பலத்தை கையில் வைத்துக்கொண்டு புளொக்குகள், சமூக வலைத்தளங்கள், இணையங்களில் சேறடித்து பேரம் பேசும் அரசியலை செய்தாதீர்கள்...

முரண்பாடுகள் விமர்சனங்கள் இருந்தால் மாதத்தில் ஒருமுறை கூடும் உட்கசிக் கூட்டங்களில் பரஸ்பரம் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வையுங்கள். இல்லை கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஒவ்வாருவரும் அக்னிப்பிரவேசம் செய்து தங்களை தூய்மையானவர்களாக நிரூபிக்க வேண்டும் என்றால் அனைவரும் கடந்த காலத்தை முழுமையாக மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி கட்சி, பதவி, தராதரம் பாராது சுயவிமர்சனத்தை செய்யுங்கள்.. மக்கள் சரியானவர்களை இனம்காணட்டும்... மாறாக ஒவ்வாருவரும் நீங்கள் தூய்மைவாதிகள் என்றும் மற்றவர்கள் கழிசடைகள் என்றும் சான்றிதழ்கள் வழங்காதீர்கள்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை தெளிவாக ஏற்று அதன்படி செயற்படுவார்களாயின் அவர்களையும் அரவணையுங்கள்..

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...

ஒன்றுமே இல்லாத மாகாண சபையின் வெற்றி என்பது யுத்தக் குற்றத்தை புரிந்த இலங்கை அரசாங்கத்திற்கும் அதனை வழி நடத்தியவர்களுக்கும் மக்கள் வழங்கிய, அவர்களால் இயன்ற உச்சபட்ச சாட்டை அடி என்பது மட்டுமே. எல்லாவற்றையுமே இழந்து நிர்கதியாகி உள்ள மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தமது வலியை, எதிர்ப்பை, வெறுப்பை வெளியிட இருந்த இருக்கும் ஒரே ஆயதம் வாக்கு மட்டுமே அதனால் அதன் மூலம் தமது உயர்ந்த பட்ச எதிர்ப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த மகாகாண சபையினூடு இனி எதிர்கொள்ளப் போகும் சவால்களை இப்போ வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்படி இருக்க இதனை பெரிய வெற்றி விழாக்களாகவோ, கேளிகைக் கொண்டாட்டங்களாகவோ, பெருமெடுப்பிலான பதவியேற்பு வைபவங்களாகவோ கொண்டாடுவது சரியானதா?

புதவிப் பிரமானம் எடுப்பது என்பது அரசியல் அமைப்பில் அவசியமானது... ஆனால் மாகாணசபை பதவிப் பிரமாணத்தில் ஜனாதிபதி முன்னிலையிலும் பதவிப்பிரமாணம் செய்யலாம் எனக் குறிப்படப்பட்டு உள்ளது. அது கட்டாயமான விதி அல்ல. தெற்கில் கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட மகாண முதலமைச்சர்கள் தமது கட்சியின் தலைவரின் ( உத்தியோகபூர்வமற்ற பலம்வாய்ந்த கட்சித் தலைவர ஜனாதிபதி) முன்னிலையில் நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுப்பது அவர்களது விருப்பம் தவிர்க்க முடியாதது.



ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஐக்கியதேசியக் கட்சி முன்னர் மாகாண சபைகளை வெற்றி கொண்ட போது எக்காலத்திலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் காலத்திலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்ததாக வரலாறு இல்லை. அப்படி இருக்கும் போது வலிந்து போய் ஏன் முன்னாள் நீதிஅரசரும் இன்நாள் முதலமைச்சரும் மாகாண பிரதிநிதிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா?

3 தசாப்பத் கால பேரழிவு யுத்தம் நடந்த நாட்டில் நல்லிணக்கம் அவசியம் ஆனால் சுயமரியாதையை இழந்து அடிமைகளாக மாறுவதோ, அதற்கு நிர்பந்திக்கப்படுவதோ நல்லிணக்கம் அல்ல. ஜனாதிபதியின் முன் சத்தியப் பிரமாணம் செய்வதன் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் முதலில் பாதிக்கப்பட்டவர் அல்ல பாதிப்பை ஏற்படுத்தியவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மாறாக வடக்கு மக்களின் தீர்ப்பின் பின்பும் 'கூட்டமைப்பை அழிக்க வேண்டும், சீவீ விக்னோஸ்வரன் பயங்கர வாதி, பிரபாகரனை விட பயங்கரமானவர், அவரை சிறையில் அடைக்க வேண்டும், வெள்ளவத்தையில் இருந்து மட்டக்குழி வரையும் நந்திக்டல் ஆகும் என பச்சை இனவாதத்தை விதைக்கும் காடயர்களை தனது அமைச்சரவை அமைச்சர்களாக வைத்திக்கொண்டு அவர்களை கட்டுப்படுத்தாத ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்ப்பதுதான் நல்லிணக்கம் என்றால் மக்களின் உணர்வுகளை மிதித்து அலரிமாளிகையில் அல்லது அவரை யாழ் அழைத்து மண்டியிட்டு சத்தியப் பிரமாணம் செய்யமுடியும்.

