Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைவேட்கையுடன் எழும் தேசம் மிகவும் பலம் வாய்ந்தது! - சோழ.கரிகாலன்(பகுதி 2)

Featured Replies

 

- சென்ற இதழின் தொடர்ச்சி

இள வயது முதலே பிரான்சின் காலனித்துவத்திற்கு எதிராகப் போராட ஆரம்பித்திருந்த என்குயன் கியாப் வியட்நாம் விடுதலைப் போரின் தந்தை என்றழைக்கப்படும் ஹோசிமின்னுடன் இணைந்தது காலணித்துவ அரசிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. எப்படியாவது மீண்டும் கியாப்பைக் கைது செய்து விட வேண்டும் என எண்ணியது.

விடுதலைப் போரை நடாத்தும் ஹோசிமின்னுடன் சட்டம் படித்த கியாப் இணைவது தமக்கான அபாயச் சங்கின் அடையாளம் என அறிந்த பிரெஞ்சு அரசு அந்தப் புலியைப் பிடிக்கமுடியாததால் அவர் வீட்டு மானிற்குப் பொறி வைத்தது. அவரது மனைவியைக் கைது செய்தது. மனைவியக் கைது செய்தால் கியாப் தானாக ஓடி வருவார் எனத் தப்புக் கணக்குப் போட்டது. ஆனாலும் நாட்டின் விடுதலையை தனது இலக்காகக் கொண்ட கியாப்பை இந்த உளவியல் வலைப் பொறி தடம் மாற்றவில்லை.

கியாப்பின் மனைவியான Quang Thai பிரபலப் புரட்சியாளனான தி மின் காயின் சகோதரி ஆவார். ஆனால் அவர் சிறைச் சாலையிலேயே சாவைத் தழுவிக்கொண்டார். இதேவேளை, 1944 இல் கியாப்பை அழைத்த ஹோ சி மின் கியாப் தலைமையில் படைகளைத் திரட்டிக் கொண்டு இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஊடுருவற் படைகளிற்கெதிராக யுத்தம் செய்யப் பணித்தார். அடுத்த வருடமே ஜப்பான் நேசப்படைகளிடம் சரணடையக் கியாப் மீண்டும் வியட்நாமின் விடுதலைக்காகப் பிரான்சிற்கெதிரான தனது யுத்தத்தைத் தொடங்கினார்.

கியாப் போர்முனைகளில் மிகவும் கடுமையானதும் கருணையற்ற போர்த்திட்டங்களையும் எதிரிகளுக்கெதிராக நடத்தினார். ஆனால் அதே நேரத்தில் களமுனைகளில் கூட ஒழுக்கமான கனவான்களின் ஆடையையே அணியவும் விரும்பினார். காற்சட்டையும் ரப்பர் காலணிகளும் அணிந்தபடி வியட்நாமின் பிதாமகர் ஹோ சி மின் போராடியபோதும் கியாப்  வெள்ளை உடையும் கழுத்துப் பட்டியும் அணிந்த படியே பலதடவைகளில் காணப்பட்டுள்ளார்.

Page%2015-2.jpgதியன் பியன் பு போரில் இவரது தந்திரேபாயப் படைநகர்த்தலின் மூலம் பிரெஞ்சுப் படைகளைச் சுற்றி வளைத்தபோது பிரெஞ்சு இராணுவம் திகைத்துத் திக்குமுக்காடிப் போனது. கனரகப் பீரங்கிகளைக் கடினமான பாதையினால் மலை உச்சிக்கு நகர்த்திச் சென்ற ஜெனரல் கியாப் பெரும் இரத்த வெள்ளத்தை ஏற்படுத்திய விடுதலைப் போரை ஆரம்பித்தார் கடுமையாக நடந்த 56 நாள் போர் 1954ம் ஆண்டு மே 7 பிரெஞ்சுப்படைகளின் சரணடைவோடு முடிவிற்கு வந்தது.

