Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம் ஆத்மியும் அரவிந்த் கேஜ்ரிவால்லும் சமூக வலைத்தள தாக்கமும் ஆச்சர்ய எழுச்சியும்!! ஒருபார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"டெல்லியையும் - காங்கிரசையும் - ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்த துடைப்பம்"

aam_CI.jpg

டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன.

தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது.

கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான ட்விட்டரையும் கட்சி தீவிரமாக பயன்படுத்தியது.

குறிப்பாக வாக்குப்பதிவு நெருங்கிய நிலையில் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் ட்விட்டரை திறம்பட பயன்படுத்தினர். இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க கோரும் #Vote4AamAadmiParty, #AAPSweepingDelhi போன்ற ஹாஷ்டேகுகள் ட்விட்டரில் முன்னிலை பெற்றன. வாக்குப்பதிவு தினத்தன்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க கோரும் குறும்பதிவுகள் வெளியாயின.

சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் சாதிக்குமா என எழுப்பட்ட சந்தேகங்களை பொய்யாக்கி, அக்கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது பிராதன கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களர்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக ஆதரவின் முக்கியத்துவம் குறித்து அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே பிரபலங்களும் சாமானியர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் முதல்வரான உமர் அப்துல்லா, அசாதாரணமான தேர்தல் துவக்கத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் என குறும்பதிவு வெளியிட்ள்ளார். இப்போது உங்கள் நல்ல போராட்டத்தை தொடந்து தில்லி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னணி தொழிலதிபரும் மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, "ஆம் ஆத்மி கட்சியின் மகத்தான துவக்கம் நாம் எந்த அளவுக்கு மாற்றத்திற்காக துடித்திக் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுகிறது" என கூறியுள்ளார்.

தொழிலதிபரும் ப்யோகான் நிறுவனருமான கிரண் மஜும்தார் ஷா, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மக்களின் கோபம் நன்றாக வெளிப்பட்டுள்ளது, இலவசங்கள் மூலம் மக்களை வாங்கிவிட முடியாது என ஆம் ஆத்மி கட்சி உணர்த்தியிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர், ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள், உங்கள் வெற்றி 2014 தேர்தலிலும் புதிய புரட்சி ரத்தத்தை பாய்ச்சும் என்றும் நம்புவோம் என்று கூறியுள்ளார்.

நடிகை அனுஷ்கா ஷர்மா, கட்சியின் பெயரிலேயே புதுமை இருக்கிறது. தொலைநோக்கு இருந்தால் தான் புதுமை வரும் என்று கூறியுள்ளார்.

இதைத்தவிர சாமானியர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் இளம் தலைவர்களை பார்க்க முடிவதை அவர்கள் குறிப்பிட்டு பாராட்டியுள்ளனர். ஆதரவாளர்களை முன்னிலைபடுத்துவது மற்றும் நாம் என்றே பேசுவதையும் பலரும் பாராட்டியுள்ளனர். புதிய யுகம் பிறந்திருப்பதாகவும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்த குறும்பதிவுகளை எல்லாம் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூரவ ட்விட்டர் கணக்கில் ரீடிவீட் செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

இந்த ட்விட்டர் பக்கத்தில் கட்சியின் நிறுவனர் கெஜ்ரிவாலின் செய்தியாளர் சந்திப்பும் குறும்பதிவுகளாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

சாதித்துக் காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்:-

 டெல்லி சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற பின் அங்கு மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. இதை ஒரு பொருட்டாக ஏற்க மறுத்த காங்கிரஸ் மற்றும் பாஜக இதைப் பார்த்து பயப்பட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் இந்திய வருவாய் துறையின் உயர் பதவியில் இருந்தவர். உபி மாநிலம் காஜியா பாத்தில் பணியாற்றினார்.

லோக்பால் மசோதாவை அமல்படுத்த வேண்டி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹசாரேவுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். இதற்காக தம் பதவியில் இருந்து கட்டாய ஓய்வு பெற்றவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பல ஊழல்களை வெளிப்படுத்தினார். அதனால் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் கட்சியைத் தொடங்க எண்ணியவருக்கு அண்ணா ஹசாரே அனுமதிக்கவில்லை.

இதனால், அவருடன் இருந்து விலகி ஆம் ஆத்மி எனும் பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கி முதன் முறையாகத் தேர்தலை டெல்லியில் சந்தித்தார் கெஜ்ரிவால். இவருக்கு துவக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த அண்ணா ஹசாரே தற்போது வாழ்த்து கூறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கெஜ்ரிவால் டெல்லியின் முதல் அமைச்சர் ஷீலாவுக்கு மட்டும் எதிரி என்பது போல் கருதப்பட்டார். ஷீலாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சனம் செய்தார். பின்னர் பாஜகவையும் கண்டிக்கத் துவங்கினார். இதனால், அவர் டெல்லி தேர்தலில் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார் என்ற குழப்பம் நீடித்தது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு புள்ளி விவரம் கூறுகையில், 'டெல்லியில், கிழக்கு, மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வலுவாக இருந்த காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி தட்டிப் பறித்துள்ளது. புதிதாக ஓட்டுரிமை பெற்ற சுமார் 4.6 லட்சம் மற்றும் நடுத்தர வாக்காளர்களில் பலரும் ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர். இதனால், அது முதன் முறையாக போட்டியிட்டு மொத்தம் 31 சதவிகிதம் வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது' எனக் கூறுகிறது.

