Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் நடைபெற்ற கேணல் பரிதியின் ஓராண்டு வீர வணக்க நிகழ்வும், படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற பேரணியும்

Featured Replies

கடந்த 08.11.2012 அன்று பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் ஓராண்டு நினைவில் பிற்பகல் 3.00 மணிக்கு பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீதி மன்றத்திற்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இடமாகக்கருதப்படும் சென் மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பமாகிய நீதிக்கான பேரணி பிரதான வழியினூடாக பாராளுமன்றம் நோக்கிச் சென்றது.

குறிப்பாக இந்த இடங்களில் அதிகம் வெளிநாட்டு மக்களும், பிரான்சு தேசத்தின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த பிரதான வழியினுடாக சென்றபோது அதிகளவிலான மக்கள் நின்று அவதானித்ததையும், விளக்கங்களை கேட்டதும், கையெழுத்துப் படிவங்களில் கையெழுத்திட்டு ஆதரவு தந்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது. இப் பேரணி 4.30 மணிக்கு சென்றடைந்தது.

பொதுச்சுடரினை மக்கள் பேரவை செயலாளர் திரு. டினேஸ் அவர்கள் ஏற்றி வைக்க மாவீரன் திருவுருவப்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் சகோதரர் ஏற்றி வைக்க மலர் வணக்கத்தை கேணல் பரிதி அவர்களின் துணைவியார் செய்திருந்தனர்.

தமிழீழ மக்கள் பேரவையின் பேச்சாளர் திரு. மோகன் அவர்கள் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மக்கள் பேரவையின் தலைவர் திரு. கமல் அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாற்றினார். பிரான்சின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழின உணர்வாளருமாகிய மரியா ஜோர்ஜ் புஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

தமிழர் ஒருங்கிணைப்பு ஐரோப்பிய சார்பாக பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. ராஐமனோகரன் அவர்களும், தொடர்ந்து கேணல் பரிதியின் வழக்கறிஞர் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் பின்வருமாறு கூறினார்.

நண்பர்களே!

எங்களனைவரையும் இன்று ஒன்று கூட வைத்திருக்கும் இத் திகதி மிக முக்கயமானதொன்றாகும். சரித்திர நாயகனான ஒரு மனிதனை இன்று நாங்கள் நினைவு கூறுகின்றோம். 8 நவம்பர் 2012 அன்று பரிதி என்றழைக்கப் படும் திரு நடராசா மதிந்திரன் அவர்கள் பாரிச் மையப் பகுதியிலேயே வைத்துக் கொல்லப்பட்டார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த உங்கள் மக்கள் பிரான்ச் போன்ற சுதந்திர நாடுகளில் சிறு அமைதியோடும் நிம்மதியோடும் வாழ்ந்து வந்தார்கள். சில ஆண்டுகளாக நீங்கள் சமாதானப் பாதையையும் வழியையும் தெரிவு செய்திருந்தீர்கள். புது ஆரம்ப வழியைத் தேடி நீங்கள் காலடி எடுத்து வைத்த அந்தத் தருணத்தில், உங்களது சொந்த நாட்டில் நடந்த கசப்பான அனுபவங்களை நீங்கள் மறந்து கொண்டிருக்கும் போது, உங்களது முதல் மறுமலர்ச்சி முயற்சிகள் கைகூடி வரும் தருணத்தில், இப்படுகொலை நிகழ்ந்தது.

இப்படியான அச்சுறுத்தல்கள் வழியாக, எங்களை பயமுறுத்தி வாய் பொத்தி வைக்க எண்ணுகிறார்கள். நாங்கள் சமாதானத்தையும் சனநாயகத்தையும் மனிதத்தையும் மேலும் பிரான்சையும் நேசிக்கின்றோம் என்பதனை நாங்கள் நினைவு படுத்துகின்றோம். திரு பரிதி அவர்களின் குடும்பத்தாரும் சரி, நண்பர்களே நீங்களும் சரி, அவரது அரசியல் ஈடுபாடு காரணமாகவே அவர் கொல்லப்பட்டார் எனத் தெளிவாக நம்புகின்றீர்கள்.