ஆனாலும் பிரெஞ்சுப்படைகளின் சரணடைவோடு ஜெனிவா ஒப்பந்தம் வியட்நாமினை வட வியடநாம், தென் வியட்நாம் எனக் கூறுபோட்டது. இதுவே ஒரு தசாப்தத்தின் பின்னர் அமெரிக்கர்களின் அடிவருடிகளான சைகோனிற்கு எதிராக அமெரிக்க-வியட்நாம் போர் ஆரம்பிக்கக் காரணமாகியது. இது பல மில்லியன் உயிர்களைப் பலியெடுத்தது. தமிழீழ மக்கள் சிறீலங்காவின் இனவெறி அரசின் இனப்படுகொலைக்குள் சிக்கிப் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் வீழ்ந்தபோது கண்களையும் கைகளையும் இறுகக் கட்டிக் கொண்டிருந்து விட்டு இன்று ஐ.நா சபை தமிழர்களைக் காக்க மறந்து விட்டது என்று கூறித் தன் வலுவின்மையைக் காட்டி நிற்கின்றது.

ஆனாலும் இந்த ஜ.நாவின் கூற்று மூலம் சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது இனப்டுகொலையைச் செய்ததை ஒருவகையில் ஜ.நா உறுதிப்டுத்தி உள்ளது. இதே ஐ.நா அமெரிக்காவின் வல்லாதிக் நலனிற்காக எடுத்த பிழையான முடிவே வியட்நாமைப் பிரித்து வைத்து ஒரு போரிற்கு மீண்டும் வழிகோலி கிட்டத்தட்ட மூன்று மில்லியனிற்கும் அதிகமான வியடநாமியர்கள் பலியாகக்க காரணமானது.

‘ஒரு தேசம் விடுதலை அடையவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டால் அத்தேசம் பெரும் வலுப்பெறுகின்றது. வியட்நாம் தேசமானது தனது சொந்த முயற்சியில் விடுதலைக்காக எழுந்து நின்று காலனித்துவத்திற்கு எதிரான முதல் சுதந்திரதேசமானது என்பதில் நான் பெருமையடைகின்றேன்’ என்று தியன் பியன் பு வெற்றியின் 50வது ஆண்டு நிறைவிற்கு முன்னர் 2004ம் ஆண்டு வெளிநாட்டு நிருபர்களிற்கு வழங்கிய செவ்விவியில் குறிப்பிட்டார். இதன் மூலம் உலகின் அடக்கப்பட்ட விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களிற்கெல்லாம் ஒரு தேசியத்தின் முழுமையான எழுச்சி எந்த அடக்குமுறைச் சக்தியையும் முறியடிக்கும் என்ற ஒரு பெரிய செய்தியைக் கூறி உள்ளார்.

போராட்டத்தில் முழுமக்களும் பங்கேற்றக வேண்டியதன் முக்கியத்துவத்தை இவரின் கூற்று வெளிப்படுத்துகின்றது. ஜெனரல் கியாப் தனது அனுபவத்தினை விளக்குவதன் மூலம் ஹோ சி மின் போர்ப்பாதையையே பின்பற்றி உள்ளார். காடுகளிற்குள் மறைந்திருந்த விடுதலைப்படைகளின் வலையமைப்பு அருகிலிருந்த நடுநிலை நாடுகளான கம்போடியா மற்றும் லாவோஸ்  ஊடாகத் தனது படைகளிற்கான விநியோகப் பாதையை அமைத்துத் தனது தெற்குப் போர்க்களமுனையை உறுதியாக வைத்திருந்துள்ளார். படைகளிற்கான விநியோகப் பாதைகளின் முக்கியத்துவம் மிகவும் கவனமாகப் பேணப்பட்டது.

பி2 விமானங்கள், நவீன ஆயுதங்கள், பெரும் பொருளாதார வளம் போன்றவற்றோடு களமிறங்கிய அமெரிக்கப்படைகளை மீண்டும் ஜெனரல் கியாப் துணிவுடன் எதிர் கொண்டார். ‘நாங்கள் எங்கள் சிறிய படைகளோடு பெரும் படைகளை எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். பின்தங்கிய மரபு ஆயுதங்களுடன் நவீன ஆயுதங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் எமது போராளிகளின் மனித வலுவும் உளவுறுதியுமே போரின் முடிவைத் தீர்மானித்தது’ என்று தனது அனுபவத்தின் மூலம் விடுதலை பெறத் துடிக்கும் தேசிய இனங்களிற்கு அதன் எதிரிகளின் பலம் முடிவைத் தீர்மானிக்காது.