இக்கட்சி தன் பிரச்சாரங்களின் போது ஆங்காங்கே சிறு சிறு கூட்டங்களை மட்டும் நடத்தியது தவிர, பெரிய அளவிலான பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட நடத்தவில்லை. 'துடைப்பம்' சின்னத்தை உயர்த்தி வெற்றியைக் கொண்டாடும் ஆம் ஆத்மி கட்சியினர்.

ஜனநாயகத்தின் வெற்றி: ஷீலாவை வீழ்த்திய கெஜ்ரிவால் மகிழ்ச்சி

 புது டெல்லி தொகுதியில் முதல்வர் ஷீலா தீட்சித்தை 21,168 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், இது ஜனநாயகத்தின் வெற்றி என மகிழ்ச்சி தெரிவித்தார்.

புது டெல்லி தொகுதியில் கடந்த மூன்று முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரான ஷீலா தீட்சித், இம்முறை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வியுற்றார்.

தனது வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், "இது என்னுடைய வெற்றி அல்ல. புது டெல்லி தொகுதி மக்களின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி" என்றார்.

முன்னதாக, டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுனருக்கு இன்று காலை 11.30 மணி அளவில் அனுப்பியுள்ளார். தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும், தவறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

முந்தைய மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் மகத்தான் வெற்றிகள் பெற்று, தொடர்ந்து மூன்று முறையாக முதல்வர் பதவியில் வகித்தவர் ஷீலா தீட்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதேவேளையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மியிடம் பாடம் கற்போம்: ராகுல் காந்தி:-

 சாதாரண மக்களின் பங்களிப்புடன் தேர்தலை சந்திப்பது என்ற பாடத்தை, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து கற்றுக்கொள்வோம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராகுல் காந்தி பேசும்போது, "இந்தத் தேர்தல் மூலம் மக்கள் எங்களுக்கு புதிய தகவலை கூறியுள்ளனர். அதனை நாங்கள் அறிந்துகொண்டோம்.

சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி மக்கள் பலரையும் ஈடுபடுத்தியது. அவர்களிடம் இருந்து அதை நாங்கள் கற்றுக்கொள்வோம். காங்கிரஸும், பாஜகவும் காலம் காலமாக தங்கள் வழக்கப்படி தேர்தலை சந்தித்தன. புதிய கட்சி பெருமளவு மக்கள் பங்களிப்புடன் செயல்பட்டது.

மக்களுக்கு அதிகாரமளிப்பது குறித்து நான் கட்சியில் பேசி வருகிறேன். இதுகுறித்து நாங்கள் ஆராயவேண்டியுள்ளது. இதனை நான் மையப் பொருளாக மாற்றுவேன். பெருமளவு மக்களை பங்களிப்புடன் நீங்கள் கற்பனை செய்திருக்காத வகையில் நாங்கள் செயல்படுவோம்" என்றார் ராகுல் காந்தி.

தி இந்து

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100068/language/ta-IN/article.aspx

புதுடில்லி அரசியலையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி. தற்போதைய சட்டசபை தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றி 2வது இடத்தில் உள்ள இந்த கட்சி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு மட்டுமல்லாமல், அடுத்த அரசு அமைக்கும் அணிக்கே சவாலாக உள்ளது. இந்த கட்சி துவக்கப்பட்டபோது, அதை இதர கட்சித் தலைவர்கள் எப்படியெல்லாமோ விமர்சி்த்தனர். ஆனால் இன்று எவராலும் புறந்தள்ள முடியாத நிலை இந்த கட்சி எட்டியுள்ளது. இன்று அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்...!

அன்று:


சோனியா: ஆம் ஆத்மி கட்சிக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது. கொள்கை இல்லாதவர்களால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது.


ராகுல்: காங்கிரஸ்தான் உண்மையான ஆம் ஆத்மி கட்சி ( ஏழை மக்களுக்கான திட்டங்களைக் கொண்டது)


ஷீலா தீட்சித்: நான் உங்களை எச்சரிக்கிறேன்... இந்த கட்சிகள் ( ஆம் ஆத்மி ) பருவமழை போன்றவை. அவர்கள் வருவார்கள்; பணம் சம்பாதிப்பார்கள்; போய் விடுவார்கள். அவர்களுக்கு தொலைநோக்கு இல்லாத காரணத்தால் அரசியலில் அவர்களால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாது.


திக் விஜய் சிங்: முதலில் கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யாகவோ, எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது குறைந்த பட்சம் கவுன்சிலராகவாவது வரட்டும்.


மணீஷ் திவாரி: தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் தேர்ந்தெடுக்கப்பட முடியாதவர்களின் அட்டகாசமே, ஜனநாயகத்தை எதிர்நோக்கியுள்ள பெரிய ஆபத்தாகும்.


