Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் - செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் - செல்வரட்னம் சிறிதரன்:-

25 ஜனவரி 2014

சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் நெருக்கடிகளையும் பயன்படுத்தி அரசாங்கம் தனது ஆட்சியதிகாரத்தை நிரந்தரமாக்குகின்ற துணிச்சலான அரசியல் தந்திரத்தைப் பரிசோதிக்க முனைந்திருக்கின்றது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்வுள்ள அரசுக்கு எதிரான பிரேரணை என்பவற்றுக்கிடையில் இந்தப் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதைக் காண முடிகின்றது.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த மோசமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்களாகப் போகின்றன. யுத்தம் காரணமாக அழிவுக்கு உள்ளாகிய நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டையும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகின்றது.

‘நாட்டைத் துண்டாடி, தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்காக அரச படைகளுடன் மோதி வந்த விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நிலவி வந்த அச்சம் நீக்கப்பட்டு அமைதி நிலவுகின்றது. பயங்கரவாதச் செயற்பாடுகளினால் பிரிந்து கிடந்த நாடு இப்போது ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் நாட்டின் எந்தப் பகுதிகளுக்கும் சென்று வரலாம். எவரும் எங்கும் சென்று வாழ முடியும். மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள். நாட்டில் பொருளாதார ரீதியான பிரச்சினையே மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள். அதனைத் தீர்ப்பதற்கான அபிவிருத்திச் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் நாடு இப்போது முன்னேற்றமடைந்து வருகின்றது’ என்பது அராசங்கத்தின் கூற்று.

யுத்தம் பற்றிய பயப்பீதி மக்கள் மனங்களில் இருந்து மநைந்துள்ளது. நாட்டில் அமைதி நிலவுகின்றது என்பது உண்மை. ஆனால் மக்களுடைய மனங்களில் அமைதி நிலவுகி;ன்றதா, நாட்டு மக்கள் உண்மையிலேயே ஐக்கியாக வாழ்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் பூகோள ரீதியாக – பௌதிக முறையில் இரண்டாகப் பிளந்து கிடந்த நிலப்பகுதி ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கின்றது. வெல்ல முடியாத ஒரு யுத்தம் என கருதப்பட்ட ஒன்றில் வெற்றியடைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவபடிக்கையானது, அரசாங்கத்தின் சாதனைதான். இதனை மறுப்பதற்கில்லை.

ஆனால் ஒரு நாட்டின் ஐக்கியம் என்பது, ஒன்றிணைக்கப்பட்ட நிலப்பகுதி மட்டுமல்லவே. நாட்டு மக்கள் அனைவரும் உளரீதியாக ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஐக்கியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த ஐக்கியத்தை – உண்மையான ஐக்கியத்தை, ஒரு மோசமான யுத்தத்தின் பி;ன்னர் ஏற்பட்டிருக்க வேண்டிய ஒற்றுமையை நாட்டில் காண முடியவில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய அரசியல் யதார்த்தமாகும்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்து இன்னும் அந்த வெற்றிக் களிப்பில் மூழ்கியுள்ள அரசாங்கம் உலகத்திற்குக் காட்டுகின்ற, நாட்டின் அமைதி, சமாதானம், ஐக்கியம் என்பவற்றிற்கு நேர்மாறானது. அரசாங்கம் உலகத்திற்குக் காட்டுவதைப்போல, சர்வதேசத்திற்குக் கூறுவது போல களத்தில் நிலைமைகள் நன்றாக இல்லை. நாடு இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. இதுதான் உண்மை. அதுவும் கசப்பான உண்மை.

அரசியல் ரீதியான பிளவு

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அரசாங்கம் யுத்த பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களை இன்னுமே வெற்றிகொள்ள முடியவில்லை. யுத்தத்தினால் அழிந்து போயுள்ள வடக்குகிழக்குப் பிரதேசங்களில் பிரமாண்டமான முறையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்திப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகிளனால் என்பன அந்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியவில்லை. அத்தகைய மகிழ்ச்சியின் மூலம், அவர்களிடமிருந்து அரசியல் ரீதியான அங்கீகாரத்தை இந்த ஐந்து வருடங்களிலும் பெற முடியவில்லை.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும், வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டி, அங்கு விடுதலைப்புலிகள் காலத்தில் நிலவியதாக அரசாங்கம் கூறுகின்ற அரசியல் அடக்குமுறையை இல்லாமல் செய்திருப்பதாக ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள், அரச சார்பு அரசியல்வாதிகள் வரை அனைவரும் பெருமை பேசுகின்றார்கள்.

