Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிப்பரம்பலை மாற்ற திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து அக்காணிகளில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களைக் குடியேற்றி இம்மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது என அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் கொக்கிளாய் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Untitled-4_0.jpgஅமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், மணலாறு (வெலிஓயா) ஆகிய இடங்களுக்குச் சென்று அப்பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பிலேயே அம்மக்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.

இச்சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் குடிப்பரம்பலில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் முல்லைத்தீவு இன்னும் சில ஆண்டுகளில் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாக மாற்றமடையக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது.

இதேவேளை கொக்கிளாய் பிரதேசத்தில் குறிப்பிட்ட சில தென்னிலங்கை மீனவர்களுக்கு மட்டும் தொழில்செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அதிகளவனா சிங்கள மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி தொழில் செய்து வருவதால் முல்லைத்தீவின் கடல்வளம் அழிவடையும் நிலை காணப்படுகின்றது. எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

http://www.virakesari.lk/?q=node/359721

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.