ஒன்றுபட்ட தேசிய இனத்தின் விடுதலைப் பற்றும் உளவுரனுமே விடுதலைப் போரின் முடிவைத் தீர்மானிக்கும் என்ற நம்பிக்கையை வழங்கி உள்ளார். அந்த வெற்றிக்கான வாழும் சாட்சியமாகவே ஜெனரல் கியாப் வாழ்ந்து வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு வரலாற்றாசிரியர் ஸ்டான்லி கர்னோவிற்கு வழங்கிய செவ்வியில் ஜெனரல் கியாப் ‘எம்மிடம் அரை மில்லியன் அமெரிக்கப் படைகளை வெளியேற்றும் சக்தி இருக்கவில்லை. ஆனாலும் அது எமது குறிக்கோளாகவும் இருக்கவில்லை.

அமெரிக்கா வியட்நாம் மண்ணில் தொடர்ந்தும் போர் செய்யலாம் என நம்பும் உளவுரணை உடைப்பதே எமது குறிக்கோளாக இருந்தது.’ எனக் கூறி எந்த இனமும் தாம் தொடர்ந்து போராடலாம் என்ற உளவுரனை உடைய விட்டாலும் அந்த இனம் விடுதலை அடைய முடியாது என்ற உண்மையை உணர வைத்துள்ளார்.

இவர் நடாத்திய புகழ்பெற்ற டெட் எதிர்த்தாக்குதல் (Ted Offensive) அமெரிக்கப் படைகளின் உளவுரனைப் பெரிதும் ஆட்டம் காண வைத்தது. திடீர் திடீரெனப் பல இடங்களில் தாக்குதல்களை நடாத்திப் பெரும் இழப்புகளை மேற்கொண்டு விட்டு மறைவதே டெட் எதிர்ச் சமர் என அழைக்கப்படுகின்றது. இது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி லின்டன் பி.ஜோன்சன் மீண்டும் தேர்தில் போட்டியிடாத நிலையையே தோற்றுவித்தது.

ஆனாலும் இந்தப் போர் வெல்லப்பட வியட் கொங்கிற்கு மேலும் ஏழு வருடங்கள் சென்றது. ‘இந்த வெற்றியோடு அடிமைகள் விடுதலைபெற்ற மனிதர்களானார்கள். ஆனாலும் எமக்கு இது நம்ப முடியாததாகவே இருந்தது’ என்று தனது செவ்வியில் ஜெனரெல் கியாப் கூறியிருந்தார். இப்போரில் மூன்று மில்லியன் வியட்நாம் கொம்யூனிஸ்டுகளும் பொது மக்களும் பலியாகினார்கள். அமெரிக்கப் படைகளிற்குக் கைக்கூலிகளாக இருந்த தென்வியட்நாமியப் படைகள் 2,50,000 பேரும் அமெரிக்கப்படைகள் 58,000 பேரும் பலியாகினார்கள்.

எதிரிப்படைகளை விடப் பலமடங்கான வியட்கொங் விடுதலை வீரர்கள் வீழ்ந்துபட்ட போதும் இழப்புக்கள் மக்களினதும் விடுதலை வீரர்களினதும் விடுதலை வேட்கையைச் சுதந்திர தாகத்தைச் சோர்வடையவோ தளர்ந்து போகவோ செய்யவில்லை. போர்க்காலங்களில் ஜெனரல் கியாப் போர்ப் பாதுகாப்பு மந்திரியாகவும் ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதியாகவும் இருந்தார். அத்தோடு ஆளும் கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அங்கத்துவராகவும் விளங்கினார். ஆனாலும் ஹோ சி மின்னின் இறப்பிற்குப் பிறகு அரசியல் இவரை ஓரம் கட்டத் தொடங்கியது.

