Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர் மேஜர் ஜெனரலாக பதவிஉயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maj.gen.david.jpg

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த நான்கு பிரிகேடியர்களுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கியுள்ளார். 

மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவரான, பிரிகேடியர் எம்.இசட்.ஆர்.சாலியும் ஒருவர். 

மலாய் சமூகத்தைச் சேரந்த ஒருவர் சிறலங்கா இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 

1980இல்,சிறிலங்கா இராணுவத்தில் இணைந்த மேஜர் ஜெனரல் சாலி,போரின் இறுதிக்காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவராவார்.

Maj.gens.jpg

சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவை சேர்ந்தவரான பிரிகேடியர் எச்.எல்.டேவிட்டும் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 

இவர், ஊர்காவற்றுறையை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். 

லண்டன் முகாமைத்துவ கற்கைகள் கல்லூரியில், கலாநிதிப்பட்டம் பெற்ற இவர், 1980களின் நடுப்பகுதியில் வெடிகுண்டு செயலிழப்பு படைப்பிரிவின் முதலாவது தளபதியாக பணியாற்றியவர். 

2009 நடுப்பகுதி தொடக்கம் இவர் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் பிரதி துணைவேந்தராகவும் பணியாற்றி வருகிறார். 

சிறிலங்கா இராணுவத்தின ஆயுத்தளபாடப் படைப்பிரிவை சேர்ந்த பிரிகேடியர் ஆர்.வி. உடவத்தவும், மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 

இவர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற நடத்தப்பட்ட ரிவிரெச இராணுவ நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். 

தற்போது 54வது டிவிசன் தளபதியாக உள்ள பிரிகேடியர் மைத்ரி டயசும் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளார். 

ஆனையிறவு இராணுவ தளம் விடுதலைப் புலிகளால் 1991இல் முற்றுகையிடப்பட்ட போது, அதற்குள் அகப்பட்டிருந்தவர்களில் இவரும் ஒருவராவார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20131201109543

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.