Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்கள் தமிழ் கற்கக் கூடாது, தமிழர்கள் தான் சிங்கள மொழியைப் படிக்க வேண்டும்! - பொது பலசேனா கூறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
bodubalasena-41213-150.jpg

சிங்கள மக்கள் தமிழ் மொழியைப் படிக்காது தமிழர்கள் சிங்கள மொழியைப் படிக்க வேண்டும். பெளத்த நாட்டில் சிங்கள பெளத்த மதத்தவருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த வர்­க­ளையும் மத்­திய கிழக்கு கிறிஸ்­த­வர்­க­ளையும் பாது­காத்து அடைக்­கலம் கொடுக்க இலங்கை அநாதை மட­மல்ல. தீவி­ர­வா­தி­க­ளுக்கு அடைக்­கலம் கொடுத்து நாட்டை சீர­ழிக்க நாம் விரும்­ப­வில்லை எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

  

பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்­பி­னரால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ்­வ­மைப்­பினர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்­தனர்.இது தொடர்­பாக பொது­பல சேனா அமை ப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்துத் தெரி­விக்­கையில்-

இலங்­கையில் பெளத்­தர்­க­ளுக்கு இருக்கும் சுதந்­தி­ரமும் உரி­மை­களும் ஏனைய அனை­வ­ருக்கும் உள்ளன. இலங்கை மத வாதத்தில் ஊறிய நாடல்ல. ஆனால் இலங்­கையில் பெளத்த மதமும் சிங்­கள மொழி­யுமே அரச கரும மொழி­யா­கவும், மத­மா­கவும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இவற்றில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த நினைக்கக் கூடாது. தமிழ் மொழி­யினை நாட்டின் பெரும்­பான்மைச் சிங்­க­ள­வர்கள் கற்­றுக்­கொள்­வ­தனால் எவ்­வித பய­னு­மில்லை. தமி­ழர்­களே இலங்­கையின் தேசிய மொழியை கற்­றுக்­கொண்டு நாட்­டுக்கு ஏற்ற வகையில் மாறிக்­கொள்ள வேண்டும். எந்­த­வொரு நாட்­டுக்குச் சென்­றாலும் அந்­நாட்டின் பிர­தான மொழியினை கற்றுக்கொண்டே செல்ல வேண்டும். இலங்­கையும் அதைப் போன்­றதே. எனவே மொ ழிக்கே முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும்.

இன்று தமிழ் மொழியை அரச கரும மொழி­யாக்க சொல்­ப­வர்கள் நாளை அரே­பிய மொழி­யையும் தேசிய அரச கரும மொழி­யாகக் கொண்­டு­வரச் சொல்­வார்கள். எனவே மொழியை வைத்து நாட்டை சீர­ழிப்­பதை அனு­ம­திக்கக் கூடாது.மொழியை வைத்து இலங்­கைக்குள் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். இன்று வடக்கை தமி­ழர்­களின் பகு­தி­யென விக்கி­னேஸ்­வ­ரனும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் குறிப்­பி­டு­கின்­றனர். வடக்கில் தமிழ் சிவில் சேவை­க­ளையும் தமிழ் வீதிப் பல­கை­க­ளையும் உரு­வாக்க வேண்டும் என குறிப்­பி­டு­கின்­றனர். அதே போன்று கிழக்கில் முஸ்­லிம்­களின் ராஜ்­ஜியம் இடம்­பெ­று­கின்­றது.

இவ்­வாறு மத, மொழி பிரி­வி­னை­களை பிர­தா­ன­மாக வைத்தே நாட்டில் பிரி­வினை வாதம் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது.இதனைத் தொடர்ந்தும் செயற்­ப­டுத்­தா­விட்டால் இலங்­கையில் சிங்­கள, பெளத்­தர்­க­ளுக்­கென்று எவ்­வித சான்­று­களும் இல்­லாது போய்­விடும். எனவே இரண்டாம் மொழியை தேசிய அரச கரும மொழி­யாக மாற்­று­வ­தனால் மீண்டும் பிரி­வினை யுத்தம் ஆரம்­பிக்கும். மேலும் இன்று கர்­தினால் மெல்கம் ரஞ்சித் போன்ற கிறிஸ்­தவ மதத் தலை­வர்கள் அரச சார்­பற்ற சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து இலங்­கைக்குள் கிறிஸ்­தவ தீவி­ர­வா­தத்தை பரப்ப ஆரம்­பிக்­கின்­றனர். பாகிஸ்­தானில் வாழும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு இலங்­கையில் அடைக்­கலம் கொடுக்கச் சொல்­வ­தற்கு மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கைக்கு உரி­மை­யில்லை.

கிழக்கி்ல் இருக்கும் முஸ்லிம் தலை­வர்கள் முஸ்லிம் தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்பு வைத்து முஸ்லிம் தீவி­ர­வா­தத்தை நாட்டில் பரப்பி வரு­கின்­றனர். இன்று கிழக்கில் பெரும்­பா­லான பகு­திகள், அவற்றின் அபி­வி­ருத்­திகள், குறிப்­பாக முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மத்­திய கிழக்கு நாடு­களின் அனு­ச­ர­ணை­யுடன் புனர்­நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன.அர­சாங்­கத்தின் உள்­ளி­ருக்கும் அமைச்­சர்கள் இன்று முஸ்லிம் நாடு­க­ளு­ட­னான உற­வு­களை வைத்­துள்­ளனர். இலங்­கையில் போதைப்­பொ­ருட்கள், கருக்­க­லைப்பு மாத்­தி­ரைகள் உரு­வா­வ­தற்கும் சமூகம் சீர­ழி­வ­தற்கும் அவையும் முக்­கிய கார­ண­மாகும்.

மேலைத்­தேய கிறிஸ்­த­வர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அல்­லது புலம்­பெயர் மக்­க­ளுக்கு அடைக்­கலம் கொடுப்­ப­தற்கு இலங்கை அநாதை மடமோ, ஆசிரமமோ இல்லை. தீவிரவாதிகளுக்கும் கலாசாரத்தையும் நாட்டையும் சீரழிக்கும் கூட்டத்தினருக்கும் இலங்கையில் இட மில்லை. இதனை இங்குள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டைக் காப்பாற்றும் யுகத்திலேயே இன்று நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். தொட ர்ந்தும் நாட்டுக்காகவும் பெளத்த சிங்கள மக்களுக்காகவும் போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98260&category=TamilNews&language=tamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.