திரு பரிதி அவரகள் தனது நாட்டிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கையில் வடகிழக்கில் ஒரு தனித் தமிழ்தேசம் உருவாக வேண்டும் என்று நீங்கள் 1973 லிருந்து கோரிக்கை விடுத்து வருகின்றீர்கள். ஒரு இலட்சத்திற்கும் மேலான இறப்புகளை சந்தித்தாகி விட்டது. திரு பரிதி அவர்கள் கொழும்பில் இயங்கும் அரசிற்கு எதிராகவே எப்போதுமே நிலையாய் நின்றவர். அதனாலேயே அவர் உயிரிழக்கவும் நேர்ந்தது. இதனை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம்.

1983 ல் நடந்த இனக்கலவரத்தில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதையடுத்தே திரு பரிதி அவர்கள் ஆயுத விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். அது வழியாக 1947 லிருந்து தமிழ் மக்களுக்கெதிராக இலங்கையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பிரிவினை மற்றும் அடிமைத்துவத்தையும் அழித்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.

இந்த அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டதே அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காகவே. ஏனென்றால் ஐநா அதைச் செய்யத் தவறியிருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததுமே இயற்றப்பட்ட தனது யாப்பில் தாக்கப்படும் மக்களைக் காக்க வேண்டும் என்ற முக்கியமான தனது கடமையை ஐநா செய்ய மறந்திருந்தது.

இவ்வாறான ஒரு சூழலில் தான் திரு பரிதி அவர்கள் பாரிசில் 8 நவம்பர் 2013 அன்று சரந னநள Pலசéநnநௌ ல் உள்ள ஒரு பேருந்துத் தரிப்பல் வைத்து மிருகத்தனமாகக் கொல்லப்பட்டார். இதுவோர் அப்பட்டமான சிறீலங்கா அரசின் கடல்கடந்த பயங்கர நடவடிக்கை இதற்கு சரியான முடிவு காணும் வரை நாம் ஓயப்போவதில்லை என்று கூறியிருந்தார்.
இதனை இவிறி தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. பாலன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக திரு. சத்தியதாசன் அவர்கள் உரையாற்றினார். கேணல் பரிதி அவர்களின் மகளும் உரையாற்றியிருந்தார்.

கேணல் பரிதியின் நினைவாக மலர் ஒன்றும், திருமுருகன் இசையில் உருவான இலட்சியநாயகன் கேணல் பரிதி என்ற இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவற்றை வர்த்த தொழிலதிபர்கள், கலைஞர்கள், கேணல் பரிதியின் கள நண்பர்கள், பள்ளித்தோழர்கள், விடுதலைப்பற்றாளர்கள், பெல்ஜேயம், ஜேர்மனி, சுவிஸ், பிரித்தானியா கிளைப்பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களும் பெற்றுக்கொண்டனர்.

காலநிலை மாற்றத்தினால் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து மழைபெய்து கொண்டதற்கு மத்தியிலும் மக்கள் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதிகேட்டு எந்த பேதமுமின்றி நான் தமிழன் என்கின்ற ஒரேயொரு தன்மான உணர்வுடன் கலந்து கொண்டு பலம் சேர்த்தனர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்கின்ற தாரகமந்திரத்துடன் இனிதே சரியாக 5.55 மணிக்கு நிறைவு கண்டது.

 

1461067_340324429445670_653520181_n.jpg

 

600878_340323902779056_1580895311_n.jpg

 

1000609_340324132779033_1248906556_n.jpg

 

994051_340323712779075_820151079_n.jpg

 

1004979_340323679445745_612666339_n.jpg

 

1459191_340324009445712_1941176951_n.jpg

 

936005_340323436112436_2491182_n.jpg

 

1465386_340323252779121_1401667614_n.jpg

 

1395809_340323429445770_2099135531_n.jpg

 

577493_340325126112267_669364812_n.jpg

 

1456066_340325362778910_1583986676_n.jpg

 

994652_340325549445558_1653330370_n.jpg

 

1462854_340325589445554_427357580_n.jpg

 

1460072_340325806112199_727960714_n.jpg

 

tcc

(facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.