Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் பாதிப்பும் கல்வியிலிருந்து இடைவிலகும் தமிழ்ச் சிறுவர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Young%20teenagers.jpg

சிறிலங்காவின் போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் சிறுவர்கள் தமது கல்வியை இடைநிறுத்துவது அதிகரித்து வருவதாக சிறிலங்கா அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வடக்கின் எதிர்கால அபிவிருத்தியில் பொருளாதார அழுத்தம் மற்றும் வறுமை போன்றன தாக்கத்தைச் செலுத்தும் நிலையில் தற்போது மாணவர்கள் இடைவிலகுகின்ற எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

வடக்கில் வாழும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடைவிலகுவதே தற்போது அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. 

போரால் முற்றாகப் பாதிக்கப்பட்ட வடக்கில் தொழில் வாய்ப்புக்கள் மிகக் குறைவாக உள்ளதுடன், இங்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகக் கடினப்படுகிறார்கள். 'இது மிகக் கொடுமையான நிலைப்பாடு' என வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் செயலர் சிவலிங்கம் சத்யசீலன் சுட்டிக்காட்டியுள்ளார். 

"தொழில் வாய்ப்பு பற்றாக்குறையே இதற்கான முக்கிய காரணமாகும். வறிய குடும்பங்களிடம் போதியளவு நிதி இல்லாததால் இவர்கள் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தி தொழிலுக்காக அனுப்பவேண்டிய நிலையுள்ளது" என சத்யசீலன் தெரிவித்துள்ளார். "இவர்கள் கூலித் தொழில் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது" என சத்யசீலன் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதனை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனும் ஏற்றுக் கொண்டுள்ளார். 'சிறிலங்காவின் வடக்கில் 40,000 வரையான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்கின்றன. இதனால் இவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தமது கல்வியிலிருந்து இடைவிலகித் தொழில்வாய்ப்புக்களை தேடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகுகின்றனர். இதனைத் தவிர இந்தக் குடும்பங்கள் வருவாயைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படவில்லை" என றூபவதி கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

"பாடசாலையிலிருந்து இடைவிலகும் சிறார்கள் பொதுவாக கூலித் தொழில்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் வரை வீதிகளில் அலைந்து திரிகின்றனர். இந்தச் சிறார்களில் சிலர் நாளொன்றுக்கு 1.25 டொலர்களை மட்டும் வருமானமாகப் பெறும் நிலை காணப்படுகிறது" என அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளரான இராமலிங்கம் சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். 

பங்களாதேஸ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா ஆகிய நான்கு நாடுகளில் ஐ.நா சிறுவர் நிதியத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் சிறிலங்காவானது அனைத்துலக நியமத்தின் அடிப்படையில் இதன் மாணவர் இடைவிலகலானது 0.07 சதவீதமாகக் காணப்படுவதாகவும் இது மிகக் குறைந்தளவு வீதமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதுஎவ்வாறிருப்பினும், இந்த ஆய்வில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை. 

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள சிறார்கள் இடைவிலகும் எண்ணிக்கையானது சிறிலங்காவின் தேசிய மட்டத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகக் காணப்படுகிறது. இந்தச் சிறார்கள் பாடசாலைக்குச் செல்லும் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது. 

பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி முடித்தவர்கள் தொழில் வாய்ப்பைப் பெறுவது கடினமாக உள்ளதால் வடக்கில் வாழும் சிறார்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகி தொழில்களில் ஈடுபடுவதற்கான உந்துதலைப் பெறுகின்றனர். இவர்கள் தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கான தனியார் முயற்சியாண்மைகளோ அரசாங்க அலுவலகங்ளோ காணப்படவில்லை எனவும் இடைவிலகிய மாணவர்கள் வீடுகட்டுதல் மற்றும் விவசாயம் செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தையாரான விசுவமடுக் கிராமத்தைச் சேர்ந்த இராமதாஸ் 2010ன் நடுப்பகுதியில் தனது சொந்த இடத்திற்குத் திரும்பினார். ஆனால் இவர் தனது குடும்ப வருமானத்தை ஈடுசெய்வதற்காகத் தனது மூத்த மகளை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தி தொழிலுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. "நாங்கள் எமது சொந்த இடத்திற்குத் திரும்பி ஒரு ஆண்டின் பின்னர் எம்மிடம் பணம் இருக்கவில்லை. இரும்புகள் பொறுக்கி விற்பதில் நான் ஈடுபட்டேன். அதன்மூலம் எனக்கு வருமானம் கிடைத்தது. என்னுடன் எனது மூத்த மகளையும் கூட்டிச் செல்வதற்காக அவளை நான் பாடசாலையிலிருந்து இடைவிலத்தினேன்" என்கிறார் இராமதாஸ். 

இவர்கள் இருவரும் சேகரிக்கும் ஒரு கிலோ இரும்புக்கு 2 டொலர்கள் பணத்தைப் பெற்றனர். ஆனால் தற்போது இரும்பு வியாபாரம் குறைந்து விட்டது. தற்போது 14 வயதான இவரது மகள் கூலித் தொழிலுக்குச் செல்கிறாள். இவள் தனது கல்வியை இனித் தொடரமுடியுமா என்பது நிச்சயமற்றது. ஆனால் தனது அடுத்த மகளைப் பாடசாலையால் இடைநிறுத்த இராமதாஸ் விரும்பவில்லை. 

"இவ்வாறான இடைவிலகல் மாணவர்களுக்குப் பொருத்தமான மேலதிக வகுப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. இவ்வாறான உதவிகள் இல்லாததால் இந்த மாணவர்கள் மீண்டும் பாடசாலையில் இணைந்து தமது கல்வியைத் தொடர்வதில் மிகக் கடினப்படுகின்றனர்" என சிவப்பிரகாசம் கூறினார். 

இடைவிலகல் மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான திட்டங்கள் அமுல்படுத்தாவிட்டால் இவ்வாறான நிலைமை மேலும் தொடரும் என்கிறார் சிவப்பிரகாசம். 

செய்தி வழிமூலம் : IRIN 

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140211109947

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.