Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரம்; சர்வதேசத்துடன் பேச பிரிட்டன் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Commonwealth-Office-Hugo-Swire-60.jpg
இலங்கையில் மனித உரிமைகள் விடயம் உட்பட நிலைமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயம் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இனிவரும் மாதங்களில் தொடர்ந்து பேசவுள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது.

ஐக்கிய இராச்சியம் மீண்டும் ஐ. நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவாகியுள்ளது. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு மார்ச்சில் நடைபெறும். அதற்கு முன் ஐக்கிய இராச்சியம் இலங்கை விடயத்துக்கு சர்வதேச ஆதரவை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபடும் என பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தபோது கூறினார்.

பொதுநலவாய மாநாட்டின்போது நாம் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு ஆகியவற்றில் உண்மையான முன்னேற்றத்தை காண விரும்புகின்றது. மனித உரிமைகள் பேரவை மார்ச்சில் முன்னேற்றத்தை மார்ச்சில் மதிப்பீடு செய்யும் என பிரதமர் டேவிட் கமரோன் கூறியதையும் ஸ்வயர் நினைவு கூறினார்.

யுத்த குற்றம் தொடர்பான குற்றச்சாட்டல்கள் தொடர்பாக நம்பகமான, வெளிப்படையான, சுயாதீனமான விசாரணைகளை பிரதமர் வலியுறுத்தினார். மார்ச் அளவில் இந்த விசாரணைகள் முறையாக தொடங்காதிருப்பின் நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் எனபதை தெளிவாக அவர் கூறியிருந்தார் என ஸ்வயர் கூறினார்.

 
 

அமெரிக்கா ராஜாங்க திணைக்கள அதிகாரிகள் TNAயின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்தனர்:-

2014 மார்ச் ஜெனீவாப் பிரேரணையில் அமெரிக்கா அக்கறை TNAயுடனான சந்திப்பிலும் கலந்துரையாடப்பட்டு உள்ளது.

 

அமெரிக்கா ராஜாங்க திணைக்கள அதிகாரிகள் குழவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனை அவரின் திருகோணமலை இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடி நிலமைகளைக் கேட்டறிந்து சென்றுள்ளனர். இந் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இலங்கை நேரம் மாலை  மாலை இடம் பெற்றது.

2014 மார்ச் ஜெனீவாப் பிரேரணையில் அமெரிக்கா அக்கறை TNAயுடனான சந்திப்பிலும் கலந்துரையாடப்பட்டு உள்ளது:-

06-12-2013 - 01:56

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் 2014 மார்ச், இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை சமர்பிப்பதற்கு முன்னோடியாக, வடகிழக்கு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமெரிக்க வெளிவிவகாரங்களைக் கையாளும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று சிரேஷ்டநிலை அதிகாரிகளும் இலங்கைப் பயணத்தை மேற்கொண்டுள்;ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

இலங்கையை  நேற்று (05.12.13) சென்றடைந்த அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரையும், சிவில் சமூகத்தினரையும் சந்தித்தனர்.

அதன் பின்னர் நேற்றிரவு, (05.12.13)   கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை இரவு உணவுடன் இரு மணி நேரம் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது:

தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை குறித்தே சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. கடந்த இரு தடவைகள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை மற்றும் அதனால் இங்கு எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கில் மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னரும், இராணுவத்தினராலும், அரசாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் பூரணமான தகவல்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

 

குறிப்பாக வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் காணிகள் முடக்கப்பட்டுள்ளமை, மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடுகள் தொடர்பிலும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலும், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை, காணாமற்போனவர்கள் பிரச்சினை ஆகியன தொடர்பிலும் இதில் சுட்டிக் காட்டப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபையைக் கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. வடக்கு மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமையால் அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தடங்கல்கள் நிலவுகிறது. இவை தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினோம் - என்றார் சுமந்திரன்.

இலங்கை அரசுக்கு எதிராக அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் மற்றுமொரு பிரேரணை முன்வைப்பதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக இந்தக் குழுவினர் இலங்கைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று (06.12.13) திருகோணமலைக்கு செல்லும் இந்தக் குழுவினர், வடக்கு - கிழக்கு உட்பட சகல பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கையிடவுள்ளனர் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99950/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.