Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறையில் மோதல்

Featured Replies

யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தமிழ்நெட் செய்தி விவரம்:

வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி பருத்தித்துறை கடற்கரையோரம் மற்றும் மணற்காட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து பருத்தித்துறை பகுதியில் மோதல் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து தற்போது மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

  • தொடங்கியவர்

பருத்தித்துறை கிழக்குக் கடற்பரப்பில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல்

யாழ் குடாநாட்டின் பருத்தித்துறை கிழக்கு, தாழையடிக்கு அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று இரவு பாரிய மோதல் ஒன்று வெடித்திருப்பதாக கொழும்பிலுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சற்று முன்னர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பி.பி.சி. தமிழோசையிடம் சற்று முன்னர் கருத்து வெளியிட்ட, தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலைய அதிகாரி ஒருவர், இன்றிரவு புலிகளின் சுமார் 10-15 படகுகள் பருத்தித்துறை கிழக்கு கடலில் தாழையடிப் பகுதிக்கு அண்மித்த பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடியதை வழமையான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படைப் படகுகள் அவதானித்ததாகவும், தாம் அவர்களை வழிமறித்துத் தாக்குதல் நடாத்திய போது அப்பகுதியில் மோதல் வெடித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த மோதல்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் இடம்பெற்றுவருவதாகவும்இ குறைந்தபட்சம் புலிகளின் 6 படகுகள் கடற்படையினரின் தாக்குதலின் போது கடுமையான சேதத்திற்குள்ளாகியதாகவும், அதிலிருந்த புலிகளின் உறுப்பினர்கள் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் கடற்படை அதிகாரி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் கடுமையான காயங்களிற்குள்ளாகியிருக்கல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ புரிய வில்லையே :roll:

பருத்தித்துறையில் ஆமிக்காரன் அல்லவோ இருக்கிரான்? பின்னே புலிகளை நோக்கி எப்படி இரானுவம் பீரங்கி தக்குதல்??

ஒன்றுமே விளங்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நண்பரொருவர் வடமராட்சிப் பகுதியிலுள்ள தனது குடும்பத்துடன் தற்போது கதைத்தவராம். பருத்தித்துறை பக்கமாக குண்டுச் சத்தங்கள் கேட்பதாக தெரிவித்தார்களாம். இச்சத்தங்கள் கடலிலா, தரையிலா என்று தெரியவில்லையாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Clashes erupt off Point Pedro coast

[TamilNet, September 01, 2006 15:33 GMT]

Heavy fighting erupted between the Sea Tigers and the Sri Lanka Navy off the coast of Point Pedro, on the northern coast of Jaffna, Friday evening, sources in the peninsula said. Clashes in the seas off Manalkadu, in Vadamaradchi East, spread fled their houses.

Sri Lanka Army positions along the coast came under fire and the SLA soldiers temporarily vacated their posts from the coastal defence line as civilians, around 900 families, from Supparmadam, Koddady, Munai, Katkovalam, Moorkam and Punithanagar villages sought refuge at St. Anthony's church.

The clashes off the coast, resumed far off in the seas, at 11:10 p.m., civilian sources said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19452

  • தொடங்கியவர்

யாழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் மோதல்.

யாழ் வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி பருத்தித்துறை கடற்கரையோரம் மற்றும் மணற்காட்டிலிருந்து சிறிலங்கா படையினர் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பருத்தித்துறை பகுதியில் மோதல் வெடித்துள்ளதாக. தெரியவருகின்றது.

பருத்தித்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது

இதே வேளை அப்பகுதியிலிருந்து தற்போது மக்கள் இடம் பெயர்ந்து வருன்றதாகவும் தெரியவருகின்றது.

சுப்பர்மடம், கோட்டடி, முனை, கற்கோவளம், மூர்கம் மற்றும் புனிதநகர் கிராமங்கங்களைச் சேர்ந்த 900 குடும்பத்தினர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் அகதிகளாக அடைக்கலாமாகியுள்ளனர்.

இந்த மோதல் இரவு 11.10 மணிக்கு மீண்டும் தொடங்கியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.:lol:

http://sankathi.org/news/index.php?option=...id=300&Itemid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.