ஆனால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள், விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரலிலேயே செயற்படுகின்றார்கள் என்று அரசாங்கத்தினால் சுட்டிக்காட்டப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கே மக்கள் அரசியல் ரீதியாப் பேராதரவு வழங்கிவருகின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், பிரதேச சபைகளுக்கான தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்று அங்கு நடத்தப்பட்டு;ள்ள அனைத்துத் தேர்தல்களிலும் அரசாங்கத்தினால் தமிழ் மக்களை நெருங்க முடியாத நிலைமையே நிலவுகின்றது. யுத்தம் நடைபெற்ற காலத்திலும், விடுதலைப்புலிகளின் பலமுனைப்பட்ட நெருக்குதல்களுக்கு மத்தியிலும் வடக்கிலும் நடத்தப்பட்ட தேர்தல்களின்போது நிலைமை எப்படி இருந்ததோ அதே நிலைமைதான் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் நிலவுகின்றது.

‘விடுதலைப்புலிகள் தமது பயங்கரவாதச் செயல்களுக்குத் தமிழ் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி வந்தார்கள். விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களை நாங்கள் மீட்டுள்ளோம். அதற்காகவே நாங்கள் ஒரு மனிதாபிமான யுத்தத்தை நடத்தியிருந்தோம். அது தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. விடுதலைப்புலிகளினால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்காகவே நடத்தப்பட்டது’ என்ற அரசாங்கத்தின் கூற்றை வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் வாழ்கின்ற பெரும்பான்மையான தமிழ் தமது அரசியல் அணுகுமுறைகளின் மூலம் பொய்ப்பித்திருக்கி;ன்றார்கள்.

யுத்தம் நடைபெற்ற காலத்திலும்சரி, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும்சரி, நாட்டின் தென்பகுதியில் வாழ்கின்ற பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தமே அரசாங்கத்தின் அரசியல் முதலீடாகக் காணப்படுகின்றது. யுத்தத்தின் மூலம் அடைந்த வெற்றியை தொடர்ச்சியான அரசியல் மூலதனமாக, அரசாங்கம் சோர்வின்றி பேணி வருவதையும் காண முடிகின்றது.

யுத்தத்தில் அடைந்த வெற்றியென்பது அரசுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்ற பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களுக்கும் சளைப்பில்லாத களிப்பைத் தருகின்ற ஒரு விடயமாகத் தெரிகின்றது. ஆனால் யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டது என்பது தமிழ் மக்களை; பொருத்தமட்டில் அரசியல் ரீதியான படுதோல்வி. அவர்களின் அரசியல் சுயகௌரவத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மோசமான பாதிப்பு. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகின்ற அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறையைத் தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்படுகின்ற அரசியல் ரீதியான மோசமான அவமானமாகவே கருதுகின்றார்கள்.

யுத்தச் சூழலில் சிக்கி பேரவலங்களுக்கும், பேரிழப்புக்களுக்கும் ஆளாகியுள்ள தங்கள் மீது, அரசாங்கம் அனுதாபம் காட்டும். யுத்தத்தில் வெற்றியடைந்ததன் பின்னர், தங்களுடைய உண்மையான அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு அரசியல் ரீதியாகப் பரிவுடனும், நேர்மையுடனும் அரசாங்கம் நடந்து கொள்ளும் என்று வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். நடந்தது நடந்துவிட்டது. முடிந்தது முடிந்துவிட்டது. இனிமேலாவது பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களைப் போன்று சகல அசியல் உரிமைகளையும் கொண்டவர்களாக, அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம். யுத்தத்தில் வெற்றிகொண்ட அரசாங்கம் அதற்கான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரான கடந்த நான்கு வருடங்களுக்கு மேற்பட்ட காலத்திலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அந்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும் சிதறடிக்கின்ற காரியங்களே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஓப்புக்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடித்தவுடன், யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் தேர்தல் நடத்தி, தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் தெரிவு செய்கின்ற தலைவர்களுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் தெரிவித்திருந்தார்.

