Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபையின் உறுப்பினராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் கே. தவராசா தேர்வாகுவாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

EPDP_CI.jpg

வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராஜா நியமிக்கப்படலாம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தொடர்பு பட்டிருப்பது உறுதியாகி இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.12.13) நெடுந்தீவினைச் சேர்ந்த லண்டன் சசிந்திரன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (03.12.13) நள்ளிரவு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினராலும், றெக்ஷிசனின் மனைவி ஊர்காவற்றுறை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மூவரும் இன்று (04.12.13) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதன்போது மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களினை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இவரது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற சூழலில் இவருக்கு அடுத்தநிலையில் விருப்பு வாக்குகளைப் பெற்ற தவராசா மாகாண சபை உறுப்பினராகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எதிர் கட்சி தலைவர் என்ற பெயரை அடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் அரசாங்கத்துடன் நெருக்கமாகி இருப்பவருமான அங்கயன் ராமநாதன் மாகாண சபையில் தனது முக்கியத்தையும் முன்னிலைப்படுத்த முனையும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிகாரம் எந்த வகையில் இருக்கும் என்பதனை பொறுத்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99881/language/ta-IN/article.aspx

அங்கஜன் அவுஸ்திரேலியாவில் கைதாம்?? அவசரமாய் புறப்பட்டார் தந்தை இராமநாதன்..

 

 

இலங்கை அரசின் கைக் கூலியாக யாழில் வலம் வரும் அங்கஜனும் அவரது தந்தையார் இராமநாதனும் வெளிநாடுகளில் பெரும் மாபியா மக்கள் பணி என வடக்கிற்குச் சென்றவர்கள் மக்கள் வாழ்வில் மண் வாரி விட்டு தப்பிக்க முயன்றனர் இலங்கை அரசு காப்பாற்றியது வெளிநாடுகள் விலங்கு மாட்டியது.

இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை உடைய அங்கஜன் அவுஸ்திரேலியாவிலும் குடியுரிமை உடையவராம் ஆனால் அங்கு சென்றுள்ள அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன இவரை மீட்பதற்காக அவரது தந்தையார் இராமநாதன் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது வெளிவராமல் உள்ளதுடன் இவர் பல நாசகார வேலைகளில் ஈடுபட்டதனால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது JVPதள ஆரம்ப கட்ட புலனாய்வுத் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது இவற்றை முழுவதுமாக உறுதிப் படுத்துவதற்கு எத்தனித்தும் முடியவில்லை, இவை தொடர்பில் எமது புலனாய்வு தொடர்கிறது.

 

http://www.jvpnews.com/srilanka/55312.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.