Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவுடன் பேசப்பட்ட விவகாரங்கள் – மௌனம் காக்கும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gota-menon.jpg

இந்தியப் பெருங்கடலில் செயற்படும் தீவிரவாதக் குழுக்கள் மற்றும், கடற்கொள்ளைக்கு எதிராக நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுப்பது குறித்த கடற்படை ஒத்துழைப்புகளை வலுப்படுத்த இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்திய அரசாங்க உயர்வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்கும் இடையில் நடத்தப்பட்ட – பகிரங்கப்படுத்தப்படாத சந்திப்பிலேயே இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர  உறவுகளில் பதற்றம் நிலவுகின்ற சூழலில், இதுபோன்று, இந்திய கடற்படை தளபதிகளுடனும் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் கோத்தாபய ராஜபக்ச. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேசியதை, உறுதிப்படுத்திய இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், இராணுவ மட்ட சந்திப்புகள் குறித்து கருத்து எதையும் வெளியிட மறுத்து விட்டார். 

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இந்தியக் கடற்படைத் தளபதிகளுடன், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பதை, இந்தியக் கடற்படையின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார். 

ஆனால் அவரும் அதுதொடர்பான விபரங்களை பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டார். 

கோத்தாபய ராஜபக்சவுடனான சந்திப்பு குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் செயலகம், எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. 

அதேவேளை, இருநாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு நலன்கள் விடயத்தில், இராணுவ மட்டத்திலான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதை மையப்படுத்தியே கடந்த வார சந்திப்புகள் இடம்பெற்றதாக, இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அரசியல் அழுத்தங்களால், இந்திய சிறிலங்கா உறவுகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் உள்ளிட்ட பரந்துபட்ட மூலோபாய சூழ்நிலைகள் குறித்தும் கோத்தாபய ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். 

கடந்த ஜுலை மாதம், இந்தியா, சிறிலங்கா மாலைதீவு ஆகிய மூன்று நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131203109559

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.