நிதின் கட்காரி: ஆம் ஆத்மி கட்சி என்பது காங்கிரசின் பி அணி. சமீப கால செயல்களால் அது தனது நம்பகத் தன்மையை இழந்து விட்டது.


சுஷ்மா ஸ்வராஜ்: ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போட்டு தங்கள் ஓட்டை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை.



இன்று:


ராகுல் காந்தி: ஆம் ஆத்மி கட்சி பெருமளவு மக்களோடு ஒன்றியுள்ளது. பாரம்பரியக் கட்சிகள் அவ்வாறு இல்லை


ஷீலா தீட்சித்: நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். என்ன தவறு நடந்தது என்று ஆராய்வோம். டில்லி மக்களின் முடிவை மதிக்கிறோம். எங்களை கடந்த 15 ஆண்டாக ஆதரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


பிரியா தத்: ஆம் ஆத்மி கட்சி, முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சாதாரண மனிதனும் ஆட்சியை நிர்வகிக்கவும் மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பளிக்கும் தளத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.


நிதின் கட்காரி: ஆம் ஆத்மி கட்சி இந்த அளவுக்கு சாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.


blank.gif

http://www.dinamalar.com/news_detail.asp?id=868543

ஆம் ஆத்மி கட்சி' என்றால் ஏழை எளியவர் கட்சி என அர்த்தம். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத முன்னாள் அரசு அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கிய இக்கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாமே, ஊழலுக்கும், தற்போதை அரசியல்வாதிகளின் போக்கும் பிடிக்காதவர்கள்.
கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே படித்தவர்கள். நாகரீகமானவர்கள். சமுதாயத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என விருபும்புபவர்கள். இதனாலேயே இக்கட்சிக்கு, இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகளில் என்ன நடக்கிறது? ஒரு கட்சியின் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., இறந்து விட்டால் அவரது மனைவிக்கோ கணவருக்கோ "சீட்' தந்து, அனுதாப ஓட்டுகளை பெறலாம் என கணக்குப் போடுவது; ஒரு தொகுதியில் மெஜாரிட்டியாக உள்ள ஜாதியினருக்கு "சீட்' தருவது; கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு "சீட்' தருவது போன்ற "கூத்து'கள் தான் நடந்துகொண்டு இருக்கின்றன. இதுபோன்ற வேட்பாளர்களுக்கு எந்த பொது அறிவும் இருப்பதில்லை. வழக்கமான இந்த அரசியல் "ஜகஜ்ஜால' வேலைகளை செய்யாமல், சமுதாய சிந்தனை, நாட்டுக்கு அர்ப்பணிப்பு, கல்வி அறிவு போன்ற விஷயங்களை கணக்கில் கொண்டு "சீட்' தந்து, சாதித்துக் காட்டி உள்ளது ஆம் ஆத்மி கட்சி.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெற்றி பெற்ற முக்கியமான சிலர்:
சுரேந்தர் சிங் (டில்லி கன்டோன்மென்ட்): முன்னாள் தேசிய அதிரடி படை படை வீரர். 14 ஆண்டுகள் பணியில் இருந்தவர். கார்கில் மற்றும் 2008 மும்பை தாக்குதலில், பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையில் பங்கேற்றார். மீட்பு பணி ஒன்றின் போது, காது கேட்கும் திறனை இழந்ததால் ராணுவத்தில் இருந்த விலகினார்.
ரக்ஹி பிர்லா (மங்கோல்புரி): 26 வயதான இவர், ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்கு முன், "டிவி' செய்தி சேனலில் வேலை பார்த்தவர். இவருடைய சொத்து மதிப்பு: 55,150 ரூபாய் . கடன் மதிப்பு: 2.3 லட்ச ரூபாய்.
ரஜூ தின்கன் (திரிலோக்புரி): பத்தாம் வகுப்புக்குப் பின், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) சேர்ந்தார். 1992ல் அதிலிருந்து வெளியேறி, உடற்பயிற்சியளராக மாறினார். தனது பகுதியில் பல இளைஞர்களை உடற்பயிற்சி வீரர்களாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்.
மணீஷ் சிசோடியா (பட்பர்கஞ்): முன்னாள் பத்திரிகையாளர். கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.
தர்மேந்த்ரா சிங் ( சீமாபுரி): இவரது சகோதரி தான் முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர். திடீர் விபத்தில் இறந்து விட்டார். இதன் காரணமாக, இவர் வேட்பாளரானார். இவரிடம் மொபைல் போன் கூட கிடையாது. இவரது சொத்து மதிப்பு வெறும் 20,800 ரூபாய். இந்த தேர்தலில் இவர் தான் மிகவும் ஏழை வேட்பாளர்.
இப்படிப்பவர்களுக்கு தான் மக்கள் ஓட்டளித்துள்ளனர். இதைப் பார்த்தாவது மற்ற கட்சிகள், தங்களை மாற்றிக்கொள்ள முன் வர வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அக்கட்சிகளை மாற்றி விடுவார்கள்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=868662

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.