உலகமும் மனித உரிமைகள் அமைப்புகளும், ஊடகங்களும் வன்னியில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தி அதற்கு நிவாரணம் தேடும் இந்தக் காலக்கட்டத்தில் மக்களின் அணையைப் பெற்ற கூட்டமைப்பு வலிந்து ஜனாதிபதியின் முன் மண்டியிட்டால் அதனை தனக்கு சாதகமான அரசியல் ஆயுதமாக மகிந்தராஜபக்ஸ உலகத்திற்கு காட்ட முயலமாட்டாரா?

தனது மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதற்காக உலக மரபுகளையே தூக்கி வீசி தன்னை தனது மக்களின் காவலராக பலமுறை நிரூபித்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. ஐநாவினுடைய செயலாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை அவமதிக்க வேண்டும் என்பதற்காக அவரது பிரசன்னத்தின் போது நாட்டை விட்டு வெளியேறி மேற்குலகின்; கடுமையான விமர்சனங்களைக் கொண்ட பெலாரசிற்கு மகிந்தராஜபக்ஸ சென்றார். தனது கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியாவிடின் அதனை தனது சகாக்களின் மூலம் சொல்ல வைத்து தான் அவமதிக்க வேண்டியவர்களை அவமதிப்பார். உலகின் கண்டனங்களையும் தாண்டி அதனை ஐநாவினுடைய செயலாளர் நாயகம் நவநீதம் பிள்ளைக்கு செய்து காட்டினார்.

இதன் கருத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ செய்கின்ற அநாகரீகமான வேலைகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதல்ல. ஆனால் ஆட்சியாளர்கள் தங்களின் மக்களுக்கு அவர்களின் உணர்வுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்தாவது பல தசாப்தங்களாக உயிராக, ரத்தமாக, வியர்வையாக, பிள்ளையாக, கணவனாக, மனைவியாக, தாயாக தந்தையாக, உறவுகளாக, தேடிச் சேர்த்த சொத்துக்களாக, கட்டி வளர்த்த பாரம்பரியமாக, காணி நிலங்களாக இழப்பதற்கு எதுவும் இல்லமால் உணர்வுகளையும் தாரைவார்த்து தந்ததன் பின்புதானும் அந்த மக்களின் உணர்வுகளை மதியுங்கள்....

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸ்வரி...

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97121/language/ta-IN/article.aspx

கட்டுரை பல இடங்களில் சரியான கருத்துக்கள் பலவற்றை தொட்டு செல்கிறது. ஆனால் ஆட்சியில் ஏறமுதல் "அந்த மக்களின் உணர்வுகளை மதியுங்கள்...." என்று கூட்டமைப்பை போட்டுத்தள்ளுகிறது. அதற்கெல்லாம் இப்போது என்ன ஊழிக்கால அவலத்தை கூட்டமைப்பு கொண்டுவந்து விட்டது என்பதை பற்றி வாயே திறக்கவில்லை.

 

வடக்கில் மாகாண சபையை மகிந்த திறக்கத்தான் வேண்டும் என்று எங்கும் சட்டத்தில் சொல்லியில்லை. அவர் மாகாணசபை ஆரம்பித்து வைப்பாரா இல்லையா என்பது, அவர் தேர்தலை நடத்துவாரா என்ற கேள்வியை விட மாறுபட்டதில்லை. அதாவது வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்தால் விக்கினேஸ்வரன் தான் விரும்பிய இடத்தில் சத்தியப் பிரமாணம் செய்ய ஒரு மாகாண சபை அமைக்கப்படும். 

 

தலைப்பு வழமை போல தோவியை கண்டு துவள்கிறது. வெற்றியைகண்டு மலைக்கிறது. "மகிந்தாவிடம் உதாரணம் எடுங்கள்" என்றதிலும் பார்க்க, ஒவ்வொரு கரைக்கும் குறுக்கே இழுக்கும் 10,000 காடைகளை ஒன்றிணைத்து வாக்குகள் பெற்ற டக்கியிடம் உதாரணம் பெறுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அது தன்னினத்தை மதிப்பத்தாகதன்னும் இருந்திருக்கும். (டக்கி இன்று மகிந்தாவிடம் படும் அவதிகளையேதான் மகிந்த தனக்கு போருக்கு உதவிய நாடுகளிடம் படுகிறார்.) சுய நலத்துக்காக ஒன்றிணைந்தவர்களை போல சேவைக்காக, அதுவும் தமிழர்களை, ஒன்றிணைப்பது ஒன்றும் அவ்வளவு சுலபான காரியம் இல்லை.