ஆனால், யுத்தத்தில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து வெற்றியீட்டியதும், ‘நாட்டில் சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனம் என்று எவரும் கிடையாது. நாட்டை நேசிக்கின்ற பெரும்பான்மை மக்களும் நாட்டிற்குத் துரோகம் செய்கின்ற சிறுபுhன்மையினருமே இருக்கின்றார்கள்’ என்று அடித்துக் கூறினார்.

‘ஒரே நாடு. ஒரே இனம். நாங்கள் அனைவரும் இலங்கையர்களே. எனவே நாட்டில் ஒரே ஆட்சி. ஒற்றையாட்சிதான்’ என்றும் அவர் வலியுறுத்தி கூறியிருந்தார்.

தமிழ் மக்களுக்கு இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே அன்றி, இனப்பிரச்சினையென்று எந்தப் பிரச்சினையும் நாட்டில் கிடையாது என்ற புதிய சித்தாந்தைத்தையும், யத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியும் அரச தலைவர்களும் அடிக்கடி கூறிவந்தார்கள். எனவே, பிரச்சினையென்ற ஒன்று இல்லாதபோது, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதையே அவர்கள் இதன் மூலம் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதற்காக முந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு நடத்திய பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும் முன்னெடுத்திருந்தது. விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராட்டம் நடத்தியதன் மூலம், அரசுக்கு கொடுத்த அரசியல் நெருக்கடிகளுக்காகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. விடுதலைப்புலிகளை இல்லாதொழித்ததன் பின்னர், அந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது அரசாங்கத்தின் அரசியல் கொள்கை அடிப்படையிலான முடிவாகும்.

யாரொருவர் தனது வாழ்க்கையை கொள்கை அடிப்படையில் அமைத்துக் கொள்கின்றார்களோ, அவர்களுடைய வாழ்க்கைக்கான 99 வீதமான தீர்மானங்கள் அப்போதே மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற ஒரு கூற்று. இதற்கமைய நாட்டில் யுத்தம் முடிவடைந்ததும் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானமாக மேற்கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவே ஜனாதிபதி உட்பட அரச தலைவர்கள் கூறி வருகின்ற கூற்றுக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

யுத்தம் முடிவடைந்ததும், அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்ற எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களும்;சரி, இந்தியா உட்பட உலக நாடுகளும் சரி இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளாக நேரிட்டது. விடுதலைப்புலிகளின் மறைவையடுத்து, தமி;ழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பைச் சுமக்க நேரிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்தின் இந்தப் போக்கினால் சலிப்படைந்திருந்தது. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வழிகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதற்கமைய இந்தியா தமிழ்த் தலைவர்களுடன் இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதன் விளைவாக ஒரு வருட காலம் ஒப்புக்காக அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியது.

ஒரு வருட முடிவை எட்டியபோது, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டதல்ல. அது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் மட்டும் நடத்தப்பட்ட பேச்சுக்கள். எனவே அது அதிகாரமற்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டடமாக அறிவித்து, அந்தப் பேச்சுவார்த்தைகளை அரசாங்கமே முறித்துப் போட்டது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்தான் பேச்சுக்கள் நடத்தப்படும். எனவே அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டது.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்ட முடியுமா?

பின்னர், இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் (மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்க வேண்டும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் போன்ற மாறுபட்ட) அரசியல் சூழலில் அமைக்கப்பட்டது. இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி போன்ற கட்சிகளும் நிராகரித்திருக்கின்றபோதிலும், இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இடம்பெற வேண்டும், அதில் கலந்து கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று இப்போதும்கூட அரசாங்கம் வற்புறுத்தி வருகின்றது.

அது மட்டுமல்லாமல், மீள்குடியேற்றப் பிரதேசங்களில் இராணுவத்தை வகைதொகையின்றி நிலைநிறுத்தி பொதுக்களுடைய அன்றாட வாழ்க்கையின் சமூக, பொருளாதார, அரசியல், சமயச் செயற்பாடுகள் போன்ற அனைத்திலும் இராணுத்தினரைத் தலையீடு செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது. பொதுமக்களின் காணிகளை இராணுவ தேவைக்காக, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கையகப்படுத்துவது, புனர்வாழ்வுப் பயறிச்pயின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலப்புலிகள் உட்பட, பொதுமக்களின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அவர்களின் அரசியல் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது உட்பட பல்வேறு வழிகளி;ல் அரசாங்கம் மக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றது.