ஆனாலும் மக்கள் இவர் மீதான தம் அன்பையும் மதிப்பையும் அதிகரித்துக்கொண்டே சென்றார்கள். தமது விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடியவர்களை மக்கள் மறப்பது கிடையாது. உலகத்தின் அரசியலுடன் தன்னைத் தொடர்ந்தும் பேணி வந்த ஜெனரல் கியாப் 2004 இல அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த போது அமெரிககாவிற்கான அறிவுரையையும் வழங்கத் தவறவில். ‘எந்த ஒரு படையும் தமது மேலாதிக்கத்தை இன்னொரு இனத்தின் மீதோ அல்லது நாட்டின் மீதோ செலுத்த முற்பட முயன்றால் அவர்கள் நிச்சயமாகத் தோல்வியையே சந்திப்பார்கள்’ என்று கூறியிருந்தார். தமிழீழத் தேசிய இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்த முனையும் சிங்கள அரசு தற்காலிக வெற்றியைச் சந்தித்திருந்தாலும் மக்கள் எழுச்சியின் முன்பு அது தோல்வியைச் சந்திக்கும் என்பதன் வடிவமாகவும் நாம் ஜெனரல் கியாப்பின் அறிவுரையையும் அனுபவத்தையும் எடுத்துக் கொள்ள முடியும்.

இவரின் மனவுறுதியும் போரத் தந்திரமும் உலகத் தலைவர்களைக் கூட இவரைச் சந்திக்க வைத்தது. 2004ம் ஆண்டு இவரது இல்லத்திற்கு வந்திருந்த கொமியுனிசப் புரட்சிப் போராளியும் கியூபாவின் ஜனாதிபதியுமான பிடல் கஸ்ரோ இவரது அனுபவங்களைக் கேட்டு மகிழ்ந்துள்ளார். போர்க்காலத்தில் ஜெனரல் கியாப்பின் முக்கிய எதிரியான அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ரொபேர்ட் மக்நமரா 1995ம் ஆண்டில் ஜெனரல் கியாப்பின் இல்லத்திற்கு வந்திருந்து உரையாடிச் சென்றுள்ளார்.. அந்த அளவிற்கு அவரது விடா முயற்சியும் இராணுவத் தந்திரமும் எதிரிகளைக் கூட அவர் பால் ஈர்த்துள்ளது.

தனது 100வது வயதில் மிகவும் பலவீனமடைந்த நிலையில் பேசமுடியாத நிலையில் தனது தோழர்களிற்குத் தனது நன்றியை எழுத்து மூலம் தெரிவித்தார். அந்த நிலையிலும் சர்வதேச அரசியலின் நிகழ்வுகளை அறிய அவர் தவறியதில்லை என 35 வருடங்களாக ஜெனரல் கியாப்பின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்த கேணல் என்குயன் குய்யன் தெரிவித்தார். தனது பிற்காலத்தில் அமெரிக்க வியட்நாம் நல்லுறவைப் பலப்படுத்த ஜெனரல் கியாப் பெரிதும் முயன்றார். 1995 இல் பல வியாபாரப் பொருளாதார ஒப்பந்தங்களை இரு நாடுகளும் ஜெனரல் கியாப் தலைமையில் செய்து கொண்டன. இரண்டு நாடுகளும் வியாபாரப் பங்காளிகளாகின. சீனாவின் அதி உச்சவளர்ச்சியின் வேகத்தில் தென் சீனக் கடல் எல்லையில் சீனாவின் பலத்தைச் சமன் செய்ய அண்மையில் அமெரிக்கக் கடற்படையினதும் இராணுவத்தினது உதவியையும் வியட்னாம் நாடியுள்ளது.

ஆனாலும் இந்த உறவுகளின் எதிர்காலம்  பழைய வலிகளை மறக்கடித்து விடுமா என்று நிருபர்கள் வினவியபோது ஜெனரல் கியாப் தெளிவான உண்மை ஒன்றைச் சொல்லி உள்ளார். ‘நாம் இறந்த காலத்தைச் சிறிது பின் நகர்த்தி வைக்கலாம். ஆனால் அதை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது’ போரடும் இனங்களிற்கு இழப்புகளின் வடுக்கள் சுதந்திர வெற்றிக்கான பாதைகளாக மாறவேண்டும்.

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/34622/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்க்கு யாழ்அன்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.