 

தம்து கட்ட்சியில் இருந்து பிரிந்து கக்கீம், பதியுதின், பசி மகிந்தாவிடம் செய்த குற்றங்களுக்காக மண்டியிட்டு நிர்கிறார்கள். கக்கீமுக்கு முதல் பந்தி பத்வி கொடுத்தும் கூட அவர் சிறையில் இருப்பதும் பார்க்க, வெளீயில் இருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

 

"ஆக இனிவரும் காலங்களிலாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சாணக்கியத்தை பார்த்து சிறிய பெரிய கட்சிகள்" முதுகில் குத்துவதும், முடிச்சுமாறுவதும் செய்யும் மகிந்தவிடம் அரசியல் சாணக்கியம் இருப்பதாக ஏற்க முடியாது.  இது அரசியல் சாணக்கியம் என்ற சொல்லை, அரசியல் ராஜதந்திரம் என்ற சொல்லை பிழையாக சுத்து மாத்து, சுயநலம், வன்முறை என விளங்க்கிக்கொள்ளும் தவறு.

 

 

கட்டுரை இவ்வளவற்றையும் தவிர்த்திருந்தால் உண்மையான ஆராய்வு: 

"இந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் இணைந்திருக்கும் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸவிதாரண, டீயூகுணசேகர, விமல்வீரவன்ஸ, சம்பிக்க றணவக்க, அத்தாவுல்லா, ஹிஸ்புல்லா, ரிஸாத்பதியுதீன், முன்னர் பேரியல் அஸ்ரப், இப்போ ஹக்கீமோடு முரண்பட்டு நிற்கும் பசீர் சேகுதாவுத் ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சிகளின் பலத்தின் அடிப்படையிலோ மக்களின் செல்வாக்கின் ; அடிப்படையிலோ, அவர்கள் முன்னர் என்ன செய்தார்கள் என்ற அடிப்படையிலோ இந்தப் பதவிகள் வழங்கவில்லை. தன்னை ஆதரித்து தன்னுடன் இணைந்தமைக்காக தனிக்கட்சிகளாக நின்றால் சொற்ப வாக்குகளை எடுக்க முடியாத இவர்களுக்கு பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்.

மறுபுறம் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு பிரதி அமைச்சர் பதவி, பிள்ளையானுக்கு முன்னர் முதரமைச்சர் பதவி, இப்போ ஜனாதிபதி ஆலோசகர் பதவியை மகிந்த வழங்கியிருக்கிறார். இவர்கள் புலிகளுடன் இருக்கும் போது அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எவ்வளவு தலைவலியை கொடுத்திருப்பார்கள்? ஒரு காலத்தில் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் சிம்மசொப்பனமாக இருந்த கேபீக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. முதன் முறையாக அண்மையில் செஞ்சோலையில் அருகருகே நின்று படம் எடுத்துக்கொண்டார் மகிந்த. காரணம் கேபியின் மூலம் அவரது அறிக்கையின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தின் மூலம் வன்னியில் ஒரு சிறு வெற்றியைப் பெற்றாலும் கூட சிறப்பானதே என அவர் கருதுகிறார்.

எக்காலத்திலும் ஒரு கோட்டில் சந்திக்க முடியாது என்று இருந்த பரம எதிரிகளையே ஒரு கூட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சங்கமமாகவைத்திருக்கிறார். இப்போ அந்த கூட்டில் மகிந்தவுடன் சங்கமித்ததனால் சிறு சிறு கட்சிகளின் பேச்சை கேட்க முடியவில்லை.

இந்த உதாரணங்களோடு இறுதியாக தயாசிறி ஜெயசேகரவை சேர்த்துக்கொள்ள வேண்டும். சில வருடங்களுக்கு முன் அரசாங்கத்திற்கும் மகிந்த சகோரர்களுக்கும் எதிரான ஆயுதமாக தயாசிறி ஜெயசேகரவை ஐக்கியதேசியக் கட்சி பயன்படுத்தி இருந்தது. அவர் நடத்திய ஊடக சந்திப்புக்களில் மகிந்த சகோதரர்களையும் அரசாங்கத்தையும் எப்படி நார் நாராக கிழித்திருப்பார் என்பதனை அவரது ஊடக மகாநாடுகளுக்கு சென்றவர்களுக்கு தெரியும். ஆனால் அவரரை உள்ளீர்த்து முதலமைச்சர் வேட்பாளராக்கி தன்னருகே வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. இத்தகைய நடவடிக்கைகளின் போது மற்றயவர்களின் விமர்சனங்களை அவர் கணக்கில் எடுப்பதில்லை"

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.