‘தேசிய பாதுகாப்புக்காகவே இராணுவத்தினர் மீள்குடியேற்றப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இராணுவத்தினர் தங்களுடைய இனிய உயிர்களை;ப பணயம் வைத்து அடைந்துள்ள இராணுவ வெற்றியையும், அதன் மூலம் பயங்கரவாதப்பிடியில் இருந்து அடைந்துள்ள விடுதலையையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகி;ன்றன’ என்று அரசாங்கத் தரப்பில் இருந்து இந்த நடவடிக்கைகளுக்கு விளக்கமளிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு, அந்த அமைப்பின் தலைமை இல்லாதொழிக்கப்பட்டிருந்தாலும், நாட்டில் இருந்து தப்பியோடி, புலம் பெயர் நாடுகளில் தஞ்சமடைந்துள்ள விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இனவாதத்தைத் தூண்டி, நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றது.

இதனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கும் ஆளாகி அரசாங்கத்தின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் தமது வாழ்க்கையைக் கட்யெழுப்புவதற்குத் தமிழ் மக்கள் முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் அரசியல் நடவடிக்கைகள், தென்பகுதியில் உள்ளவர்களினால் சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்படுகின்றது. இதனால், சுட்ட மண்ணும், பச்சை மண்ணும் என்ற நிலையிலேயே வடக்கு கிழக்குக்கும், தெற்குக்கும் இடையிலான அரசியல் உறவுகள் ஒட்ட முடியாமல் இருக்கின்றன.

இத்தகைய ஒரு பின்னணியில்தான், இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மூன்றாவது தடவையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் கடும் சொற்களிலான கேள்விகளை உள்ளடக்கிய பிரேரணயொன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த இறுக்கமான சூழலிலும், தனது அரசியல் வாழ்க்கையையும், அதிகாரப் பலத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான தந்திரோபாயச் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதையே காண முடிகின்றது.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறாமை, யுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த இனப்பிரச்சினைக்கு, யுத்தம் முடிந்த பின்னரும் ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு முயற்சிக்காமை, சட்ட ரீதியான அதிகாரங்களை வடமாகாண சபைக்குப் பகிர்ந்தளிக்காமை போன்ற பல காரணங்களினால் எழுந்துள்ள சர்வதேச நெருக்கடிகளை, நாட்டின் இறைமைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகத் தென்பகுதி மக்களுக்குக் காட்டுவதற்காகவே, இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான திகதி குறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் காலம் இருக்கின்ற போதிலும், ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுகின்ற மார்ச் மாதத்தில் இந்த இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தேர்தல்களுடைய முடிவுகளின் அடிப்படையில் தொடர்ந்து பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் என்பவற்றை நடத்துவதற்கும் அரசாங்கத்திடம் திட்டமிருப்பதாகத் தெரிகின்றது.

இந்தத் தேர்தலுக்கான பரப்புரைகளின்போது, பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை அழித்து, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை இந்த அரசாங்கம் மீட்டுள்ளது. இருந்த போதிலும், ஐநா மனித உரிiமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மூன்றாவது தடவையாகக் கொண்டு வரப்படுகின்ற பிரேரணையின் மூலம் நாட்டின் இறைமைக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது என்ற பிரசாரத்தை முன்னெடுத்து, சிங்கள மக்களின் அனுதாபத்தைப் பெற்று தேர்தலில் மீண்டும் அமோக வெற்றியைப் பெறுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன

சரவ்தேச மட்டத்திலான நெருக்கடிகள், நாட்டிற்குள்ளே சிறுபான்மையின மக்களின் அரசியல் ஆதரவின்மை போன்ற மாறுபட்ட அரசியல் சூழலுக்குள்ளேயும் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியையும் அதிகாரத்தையும் நீண்;ட காலத்தி;ற்குத் தக்கவைத்துக் கொள்வதற்கான சூட்சும அரசியலிலேயே அரசாங்கம் இப்போது இறங்கியிருக்கின்றது. இது எந்த அளவிற்கு அதற்கு வெற்றியளிக்கப் போகின்றது அல்லது எந்த அளவிற்கு நெருக்கடிகளில் மூழ்கச் செய்யப் போகின்றது என்பது தெரியவில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102193/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.